மாநகரப் பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அள்ளுவதற்கு பணம் கேட்கும் அவல நிலைமை - பொது மக்கள் புகார்.!

 

தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளது இந்த வார்டுகளில் தெருக்களில் தேங்கும் குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கு மாநகராட்சி நிர்வாகம் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு அதன்படி தினசரி தெருக்களில் தேங்குகின்ற குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கு ஒப்பந்த வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கு வருகின்ற பணியாளர்கள் பணம் கேட்பதாகவும் பணம் கொடுக்க விட்டால் குப்பைகளை எடுப்பது கிடையாது என்று பல்வேறு தரப்பினர் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் மாநகராட்சி ஆணையருக்கும் புகார் தெரிவித்தனர் ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இந்த நிலையில் ரோச் காலனி 1வது தெருவில் உள்ள குப்பைகளை அள்ளுவதற்கு பணம் கேட்பதாகவும் பணம் கொடுக்காததால் கடந்த மூன்று மாத காலமாக எங்கள் பகுதியில் உள்ள தெருக்களில் தேங்கியுள்ள குப்பைகளை அப்புறப்படுத்தவில்லை இதனால் கொசு தொல்லை அதிகமாகவே உள்ளது குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றது ஏன் குப்பைகளை எடுக்க மறுக்கிறீர்கள் என்று பணியாளர்களிடம் கேட்டபோது நீங்கள் பணம் தரவில்லை அதனால் நாங்கள் எடுக்கவில்லை என்று தைரியமாக கடந்த மூன்று மாத காலமாக பணியாளர்கள் கூறுகின்றன சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை, ஆகையால் உடனடியாக மாநகராட்சி ஆணையர் இதில் தலையிட்டு தெருக்களில் தேங்குகின்ற குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

வேலவன் ப்ராப்பர்ட்டீஸ்(மதுரா கோட்ஸ்): "அரசு புறம்போக்கு நிலம், பிளாட்டாக விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது" - ஆட்சியரிடம் மனு.!