தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளில் இன்று (26.09.2026) கை ரேகைப் பதிவு (eKYC) சிறப்பு முகாம்.!

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன்படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் கை ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் படி குடும்ப உறுப்பினர்களுக்கு எவ்வித இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின்_கை ரேகை சரிபார்ப்பு (eKYC) பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.57% eKYC பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த eKYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு நாளை (26.09.2026) அன்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் (இடைதேர்தல் நடைபெறவிருக்கும் மதுராந்தகம், தாராபுரம் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளைத் தவிர்த்து) சிறப்பு முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.

எனவே, இதுவரை, நியாய விலைக் கடைகள் மூலம் கைரேகைப் பதிவு (eKYC) மேற்கொள்ளாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் நாளைய தினம் (26.09.2026) நடைபெறவுள்ள இச் சிறப்பு முகாமினை பயன்படுத்தி தங்களது கைரேகைப் பதிவினை (eKYC) மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

வேலவன் ப்ராப்பர்ட்டீஸ்(மதுரா கோட்ஸ்): "அரசு புறம்போக்கு நிலம், பிளாட்டாக விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது" - ஆட்சியரிடம் மனு.!