Posts

தூத்துக்குடி வளமிகு வேளாண்மை உதவித்திட்டம் 2026-2027ம் நிதியாண்டில் செயல்படுத்தப்பட உள்ளதாக கலெக்டா் விஷுமகாஜன் தகவல்.!

Image
தூத்துக்குடி சமூக நீதித்துறை அமைச்சர் சட்டமன்றப் பேரவையில், 2026-2027 பட்ஜெட்டில் அறிவித்திருந்தபடி, வளமிகு வேளாண்மை உதவித்திட்டத்தின் கீழ்ஆதிதிராவிட விவசாயிகள் 1,000 பேருக்கு தட்கல் மின் இணைப்பு வழங்க தமிழக அரசு ரூ.26.09 கோடியை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆதிதிராவிட விவசாயிகள் பாசன வசதிகளை மேம்படுத்தி, வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும், விவசாய வருமானத்தை உயர்த்தவும் வழிவகை செய்யப்படுகிறது. விவசாய உற்பத்திக்குத் தேவையான மின் மோட்டார் குதிரைத்திறனுக்கேற்ப மின் இணைப்பு பெறுவதற்கான செலவில் 90 சதவீதம் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திடம் தாட்கோ மானியமாக வழங்கும். அதன்படி, 5 ஹச்பி மின் மோட்டாருக்கான மின் இணைப்பு கட்டணம் ரூ.2.50 இலட்சம் எனில், பயனாளி ரூ.25,000- மட்டும் பங்குத்தொகையாக செலுத்த வேண்டும். மீதமுள்ள ரூ.2.25 இலட்சம் தாட்கோ மூலம் மானியமாக வழங்கப்படும். 7.5 ஹச்பி மின் மோட்டாருக்கான மின் இணைப்பு கட்டணம் ரூ.2.75 இலட்சம் எனில், பயனாளி ரூ.27,500- செலுத்த வேண்டும். மீதமுள்ள ரூ.2.48 இலட்சம் தாட்கோ மூலம் மானியமாக வழங்கப்படும். அதேபோன்று, 10 ஹச் மின் மோட்டாருக...

தூத்துக்குடி: சிறுபான்மையின முஸ்லீம் மாணவ மாணவியர்களுக்கு வெளிநாட்டில் முதுகலைப்படிப்பு பயில்வதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 09.11.2026 வரைநீட்டிப்பு –கலெக்டா் விஷுமகாஜன் தகவல்.

Image
  தமிழ்நாடு அரசு 2026-2027ம் ஆண்டில் முஸ்லீம் சிறுபான்மையின மாணவ மாணவியர்கள் உயர்தர உலகளாவிய கல்விவாய்ப்புகளை வழங்க ஏதுவாக வெளிநாடு சென்று படிக்கும் 10 முஸ்லீம் மாணவர்களுக்கு ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ரூ.36.00 இலட்சம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின்கீழ் 2026-2027ம் ஆண்டில் வெளிநாட்டில் முதுகலைப் படிப்புபயில உள்ள சிறுபான்மையின முஸ்லீம் மாணவ-மாணவியர்கள் கல்விஉதவித்தொகை பெற 15.10.2026 வரை விண்ணப்பிக்ககால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது இத்திட்டத்தின் கீழ்விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 09.11.2026 வரைநீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவ மாணவியர்கள் 2026-2027ம் கல்வியாண்டில் முதுகலைபட்டப் படிப்பு படிக்க உலகளாவிய குவாக்கரெல்லிசைமண்டஸ் தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்கள்  கல்விநிறுவனங்களிடமிருந்து நிபந்தனையற்ற சேர்க்கை கடிதம் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8.00 இலட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.  பட்டப்படிப்பில் 60% அல்லது அதற்கு இணையாக தேர்ச்சி சதவீதம் பெற்றிருக்க வேண்டும்...

தூத்துக்குடி மாநகராட்சியில் பெண் குழந்தைகளுக்கு ஹச்பிவி தடுப்பூசி முகாம்.!

Image
      தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 14 வயது பூர்த்தியடைந்து 15 வயதை எட்டாத பெண் குழந்தைகளுக்கு, கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் ஹச்பிவி தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.  இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ப்ாியங்கா தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, 14 வயது பூர்த்தியடைந்த பெண் குழந்தைகளுக்கு ஒரு டோஸ் ஹச்பிவி தடுப்பூசி, பெற்றோரின் ஒப்புதலுடன் இலவசமாக செலுத்தப்படுகிறது. இத்தடுப்பூசி அரசு சுகாதார நிலையங்களில், பயிற்சி பெற்ற மருத்துவ அலுவலர்கள் மேற்பார்வையில் செலுத்தப்படுகிறது. பயனாளிகளின் விவரங்கள் U-WIN இணையதளத்தில் பதிவு செய்யப்படுகிறது.  தூத்துக்குடி மாநகராட்சியில் 7 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 14 நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. மூன்று சுகாதார நிலையங்களில் நடைபெற்ற முகாமில் 184 பெண் குழந்தைகளுக்கு ஹச்பிவி தடுப்பூசி போடப்பட்டது. மாநகராட்சி முழுவதும் 4482 பெண் குழந்தைகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 33 சதவீத இலக்கு  எட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள  பெண் குழந்தைகளுக்...

தூத்துக்குடியில் மதுபானக் கடைக்கு எதிராக 2வது நாளாகப் போராட்டம்: பெண்கள் உள்பட 46 பேர் கைது!

Image
  தூத்துக்குடி அருகே அய்யனார்புரத்தில் பொதுமக்களுக்குப் இடையூறாக இயங்கி வரும் சட்டவிரோத மனமகிழ் மன்றம் மற்றும் மதுபானக் கடையை உடனடியாக மூடக் கோரி, அப்பகுதி மக்கள் இன்று 2-வது நாளாகத் தன்னெழுச்சியாகத் திரண்டு தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம், கீழ அரசடி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட அய்யனார்புரம் பகுதியில் சட்டவிரோதமாக மனமகிழ் மன்றம் மற்றும் மதுபானக் கடை இயங்கி வருகிறது. இதனால் அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு பாதிப்பதுடன், பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதனைக் கண்டித்து அய்யனார்புரம், கீழ அரசடி, வெள்ளப்பட்டி மற்றும் கோமஸ்புரம் ஆகிய சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை முதலே திரண்டு 2-வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்குப் பல ஜனநாயக சக்திகள், மக்கள் நல அமைப்புகள் மற்றும் சமூக இயக்கங்கள் தங்களது ஆதரவை விவரித்துள்ளன. பொதுமக்களின் அமைதியான வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்தச் சட்டவிரோதக் கடையை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உடனடியாகத் தலையிட்டு நிரந்த...

தூத்துக்குடியில் பெண் கொலை வழக்கில் 1 மணி நேரத்தில் கொலையாளி கைது: எஸ்பி சிவபிரசாத் பேட்டி!

Image
  தூத்துக்குடியில் பட்டப்பகலில் வீடு புகுந்து பெண்ணை வெட்டிக்கொலை செய்து, 4 பவுன் தாலிச் சங்கிலியைக் கொள்ளையடித்துச் சென்ற வாலிபரை, சம்பவம் நடந்த ஒரே மணி நேரத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி 3-வது மைல் கந்தன் காலனி 3-வது தெருவைச் சேர்ந்தவர் சித்திரைவேல். இவரது மனைவி சசிகலா (45). இத்தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் சென்னையில் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்; திருமணமான மகன் தனியாக வசித்து வருகிறார். கணவர் சித்திரைவேல் கேரளாவில் வேலை பார்த்து வருவதால், சசிகலா வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், இன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் சசிகலாவின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், தனியாக இருந்த சசிகலாவை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். மேலும், சசிகலா அணிந்திருந்த 4 பவுன் எடையுள்ள தாலிச் சங்கிலியையும் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தென்பாகம் காவல் ஆய்வாளர் ஷேக் அப்துல் காதர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சசிகலாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்...

தூத்துக்குடியில் பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண் வெட்டிக்கொலை.!

Image
  தூத்துக்குடி 3வது மைல், கந்தன் காலனி 3வது தெருவில் வீட்டில் தனியாக இருந்த சித்திரைவேல் என்பவர் மனைவி சசிகலா (45)  இவர் இன்று பிற்பகலில் சாப்பிட்டு முடித்து வீட்டில் ஓய்வில் இருந்த நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த நபர் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.  கொலைத் தொடர்பாக முனீஸ் (22) என்ற வாலிபரை பிடித்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு வாரத்தில் மட்டும் 8 கொலைகள் நடந்துள்ளது பொது மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தொடரும் கொலை சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்

தூத்துக்குடியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

Image
   தூத்துக்குடி போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் டிஏடபிள்யுஎன் எனும் போதைப்பொருள் தடுப்பு மற்றும் நல்வாழ்வு விழிப்புணர்வு கருத்தரங்கு வி.வி.டி. நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், மூத்த உரிமையியல் நீதிபதியுமான சுபாஷினி தலைமையுரையாற்றினார்.  முன்னதாக போதை எதிர்ப்பு உறுதிமொழி  எடுத்துக் கொண்டனர். பள்ளி தமிழாசிரியர் மேரி சீதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியை கனக ரத்தினமணி வரவேற்புரையாற்றினாா். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜா சிறப்புரையாற்றினார்  நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் பிரேமானந்தம், செயலாளரின் நேர்முக உதவியாளர் சாகுல் ஹமீது, ஜூனியர் நிர்வாக உதவியாளர் அருள்மணிராஜ், 29 தமிழ்நாடு சுதந்திர காலாட்படை கம்பெனி என்.சி.சி.யைச் சேர்ந்த சுபேதார் ஜனார்த்தன், ஹவில்தார் ராஜேஷ் பாபு உள்பட பலா் கலந்து கொண்டனா்.   போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, இளைஞர்கள் மற்றும் மாணவர...