தூத்துக்குடி மாநகராட்சியில் பெண் குழந்தைகளுக்கு ஹச்பிவி தடுப்பூசி முகாம்.!

     


தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 14 வயது பூர்த்தியடைந்து 15 வயதை எட்டாத பெண் குழந்தைகளுக்கு, கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் ஹச்பிவி தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ப்ாியங்கா தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, 14 வயது பூர்த்தியடைந்த பெண் குழந்தைகளுக்கு ஒரு டோஸ் ஹச்பிவி தடுப்பூசி, பெற்றோரின் ஒப்புதலுடன் இலவசமாக செலுத்தப்படுகிறது. இத்தடுப்பூசி அரசு சுகாதார நிலையங்களில், பயிற்சி பெற்ற மருத்துவ அலுவலர்கள் மேற்பார்வையில் செலுத்தப்படுகிறது. பயனாளிகளின் விவரங்கள் U-WIN இணையதளத்தில் பதிவு செய்யப்படுகிறது. 

தூத்துக்குடி மாநகராட்சியில் 7 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 14 நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. மூன்று சுகாதார நிலையங்களில் நடைபெற்ற முகாமில் 184 பெண் குழந்தைகளுக்கு ஹச்பிவி தடுப்பூசி போடப்பட்டது. மாநகராட்சி முழுவதும் 4482 பெண் குழந்தைகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 33 சதவீத இலக்கு  எட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள  பெண் குழந்தைகளுக்கு, பள்ளிகள் மூலம் கண்டறிந்து, மாநகராட்சி, பொது சுகாதாரம் மற்றும் கல்வித்துறை குழுக்களின் ஒருங்கிணைந்த ஆதரவுடன் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

தகுதியுள்ள எந்த ஒரு பெண் குழந்தையும் விடுபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, 14 வயது பூர்த்தியடைந்த பெண் குழந்தைகளின் பெற்றோர்கள், அருகிலுள்ள அரசு சுகாதார நிலையங்களை அணுகி தடுப்பூசியின் பயனை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!