தூத்துக்குடியில் பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண் வெட்டிக்கொலை.!
தூத்துக்குடி 3வது மைல், கந்தன் காலனி 3வது தெருவில் வீட்டில் தனியாக இருந்த சித்திரைவேல் என்பவர் மனைவி சசிகலா (45) இவர் இன்று பிற்பகலில் சாப்பிட்டு முடித்து வீட்டில் ஓய்வில் இருந்த நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த நபர் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.
கொலைத் தொடர்பாக முனீஸ் (22) என்ற வாலிபரை பிடித்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு வாரத்தில் மட்டும் 8 கொலைகள் நடந்துள்ளது பொது மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தொடரும் கொலை சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்
