பிரபல யூடியூபர் மதுமிதாவின் வீட்டில் 118 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை..!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தம்மத்துக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார் (வயது 36). இவர் ஏலக்காய் மொத்த வியாபாரம் உள்ளிட்ட தொழில்களை செய்து வருகிறார்.
இவருடைய மனைவி மதுமிதா (வயது 29), இவர் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ந்து அவ்வபோது எடுக்கும் வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். இவரது வீடியோக்களுக்கு லைக்குகள் சும்மா அள்ளி கொண்டு போகுமாம்.
இந்தநிலையில், மதுமிதா தான் வாங்கும் புதிய தங்க நகைகள், வீட்டில் இருக்கும் கட்டுக்கட்டான பணம் மற்றும் தாங்கள் எங்கு செல்கிறோம் போன்ற அனைத்து விவரங்களையும் தொடர்ந்து ரீல்ஸாக வெளியிட்டு வந்துள்ளார். மேலும் கழுத்து நிறைய நகைகள் அணிந்து கொண்டும், கட்டுக்கட்டாக பணத்தை மெத்தையில் அள்ளிப்போட்டு கொண்டும் மதுமிதா டான்ஸ் ஆடி இன்ஸ்டாவில் ரீல்ஸ் ஆக வெளியிட்டுள்ளார்.
சம்பவத்தன்று ஷாப்பிங் செல்ல வெளியே போயிருந்தவர் இரவு நீண்ட நேரம் ஆகி தான் வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
உடனே வீட்டிற்குள் ரகசிய அறைக்கு சென்று செக் பண்ணிய போது அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 118 சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்க பணத்தை யாரோ கொள்ளை அடித்திருப்பது தெரிய வந்திருக்கிறது. உடனே இது குறித்து ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் மதுமிதா புகாரை கொடுத்திருந்த நிலையில் போலீசார் விசாரிகளை செய்து வருகிறார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்சூர் நாகர் உத்தரவின் பேரில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் சமூக வலைதளப் பதிவுகளைக் கண்காணித்து கொள்ளையர்களைத் நகைகள், பணத்தை அள்ளி சென்றது தெரியவந்துள்ளது.
திருடு போன நகை பணம் எல்லாம் சேர்த்து மொத்தம் 1 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. சம்பவ ஏரியாவில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை சேகரித்தும் செல்போன் டவரில் பதிவான எண்களை சேகரித்தும் கொள்ளையர்கள் நெருங்கி இருப்பதாக தெரிகிறது.
மதுமிதா சோசியல் மீடியாவில் வீடியோக்கள் வெளியிட்டு தான் ஒவ்வொரு மாதமும் ஒரு நகை வாங்கி விடுவேன் அதை என்னுடைய ஃபாலோவர்ஸ்களிடம் சொல்வதால் பலர் என்னிடம் நாங்களும் நகை வாங்கியிருக்கிறோம் என்று கமாண்டுகளில் சொல்கிறார்கள். அதை பார்க்கும் போது எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. அவர்கள் வாங்குவது கூட நானே வாங்கியது போல இருக்கிறது என்று சந்தோஷத்துடன் வீடியோ வெளியிட்ட அதே நாளில்தான் அவருடைய வீட்டிலும் திருடு போயிருக்கிறது.
தனது வீடு பற்றியும், வீட்டில் இருக்கும் ஒவ்வொரு அறைகள் பற்றியும் வீடியோக்கள் வெளியிட்டே திருடர்களுக்கு இவரே வழிவகுத்துக் கொடுத்துவிட்டார் என்றும், எங்க போகிறேன் என்ன வேலை விஷயமாக போகிறேன் என்று எல்லா விஷயத்தையும் தினசரி அப்டேட் ரீல்ஸ்களில் சொல்லி சொல்லி ஒரு சினிமா பட காட்சி போல இவருடைய கதையும் மாறிவிட்டதே என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவிப்பதையும் பார்க்க முடிகிறது.👇🏼

