பொதுமக்கள் தண்ணீர் கேட்டால் சைகை மூலம் மிரட்டல் - அதிகாரி மீது மாநகராட்சி ஆணையரிடம் புகார்.!

தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலம் முத்தையாபுரம் சுந்தர்நகர், சுந்தரம் நகர், ஜேஎஸ் நகர் போன்ற பகுதிகளுக்கு குடிநீர் நான்கு நாட்களாகியும் ஏன் இன்னும் வரவில்லை என்று கேட்கச் சென்ற பெண்களை தனது கை செய்கையின் மூலமாக இழிவாக பேசியும், தனது அரசு அதிகாரத்தை அதிகார துஷ்பிரயோகம் செய்கிற விதமாக கைகளை முறுக்கிக் கொண்டு மீண்டும் தான் செய்த தவறை உணராமல் பெண்களிடமும் மரியாதை குறைவாக நடந்த தூத்துக்குடி தெற்கு மண்டல மாநகராட்சி இளநிலை பொறியாளர் செல்வம் மீது துறை ரீதியான நடவடிக்கை உடனடியாக எடுக்க மாநகராட்சி ஆணையர் ப்ாியங்காவை சந்தித்து தமிழர் விடியல் கட்சி சந்தனராஜ் பாண்டியன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர்  அசன், தமிழ் புலிகள் கட்சி மண்டல செயலாளர் தாஸ் ஆகியோா் கோரிக்கை மனு அளித்தனா். 

அப்போது ஆணையா் ப்ரியங்கா பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையோடும், குறிப்பாக பொதுமக்களுடைய பிரச்சனைகளுக்காக அரசு அதிகாரிகளிடம் முறையிடும் போது அவர்களுடைய மக்கள் பிரச்சினை நிறைவேறும் விதமாக மிகவும் கண்ணியமாக நாங்கள் கொடுத்த கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டு விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் என்றாா். நாங்களும் அதற்கான உரிய ஆதாரமாக காணொளியும் காண்பிக்க முயன்றோம் அவர்கள் நீங்கள் சொல்வதை நான் நன்றாக புரிந்து கொள்கிறேன். உங்களைப் போன்ற அரசியல் கட்சிகள் மக்களுக்காகத் தான் போராடுகிறீர்கள் என்று அறிகிறேன் ஆதலால் அந்த காணொளியை நான் பார்க்க தேவையில்லை. ஆனால் உங்கள் மீது நம்பிக்கை வைத்து நடவடிக்கை எடுப்பேன் என்று எங்களிடம் கூறியது மிகவும் நம்பிக்கைக்குரிய வார்த்தையாக இருந்தது. அது மட்டும் அல்ல ஆணையாின் நேர்முக உதவியாளரிடம் காணொளியை காண்பித்தோம். அவர்களும் பார்த்துவிட்டு ஆணையா் அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றாா். நீங்கள் நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கவில்லை என்றால் பொதுமக்களையும் ஜனநாயக சக்திகளையும் ஒன்று திரட்டி போராட்டம் செய்வதே தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளனா்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி