தூத்துக்குடி வளமிகு வேளாண்மை உதவித்திட்டம் 2026-2027ம் நிதியாண்டில் செயல்படுத்தப்பட உள்ளதாக கலெக்டா் விஷுமகாஜன் தகவல்.!
தூத்துக்குடி சமூக நீதித்துறை அமைச்சர் சட்டமன்றப் பேரவையில், 2026-2027 பட்ஜெட்டில் அறிவித்திருந்தபடி, வளமிகு வேளாண்மை உதவித்திட்டத்தின் கீழ்ஆதிதிராவிட விவசாயிகள் 1,000 பேருக்கு தட்கல் மின் இணைப்பு வழங்க தமிழக அரசு ரூ.26.09 கோடியை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆதிதிராவிட விவசாயிகள் பாசன வசதிகளை மேம்படுத்தி, வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும், விவசாய வருமானத்தை உயர்த்தவும் வழிவகை செய்யப்படுகிறது. விவசாய உற்பத்திக்குத் தேவையான மின் மோட்டார் குதிரைத்திறனுக்கேற்ப மின் இணைப்பு பெறுவதற்கான செலவில் 90 சதவீதம் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திடம் தாட்கோ மானியமாக வழங்கும். அதன்படி, 5 ஹச்பி மின் மோட்டாருக்கான மின் இணைப்பு கட்டணம் ரூ.2.50 இலட்சம் எனில், பயனாளி ரூ.25,000- மட்டும் பங்குத்தொகையாக செலுத்த வேண்டும். மீதமுள்ள ரூ.2.25 இலட்சம் தாட்கோ மூலம் மானியமாக வழங்கப்படும். 7.5 ஹச்பி மின் மோட்டாருக்கான மின் இணைப்பு கட்டணம் ரூ.2.75 இலட்சம் எனில், பயனாளி ரூ.27,500- செலுத்த வேண்டும். மீதமுள்ள ரூ.2.48 இலட்சம் தாட்கோ மூலம் மானியமாக வழங்கப்படும். அதேபோன்று, 10 ஹச் மின் மோட்டாருக...