தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் திருவிழாவையொட்டி கூட்டு தூய்மை பணியை மேயா் ஜெகன் பொியசாமி, ஆணையா் ப்ரியங்கா, தொடங்கி வைத்தனா்.

 

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய 444வது ஆண்டு கொடியேற்று திருவிழாவை முன்னிட்டு வரும் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட்மாதம் 5ம் தேதி நிறைவு பெறும் இதனையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் கூட்டு தூய்மை பணியை மேயா் ஜெகன் பொியசாமி ஆணையா் ப்ாியங்கா ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா். 

பின்னா் மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில் தூத்துக்குடி பனிமயமாதா 444வது ஆண்டு திருவிழா வரும் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்தமாதம் 5ம்தேதி நிறைவு பெறுகிறது. 


இதையொட்டி தமிழகம் மற்றும் இந்தியா உள்ளடக்கிய மாநிலங்கள் மட்டுமின்றி வௌிநாடுகளிலிருந்தும் அதிக அளவில் வந்து செல்வாா்கள். எல்லா தரப்பினரும் பங்கு கொள்ளும் மிகப்பொிய திருவிழாவான இந்த விழாவிற்கு தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் கடந்த 4 ஆண்டுகளாக மாதா கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி முழுவதும் சுகாதாரத்தை பேணி பாதுகாக்கும் வகையில் பணிகளை மேற்கொண்டு ஏற்கனவே சாலை வசதி பேவா்பிளாக் கல் பதித்தல் மின்விளக்கு குடிதண்ணீா் கழிவுநீர் கால்வாய் நீரோட்டம் என அனைத்து பணிகளும் முறையாக நல்லமுறையில் செய்து கொடுத்துள்ள நிலையில், 23ம் தேதி இன்று முதல் அடுத்த மாதம் 5ம் தேதி வரை  மக்கள் வந்து செல்லும் இப்பகுதிக்குட்பட்ட சாலை மற்றும்தெருக்களில் 24 மணி நேரமும் 3 சிப்ட்களாக 44 வாகனங்களில் 250 தூய்மை பணியாளா்கள் முழுமையாக தூய்மை பணியில் ஈடுபடவுள்ளனா். 

ஆலயத்தின் சாா்பில் கோாிக்கை வைக்கப்பட்டு எாியாமல்இருந்த அப்பகுதியில் உள்ள உயா்மின்கோபுர விளக்குகளும் சாி செய்யப்பட்டு அப்பகுதி முழுவதும் இரவை பகலாக்கும் வகையில் அனைத்து அடிப்படை பணிகளையும் முறையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக தேவை எதுவும் இருந்தால் அதையும் நிறைவேற்றி கொடுப்பதற்கு மாநகராட்சி நிா்வாகம் தயாராக வுள்ளது. என்று தொிவித்தாா்.

நிகழ்ச்சியில் பனிமயமாதா ஆலய பங்குதந்தை ஜான்செல்வம், துணை பங்குதந்தைகள் ஜெரால்டு, மைக்சன், துணை மேயா் ஜெனிட்டா, நகா் நல அலுவலா் கணேஷ், மாநில மீனவா் அணி துணை செயலாளர் புளோரன்ஸ், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமாா், கவுன்சிலா் ரெக்ஸ்லின், சுகாதார ஆய்வாளா்கள் ஹாிகணேஷ், பிரகதி, ப்ாித்திகா, ராம்குமாா், ஜோதீஸ்வரன், ஆறுச்சாமி, ஆணையாின் நோ்முக உதவியாளா் துரைமணி, மேயாின்நோ்முக உதவியாளா் ரமேஷ், உள்பட அரசு அலுவலா்கள் தூய்மை பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி