லோடு ஆட்டோ மோதி மூதாட்டி பலி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பில்லாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் தலைவிரிச்சான் இவரது மனைவி சொக்கியம்மாள் (72) இவர் அதே பகுதியில் உள்ள குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக சாலையோரம் நேற்று நடந்து சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் ஓட்டிவந்த லோடு ஆட்டோ மூதாட்டி மீது மோதி விபத்துக்குள்ளானது இதில் சொக்கியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் தூசி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த மூதாட்டியின் உடலை மீடடு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து உயிரிழந்தவரின் மகன் புகழேந்தி அளித்த புகாரின்பேரில் உதவி ஆய்வாளர் துரைசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி