ஆவின் பால் தொடர்ந்து தட்டுப்பாடு பொதுமக்கள் கடும் அவதி.!
தூத்துக்குடி தமிழ்நாடு அரசின் சார்பில் ஆவின் நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது இதில் ஆவின் பால். ஆவின்நெய். ஆவின் ஐஸ் கிரீம். ஆவின் பிஸ்கட். ஆவின் பன்னீர். ஆவின் பட்டர் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு சொசைட்டி மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஏஜென்ட் மூலமும் பொதுமக்களுக்கு ஆவின் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு திருநெல்வேலி ரெட்டியார்பட்டியிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேட்மா நகரம் அருகே தூத்துக்குடி மாவட்டத்திற்கு என்று பால் மற்றும் ஐஸ் கிரீம் உற்பத்தி செய்வதற்கு தொழிற்சாலை அமைக்கப்பட்டு கடந்த திமுக ஆட்சியில் இறுதியில் தொழிற்சாலை துவக்கப்பட்டது ஆனால் பல மாதங்கள் ஆகியும் இன்று வரை உற்பத்தி செய்வதற்கான சூழ்நிலை உருவாகவில்லை அதற்கான நடவடிக்கையை தற்போது தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. திருநெல்வேலி பால்உற்பத்தி நிலையத்திலிருந்து தூத்துக்குடிக்கு சுமார் 17,000 லிட்டர் வந்து கொண்டிருந்தது. ஆவின் நைஸ். ஆவின் டிலைட். ஆவின் ஆரஞ்சு என்று மூன்று வகையான பால் பொதுமக்களுக்கு உணவு செய்யப்பட்டு வந்தது கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக ஆவின் ஆரஞ்சு கலர் பால் முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது திருநெல்வேலி ரெட்டியார்பட்டி பால் உற்பத்தி நிலையத்திலிருந்து தூத்துக்குடிக்கு சுமார் 12000 லிட்டர் பால் தான் வந்து கொண்டு இருக்கிறது. சுமார் 3000 லிட்டருக்கு மேல் தூத்துக்குடிக்கு மட்டும் பால் குறைவாக வருகிறது இதனால் பொதுமக்களுக்கு பால் விநியோகம் செய்வதில் ஆவின் ஏஜென்ட் பொதுமக்களுக்கும் பல்வேறு இடங்களில் வாக்குவாதங்கள் ஏற்படுகிறது ஆவின் பால் கிடைக்காததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுபற்றி ஆவின் முகவர் ஒருவர் கூறுகையில் நான் 40 டப்பா 480 லிட்டர் வாங்கிக் கொண்டிருந்தேன் தற்போது எனக்கு 240 லிட்டர் தான் பால் கொடுக்கிறார்கள் என்னால் ஆவின் முகவர்களுக்கு பால் சரியான முறையில் கொடுக்கப்பட முடியவில்லை பொதுமக்களுக்கும் பால் இல்லை என்று கூறுவதால் சில நேரங்களில் உங்களிடம் தான் நான் ரெகுலராக பால் வாங்குகிறேன் பால் இல்லை என்று சொன்னால் என்ன அர்த்தம் என்று வாக்குவாதம் ஏற்படுகிறது ஆனால் இதனை சரி செய்ய ஆவின் நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை ஆகையால் உடனடியாக தமிழக அரசு இதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் இருந்து கொஞ்ச பால் மொத்த ஏஜென்ட் ஒருவர் எடுத்துக்கொண்டு முகவர்களுக்கு கொடுத்துக் கொண்டு வருகிறார்.
இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில் தனியார் பால் விலை 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது ஆவின் பால் நாற்பத்தி ஆறு ரூபாய்க்கு 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது பொதுமக்கள் அதிகளவில் தனியார் பாலை விரும்புவது கிடையாது ஆவின் பாலை தான் விரும்புவார்கள் ஆவின் பால் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் கிடையாது ஆனால் அரசு அதிகாரிகளும் அரசும் தனியார் பால் விற்பனை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆவின் பால் கொள்முதல் சரியான முறையில் வாங்குவது கிடையாது என்ற ஒரு குற்றச்சாட்டும் தொடர்ந்து வெளிவருகிறது ஆகையால் உடனடியாக தமிழகம் முதலமைச்சர் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர் தொடர்ந்து ஆறு மாத காலமாக தூத்துக்குடியில் ஆவின் பால் தட்டுப்பாடு நிலவி வருகிறது அமைச்சரும் கண்டுகொள்ளவில்லை அதிகாரிகளும் செவிசாய்க்கவில்லை தமிழக அரசும் இது தொடர்பான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் பொதுமக்கள் மத்தியில் கடுமையான குற்றச்சாட்டாகவே கூறப்படுகிறது.
