தூத்துக்குடியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் அமைதி ஊர்வலம்..!

 

தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை மூலம் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க மத்திய அரசு முயல்வதாகக் குற்றம் சாட்டி மாநில காங்கிரஸ் தலைவா் மாணிக்க தாகூா் எம்.பி உத்தரவிற்கிணங்க காங்கிரஸ் கட்சியினர் பழைய மாநகராட்சி முன்பிலிருந்து மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சகாயராஜ் தலைமையில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக, கைகளில் கருப்பு பலூன் ஏந்தியபடி அமைதி ஊர்வலம் சென்றனர். பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு செய்வதாக கூறும் மத்திய அரசு, வட மாநிலங்களான உத்தரபிரதேசம், குஜராத் போன்ற பா.ஜ., ஆளும் மாநிலங்களில் பாராளுமன்ற தொகுதிகளை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், தென் இந்தியாவில் பா.ஜ., அல்லாத மாநிலங்களில் தொகுதிகளை குறைக்கும் நோக்கில், மத்திய அரசு செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்று இறுதியாக 1ம் கேட் காந்தி சிலை முன்பு நிறைவு பெற்றது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் சுடலையாண்டி, டேனியல்ராஜ்,  மண்டல தலைவர்கள் சேகர், ஐசன்சில்வா, நிர்மல் கிறிஸ்டோபர், மண்டல பொறுப்பாளர் ஜான் சாமுவேல், மாவட்ட துணை தலைவர்கள் தனபால்ராஜ், பாலகிருஷ்ணன், அந்தோணி ஜெயராஜ், டேவிட் வசந்தகுமார், சுரேஷ், நாகேந்திரன், ராஜாராம், மாவட்ட பொதுச்செயலாளர்கள் கோபால், மைக்கேல் பிரபாகர், புல்டன் ஜெசின், ஜெபராஜ், ஆண்ட்ரூ ஜாப்ரின், மாவட்ட செயலாளர்கள் இக்னேசியஸ், காமாட்சி தனபாலன், கதிர்வேல் மாரியப்பன், ஜோனாதன், அசன்பாரத், வழக்கறிஞர்கள் சகாயராஜ், ப்ராங்ளின், இளைஞர் காங்கிரஸ் தலைவர் மரிய ஆல்வின், மாவட்ட அணி தலைவர்கள் எஸ்.சி.துறை பிரபாகரன், அமைப்புசாரா பிரிவு தலைவர் சேவியரம்மாள், மீனவர் பிாிவு சிமியோன், சிறுபான்மை பிரிவு மைதீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமுவேல் ஞானதுரை, அருள்வளன், கலைப் பிரிவு பெத்துராஜ், மாநில பேச்சாளர்கள் அப்துல் மஜீத், பார்த்திபன், முன்னாள் ஊடகப்பிரிவு தலைவர் முத்துமணி, வார்டு தலைவர்கள். சித்திரை பால்ராஜ், மகாலிங்கம், ராஜரத்தினம், ஐயப்பன், கிருஷ்ணன், பெரியநாயகம், தனிஸ்லாஸ், செல்வராஜ், முருகேசன், ரூஸ்வெல்ட், பெனிடிக், மில்லை தேவராஜ், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஜெனிஸ்ட்டா, மீனாட்சி, மாரி, பொன்னுதாய், முத்து பேச்சி, லதா, சுபிக்கஷா, வனஜா, செய்யது அலி, ஜலுல, நிர்வாகிகள். தாமஸ், மாடக்கண், டைனோசன், ஜெயராஜ், சகாயராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி