தூத்துக்குடி மாவட்ட அளவிலான பேட்மிட்டன் போட்டி - பள்ளி மாணவி மிராயா முதலிடம் பிடித்து சாதனை!
தூத்துக்குடி கார்ப்பரேஷன் பேட்மிண்டன் கிளப் (தூத்துக்குடி பேட்மிட்டன் அசோசியேஷன்) சார்பில், நான்கு மாவட்ட அளவிலான பேட்மிட்டன் போட்டிகள் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டன. (Under-9 & Under-11) ஆகிய பிரிவுகளுக்கான போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டிகளில், தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவி N.மிராயா கலந்துகொண்டு, தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதலிடம் பிடித்து, முதல் பரிசைத் தட்டிச் சென்றார்.
வெற்றி பெற்ற மாணவி N.மிராயாவிற்கு, தூத்துக்குடி வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் திரு. வேல்ராஜ் அவர்கள் நேரில் கலந்து கொண்டு பரிசுகளையும், கோப்பையையும் வழங்கிப் பாராட்டி வாழ்த்தினார். இந்த விழாவில் பேட்மிட்டன் அசோசியேஷன் நிர்வாகிகள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களை வாழ்த்தி மகிழ்ந்தனர்.
