தூத்துக்குடியில் குடிநீர் பிரச்சனை கண்டு கொள்ளாத அமைச்சர் ஸ்ரீநாத் - தொகுதி மக்கள் கடும் அதிருப்தி.!
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருக்கும் ஸ்ரீநாத் மீன்வளம் மீனவர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாகவே குடிநீர் பிரச்சனை ஏற்பட்டது, பைப் லைன் உடைப்பு மற்றும் மெயின் வாழ்வு உடைப்பு உள்ளிட்டவைகளால் குடிநீர் மாநகராட்சி பகுதி மக்களுக்கு தாமதம் ஏற்பட்டது. மாநகராட்சி நிர்வாகம் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக இருக்க கூடிய அமைச்சா் ஸ்ரீநாத் கடந்த மூன்று நாட்களாக தூத்துக்குடியில் தான் இருந்தார் ஆனால் ஒரு நாள் கூட குடிநீர் பிரச்சனை சம்பந்தமாக மாநகராட்சி ஆணையரிடமும் அல்லது மாநகராட்சி அதிகாரிகளிடமும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படவில்லை மேலும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் வரும் வல்லநாடு ஆற்றுப்படுகையில் நீரில்லாமல் உள்ளது தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அமைச்சர் ஸ்ரீநாத் வல்லநாடு ஆற்று படுகைக்கு சென்று பார்க்கவில்லை. தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் தான் தூத்துக்குடி மாநகராட்சி உள்ளது தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு 100 நாட்கள் ஆகியும் இதுவரை எந்தவிதமான ஒரு நடவடிக்கையும் தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் ஸ்ரீநாத் எந்த ஒரு பணியும் மேற்கொள்ளவில்லை. இதனால் தற்போது தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி மக்கள் அமைச்சர் ஸ்ரீநாத் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
தொகுதி மக்கள் வாக்களித்து நூறு நாட்கள் ஆகின்ற வேலையில் கூட தொகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை பிரச்சினையான குடிநீர் பிரச்சனை தீர்ப்பதற்கு கூட முன் வராத அமைச்சர் ஸ்ரீநாத் மீது வாக்களித்த மக்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் தற்போது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் இது தொடர்பாக தமிழக முதலமைச்சருக்கு புகார் மனுவும் அனுப்பப்பட்டுள்ளது ஆகையால் வரும் காலங்களிலாவது தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் அமைச்சருமான ஸ்ரீநாத் தொகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்ய முன்வருவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
