"மீனவர் தடைக்கால நிவாரணம் 20,000 ஏன் அறிவிக்கவில்லை" ? - தவெக அரசுக்கு மீனவர்கள் கேள்வி.
தூத்துக்குடி மீனவ பெண்கள் புரட்சிப் பட இயக்கத்தைச் சேர்ந்த டிலைட்டா ரவி கலெக்டா் அலுவலகத்தில் கூறுகையில்:- "தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது மீனவர்களின் தடைக்காலத்தில் வழங்கப்படும் நிவாரணம் 8000 லிருந்து 20000 ஆக உயா்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் கடந்த வாரம் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் மீனவர்கள் தடைக்கால நிவாரணத் தொகை எந்த விதமான அறிவிப்பும் நிதி அமைச்சர் அறிவிக்கவில்லை, தமிழக முதல்வரும் அதற்கு எந்த ஒரு பதிலும் தெரிவிக்கவில்லை.
தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக முதலமைச்சர் விஜய் அறிவித்த மீனவர்கள் தடைக்கால நிவாரணம் 20 ஆயிரம் ரூபாயை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். மீனவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது தமிழக அரசு அறிவிக்கவில்லை என்றால் மீனவர்கள் ஒன்று திரண்டு தமிழக அரசுக்கு எதிராக போராட வேண்டிய சூழ்நிலை வரும்" என்று மீனவ பெண்கள் புரட்சிப் பட இயக்கத்தைச் சேர்ந்த டிலைட்டா ரவி கூறியுள்ளார்.
