வேலவன் நகைக்கடையில் தங்க நகை மோசடி விவகாரம்: புகார் கொடுத்தவரையே கைது செய்தது ஏன் ? என போலீசுக்கு நீதிபதி கண்டனம்.! உடனடியாக ஜாமீனில் விடுவித்து உத்தரவு.!

தூத்துக்குடி டி.எம்.டி. காலனி 10-வது தெருவைச் சேர்ந்தவர் முத்துராஜ் மகன் இசக்கி ராஜ் (33). இவர் கட்டுமானத் தொழில் செய்து வருகிறார். இசக்கி ராஜ் கடந்த 2023-ஆம் ஆண்டு தூத்துக்குடி வேலவன் ஹைப்பர் மார்க்கெட்டில் உள்ள நகைக்கடையில் நகைகள் வாங்கியுள்ளார்.

பின்னர் தனது தொழில் தேவைக்காக அந்த நகையைத் தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைக்க முயன்றபோது, அதில் அதிகளவு உலோகம் கலந்திருப்பதாக நிதி நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, "தன்னிடம் போலி நகையைக் கொடுத்து ஏமாற்றி விட்டீர்கள்" என ஹைப்பர் மார்க்கெட் நகைக்கடையில் முறையிட்ட இசக்கி ராஜ், இது தொடர்பாகத் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியிடமும் புகார் மனு அளித்தார்.

இதற்கிடையே, நகைக்கடை நிர்வாகத்தினர் இசக்கி ராஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அந்த நகைகளுக்கான தொகையான ரூ. 4,22,000-ஐ டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாகத் திரும்ப வழங்கியுள்ளனர். மேலும், தங்களது நகையைத் திரும்பத் தருமாறு கேட்டுள்ளனர்.

ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்ட இசக்கி ராஜ் நகையின் தரத்தை நிருபிக்கும் ஆதாரத்திற்க்காக நகையை  திரும்பக் கொடுக்காமல் இருந்ததாக  கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து நகைக்கடை மேலாளரின் மகன் சரவணகுமார் (42) அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையின் முடிவில் இசக்கி ராஜாவைப் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இசக்கி ராஜ் தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண். 2 நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி இலக்கியா, நகை மோசடி தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் புகார் கொடுத்த இசக்கி ராஜாவை கைது செய்தது ஏன் என போலீசாரை கண்டித்ததுடன் உடனடியாக இசக்கி ராஜ்ஜை ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

வேலவன் ப்ராப்பர்ட்டீஸ்(மதுரா கோட்ஸ்): "அரசு புறம்போக்கு நிலம், பிளாட்டாக விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது" - ஆட்சியரிடம் மனு.!