"தூத்துக்குடி அரசு மருத்துவமனை கட்டிடங்களை ஆய்வு செய்ய வேண்டும் -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாநகரக்குழு கோரிக்கை.!

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய கட்டிடங்கள் மற்றும் மருத்துவமனைப் பயன்பாட்டில் உள்ள அறைகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.

படங்களில் காணப்படுவது போன்று சில இடங்களில் கதவுகள் சேதமடைந்தும், சுவர்களில் விரிசல்கள் மற்றும் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்தும், கட்டிடப் பராமரிப்பு குறைபாடுகளுடனும் உள்ளன.

தினசரி ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்லும் அரசு மருத்துவமனையில், நோயாளிகள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்:

மருத்துவமனை வளாகத்தில் உள்ள அனைத்து பழைய கட்டிடங்களையும் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்.

விரிசல் மற்றும் சேதமடைந்த கட்டிடப் பகுதிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

சேதமடைந்த கதவுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாற்றி அமைக்க வேண்டும்.

கட்டிடங்களின் பாதுகாப்புத் தன்மை குறித்து துறைசார் அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டும்.

நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாநகரக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

வேலவன் ப்ராப்பர்ட்டீஸ்(மதுரா கோட்ஸ்): "அரசு புறம்போக்கு நிலம், பிளாட்டாக விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது" - ஆட்சியரிடம் மனு.!