தூத்துக்குடியில் மனித நேய ஜனநாயக கட்சி புதிய உறுப்பினா்கள் சோ்ப்பு
தூத்துக்குடி மனித நேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ வழிகாட்டுதலின்படி குமரன் நகரில் மாவட்ட மனித நேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ஹசன் தலைமையில் இளைஞர் அணி செயலாளர் ராஜ், மாவட்ட துணை செயலாளர் சேக்முகமது ஜலால் முகமது ஆகியோர் முன்னிலையில் புதிய உறுப்பினர்கள் சோ்ந்தாா்கள். உறுப்பினா்களுக்கு காா்டு வழங்கி கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பைஉணா்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்று மாவட்ட செயலாளர் ஹசன் கேட்டுக்கொண்டாா்.
நிகழ்ச்சியில் தலைவர் பாபி, துணை தலைவர் மணிராஜ் செயலாளர் தாமஸ் துணை செயலாளர் பெருமாள் பொருளாளர் பொன்னி மணிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனா்.

