தூத்துக்குடி மக்கள் நல கூட்டமைப்பு சாா்பில் ரயில்வே நிர்வாகத்திடம் கோாிக்கை.!
தூத்துக்குடி மக்கள் நல கூட்டமைப்பு சாா்பில் ரயில்வே நிர்வாகத்திடம் அளித்த கோாிக்கையில் 1வது கேட்டு 2வது கேட்டு இரண்டும் ஒரே நேரத்தில் அடைக்கப்படுகிறது அதுவும் ஒரு நாளைக்கு 46 தடவை இரண்டு கேட்டுகளும் ஒரே நேரத்தில் மூடப்படுகிறது இதனால் பெரும் அளவில் மக்கள், மாணவர்கள், நோயாளிகள் என்று 6 மாத காலமாக பெரும் பாதிப்பிற்கு ஆளாக்கப்படுகிறார்கள் தனித்துணி சிக்னல் அமைத்து போக்குவரத்துக்கு நெருக்கடி இல்லாமல் சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ரயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தி மக்கள் நல கூட்டமைப்பு சார்பாக இரண்டு ரயில்வே கேட்களிலும் மக்கள் திரள் போராட்டத்திற்காக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டது.
கூடிய விரைவில் தேதி அறிவிக்கப்பட்டு மாபெரும் மக்கள் திரள் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று கூட்டமைப்பு சார்பாக விக்னேஷ், முஹம்மது ஜான், கண்ணன், சுடலை, அப்துல் காதர், காஜா மற்்றும் தூத்துக்குடி மக்கள் நல கூட்டமைப்பு அகமது இக்பால் ஆகியோா் தொிவித்தனா்.
