Posts

தூத்துக்குடி :பெண் காவலருக்கு பாலியல் தொல்லை - இன்ஸ்பெக்டர் மீது புகார்.!

Image
  தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் ஆய்வாளர் திலீபன் மீது மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் சிங்கப்பெண் பாதுகாப்பு படைக்கு பணிமாறுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பணிமாறுதல் வழங்காமல் அதிக பணிச்சுமை கொடுத்ததாகவும், இதுகுறித்து தனது கணவர் கேட்டபோது துப்பாக்கியை காட்டி மார்பில் சுட்டுவிடுவதாக சக காவலர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் மிரட்டியதாகவும் புகார்

தூத்துக்குடி : 3000 ஏக்கர் உப்பள நிலத்தை கையகப்படுத்தி கப்பல் கட்டு தளம் - "பிரச்சனையை முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்" : அமைச்சர் ஸ்ரீநாத் தகவல்.!

Image
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முள்ளக்காடு, முத்தையாபுரம், பொட்டல்காடு, சவேரியார்புரம், தங்கம்மாள்புரம் பழைய காயல், புல்லாவெளி ஆகிய கிராமங்களில் உள்ள சுமார் 3000 ஏக்கர் உப்பளத்தை கையகப்படுத்தி கப்பல் கட்டு தளம் அமைப்பதற்கான நடவடிக்கை கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்று வருகிறது. ஒப்பந்தம் கோரப்பட்டு அதன் அடிப்படையில் பணி செய்வதற்கான ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.   இந்த நிலையில் உப்பளத்தை கையகப்படுத்தினால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கோவளம், பசுவந்தரை தன்பாடு சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த திமுக ஆட்சியின்போது தமிழக முதலமைச்சர் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்களிடமும் கட்சித் தலைவர்களிடமும் கோரிக்கை மனு அளித்தோம், இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக மீன்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் ஸ்ரீநாத்தை சந்தித்து எங்களின் உப்பளப் பகுதியை பார்வையிட வரவேண்டும் என்று சங்கத்தின் சார்பில் கோ...

தூத்துக்குடியில் ஜூன் 3-ல் கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் அறிக்கை!

Image
  தூத்துக்குடி கலைஞரின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஜூன் 3-ம் தேதி அனைத்துப் பகுதிகளிலும் திமுக கொடியேற்றி, இனிப்புகள் மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி கொண்டாட வேண்டும் என்று வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "முன்னாள் முதல்வர் கலைஞரின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வார்டு மற்றும் கிளைக்கழக அமைப்புகள் தோறும் வரும் ஜூன் 3-ம் தேதி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். மேலும், கழக கொள்கை விளக்கப் பாடல்களை ஒலிபரப்பச் செய்தும், திமுக கொடியேற்றியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நலத்திட்ட உதவிகளுடன் உணவு வழங்கியும் கழக நிர்வாகிகள் மக்கள் பயனுறும் வகையில் கொண்டாட வேண்டும்.  நவீன தமிழகத்தின் சிற்பி எனப் போற்றப்படும் கலைஞர், தமிழக...

தாமிரபரணி இலக்கிய பேரவை சார்பில் பெருங்குளம் மாதவையா மறைந்த நூற்றாண்டு நினைவேந்தல் விழா.!

Image
தூத்துக்குடி தாமிரபரணி இலக்கிய பேரவை சார்பில் பஜனை மடம் சன்னதி தெரு பெருங்குளத்தில் மாதவையா நூற்றாண்டு நினைவேந்தல் விழா நடைபெற்றது விழாவிற்கு பெருங்குளம் பேரூராட்சி மன்ற தலைவரும் மருத்துவருமான புவனேஸ்வரி தலைமை வகித்தாா். சீனிவாசன் கண்ணன் ஆறுமுக பாண்டியன் பேச்சிமுத்து வெங்கடாச்சாரி கதிர்வேல் ராமானுஜம் சோலைமலை பாலாஜ கோமதி ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் எழுத்தாளர் மணிமொழி செல்வன் வரவேற்புரையாற்றினார் கணபதி சுப்ரமணியம் வழக்கறிஞர் மணி காசிராஜன் ஓய்வு ஆசிரியர் ஆறுமுகப்பெருமாள் புத்தக வாசிப்பு நற்பணி மன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோா் அறிமுக உரையாற்றினாா்கள். பேராசிரியர்கள் ராமச்சந்திரன் சத்தியபாலன் இளங்கோமணி முனைவர் மணிமொழி செல்வன் முதல் ஆசிரியர் பாலசுப்ரமணியன் கவிஞர் சாகுல் ஹைக்கூ மற்றும் தன் முனைக் கவிஞர் ஓவியர் வரவுணன் ஆகிய விருது பெற்ற படைப்பாளர்களுக்கு பாராட்டு மற்றும் படைப்பாளுமை விருது வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள். கவிஞர் ஏரல் ராஜன் நன்றியுரையாற்றினாா்.

தூத்துக்குடி தாளமுத்து நகர் இராஜபாளையம் புனித பிலோமினம்மாள் ஆலய அசனப் பெருவிழா.!

Image
  தூத்துக்குடி இராஜபாளையம் புனித பிலோமினம்மாள் ஆலய மாபெரும் அசனப் பெருவிழா பங்குத்தந்தை செல்வரத்தினம் தலைமையில் உதவி பங்கு தந்தை மார்க்கோனி  முன்னிலையில் சிறப்பு திருப்பலி நடைபெற்று அசன பெருவிழா நடைபெற்றது. இதில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டு சாப்பிட்டு சென்றனர் அசன நிகழ்வுக் கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் மரிய ரீகன் ஊர் பொருளாளர் ரமேஷ் மற்றும் ஊர் நிர்வாகிகள் திலக் மற்றும் ஜீனியஸ் மற்றும் ராகுல் சிங் ஆகியோர் அருட் சகோதரிகள் ஊர் இறை மக்கள் அனைத்து சபைகளும் ஆலயங்களும் சிறப்பாக செய்தனர்

ஸ்ரீசித்தர்பீட குருமகாலிங்கேஸ்வரருக்கு அபிஷேக விழா நடைபெற்றது.

Image
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தில் தென்தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத சிவபெருமான் குருமகாலிங்கேஸ்வருக்கும் நந்திக்கும் வைகாசி மாத பவுர்ணமி முன்னிட்டு சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து குருமகாலிங்கேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தாா். தொடர்ந்து, பருவமழை நன்கு பெய்து விவசாயம் செழிக்கவேண்டியும், பக்தர்கள் வாழ்வில் செல்வங்கள் பெருகிடவும் வேண்டி ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவருக்கு யாகம் மற்றும் மஞ்சள், சந்தனம், இளநீர், பால் உள்ளிட்ட 16வகையான அபிஷேக வழிபாடுகளும், தீபாராதனையும் நடைபெற்றது. முடிவில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீசித்தர் பீடத்தின் மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

தூத்துக்குடி வட்டக்கோவில் எபனேசர் ஆலயத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் புத்தகப்பை வழங்கப்பட்டது

Image
  தூத்துக்குடி வட்டக்கோவில் நாசரேத் திருமண்டலம் கிருஷ்ணராஜபுரம் சேகரத்தை சேர்ந்த எபனேசர் ஆலயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு மற்றும் புத்தகம் வாட்டர் பாட்டில்  பென்சில் பேனா டப்பா  மற்றும்  புத்தகப்பை வழங்கப்பட்டது ஆலய சேகர குரு விஜய் மோகன்ராஜ் தலைமை தாங்கி ஜெபம் செய்து நலத்திட்டங்களை வழங்கினார் இதற்கான ஏற்பாடுகளை ஆண்கள் ஐக்கிய சங்கத்தின் சார்பில் செய்தனர்