Posts

Showing posts from September, 2021

விமான நிலையத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை தடுத்து நிறுத்திய CISF அதிகாரி - இறுதியில் மன்னிப்பு.!

Image
தூத்துக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2 லேப்டாப்கள் வைத்திருந்ததாக கூறி மத்திய தொழில் பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் ஒருவரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அதனால் கடும் வாக்குவாதம் எழுந்தது. இரண்டு லேப்டாப்களை எடுத்துச் செல்லக் கூடாது என்ற எந்த கட்டுப்பாடும் பயணிகளுக்கு இல்லை என அமைச்சர் கூறியுள்ளார். ஆனாலும், உதவி ஆய்வாளர் 2 லேப்டாப்களை எடுத்துச் செல்லக்கூடாது என அனுமதி மறுத்துள்ளார்.  அதற்குள் இவ்விஷயம் மூத்த அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். அமைச்சரை தடுத்து நிறுத்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை எஸ்.ஐ.,யும் மன்னிப்பு கேட்டுள்ளார். பின்னர் 2 லேப்டாப்களுடன் பயணிக்க அவரை அனுமதித்துள்ளனர்.

நாளை முதல் மதுரையிலிருந்து துபாய்க்கு மீண்டும் விமானம் சேவை?

Image
மதுரை விமான நிலையத்தில் இருந்து அக்டோபர் 1-ம் தேதி முதல் துபாய்க்கு மீண்டும் விமான சேவை தொடங்க திட்டமிடப்பட் டுள்ளது. மதுரை விமானநிலையத்தில் இருந்து உள்நாட்டு நகரங்களுக்கு மட்டுமில்லாது இலங்கை, சிங்கப்பூர், மற்றும் துபாய் போன்ற வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. கரோனா தொற்றால் சிங்கப்பூர், துபாய்க்கு இயக்கப்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கொழும்புவுக்கு வாரத்தில் திங்கட்கிழமை மட்டும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் கரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டதால் சென்னை, திருச்சியில் இருந்து துபாய்க்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 1-ம் தேதி முதல் மதுரை விமான நிலையத்தில் இருந்தும் துபாய்க்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது. அக்.1முதல் வாரத்துக்கு 3 நாட்கள் மதுரை- துபாய்- மதுரை வழித்தடத்தில் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. துபாய்க்கு விமானங்களை இயக்க உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்திய தடுப்பூசி 2 டோஸ்கள் போட்டிருப்பதோடு, ஆர்டிபிசிஆர் பரிசோதனை எடுத்திருக்க வேண்டும். மேலும், விமான பயணத்துக்கு 4 மணி நேரத்துக்கு ...

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் போதே சோதனைச் சாவடியில் லஞ்சம் கொடுத்த கனிமவள கும்பல்.!

Image
கனிமவள லாரிகளை சோதனையிடாமல் அனுப்ப உயர் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவு என சோதனை சாவடி போலீசார் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் கூறியதாக அதிர்ச்சி தகவல்.  கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தினந்தோறும் 500 முதல் 600 வாகனங்களில் கனிம வளங்கள் கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருவது வாடிக்கையாக அமைந்து வருகிறது. இதனை தடுக்க பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் குமரி மாவட்டத்தில் கனிம வளம் கடத்தல் படு ஜோராக நடைபெறுகிறது. அதற்கு காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உட்பட பலர் உடந்தையாக செயல்பட்டு வருவதாகவும், மேலும் அரசியல்வாதிகள் பலரும் கனிம வள கடத்தல் கும்பலுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றனர் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். கனிம வள கடத்தல் கும்பலுக்கு ஆதரவாகவே தக்கலை காவல் உட்கோட்ட பதவி தரம் இறக்கப்பட்டது என்பதும் அவர்களின் குற்றசாட்டு. ஏற்கனவே தக்கலை உட்கோட்ட பகுதி என்பது மாநில எல்லைகளை உள்ளடக்கிய பல சோதனை சாவடிகள் மற்றும் கனிமவளம் கடத்தல் உட்பட வளம் கொழிக்கும் பகுதியாகும். தக்கலை உட்கோட்ட பகுதிய...

ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

Image
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சண்முகத்திற்க்கு மூன்று ஆண்டுகள் சிறை இந்திரகுமாரியின் கணவர் பாபுவிற்க்கு 5 ஆண்டுகள் சிறை ஜெயலலிதாவின் 1999 - 1996 அமைச்சரவையில் கைத்தறித் துறை அமைச்சராக இருந்தவர் இந்திரகுமாரி

பி.எம்.கேர்ஸ் : அரசுக்கு சொந்தமானது அல்ல என்றால் அதை நிர்வகிக்கும் தனியார் யார் ? : திமுக சுளீர் கேள்வி.!

Image
சென்னை : பி.எம்.கேர்ஸ் நிதியம் அரசுக்கு சொந்தமானது அல்ல என்றால் அதை நிர்வகிக்கும் தனியார் என்று திமுக அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது. முரசொலி நாளேட்டின் தலையங்கம் பி.எம்.கேர்ஸ் நிதியம் குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அதன் நிர்வாகியும் பிரதமர் அலுவலகத்தின் துணை செயலாளருமான பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தவா தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம் குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.  பி.எம்.கேர்ஸ் நிதி அறிவிப்பில் ஒன்றிய அரசு முத்திரையும் பிரதமர் மோடி வணங்கி நிற்பது போன்ற படமும் இருந்ததை சுட்டிக் காட்டியுள்ள முரசொலி, தனியார் அறக்கட்டளைக்கு பிரதமர் விளம்பர தூதராக இருக்க முடியாது இருக்கவும் மாட்டார் என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளது.   பி.எம்.கேர்ஸ் நிதியத்தின் தலைவராக பிரதமரும் ஒன்றிய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை உறுப்பினர்களாகவும் இருக்கும் நிலையில், அதன் நிர்வாகப் பொறுப்பை பிரதமர் அலுவலகத்தின் துணை செயலாளர் பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தவா கவனிப்பதை தலையங்கம் கோடிட்டு காட்டியுள்ளது.  ஒன்றிய அரசு அதிகாரியாக இருந்தாலும் பி.எம்....

சர்வதேச கடலோர தூய்மை தினம்; முத்துநகர் கடற்கரையை சுத்தம் செய்த மாணவர்கள்!

Image
தூத்துக்குடி  சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி முத்து நகர் கடற்கரையை தூய்மை செய்யும் பணியில் உதவி ஆட்சியர், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மாணவ மாணவர்கள் ஈடுபட்டனர். கடலில் ஏற்படும் மாசுகள் 80 விழுக்காடு நிலத்தில் வாழும் மக்களால் ஏற்படுகின்றன. ஆண்டு ஒன்றுக்கு 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் வந்து சேர்வதால் மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.  பிளாஸ்டிக் மாசுபாட்டினால் ஆண்டுக்கு ஒரு மில்லியன் கடற்பறவைகள் மற்றும் ஒரு லட்சம் கடல் வாழ் உயிரினங்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. மீன்கள் பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிடுவதன் மூலம் அதனை உண்ணும் மனிதர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே கடற்கரையை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் கடல் பகுதியில் தேவையற்ற குப்பைகளை கொட்ட கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச கடலோர தூய்மை தினம் கடந்த ஒரு வார காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் மீன்வளக் கல்லூரி மாணவ மாணவிகள் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையை இன்று காலை த...

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை தூய்மை பணி - கனிமொழி எம்.பி. கொடியசைத்து துவக்கி வைத்தார்.!

Image
தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை தொடங்கியதை யொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதனையொட்டி தூத்துக்குடி மாநகர பகுதியில் பிரதான கழிவு நீர் செல்லும் பக்கிள்கால்வாய் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் தூர் வாரும் பணியை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து துவக்கினார். பின்னர் மழைக்காலங்களில் கடலுக்கு செல்லும் கழிவு நீர் வழித்தடங்கள் முழுமையாக தூய்மை பணியை மேற்கொண்டு தண்ணீர் செல்வதற்கு விரைவாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாரூஸ்ரீ, பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி, பகுதி செயலாளர் நிர்மல்ராஜ், மகளிர் அணி கஸ்தூரி தங்கம், பார்வதி, வட்டச்செயலாளர் ரவிசந்திரன், முன்னாள் கவுன்சிலர்கள் அமாரூதீன், செந்தி;ல்குமார், முத்துசெல்வம், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், மாநகராட்சி பொறியாளர் ரூபன் சுரேஷ் பொ...

"மேக் இன் இந்தியா, மேக் இன் தமிழ்நாடு" என்பதில், இனி "மேக் இன் தூத்துக்குடி" என்ற நிலை உருவாகும் என நம்பிக்கை வைத்துள்ளோம் - கனிமொழி கருணாநிதி எம்.பி.!*

Image
நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மத்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் சார்பில் , “வர்த்தக மற்றும் வணிக வாரம்”; அனுசரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்  இந்தியாவின் ஏற்றுமதியினை உலகளவில் மேம்படுத்தும் நோக்கில்  வெளிநாட்டு வர்த்தக இணை இயக்குநர் அலுவலகம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய அலுவலகமும் இணைந்து  நடத்தும் ஏற்றுமதிக்கு வழிகாட்டும் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி  நடத்தப்பட்டது.  இந்தக் கண்காட்சியை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பி.கீதாஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  கண்காட்சியில் கயிறு உற்பத்தி, தீப்பெட்டி உற்பத்தி, கோவில்பட்டி கடலை மிட்டாய், கடல்சார் உற்பத்தி, ரசாயன தொழில்கள், உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள ஏற்றுமதி வாய்ப்புகளை விளக்கும்  அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.  இந்த கண்காட்சியை தொடங்கி வைத்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசுகையில் ஏற்றுமதியில் மூன்றாவது இடத்தில் உள்ள தமிழகத்தை முதல் இடத்தில்...

தூத்துக்குடியில் ஒரே நாள் இரவில் போலீஸார் கைது செய்த 47 ரவுடிகள்!

Image
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  நேற்று இரவு மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில்  காவல் ஆய்வாளர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் ஆங்காங்கே வாகன சோதனை செய்யவும், தங்கும் விடுதிகளில் குற்றவாளிகள் மற்றும் சந்தேகப்படும்படியான நபர்கள் தங்கியுள்ளனரா என சோதனையிடவும்,  கொலை, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை தணிக்கை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும், வங்கிகள், ஏடிஎம் மையங்கள், நிதி நிறுவனங்கள், நகைக்கடைகள் உட்பட முக்கிய இடங்களை கண்காணிக்கவும், பழைய ரவுடிகளை தணிக்கை செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும்,  வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளை கைது செய்தல் போன்ற பல்வேறு தீவிர ரோந்துப் பணிகளை (Strorming Operation) மேற்கொள்ள மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அவரது உத்தரவின்பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்...

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 86வது பிறந்தநாள் விழா - கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை.!

Image
  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் வீரபாண்டியபட்டிணத்தில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு  தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.  பின்னர்  தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவுறுத்தலுக்கிணங்க டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.  நம்முடைய அன்பிற்கும், மரியாதைக்கும், பாசத்திற்கும் உரிய பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களுடைய புகழ் நீடுளி வாழ வேண்டும். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்  மீது நீங்காத பற்றும் பாசமும் கொண்டிருக்கிற ஒருவராக திகழ்ந்தார்.  மேலும் முதலமை...

சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்மார்ட் கிராமங்கள் என்ற தலைப்பில் புத்தக வெளியீட்டு விழா.!

Image
சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் புத்தக வெளியீ்டு விழா கல்லூரியின் நூலகத்தில் நடைபெற்றது கல்லூரியின் தலைவர் வள்ளியப்பா தலைமையில் நடைபெற்ற விழாவில் கல்லூரியின் துணை தலைவர் சொக்கு வள்ளியப்பா முன்னிலை வகித்தார்.  இந்த நிகழ்ச்சியில் ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்ரீதர் வேம்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு "ஸ்மார்ட் கிராமங்கள்" என்ற தலைப்பில் புத்தகத்தை வெளியிட்டு சிறப்புறையாற்றினார்.  இந்த புத்தகத்தில் சோனா கல்வி குழுமத்தின் துணைத்தலைவர் சொக்கு வள்ளியப்பா மற்றும் சோனா கல்லூரியின் இயக்குனர் டாக்டர்.நிர்மலேஷ் ,கே.சம்பத்குமார் ஆகியோர் இரண்டு தலைப்புகளில் கட்டுரையை எழுதியுள்ளனர் அவற்றில்   1. இந்தியா கிராமங்களில் மதிப்பு கூட்டலுக்கான பொருத்தமான தொழில் நுட்பங்கள்   2.இந்திய கிராமங்களில் பெண்களை மேம்படுத்துவதற்கு பொருத்தமான தொழில் நுட்பத்தை செயல்படுத்துதல் இதில் பெண்கள், தங்கள் குடும்பங்களுக்கு ஒரு நிலையான வழியில் வருமானத்தை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், பொருளாதாரத்தில் பங்களிக்கும் ஆற்றலை கொண்டு உள்ளனர். கிராமப்புற சமூகங்களில் அவர்களின் பிர...

தியாகராஜா பாலிடெக்னிக் கல்லூரியில் உற்சாகமாக தொடங்கிய முதலாம் ஆண்டு வகுப்பு.!

Image
தியாகராஜா பாலிடெக்னிக் கல்லூரியில்  64 வது முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான 64வது பிரஷர் டே  இன்று சிறப்பாக நடைபெற்றது.   இவ்விழாவில் ஏ. என்.சந்திரமௌலி சிஇஓ, ஏஎன்சிஎம் மேனேஜ்மெண்ட் கன்சல்டன்ட்ஷ் & பார்மர் பிரசிடெண்ட், பெங்களூர் சேம்பர் ஆஃப் இன்டஸ்ட்ரி காமர்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  கல்லூரியின் முதல்வர் டாக்டர்.வி. கார்த்திகேயன் அவரது உரையில் கல்லூரியின் தோற்றம் மற்றும் வளர்ச்சி புதுமையான கற்றல் முறைகள் கல்லூரி பெற்ற சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விருதுகள் மாணவர்களின் சாதனைகள் கல்லூரியின் தொலைநோக்குத் திட்டங்கள் மற்றும் கல்வி உதவித்தொகைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். முதலாமாண்டு மாணவ மாணவியர் இக்கல்லூரியில் வழங்கப்படும் எண்ணற்ற வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தி தங்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்று வாழ்த்தினார். சிறப்பு விருந்தினராக ஏ. என்.சந்திரமௌலி  இக்கல்லூரியின் மிகச் சிறந்த கட்டமைப்பு மற்றும் புதுமையான கற்பித்தல் முறைகள் குறித்து பாராட...

விளாத்திகுளத்தில் அறநிலையத்துறையின் சார்பில் அமைக்கப்படும் கல்லூரி - கனிமொழி எம்.பி ஆய்வு.!

Image
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் புதிதாக கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து,  விளாத்திகுளம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு  சொந்தமான கட்டிடத்தில் தற்காலிகமாக கல்லூரி இயங்குவதற்கான இடத்தை இன்று திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற  உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நேரில் ஆய்வு செய்தார்  இந்த ஆய்வில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான கீதாஜீவன் எம்எல்ஏ, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கயத்தாரில் முதியவரை வெட்டிக் கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை- தூத்துக்குடியில் மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!

Image
கடந்த 23.01.2019 அன்று தூத்துக்குடி மாவட்டம், கயத்தூறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு இலந்தைகுளம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சண்முகராஜ் மனைவி காளீஸ்வரி (26) என்பவர் தனது குழந்தையை திட்டியதை  அதே பகுதியைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் பாலமுருகன் (27) என்பவர் தனது தாயாரை திட்டியதாக கருதி காளீஸ்வரியை அரிவாளால் தாக்க முயன்றுள்ளார், அப்போது தடுக்க வந்த காளீஸ்வரியின் தாத்தாவான  முத்தையா மகன் ஆறுமுகம் (எ) ஆறுமுகபெருமாள் (60/19) என்பவரை  மேற்படி பாலமுருகன் அரிவாளால் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்.  இவ்வழக்கை அப்போதைய கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் ஆவுடையப்பன் என்பவர் புலன் விசாரணை செய்து 19.03.2019 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இவ்வழக்கு தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பாண்டியராஜன்  இன்று குற்றவாளி பாலமுருகன் என்பவருக்கு ஆயுள் த...

மேட் இன் இந்தியா என்பதுபோல மேட் இன் தமிழ்நாடு என்று பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

Image
'மேட் இன் இந்தியா' என்பதுபோல 'மேட் இன் தமிழ்நாடு' என்ற அடிப்படையில் இனி நாம் பொருட்களை உற்பத்தி செய்யவேண்டும்” என்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற 'ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு' என்ற மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். “தமிழ்நாட்டிற்கான ஏற்றுமதிக் கொள்கையை வெளியிட்டதில் பெருமையடைகிறேன். மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு தலைமைச்செயலாளர் தலைமையில் விரைவில் அமைக்கப்படும்” போன்ற அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின் பேசியவை,  பின்னர் “ஏற்றுமதியாளர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் அனைத்து ஆதரவுகளையும் தமிழக அரசு வழங்கும். தமிழகத்தின் தொழில் வளர்ச்சி இந்தியா முழுவதும் பரந்து உள்ளது. உலகம் நோக்கி நாம் செல்ல வேண்டும் உலகம் நம்மை நோக்கி வர வேண்டும். இந்தியாவிலேயே ஏற்றுமதியில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், ரூ.1.93 லட்சம் கோடி ஏற்றுமதியுடன் தமிழ்நாடு 3ஆவது இடத்தில் இருந்து வருகிறது. தொழில்துறையிலும் தமிழ்நாடு முன்னணியிலேயே இருக்கிறது.  அகில இந்திய அளவில் தமிழகத்தின் பங்களிப்பு 8.97% என இருக்கிறது. மோட்டார் வாகன உற்பத்தியிலு...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி

Image
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி - கோவில் நிர்வாகம் அதிகாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கி வந்த நிலையில், கூடுதலாக 2 மணி நேரம் தரிசனம் செய்ய அனுமதி

சேலத்தில் பள்ளி மாணவிகளுக்கான "நீ உன்னை அறிந்தால்" என்ற தலைப்பில் பெண்கள் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு.!

Image
திராஜ்லால் காந்தி தொழில்நுட்ப கல்லூரியின் அதிதி மகளிர் மேம்பாட்டு பிரிவு மற்றும் மாவட்ட ரோட்டரி பெண்கள் மேம்பாட்டு திட்டம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் சேலம் விங்ஸ் இணைந்து பாரதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் இன்று  மாணவிகளுக்கு நீ உன்னை அறிந்தால் என்ற தலைப்பில் பெண்கள் மேம்பாட்டுக்கான பயிற்சி வழங்கப்பட்டது.  டாக்டர்.தில்லைக்கரசி மற்றும் டாக்டர். ராஜேஸ்வரி, பாரதி வித்யாலயா பள்ளி தாளாளர் அசோக் துரைசாமி, தலைமையாசிரியை சாந்தி, உதவி தலைமை ஆசிரியர்கள்  எஸ்.வித்யா, குமணன் மற்றும் திருவேங்கடம், ரோட்டரி கிளப் ஆப் சேலம் விங்ஸ் தலைவர்  நிர்மலா மற்றும் கர்லின் மேரி,திரஜ்லால் காந்தி கல்லூரியின் முதல்வர் டாக்டர் செல்வராஜ் மற்றும் பி & டி டைரக்டர் டாக்டர் பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் நிர்மலா வெட்டிக் கொலை- தலை துண்டிப்பு!

Image
திண்டுக்கல்: தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவரான பசுபதி பாண்டியன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய பெண் நிர்மலா தேவி இன்று திண்டுக்கல் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். நிர்மலா தேவியின் தலையை துண்டித்து பசுபதி பாண்டியன் வீடு முன்பு கொலையாளிகள் வீசிச் சென்றதால் பெரும் பதற்றம் நிலவுகிறது. 2012-ம் ஆண்டு ஜனவரி 10-ந் தேதி திண்டுக்கல் பழைய கரூர் சாலையில் நந்தவனப்பட்டியில் பசுபதி பாண்டியன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை தொடர்பாக தூத்துக்குடி மூலக்கரையை சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உட்பட 18 பேர் மீது தாடிக்கொம்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கில் 3 பேர் உயிரிழந்தும் விட்டனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்தான் நந்தவனப்பட்டி நிர்மலா தேவி. சுபாஷ் பண்ணையார், நிர்மலா தேவி உள்ளிட்ட 15 பேர் மீது திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றும் வருகிறது. நந்தவனப்பட்டியில் பசுபதி பாண்டியன் பற்றி பண்ணையார் கோஷ்டிக்கு துப்பு கொடுத்தவர் நிர்மலா தேவி என்கிறது போலீஸ் தரப்பு. இந்நிலையில் இன்று காலையில் திண்டுக்கல்- திருச்சி பைபாஸ் சாலையில் செட்டிநாயக்கன்பட...

தமிழக முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி ஒடிஷா மாநில தகவல் அறியும் உரிமை கமிஷன் தலைவராகிறார்.!

Image

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது

Image
தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது மனு தாக்கல் தொடங்கி கடந்த 6 நாட்களில் 64,299 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது வேட்பு மனுக்கள் மீது நாளை பரிசீலனை, வேட்பு மனுக்களை திரும்பப் பெற செப்.25 கடைசி நாளாகும்

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று.!

Image
ஐபிஎல் போட்டியில், ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார் நடராஜன். ஹைதராபாத் - டெல்லி இடையேயான இன்றைய போட்டி திட்டமிட்டபடி நடைபெறும்* ஐபிஎல் நிர்வாகம்.

சாத்தான்குளம் அருகே பட்டாசு வைத்திருந்த கார் வெடித்து சிதறி 40 வீடுகள் சேதம் - எஸ்.பி ஜெயக்குமார் நேரில் விசாரணை.!

Image
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே  இடைச்சிவிளை குமரன் விலையைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே அணைக்கரையில் அரசு அனுமதி பெற்று வானவெடி மற்றும் கல்வெடி தயாரிப்புக் கூடம் நடத்தி வருகிறார். திருமணம் மற்றும் விழாக்களுக்கு ஆர்டரின் பேரில் பட்டாசு தயாரித்து அதனை காரில் கொண்டு சென்று வழங்குவது வழக்கம் இந்நிலையில் திருமண விழாவுக்கு வழங்குவதற்காக 30 ஆயிரம் மதிப்பிலான வாண வெடிகளைகுடோனில் இருந்து காரில் ஏற்றிக்கொண்டு நேற்று அதிகாலை 2 மணி அளவில் சாத்தான்குளம் அருகே இடைச்சி வேளையில் தனது வீட்டிற்கு கொண்டு சென்றார். ரிமோட் மூலம் கார் கதவை மூடிய நிலையில் வீட்டுக்கு சென்றால் பின்னர் சிறிது நேரத்தில் கதவு பூட்டப்பட்டு உள்ளதா என்பதை சோதனை செய்யும் வகையில் வீட்டின் வாசல் அருகே இருந்தவரிடம் ரிமோட் இயக்கி சோதனை செய்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டின் வெளியே நிறுத்தி இருந்த காரில் வைத்திருந்த வான வெடிகள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது இதில் கார் எஞ்சின் மற்றும் உதிரிபாகங்கள் சுக்குநூறாக நொறுங்கி சேதமடைந்தன. இச்சம்பவத்தில் பாலகிருஷ்ணன் கையில் பலத்த காயம் ஏற்பட்டது...

தூத்துக்குடியில் குழந்தைகளுக்கான இலவச இருதய அறுவை சிகிச்சை நல முகாம்.!

Image
தூத்துக்குடி மாவட்டத்தில் ராஜேஷ் திலக் மருத்துவமனை, லயன்ஸ் கிளப் ஆஃப் தூத்துக்குடி சென்ட்ரல், மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து நடத்தும்  குழந்தைகளுக்கான இலவச இருதய அறுவை சிகிச்சை  முகாம் வருகிற ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை  ராஜேஷ் திலக் மருத்துவமனையில் வைத்து நடைபெறுகிறது. இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் சந்தித்த டாக்டர் நெவில் சாலமன் கூறுகையில்  இந்தியாவில் ஆண்டுக்கு 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை குழந்தைகளுக்கு இருதய நோய் பிரச்சினை ஏற்படுகிறது இதனை சரியான நேரத்தில் கவனிக்க வேண்டும் ஏழை எளிய குழந்தைகள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த அறுவை சிகிச்சை முகாமை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். மாவட்டத்தில் உள்ள இருதய நோய் குழந்தைகள் வந்து சிகிச்சை பெறலாம் அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு இலவசமாக சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் வைத்து அறுவை சிகிச்சை செய்யப்படும் இதுவரை 36 குழந்தைகள் பதிவு செய்துள்ளனர் இருதய பாதிப்பு குழந்தைகள் எவ்வளவு பேர் வேண்டுமானாலும் முகாமில் பங்கேற்கலாம் என்று டாக்டர்கள் கூறினர்  பேட்டியின்போது மரு.ராஜேஷ் திலக்...

தூத்துக்குடியில் நாளை நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு

Image
தூத்துக்குடியில் நாளை நடைபெறவிருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 23ம் தேதி காலை 11 மணி அளவில் காணொளி வாயிலாக நடத்த திட்டமிட்டிருந்தது இதில் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் பங்கேற்க என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நிர்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது  கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெங்கடேஷ் பண்ணையார் நினைவிடத்திற்கு உறவினர்கள் மட்டுமே செல்ல அனுமதி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தகவல்.!

Image
செப்டம்பர் 26ம் தேதி வெங்கடேஷ் பண்ணையார் 18 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று (21.09.2021) ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் திருச்செந்தூர் காவல் உதவி கண்காணிப்பாளர் திரு. ஹர்ஷ் சிங் இ.கா.ப அவர்கள் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழுவதும் தளர்வுகளுடன் கூடிய 144 தடைஉத்தரவு  31.10.2021 வரை நீட்டிப்பு செய்யப்பட்டு அமலில் உள்ளதால் வரும் செப்டம்பர் 26ம் தேதி நடைபெற உள்ள வெங்கடேஷ் பண்ணையார் 18ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பொதுமக்கள் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன  ஊர்வலத்திற்கோ,  ரத ஊர்வலத்திற்கோ மற்றும் எவ்வித ஊர்வலத்திற்கோ அனுமதி கிடையாது. மேலும் பால்குடம் எடுத்து செல்வதற்கோ, அன்னதானத்திற்கோ எவ்வித அனுமதியும் இல்லை. நீதிமன்ற உத்தரவு பிரகாரம் டிஜிட்டல் பேனர்கள் எதுவும் வைக்க அனுமதியில்லை என்றும், அதே போன்று போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தாமல் நடந்திட வேண்டும் எனவும், ஜாதி ரீதியாக சட்டை அணியவோ, பி...

ரூ.20 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்தல் - சென்னையை சேர்ந்த கணவன், மனைவி கைது.!

Image
குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் 10 ஆயிரம் மதிப்புள்ள ஹெராயின் பிடிபட்ட விவகாரம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இந்த விவகாரம் தொடர்பாக கணவன்-மனைவியை கைது செய்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்..  முந்த்ரா துறைமுகத்தில் வந்த கண்டெய்னர்களில் ஹெராயின் இருப்பதாக கிடைக்க ரகசிய தகவல்களின் அடிப்படையில் மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். ஒரு கன்டெய்னரில் 2 ஆயிரம் கிலோ ஹெராயினும், மற்றொரு கன்டெய்னரில் ஆயிரம் கிலோ ஹெராயினும் இருந்தது. இந்த இரு கன்டெய்னர்களும் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்தவை என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..  இந்தப் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக அகமதாபாத், டெல்லி, சென்னை, காந்திதாம், மாண்டவி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த இரு கன்டெய்னர்களிலும் உள்ள ஹெராயின் போதைப் பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ. 20 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. சிக்கிய  2 பேரும் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது தான் அதிர்ச்சி தகவல்.. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையைச் சேர்ந்...

தமிழகத்தின் ஆளுநரானது பெருமை - ஆர்.என்.ரவி.!

Image
தமிழில் வணக்கம் என்று கூறி பேச தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி* பழம்பெருமை வாழ்ந்த தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்றதற்கு பெருமைப்படுகிறேன் - ஆர்.என்.ரவி தொன்மையான நாகரீகத்தை சேர்ந்த மக்கள் வாழும் தமிழகத்தின் ஆளுநராக பதவி ஏற்றுள்ளது மகிழ்ச்சி என்னால் முடிந்த அளவிற்கு தமிழக மக்கள், தமிழக அரசின் முன்னேற்றத்திக்காக உழைக்க உள்ளேன் தமிழகத்தில் பணியாற்றுவது என்பது சவாலுக்கு அப்பாற்பட்டது - புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு தமிழகத்தில் உள்ளது;ஆளுநர் பதவி என்பது விதிகளுக்கு உட்பட்டது

கயத்தார் செட்டிக்குறிச்சியில் புதியதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையம் எஸ்.பி ஜெயக்குமார் திறந்து வைத்தார்.!

Image
கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செட்டிகுறிச்சி பகுதியில் காவல்துறை  சார்பாக புதிதாக  அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், செட்டிக்குறிச்சி பகுதி  பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று காவல்துறை சார்பாக இந்த புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புறக்காவல் நிலையம் செட்டிக்குறிச்சி மட்டுமல்லாமல் அதன் சுற்று வட்டார கிராம பொதுமக்களுக்கும் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த புறக்காவல் நிலையத்தில் காவல்துறையினர் 24 மணி நேரமும் இருப்பார்கள். செட்டிகுறிச்சி பொதுமக்கள் தங்களது புகார்களை கயத்தாறு காவல் நிலையம் சென்று கொடுக்க வேண்டிய அவசியமில்லை.  இந்த புறக்காவல் நிலையத்திலேயே தங்களது குறைகளை தீர்த்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும். இந்த வசதியை செட்டிகுறிச்சி பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். பொதுமக்களுக்கு பணி செய்யவே காவல்துறை உள்ளது. மேலும் கொரோனா பெருந்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக...

பொருளாதாரத்தில் பின்தங்கிய வர்களுக்கு 10% இட ஒதுக்கீடு - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு

Image
மருத்துவ படிப்பில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் மேற்கொள்ளக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு

தூத்துக்குடியில் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்பு - ஆட்சியர், எஸ்.பி தலைமையில் நடைபெற்றது.

Image
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது அனைத்து துறை அலுவலர்களும் சமூக இடைவெளியுடன் உறுதி மொழி ஏற்றனர்.நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அமுதா ஆகியோர் உள்ளனர். தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் சமூகநீதி நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் கீழ்கண்டவாறு உறுதிமொழி எடுக்கப்பட்டது. *‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற அன்பு நெறியும் - ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்.!* *சுயமரியாதை ஆளுமைத் திறனும் - பகுத்தறிவு  கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்.* *சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்.* *மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்.*  *சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதிய...

குப்பை சேகரிப்பது போல போஸ் -குப்பை மூட்டைகளை மீண்டும் கடற்கரையிலேயே விட்டுச் சென்ற பாஜகவினர் - விளக்கம் அளித்த இளைஞரணி தலைவர் வினோஜ் P செல்வம்.!

Image
குப்பை சேகரிப்பது போல போஸ் -குப்பை மூட்டைகளை மீண்டும் கடற்கரையிலேயே விட்டுச் சென்ற பாஜகவினர் - விளக்கம் அளித்த பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் P செல்வம்.! பிரதமர் நரேந்திர மோடியின்  பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை சென்னை  பெசன்ட்நகர் கடற்கரையில் தமிழக பாஜகவினர் குப்பைகள் சேகரித்து, புகைப்படம் எடுத்த பிறகு சேகரித்த குப்பை மூட்டைகளை மீண்டும் கடற்கரையிலேயே விட்டுச் சென்றனர். கடற்கரையில் சேகரித்த குப்பைகள் அடங்கிய பைகள் அனைத்தும் தங்களது கட்சி நிர்வாகிகளால் மாநகராட்சி வண்டியில் ஏற்றி அனுப்பப்பட்டதாக தமிழக பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் P செல்வம் விளக்கம்.

தூத்துக்குடியில் பெரியாரின் 143 வது பிறந்த நாள் விழா திமுக சார்பில் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை.!

Image
தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்பு வழங்கினார் நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், துணை அமைப்பாளர் ஜேசையா, இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன்,  தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், ஆதிதிராவிடர் நலஅணி அமைப்பாளர் பரமசிவம், மகளிர் அணி கஸ்தூரிதங்கம், வக்கீல் அணி அமைப்பாளர் மோகன்தாஸ், துணை அமைப்பாளர் நாகராஜ்பாபு,  மாணவரணி துணை அமைப்பாளர் பாலகுருசாமி, இளைஞரணி துணை அமைப்பாளர் பிரதீப், இலக்கிய அணி துணை அமைப்பாளர் நலம் ராஜேந்திரன், மாநில பேச்சாளர் சரத்பாலா, மாநகர இளைஞரணி அமைப்பாளர் ஆனந்தகபரியேல்ராஜ்,  துணை அமைப்பாளர் சங்கரநாராயணன், வர்த்தகஅணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் பால்மாரி, ஆதிதிராவிட நல அணி துணை அம...

பெண் எஸ்பிக்கு முத்தம் : ஐ.ஜி.முருகன் மீதான பாலியல் வழக்கு செப்.23ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை.!

Image
பெண் எஸ்பிக்கு முத்தம் : ஐ.ஜி.முருகன் மீதான பாலியல் வழக்கு செப்.23ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி.முருகன் மீதான பாலியல் வழக்கு தெலுங்கானாவிற்கு மாற்றப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது.  தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி.முருகன் மீது கடந்த 2019ம் ஆண்டு பெண் எஸ்.பி ஒருவர் பாலியல் புகார் கொடுத்து இருந்தார்.  லஞ்ச ஒழிப்புத்துறை பெண் எஸ்பியை அந்த துறையின் உயர் அதிகாரியான ஐஜி.முருகன் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்ததாக பாலியல் புகாரில் கூறப்பட்டது.  இது குறித்து தமிழக டிஜிபி உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட விசாகா குழு சரியாக செயல்படவில்லை என்று கூறி அந்த பெண் எஸ்பி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தெலங்கானா மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட்டது. மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக ஐஜி.முருகன், மற்றும் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு ஆகியோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,'வழக்கை தமிழக அதிகரிகளே...

தூத்துக்குடியில் மண் சரிந்து விபத்து - 2 தொழிலாளர்கள் பலி!

Image
தூத்துக்குடியில் மண் சரிந்து விபத்து - 2 தொழிலாளர்கள் பலி! ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கழிவு நீர் ஓடை தோண்டும் போது மண் சரிந்ததில் இரண்டு தொழிலாளர்கள் பலி! உடல்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரம்

பீகார் 2 பள்ளி மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ.960 கோடி - அதிர்ச்சியில் வங்கி.!

Image
மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ.960 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதை பார்த்த வங்கி ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பாட்னா: பீகார் மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு சீருடை உள்ளிட்டவைகள் வாங்க அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்காக பள்ளி மாணவர்கள் பெயரில் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு அதில் தொகை செலுத்தப்படுகிறது.  இந்த நிலையில் இரண்டு பள்ளி மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ. 960 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கதிகார் மாவட்டம் பகுரா பஞ்சாயத்தில் உள்ள பஸ்தியா கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் குருசந்திர விஷ்வாஸ், ஆசிஷ் குமார். இவர்கள் தங்களது பெற்றோர்கள் வங்கிக்கு சென்று தங்களது வங்கி கணக்கில் பள்ளி சீருடைக்காக அரசு உதவித்தொகை செலுத்தி இருக்கிறதா? என்பதை பார்க்க சென்றனர். அவர்கள் உத்திரபீகார் கிராம வங்கிக்கு சென்று தங்களது கணக்கில் உள்ள தொகையை பற்றி கேட்டனர். அப்போது குருசந்திர விஷ்வாஸ் வங்கி கணக்கில் ரூ. 60 கோடியும், ஆசிஷ்குமார் வங்கி கணக்கில் ரூ. 900 கோடியும் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதனால் மாணவர்களின் பெற்றோர் கடு...

ரயில் ஓட்டுனர்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.!

Image
ரயில் ஓட்டுனரை “Loco Pilot” (LP) என்றும், அவருக்கு உதவி செய்பவரை “Asst. Loco Pilot” (ALP) என்று கூறுவார்கள். இன்றைய சூழ்நிலையில் அவர்கள் 13 மணி நேரம் வரை வேலை செய்கிறார்கள். சிவப்பு சிக்னலை மீறினால் இரண்டு பேருக்கும் வேலை இழக்கும் அபாயம் உண்டு.  குறைந்தது 16 மணி நேரம் இடைவெளி தேவை அடுத்த பணிக்குத் திரும்புவதற்கு. ஒரு ரயில் வண்டி ஓடாமல் சும்மா நின்று கொண்டிருந்தால் ஒரு மணி நேரத்திற்கு 25 லிட்டர் டீசல் செலவாகிறது. 100 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 400 முதல் 500 லிட்டர் டீசல் செலவாகிறது. ஒரு ரயில் வண்டி பிரேக் அடித்தால் அது நிற்பதற்கு எடுத்துக் கொள்ளும் தூரம் அந்த வண்டியின் நீளத்தை விட மூன்று மடங்கு நீளம் தேவைப்படுகிறது, தோராயமாக ஒன்றரை கிலோமீட்டர். அதெல்லாம் சரி.. இந்த ரயிலை ஓட்டுபவர்கள் தூங்குவார்களா? அப்படி தூங்கினால் எப்படி கண்டு பிடிப்பது? தூங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது, ஆனால் இரண்டு பேருமே தூங்க முடியாது யாராவது ஒருத்தர் விழித்து இருக்க வேண்டும். VCD எனப்படும் விஜிலன்ஸ் கண்ட்ரோல் டிவைஸ் அவர்களை தூங்க விடாது. ஏனென்றால் ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை அதில் உள்ள பொத்தானை அமுக்க வேண்டும்.அப...

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டி என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் அறிவிப்பு.!

Image
 ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டி என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் அறிவிப்பு 9 மாவட்டங்களிலும் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாகவும் கமல் அறிவிப்பு

திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம் ஆகிய 3 கோயில்களில் அன்னதான திட்டம். காணொலி மூலம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். !

Image
திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம் ஆகிய 3 கோயில்களில் அன்னதான திட்டம். காணொலி மூலம் திட்டத்தை தொடங்கி  வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.  நாள் முழுவதும் மூன்று வேளையும் அன்னதானம் வழங்க அரசு ஏற்பாடு.

சீனாவில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மூவர் பலி.!

Image
சீனாவின் லூசோ பகுதியில் இன்று அதிகாலை ரிக்டர் அளவில் 6.0 ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து, சீனாவின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளதாவது: சீனாவின் லூசோ பகுதியில் இன்று (செப்., 16) அதிகாலை 4:33 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் லூசோ பகுதியில் உள்ள கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டது. வீட்டின் கூரைகள் சரிந்தன. இடிபாடுகளில் சிக்கி மூவர் பலியாகினர். மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தற்போது மாகாண அரசு நிலநடுக்க எச்சரிக்கை விடுத்ததோடு, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டடங்கள் இடிந்துள்ளதால் அதில் சிக்கியவர்களில் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி க்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை.!

Image
வேலூர், திருப்பத்தூர் (ஜோலார்பேட்டை) திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட 28 இடங்களில் கேசி வீரமணி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வீரமணி வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் என பலர் திரண்டு வண்ணம் உள்ளனர் திருப்பத்தூரில் மற்றும் ஜோலார்பேட்டை பகுதிகளில் மட்டும் சுமார் 14 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 1.திருப்பத்தூர் கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் அமைந்துள்ள ஹோட்டல் ஹில்ஸ் மற்றும்  2)ஏலகிரி மலையில் அமைந்துள்ள ஹோட்டல் ஹில்ஸ் ஆகும் 3)  ஜோலார்பேட்டை காந்தி ரோட்டில்       அமைந்துள்ள அமைச்சர் வீடு 4)  பழைய ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி சாலையில் அமைந்துள்ள அமைச்சர் மற்றொரு வீடு  5) அமைச்சரின் அண்ணன் என காமராஜ் வீடு 6) அமைச்சரின் அண்ணனான அழகிரி வீடு 7) அமைச்சரின் குடும்பத்தைச் சார்ந்த பிடி மண்டி 8) தமலேரிமுத்தூர் பகுதியை சேர்ந்த முன்னாள் ஒன்றிய செயலாளர் ரமேஷ் அவரது வீட்டில் 8) திருப்பத்தூரில் அமைந்துள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ரமேஷ் அவரது வீட்டில் 9 ஏலகிர...

தூத்துக்குடி FCI குடோனில் இருந்து அருகில் உள்ள வீடுகளுக்குள் புகும் அந்துப்பூச்சிகள் : "ஆர்டிஓ அறிக்கையின் அடிப்படையில், உரிய நடவடிக்கை" - கலெக்டர் செந்தில்ராஜ் உறுதி.!

