தூத்துக்குடி மாநகராட்சியில் சொத்து வரி நிலுவை வைத்திருந்த 15 கட்டிடங்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு.!

தூத்துக்குடி மாநகராட்சியில் தற்போது 2025- 26ம் ஆண்டு வரையிலான, அதாவது 31.3-2026 வரையிலான காலத்திற்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்தாத வரி விதிப்பு தாரர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அக்கட்டிடங்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக, மாநகராட்சி ஆணையர் ப்ாியங்கா உத்திரவின்படி, கிழக்கு மண்டல உதவி ஆணையரின் அறிவுரையின்படி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்கள் 24,29,38,39,41, ஆகிய வார்டுகளுக்குட்பட்ட வடக்குரதவீதி, சந்தை ரோடு மீனாட்சிபுரம் மேற்கு, பாளையங்கோட்டை ரோடு, மற்றும் குரூஸ்புரம் ஆகிய பகுதிகளில் குறைந்தபட்சம் 2025 26ம் ஆண்டு முதல் அதிகபட்சம் 2022-23ம் ஆண்டிலிருந்து சொத்துவரி நிலுவை தொகை ரூ.6000 இலிருந்து 95 ஆயிரம் வரை செலுத்தாமல் நிலுவை வைத்திருந்த 15 கட்டிடங்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு செய்யப்பட்டது. குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்ட கட்டிடங்களுக்கான சொத்து வரி  நிலுவையினை  3 நாட்களுக்குள் செலுத்தாவிடில் நடைமுறையில் உள்ள விதிகளின்படி ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 

எனவே பொதுமக்கள் தங்கள் கட்டிடங்களுக்கான சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் திடக்கழிவு மேலாண்மை வரி பாதாள சாக்கடை கட்டணம் போன்ற இனங்களை நடப்பு காலம் வரை செலுத்தி இருக்கிறீர்களா என்பதனை சரி பார்த்து, நிலுவை இருப்பின் உடனடியாக  செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் இதர சட்டபூர்வ நடவடிக்கைகளை தவிர்த்திட வேண்டும் என்று மாநகராட்சி சாா்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி