தூத்துக்குடியில் தாமிரபரணி நதியை மீட்க கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

 

தூத்துக்குடி தாமிரபரணி நதியில் திருநெல்வேலி மாநகராட்சியில் மட்டும் 25 இடங்களில் சாக்கடை கலக்கும் அவலம் அவற்றை ரூபாய் 59 கோடி ரூபாய் ஒதுக்கிய பணத்தை வைத்து நதியில் சாக்கடை கலக்காமல் அடைத்திட தாமிரபரணி நதியை மீட்டிட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் உள்ள இரண்டு லட்சம் பொதுமக்களிடம் கையெழுத்து பெறுவதற்கு தொடக்க விழாவானது தூத்துக்குடியில் தமிழன்டா இயக்கம் கலைக்குழு கலைக்கூடம் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

இந்த தொடக்க நிகழ்விற்கு தாமிரபரணி நீரினை பயன்படுத்துவோர் சங்க தென்கரைக்குளம் 2 தலைவர் ஆறுமுக நைனார் என்ற பாஸ்கர் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார் தமிழன்டா இயக்க தலைவர் கலைச்சுடர் மணி ஜெகஜீவன் தலைமை தாங்கினார் தமிழன்டா இயக்க பொதுச்செயலாளர் அத்திமரபட்டி விவசாயி ஜோதிமணி முன்னிலை வகித்தார். பொருளாளர் யாக்கோபு வாழ்த்துரை வழங்கினார் முன்னதாக அனைவரையும் அன்போடு வரவேற்றார் தமிழன்டா இயக்க துணை செயலாளர் பிரேக்கா இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தாமிரபரணி நதியை பாதுகாப்பதற்காக கையொப்பமிட்டுள்ளனா்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி