ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளியுடன் அதிகாரி கூட்டு : பொய் வழக்கில் இன்ஸ்பெக்டர் கைது? - நடந்தது என்ன.?
சென்னை பரங்கிமலை இன்ஸ்பெக்டர் முகமது புகாரி (43). கடந்த 4ம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர், வண் ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஷேர் புரோக்கர் அகில்குமார் என்பவரை ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் சேர்த்து விடுவதாக மிரட்டி ஏற்கனவே ரூ.40 லட்சம் வாங்கியதாகவும், மேலும் ரூ.5 லட்சம் தரும்படி தற்போது மிரட்டியதாகவும் கொடுக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதுகுறித்து சில நேர்மையான போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, 'அகில்குமார் ஷேர் மார்க்கெட்டில் இருப்பதாக கூறப்பட்டாலும், அவர் 2ம் நம்பர் தொழிலும் செய்வதாக கூறப்படுகிறது. இதனால், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், போலீசாரால் கைது செய்யப்பட்ட வக்கீல் மொட்டை கிருஷ்ணன் என்பவரது செல்போனில் தொடர்ந்து அகில் குமார் பேசி வந்துள்ளார். மேலும் மொட்டை கிருஷ்ணனுக்கு, சிம்கார்டும் அவர்தான் வாங்கிக் கொடுத்துள்ளார். இதனால் அவரை போலீசார் அப்போது விசாரணை நடத்தி அனுப்பியுள்ளனர்.
அகில்குமாரை, ஆம்ஸ்ட் ராங் கொலை வழக்கின் சிறப்பு விசாரணை அதிகாரி முகமது புகாரிதான், பிடித்துள்ளார். அவரை சில நாட்கள் தொடர்ந்து பல்வேறு அதிகாரிகள் விசாரித்து அனுப்பியுள்ளனர்.இந்தநிலையில், அவர் போதைப் பொருள் விற்பனை செய்வதாக தென் சென்னை இணை கமிஷனர் விஜயகுமாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர், இது குறித்து விசாரிக்கும்படி பரங்கிமலை இன்ஸ்பெக்டர் முகமது புகாரியிடம் கூறி யுள்ளார். அவரும், வண்ணாரப்பேட்டை யில் உள்ள அகில்குமாரின் வீட்டுக்குச் சென்று விசாரித்துள்ளார். வீட்டிலும் சோதனை போட்டுள்ளார். இந்தநிலை யில் இன்ஸ்பெக்டரின் போனுக்கு வட சென்னையைச் சேர்ந்த பாஜ மாவட்ட தலைவர் ஒருவர் போன் செய்து, அவர் பாஜவைச் சேர்ந்தவர். அவரிடம் எப்படி விசாரணை நடத்தலாம் என்று சண்டை போட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அகில் குமார் வீட்டில் இருந்து முகமது புகாரி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இந்தநிலையில், அகில்குமார், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசார் தேடியதால், வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் ரவுடி சம்பவ செந்திலுக்கு போன் செய்து பேசியதாக கூறப்படுகி றது. அப்போது தன்னை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முகமது புகாரி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இப்போதும் தன்னை விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்கிறார் என்று கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, ரவுடி சம்பவ செந்தில், சென்னையில் உள்ள ஒரு உயர் போலீஸ் அதிகாரிக்கு போன் செய்து பேசியுள்ளார். ஏற்கனவே, அந்த போலீஸ் அதிகாரி, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரிக்கும் போலீசாரிடம் சம்பவ செந்திலுக்காக பேசி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது போலீஸ் கமிஷனராக இருந்த அருண், நடுநிலையாக செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டதால், எந்த பரிந்துரைக்கும் தனிப்படையினர் இடம் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், தற்போது சென்னை யில் பணியாற்றும் அந்த உயர் அதிகாரி, தன்னை வந்து அகில்குமார் சந்திக்கும் படி சம்பவ செந்திலிடம் கூறியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அகில்குமார், சென்னை போலீஸ் உயர் அதிகாரியை சந்தித்துப் பேசி, அதிகாரி சொன்னபடியே புகாரைக் கொடுத்துள் ளார். அந்தப் புகாரைப் பெற்ற அதிகாரி, துணை கமிஷனர் கோபி விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளதோடு, முகமது புகாரியை கைது செய்யவும் உத் தரவிட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட ஒருவர், 2ம் நம்பர் தொழில் செய்கிறவர், ரவுடிகளு டன் நேரடி தொடர்பில் இருப்பவர், உயர் போலீஸ் அதிகாரி அழைப்பின் பேரில் சந்தித்ததோடு, ஒரு இன்ஸ்பெக்டர் மீது புகாரும் கொடுத்துள்ளார்.
இந்தப் புகார் மீது விசாரணையோ, சாட்சியோ தேடாமல், பணம் கொடுத்த தாக கூறப்படும் இடத்தைக் கூட பார்க்கா மல், இன்ஸ்பெக்டர் புகாரியை தொடர்பு கொண்ட துணை கமிஷனர் கோபி, சாதா ரண உடையில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்தியக் குற்றப்பிரிவுக்கு வரும்படி கூறியுள்ளார். துணை கமிஷனர் கூறியதால் ஏன் என்று கூட பார்க்காமல் மத்தியக் குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு வந்த புகாரியைப்பார்த்ததும், கீழே உட்காருடா என்று துணை கமிஷனர் மிரட்டியதாக கூறப்படுகிறது. அதற்கு புகாரி, "நான் இன்ஸ்பெக்டர். நேர்மையானவன். என்னை எப்படி நீங்கள் குற்றவாளியைப் போல கீழே உட்காரும்படி உத்தரவிடுவீர்கள் என்ற போது, நீ அக்யூஸ்ட்தான்டா” என்று கூறிய துணை கமிஷனர், காவலர்களிடம் இவரை அடித்து, உட்கார வையுங்கள் என்று உத்தரவிட்டுள்ளார். இதனால், அச்சத்தில் உறைந்துபோன இன்ஸ்பெக்டர், கீழே தரையில் குற்றவாளிபோல அமர்ந்துள்ளார்.
இன்ஸ்பெக்டர் வந்த தகவல் உயர் போலீஸ் அதிகாரிக்கு தெரி விக்கப்படுகிறது. அவர் நேரடியாக அந்த அறைக்கு வந்து, “நீ என்ன பெரிய இவனா? என்கவுண்டர் செஞ்சா? பெரிய இவனா? வாங்கிய பணத்தை என்ன செய்தாய்" என்று கேட்டுள்ளார். அதற்கு புகாரி, "ஐயா நான் எந்த பணமும், யாரிடமும் வாங்கவில்லை” என்ற போது, புகார் கடிதத்தைக் காட்டிய அதிகாரி, “என்னிடம் ஆதாரம் இருக்கு" என்று கூறியுள் ளார். ஆனால் அந்த புகாரில் கையெழுத்து அப்போது இல்லை. "என்னடா கையெழுத்து இல்லை என்று நினைக்கிறாயா? இங்கு உள்ள காவலரைக் கூட கையெழுத்துப் போடச் சொல்வேன்" என்று அதிகாரி கூறியுள்ளார். அதன் பின்னர்தான் அகில்குமாரிடம் கையெழுத்தே வாங்கப்பட் டுள்ளது.
அதே நேரத்தில் விசாரணை நடக்கும் அறைக்கு இணை கமிஷனர் விஜய குமார் வந்துள்ளார். இன்ஸ்பெக்டர் கீழே உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும், உயர் அதிகாரியிடம், "சார்.. இவர் நேர் மையானவர். பணம் வாங்க மாட்டார்" என்றபோது, "புகார் கொடுத்த அகில் குமாரிடம் எவ்வளவு பணம் வாங்கி னாய், அந்தப் பணத்தில் இணை கமி ஷனருக்கும் கொடுத்தாயா" என்று உயர் அதிகாரி இன்ஸ்பெக்டர் புகாரியிடம் கேட்டு மிரட்டியுள்ளார். இன்ஸ்பெக்ட ருக்கு ஆதரவாக பேசியதால், நம் பக்கமே குற்றத்தை உயர் அதிகாரி திருப்புவதால், நேர்மையான இணை கமிஷனரும் அமைதியாகிவிட்டார்.
தொடர்ந்து, "யார் சொல்லி என்கவுண்டர் செய்தீர்கள் என்று, ஒரு முன்னாள் அமைச்சர் மற்றும் ஒரு காங்கிரஸ் முன்னாள் தலைவர் பெயரைச் சொல்லி அவர்கள் சொல்லித்தான் சுட்டாயா? ஒழுங்காக சொல்லிவிடு" என்று உயர் அதிகாரி மிரட்டியுள்ளார். ஆனால் இன்ஸ்பெக்டரோ, "நாங்கள் நடவடிக்கை எடுத்தவர்கள் அனைவருமே கொடூர மான ரவுடிகள். அப்பாவிகளை எதுவும் செய்யவில்லை" என்று கூறியுள்ளார். "என்னடா என்னிடமே சத்தம் போட்டு பேசுகிறாயா" என்று கூறி மீசையை முறுக்கியபடி தென் மாவட்ட உச்சரிப்பில் கெட்ட வார்த்தைகளை சொல்லி திட்டியுள்ளார். பின்னர் இவனை அடித்து, உதைத்து, ரிமாண்ட் செய்யுங்கள் என்று கூறியுள்ளார். உயர் அதிகாரி உத்தரவிட்டதால், மறுநாள் காலையில், மாஸ்திரேட் வீட்டுக்கே இன்ஸ்பெக்டர்கள் சென்று நிலைமை சொல்லி பின்னர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று இன்ஸ்பெக்டர் முகமது புகாரியை ஆஜர்படுத்தியுள்ளனர். பின்னர் அவர் ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் அடைக் கப்பட்டுள்ள சிறையிலேயே அடைக்கப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ஒரு முக்கிய குற்றவாளி சொல்லி ஒரு இன்ஸ்பெக் டர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த வழக்கில் புகாரில், ஏற்கனவே ரூ.40 லட்சம் மிரட்டி வாங்கியதாகவும், தற்போது ரூ.5 லட்சம் வாங்கியதாகவும் அகில் குமார் கூறியுள்ளார். ஆனால், இந்த வழக்கில் ரூ.5 லட்சத்தை பறிமுதல் செய்யவில்லை. அந்தப் பணம் எங்கே? வழக்கமாக ஒரு காவலர் மீதோ அதிகாரி மீதோ புகார் வந்தால், நிர்வாகரீதியிலான விசாரணைக்கு உத்தரவிடப்படும். தவறு செய்தது தெரியவந்தால், சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் அல்லது டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள். அல்லது லஞ்சப் புகாரை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அனுப்பி வைப்பார்கள். அங்கு விசாரணை நடத்தப்படும். பணம் கொடுக்கும்போதுதான் கையும், களவு மாக மாட்டினால் மட்டுமே கைது செய் யப்படுவார்கள். ஆனால் இந்த வழக்கில் அப்படி எந்த விசாரணை நடைமுறையும் பின்பற்றப்படவில்லை. அதோடு, இன்ஸ் பெக்டர் புகாரியிடம் வாக்குமூலம் வாங் கியதாக, உயர் அதிகாரிகளே சில வெத்து தாள்களில் கையெழுத்துப் பெற்று, அதில் வாக்குமூலத்தை நிரப்பியுள்ளனர். அதில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரணை நடத்தி வந்த மற்றொரு விசாரணை அதி காரி சரவணனுக்கும், இந்த ரூ.5 லட்சம் வாங்கியதில் பங்கு உண்டு என்று சேர்த்துள்ளனர்.
அதன் பின்னர், இன்ஸ்பெக்டர் சரவணனும் கைது செய்யப்படுவார் என்று பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இன்ஸ்பெக்டர் சரவணனோ, என்னை தேவையில்லாமல் வழக்கில் சேர்த்தால் நான் சிபிஐ விசாரணை கேட்டு நீதிமன்றத்தை நாடுவேன் என்று கூறி யதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் வழக்கு சிபிஐ விசரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு இதையும் சேர்த்து விசாரிக்க மனுபோ டுவேன் என்று அவர் கூறியுள்ளார். இதனால் அவரை உடனடியாக கட்டுப் பாட்டு அறைக்கு மாற்றி உத்தரவிட்டுள் ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், விசாரணை அதிகாரியை கைது செய்த சம்பவம் சென்னை போலீசார் மத்தி யில் பெரும் பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு வழக்கை விசா ரித்ததற்காக கைது செய்யப்பட்டால், நாளை ஆட்சி மாறினாலோ அதிகாரி மாறினாலோ, நமக்கும் இதேநிலை ஏற்ப டும் என்று பல அதிகாரிகள் சென்னை போலீசே வேண்டாம் மாவட்டத்திற்கு சென்று விடலாமா என்று ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது சிறையில் உள்ள இன்ஸ்பெக் டர் புகாரியும், தான் கைது செய்யப்பட் டது குறித்து சிபிஐ விசாரணை கேட்டு சென்னை உயர் நீதிமன்றம் செல்ல வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
