தூத்துக்குடியில் ஆசிரியர்கள் சங்கமம் 4.0-கருத்தரங்கு நடைபெற்றது.
தூத்துக்குடி நெல்லை, திருச்சி, தஞ்சை மாவட்ட வாசிப்பை நேசிப்போம் புலனக்குழு ஆசிரியர்களின் சங்கமம் 4.0 நிகழ்ச்சி நெல்லை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சிவகுமார் தலைமையில் ஆசிரியர்கள் கற்பித்தலில் புதுமைகள் வாசிப்பு நம்முள் ஏற்படுத்திய மாற்றங்கள் நேர்மறைப் பள்ளிச் சூழலும் ஆசிரியர்களின் பணிக் கலாச்சாரமும் ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் எழுதிய நூல்கள் வெளியிடப்பட்டன. எழுத்தாளர்கள் தங்கத்துரையரசி, கலகல வகுப்பறை சிவா ஆகியோர் கலந்துகொண்டனர். கருத்தரங்கில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