Image
முறையாக பூச்சி மருந்து அடித்து பராமரிக்காத தூத்துக்குடி மூன்றாவது மைலில் உள்ள இந்திய உணவு கழகத்தின் குடோன் வளாகத்திலிருந்து வெளியேறும் அந்துப் பூச்சிகளால் ஓரிரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளில் வசிக்கும் மக்கள் பெரும் துன்பத்திற்க்கு ஆளாவதாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.   இந்தப் பூச்சிகள் எல்லா இடங்களிலும் சுற்றுவதால், குடியிருப்பாளர்கள், குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள், பசும்பொன் நகர், ஆசீர்வதம் நகர், முத்து நகர், இந்திரா நகர் மற்றும் மூன்றாவது மைல், 1,000 க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்கள் கடந்த பல ஆண்டுகளாக தூக்கத்தை இழந்துள்ளதாக பகுதி வாசிகள் குற்றம் சாட்டினர் உணவு தானியங்களை சேமிப்பதற்காக 40 ஆண்டுகளுக்கு முன்பு சில ஏக்கர் நிலத்தில் மூன்றாவது மைலில் தனது குடோனை நிறுவிய இந்திய உணவு கழகம், இப்போது சேமித்து வைக்கப்பட்ட உணவு தானியங்கள் இனப்பெருக்கத்திற்கு உகந்த சூழலை வழங்குவதால் அந்துப்பூச்சிகளின் இனப்பெருக்கமாக மாறியுள்ளது. பகலில் உள்ளேயே அடைந்து கிடக்கும் அந்துப்பூச்சிகள், மாலை 5 மணிக்குப் பிறகு வ...

தினமும் சராசரியாக 77 பலாத்கார வழக்குகள் பதிவு, தலித்துகள், பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி ரிப்போர்ட்...!

Image
கடந்த ஆண்டில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 77 பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. பெண்களுக்கு எதிராக கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. 2019ஆம் ஆண்டில் 4 லட்சத்து 5 ஆயிரத்து 236 வழக்குகள் பதியப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிராக மொத்தம் 3 லட்சத்து 71 ஆயிரம் 503 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் பலாத்கார வழக்குகள் மட்டும் 27 ஆயிரத்து 46 என்றும், நாளொன்றுக்கு சராசரியாக 77 பலாத்கார வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ராஜஸ்தானில் 5 ஆயிரத்து 310 வழக்குகள் பதிவாகியுள்ளன. உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. கொரோனா பேரிடர் காலத்தில், நாட்டில் தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள், பெருமளவில் அதிகரித்து...

தூத்துக்குடி மாவட்ட இளையோர்களுக்கான தடகள போட்டி - எஸ்.பி ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.!

Image
தூத்துக்குடி மாவட்ட தடகள கழகம் சார்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட 500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும் தடகளப்போட்டியை இன்று  தூத்துக்குடி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தி, ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து  போட்டியை துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், கடந்த ஆண்டுகளை விட, இந்த ஆண்டு ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா அதிக அளவு பதக்கங்கள் பெற்றுள்ளது. தற்போது விளையாட்டுப்போட்டி மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதில் மாணவ, மாணவிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.  இதுபோன்ற போட்டிகளில் வெற்றி, தோல்வி என்பது சகஜமான ஒன்று, தோல்வியடைந்துவிட்டால் மனம் தளராமல், மீண்டும் பயிற்சிகளை மேற்கொண்டு அடுத்த முறை வெற்றி பெற்றுவிடலாம் என்ற விடா முயற்சியுடன் இருக்க வேண்டும். ஒருவருக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு விளையாட்டும் முக்கியமானது.  தேர்வுகளில் தோல்வியடையும் சில மாணவ, மாணவிகள் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை முடிவ...

சிறுதாவூர் பங்களா வளாகத்தில் உள்ள வி.என்.சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கம்.!

Image
கடந்த 8ஆம் தேதி சசிகலா மற்றும் இளவரசிக்கு சொந்தமான பையனூர் பங்களா மற்றும் தோட்டம் ஆகியவை முடக்கப்பட்டது. இந்நிலையில் சிறுதாவூரில் உள்ள வி.என். சுதாகரனுக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலத்தை பினாமி தடுப்புச் சட்டத்தின்கீழ் வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர். ஏற்கெனவே சசிகலா, இளவரசி மற்றும் சுதாரனுக்கு சொந்தமான சொத்துகள் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 இடங்களில் முடக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கவர்னர் அழைப்பு :பிரிவு உபசார விழாவை புறக்கணித்த பத்திரிகையாளர்கள் - நாகாலாந்து மக்களுக்கு அவமதிப்பு, 'இரட்டை வேடம்' என குற்றசாட்டு

Image
தமிழ்நாட்டின் கவர்னராக அறிவிக்கப்பட்ட வி.என்.ரவிக்கு நாகாலாந்து மாநில அரசு சார்பில் நேற்று (14-09-21) நடைபெற்ற பிரிவு உபசார விழாவை பத்திரிகையாளர்கள் புறக்கணித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  வி.என்.ரவி நாகாலாந்து ஆளுநராக பதவி ஏற்றத்தில் இருந்து எந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தவில்லை என்றும், பத்திரிகையாளர்கள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை செயல்படுத்தவில்லை என எதிர்ப்பு தெரிவித்தும்  (Kohima press club) பத்திரிகையாளர்கள் அரசு சார்பில் நடைபெற்ற பிரிவு உபசார விழாவை  புறக்கணித்தனர். இச்சம்பவம் நாகலாந்து அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பிரஸ் கிளப் தலைவர் ஆலிஸ் யோஷு மாநில செய்தித்தாள்களின் ஆசிரியர்களுக்கு எழுதிய கடிதத்தில், " மாறுதலாகி செல்லும் கவர்னர் ஆர்என் ரவிக்கு அதிகாரப்பூர்வ மாநில பிரியாவிடை திட்டத்தை புறக்கணிக்கும் முடிவை கேபிசி ஒருமனதாக எடுத்துள்ளது ... இந்த முன்னோடியில்லாத நடவடிக்கை ரவி தனது இரண்டு வருட பதவியில் எப்படி பத்திரிகை மற்றும் ஊடக சகோதரத்துவத்தை முற்றிலும் அலட்சியமாக நடத்தினார் என்பதை மனதில் கொண்டு மேற்கொள்...