தூத்துக்குடி துறைமுகத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடி துறைமுகம் அலுவலகம் முன்பு துறைமுகத்தில் பணிபுரிந்து உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கும் மருத்துவத்துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களின் வாரிசுகளுக்கும் வஉசிதம்பரனார் துறைமுகத்தில் நிரந்தர பணியோ அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த வேண்டும் என மத்திய அரசின் தூத்துக்குடி துறைமுக நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி துறைமுக வாரிசுதாரர்களின் நலசங்க தலைவர் பெருமாள்  தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வக்கீல் சார்லஸ் வரவேற்புரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தை பொதுச் செயலாளர் ஞானசேகரன் தொடங்கி வைத்து பேசுகையில்    சமீபத்தில் 3 ஆண்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியிருக்கும் துறைமுக நிர்வாகம் அதில் ஒரு 10 நபர்களுக்கு கூட வாரிசுதாரர் குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவில்லை ஆதலால் அவர்களுக்கு துறைமுகத்தில் வேலைவாய்ப்பு வழங்காமல் புறக்கணிப்பதை கண்டித்தும் துறைமுக நலனுக்காக தன்னுயிர் நீத்த தியாகிகளின் வாரிசுகளுக்கு நிரந்தர வேலை அல்லது கால முறை ஊதியம் ஸ்போர்ட்ஸ் கவுன்சிலில் உள்ளது போல நிர்ணயம் செய்து குறைந்தபட்சம் ரூ.40,000 வழங்கப்பட வேண்டும் அல்லது மேற்கண்ட வாரிசுகளுக்கு ஒன் டைம் செட்டில்மெண்ட் ஆக குறைந்த பட்சம் ரூ 20 லட்சம் வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசு தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெறும் ஊழலை சிபிஐ மூலமோ அல்லது விஜிலென்ஸ் மூலமோ கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிற துறைமுகங்களில் வாரிசுதாரர்களுக்கு ஒன் டைம் செட்டில்மெண்ட் வழங்குவது போல் தூத்துக்குடி துறைமுகத்தில் வழங்காததை கண்டித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார்

ஆா்ப்பாட்டத்தில் புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் விமல் வங்காளியார் தாயக மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் அகமது ஓம்சக்தி சங்கர் ஜி புரட்சி பாரதம் கட்சி மாவட்ட பொருளாளர்  மணிகண்டன் மகளிர் அணி துணைச் செயலாளர் வேலம்மாள் மற்றும் பல்ேவறு நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனர்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

வேலவன் ப்ராப்பர்ட்டீஸ்(மதுரா கோட்ஸ்): "அரசு புறம்போக்கு நிலம், பிளாட்டாக விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது" - ஆட்சியரிடம் மனு.!