Posts

நடுவக்குறிச்சி கிாிக்கெட் அணிக்கு ஓட்டப்பிடாரம் ஓன்றிய திமுக செயலாளர் இளையராஜா உபகரணங்கள் வழங்கினாா்.

Image
  தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் விளையாட்டுத்துறையை பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து விளையாட்டுதுறை வீரா்களையும் தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. அதே வேளையில் அவர்களுக்கு தேவையான அரசு சாா்ந்த உதவிகளை வழங்கி ஊக்கப்படுத்தி தேசிய மற்றும் உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்து உற்சாகப்படுத்தி வருகின்றனா்.  இந்நிலையில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வடக்கு ஓன்றியத்தில் உள்ள நடுவக்குறிச்சி மாா்னிங் கிாிக்கெட் கிளப் அணியினருக்கு திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்்பி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி வடக்கு ஓன்றிய திமுக அலுவலகத்தில் ஓன்றிய செயலாளர் இளையராஜா விளையாட்டிற்கு தேவையான உபகரணங்களை வழங்கினாா்.

முத்தையாபுரம் பாலிடெக்னிக் கல்லூரியில் போக்குவரத்து விழிப்புணர்வு கருத்தரங்கம்.!

Image
  தூத்துக்குடி முத்தையாபுரம் கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழுவின் சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றன. கருத்தரங்கில் கிரேஸ் பாலிடெக்னிக்  கல்லூரியின் முதல்வர் ஜோஸ் சசிகுமார் தலைமை தாங்கினார். போக்குவரத்து விழிப்புணர்வு கருத்தரங்கில் மாணவர்களுக்கு போக்குவரத்தில் விபத்துகள் ஏற்படாத வகையில் உயிர் பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வை போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், ஆர்டிஓ பாத்திமா பெர்வின், போக்குவரத்து துணை ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர்கள் மாணவர்களுக்கு போக்குவரத்து  குறித்து விழிப்புணர்வு வழங்கினார்கள். மேலும் போக்குவரத்து சம்பந்தமான விளைவுகள் அதிலிருந்து மாணவர்கள் விலகி வந்து வாழ்வியல் முறைகளையும் பற்றியும் மாணவர்களுக்கு மாவட்ட சட்டபணிகள் ஆணைக் குழுவினர் வழக்கறிஞர்கள் செந்தில்குமார், சுதர்சன், ராஜா விரிவாக வழங்கினார்கள். கருத்தரங்கில் மாணவர்கள் ஆர்வத்துடன் போக்குவரத்து விதிமுறைகளையும், விபத்து பற்றியும் கற்றிந்தனர்.  நிகழ்ச்சியை கல்லூரி விரிவுரையாளர்கள் வழி நடத்தினார்கள்.

தூத்துக்குடி மாநகராட்சி வாகன காப்பகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் திருட்டு.!

Image
  தூத்துக்குடி வண்ணார் முதல் தெருவை சேர்ந்த சரவணகுமார் என்பவர்  கடந்த 16ம் தேதி இரவு தன்னுடைய இருசக்கர வாகனத்தை பழைய பேருந்து நிறுத்தத்தில் உள்ள மாநகராட்சி சார்பில் நடத்தப்படுகின்ற வாகன காப்பகத்தில் நிறுத்தி விட்டு மறுநாள் 17ம் தேதி தன்னுடைய இருசக்கர வாகனத்தை சென்று பார்த்த போது வாகனம் காணமல் போனது தெரியவந்தது. இதுதொடர்பாக அங்கு பணியில் உள்ள மாநகராட்சி பணியாளர்களை கேட்டபோது எந்த ஒரு பதிலும் மாநகராட்சி பணியாளர்கள் கூறவில்லையாம். அங்கு உள்ள சிசிடிவி கேமரா பதிவை பார்த்த போது ஒருவர் அந்த காணாமல் போன இருசக்கர வாகனத்தை மாநகராட்சி வாகன காப்பகத்தில் இருந்து எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. இதனையடுத்து சரவணக்குமார் மத்திய பாகம் காவல் நிலையத்தில் இருசக்கர வாகனத்தை காணவில்லை என புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.  இதேபோல் மாநகராட்சி வாகன காப்பகத்தில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருட்டு போவதாகவும் புகார் கூறப்படுகிறது. அங்கு சரியான முறையில் பணியாளர்கள், செக்யூரிட்டிகள் இல்லை என்ற குற்றச்சாட்டும் வாகனத்தை விடுகின்ற இருசக்கர வா...

தூத்துக்குடியில் ஆளுங்கட்சிக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் தனியார் தூய்மை பணி நிறுவனம் - திமுகவுக்கு இழப்பா?

