நள்ளிரவில் வாகனம் மோதி சரிந்த கோபுர மின் கம்பம் - ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த காவல் ஆய்வாளரால் விபத்து தவிர்க்கப்பட்டதாக பொதுமக்கள் தகவல்.!

 

தூத்துக்குடி குரூஸ்புரம் பக்கிள் ஓடை 4ம் பாலம் பகுதியில்  அமைந்துள்ள 5 வழிச்சாலையில் ஏற்பட்டு இருந்த இருளை போக்கி தரும்படி அந்த பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தாய் கணேசன் என்பவர் பதிவு செய்த சமூகவலைதள பதிவை பார்த்த மேயர் ஜெகன் பெரியசாமி நேரடியாக சம்பவ இடத்திற்கு உரிய அதிகாரிகளுடன் நேரில் வருகை தந்து ஆய்வு செய்ததன் பெயரில் "இந்த இடத்தில் இந்த உயர் கோபுர மின் விளக்கு" அதிரடிய அமைக்கப்பட்ட தாக பொதுமக்கள் தகவல் கொடுக்கின்றனர்.  மேலும் இந்த இடத்தில் அமைக்கப்பட்ட கோபுர மின்விளக்கு இப்பகுதியில் நிலவி வந்த இருளை போக்கி பொதுமக்களின் பயத்தையும் நீக்கியது.

இந்நிலையில் நேற்று  நள்ளிரவு இந்த மின் கம்பத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் கோபுர மின் கம்பத்தின் கீழ் பகுதி முறிந்து சரிந்துள்ளது. கம்பம் சரிந்ததால் மின்சார இணைப்புக்காக பயன்படுத்தப்பட்டு இருந்த சர்வீஸ் லைன் அத்து சாலையின் நடுவே கிடந்தது. நள்ளிரவில் கம்பம் சரிந்ததால் வெளிச்சம் துண்டிக்கப்பட்டது. அந்த நேரம் அந்த வழியே இரவு நேர ரோந்து பணிக்காக வந்து கொண்டு இருந்த வடபாகம் காவல் ஆய்வாளர் வேல்ராஜ் நடந்த சம்பவத்தை பார்த்ததும் மின்வாரிய அலுவலகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்ததாக சொல்லந்படுகிறது. தகவல் கொடுத்துவிட்டு மின்வாரிய ஊழியர் வருகை தரும் வரை அந்த இடத்தில் காத்திருந்து வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் தகவல் கொடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதன் பின் சாய்கோபரமாக அந்தரத்தில் நின்று கொண்டு இருந்த மின் கம்பத்தை மாநகராட்சி நிர்வாகம் காலை அப்புரபடுத்தியது. இந்த சம்பவத்தால் இப்பகுதியில் நடக்கவிருந்த விபத்துக்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.  

பொதுமக்களின் கோரிக்கை

இச்சம்பவத்தை தொடர்ந்து கழட்டி வைக்கப்பட்ட கோபுர மின் கம்பம் காலம் தாழ்த்தாமல் மீண்டும் அவ்விடத்தில் புதுப்பிக்கப்பட வேண்டும். மேலும் கம்பம் அகற்றப்பட்ட இடத்தில் உள்ள காங்கிரீட் தளம்  வாகன ஓட்டிகளை விபத்துக்கு உள்ளாக்கலாம் என்பதால் கம்பம் வைக்கும் வரையில் இவ்விடத்தில் பேரிகாட் வைப்பது அவசியமாகி உள்ளது. மேலும் இதை சுற்றி சிறிய அளவில் ஓர் ரவுண்டானா அமைத்தால் இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்கலாம் என்கின்றனர் பொதுமக்கள்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி