வேலவன் ஸ்டோர்ஸ் நகைக்கடை விவகாரம் - PMT இசக்கிராஜா கைது - காவல் நிலையம் முற்றுகை - தூத்துக்குடியில் பரபரப்பு.!
பசும்பொன் மக்கள் தேசம் கட்சியின் தலைவர் 3ஆம் மைல் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் இசக்கிராஜா (46) கைது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் அளித்த புகாரில், மாவட்ட எஸ்பி, சிவபிரசாத் உத்தரவின் பேரில், தென்பாகம் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
இசக்கி ராஜா கைது செய்யப்பட்ட தகவல் பசும்பொன் மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு தெரியவந்ததும், அவர்கள் திரளாக தென்பாகம் காவல் நிலையம் முன்பு திரண்டு வந்து முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் காவல் நிலையம் முன்பு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் காவல் நிலையத்தின் பிரதான நுழைவுவாயில் பூட்டப்பட்டது. மேலும், நுழைவுவாயிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தொடர்ந்து, காவல் நிலையத்தைச் சுற்றிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி தென்பாகம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கைது செய்யப்பட்ட இசக்கி ராஜாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