Image
  தமிழகம் முழுவதும் பல்வேறு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளில் தூய்மை பணியை காண்ட்ராக்ட் எடுத்து செய்து வருகிறது அவர்லேன்ட் என்ற தனியார் நிறுவனம். இந்த நிறுவனம் ஒப்பந்த பணியை எடுத்த நாள் முதல் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி வருகிறதாம். குறிப்பாக தூத்துக்குடி மாநகராட்சியில் தொடர்ந்து மூன்று வருடங்களாக தூய்மை பணியில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கும் அவர்லேண்ட் நிறுவனத்துக்கும் பல்வேறு பிரச்சனைகள் நிலவி வருகிறதாம். குறிப்பாக அரசு நிர்ணயித்த சம்பளத்தை தூய்மை பணியாளர்களுக்கு வழங்குவது கிடையாது. அதுபோல பி.எப் பணத்திலும் பல்வேறு மோசடி நடக்கிறதாம்.  இது போல பல்வேறு வகையில் தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் 1000க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை அவர்லேண்ட் நிறுவனம் தொடர்ந்து வஞ்சித்து வருவதாக கூறப்படுகிறது. அவர்லேண்ட் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வரும் ராகேஷ், முருகேசன் இருவரும் மாநகராட்சிக்கும் கட்டுப்படுவது கிடையாதாம். தூய்மை பணியாளர்களிடமும் கனிவு காட்டுவது கிடையாது. சில தினங்களுக்கு முன்பு தூய்மை பணியாளர் சங்கத் தலைவர் பொன்ராஜ் இடைக்கால பணிந...

தூத்துக்குடி மாவட்டத்தில் 1 லட்சத்து 62 ஆயிரம் வாக்காளர்கள் வாக்காளர்கள் நீக்கம்.!

Image
  தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 1,62,527 பேர் நீக்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026ன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் - ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டார். அதன்படி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 197947 வாக்காளர்கள், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில்  236461 வாக்காளர்கள், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 222631 வாக்காளர்கள், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் 207054 வாக்காளர்கள், ஓட்டப்பிடாரம்(தனி) சட்டமன்ற தொகுதியில் 232536 வாக்காளர்கள், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 231529 வாக்காளர்கள்  என மொத்தம் 1,32,81,558 வாக்காளர்கள் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 649224 ஆண்கள், 678752 பெண்கள், 182 இதரர் என மொத்தம் 1,32,81,558 வாக்காளர்கள் உள்ளனர். மேலும், 162527 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். நீக்கப்பட்டதற்கான காரணங்கள் சரியில்லை என ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் ஜனவரி 18-ம் தேதி வரை தெரிவிக்கலாம். இடம் மாறியவர்கள் படிவம் 8, புதியதாக சே...

தூத்துக்குடி : கிறிஸ்துமஸ் கேரல் அலங்கார வாகன ஊர்வலத்திற்கான விதிமுறைகள் - மாவட்ட காவல்துறை அறிவிப்பு.

Image
தூத்துக்குடி நகர பகுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையினை முன்னிட்டு 24-12-2025 அன்று மாலை நடைபெறவிருக்கும் கேரல் ஊர்வலம் தொடர்பாக, பண்டிகையினை கொண்டாடும் மக்கள் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாட வேண்டியும், கேரல் ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள், பொதுமக்கள் மற்றும் பொது அமைதிக்கு எவ்வித பிரச்சனைகளும் எற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டும் காவல்துறை சார்பாக பல்வேறு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்தான நடவடிக்கையில் ஒவ்வொரு கேரல் பொறுப்பாளர்களை ஒருங்கிணைத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், தலைமையில் 26-11-2025 அன்றும், தூத்துக்குடி நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சி. மதன், தலைமையில் 12-12-2025 மற்றும் 15-12-2025 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளை எடுத்துரைத்தும்,  முக்கியமாக உயரமான கேரல் அமைப்புகள் சாலையில் உள்ள உயர் மின் அழுத்த வயர்களில் உரசி மிகப்பெரிய அசம்பாவிதங்கள் ஏற்பட அதிகளவில் வாய்ப்புள்ளதை சுட்டிக்காட்டி, கேரல் வாகனத்தின் உயரம் மின்வாரியத்தால் பரிந்த...

சிப்காட் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வருடாந்திர ஆய்வு.!

Image
  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேற்று (18.12.2025) சிப்காட் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு காவல் நிலைய போலீசாரின் உடைமைகளை (Kit Inspection) பார்வையிட்டும், அங்கு  பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளை பார்வையிட்டும் ஆய்வு செய்தார். மேலும் மேற்படி காவல் நிலைய போலீசாரிடம் அவர்கள்  மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், புகார் மனு பதிவு செய்ததற்கான வரவேற்பு சீட்டை ( Reception Slip) வரவேற்பாளர் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுதீர் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.