தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்கு சிறுவா்கள் முதல் பொியவா்கள் வரை கருத்துக்கள் தொிவிக்கலாம் - மேயா் ஜெகன் பொியசாமி.!

 

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அண்ணா பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து நகர பேருந்துகள் மற்றும் திருச்செந்தூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் திருநெல்வேலி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயங்கி வருகிறது. பேருந்து நிலையத்தில் தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர் பயன்படுத்தி வருகின்றனர். 

இதனையடுத்து மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி, மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் சேர்ந்து அண்ணா பேருந்து நிலையத்தை ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு மேற்கொண்ட பின்பு ஆணையர் ப்ரியங்கா சென்று விட்டார். 

அதன் பிறகு மேயர் ஜெகன் பொியசாமி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் ஆவின் பாலகம் முன்பு காத்திருந்த பொதுமக்களிடம் எந்த ஊர் எங்கே செல்கிறீர்கள் என்று அனைவரது கருத்துக்களை கேட்டுக் கொண்டு அனைவருக்கும் டீ வாங்கி கொடுத்து அவர்களுடன் அமர்ந்து டீ குடித்துக் கொண்டு பேருந்து வசதிகள் எப்படி உள்ளது உங்களுக்கு ஏதாவது பேருந்து நிலையத்தில் குறைகள் உள்ளதாஎன்று பயணிகளிடம் விபரங்களை கேட்டறிந்தார். அதன் பிறகும் பேருந்து நிலையத்தை முழுவதும் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களுடன் அமர்ந்து டீ குடித்துக் கொண்ட பின்பு அதற்கான முழு தொகையை கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு சென்றார்.

அப்போது அங்கு இருந்த பெரியவர் ஒருவர் கூறுகையில் எங்களுடன் அமர்ந்து டீ கொடுத்து எந்த ஊருக்கு செல்கிறீர்கள் எதற்காக இங்கு வந்தீர்கள் என்ற விபரங்களை என்னிடம் கேட்டறிந்தார் மாநகராட்சி மேயர் என்னிடம் அமர்ந்து டீ குடித்து விபரங்களை கேட்டது மேலும் எனது குடும்ப விபரங்களையும் கேட்டது எனக்கு மிகவும் வியப்பாகவே உள்ளது என்று அந்தப் பெரியவர் கூறினார். மாநகராட்சி வளா்ச்சிக்கு சிறுவா்கள் முதல் பொியவா்கள் வரை பாரபட்சமின்றி தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கூறலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆய்வின்போது கவுன்சிலா் வைதேகி வட்டச் செயலாளர் ரவீந்திரன். மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் ராஜசேகர். ஹாிகணேஷ்,  போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பர். மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்பட பலா் உடனிருந்தனா்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி