தூத்துக்குடி தாளமுத்துநகர் கொலை வழக்கில் 5 குற்றவாளிகள் கைது - சம்பவம் நடந்த 6 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் நடவடிக்கை.

 


தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பேனர் வைப்பது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் பாலமுருகன் (41) என்பவர் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

01.11.2026 அன்று அதிகாலை விழா ஒன்றிற்காக பாலமுருகன்  வீட்டின் அருகே  பேனர் அமைத்துக் கொண்டிருந்தபோது, மற்றொரு தரப்பினருடன் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், அன்று காலை சுமார் 06.00 மணியளவில், இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பச் சென்ற பாலமுருகனை எதிர்தரப்பினர் அரிவாளால் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து உயிரிழந்தவரின் மனைவி சுதா அளித்த புகாரின் பேரில், தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் குற்ற எண் 701/2026, பிரிவுகள் 296(b), 103(1), 351(3) BNS மற்றும் SC/ST (POA) Act, 1989-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் தொடர்புடைய ஐந்து குற்றவாளிகளான:

1. சிவா @ சிவச்சந்திரன் (22), த/பெ. லட்சுமணன், பாலா தண்டாயுதம் நகர், தாளமுத்துநகர்.

2. சிவகுமார் (22), த/பெ. பரமசிவன், கே.வி.கே. நகர், தூத்துக்குடி.

3. கோகுல்நாத் (24), த/பெ. தினகரன், லூர்தம்மாள்புரம்.

4. மணிகண்டன் (20), த/பெ. மாரிமுத்து, சொட்டையன் தோப்பு, தூத்துக்குடி.

5. பொன்பாண்டி @ ரவி (44), த/பெ. பொய்யாமொழி, மாதா நகர் 5-வது தெரு, தாளமுத்துநகர்.

ஆகிய 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவ்வழக்கு தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!