Posts

Showing posts from February, 2022

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி - 3, 4 தேதிகளில் தமிழகத்திற்க்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்

Image
தென் கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, வருகிற 3,4 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையும், நாளைய தினம் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. 3-ந் தேதி தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டையில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கையில் கனமழையும் பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 4-ந் தேதியும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், டெல்டா மாவட்டங்களில் கனமழையும்  பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் மட்டுமே காணப்படும், மழைக்கு வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தி...

உக்ரைனில் சிக்கி உள்ள மகனின் நிலையை எண்ணி மனவேதனையில் இருந்த தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Image
உக்ரைனில் சிக்கி உள்ள மாணவனின் தாய் அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு புத்துரை சேர்ந்த விவசாயி சங்கர். இவரது மனைவி சசிகலா என்கிற பாப்பு (வயது 56). இவர்களுக்கு  சரத்குமார்,சக்திவேல் என்று 2 மகன்கள் உள்ளனர். சரத்குமார் ஆம்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இளைய மகன் சக்திவேல் உக்ரைனில் உள்ள மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். சசிகலா 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார்.  இந்த நிலையில் சசிகலாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. அவர் அங்கு உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். இந்த நிலையில்  உக்ரைன் மீது ரஷியா குண்டு வீசி தாக்குதல் நடத்தி வரும் செய்தியை சசிகலா அறிந்து உள்ளார்.  இதனால் உக்ரைனில் உள்ள மகனை எண்ணி சகிகலா மிகுந்த மன வேதனை அடைந்து உள்ளார். இதனால் சசிகலாவின் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளது.  மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சசிகலா பரிதாபமாக உயிரிழந்தார். உக்ரைனில் சிக்கி உள்ள  மகனின் நி...

உலகிற்கு உண்மையான அச்சுறுத்தல் அமெரிக்காதான் – ரஷ்யாவில் உள்ள சீன தூதகரம் கருத்து.!

Image
’உலகிற்கு உண்மையான அச்சுறுத்தல்’ அமெரிக்கா தான் என ரஷ்யாவில் அமைந்திருக்கும் சீன தூதரகம் . சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் லிஜியன் ஜாவோவின் ட்விட்டர் பதிவை பகிர்ந்துள்ள தூதரகம் இதனை தெரிவித்துள்ளது. லிஜியன் ஜாவோ பதிவிட்டிருந்த ட்விட்டர் பதிவில், ”உலகிற்கு உண்மையான அச்சுறுத்தல் யார் என்பதை மறந்துவிடாதீர்கள்” என ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், உலக ஜனநாயக சுற்றுப்பயணம் என குறிப்பிடப்பட்டு, இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அமெரிக்கா குண்டுவீசிய அல்லது படையெடுத்த நாடுகளின் பட்டியல் இடம்பெற்றுள்ளது. https://twitter.com/ChineseEmbinRus/status/1497321464126746626?t=jcgvb-gzfzEtJSsRgl8ccg&s=19 சீன தூதரகம் வெளியிட்டிருக்கும் மற்றொரு பதிவில், “1945-2001 வரையிலான காலகட்டத்தில், உலகின் 153 பிரதேசங்களில் நடைபெற்ற 248 ஆயுத மோதல்களில், 201 மோதல்கள் அமெரிக்காவால் தொடங்கப்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கையில், சுமார் 81 விழுக்காடு ஆகும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மற்றொரு பதிவில், “உக்ரைனை சுற்றி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்னையில் குற்றவாளியான அமெரிக்காவின் பங்கு என்ன என்பது தான...

ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை - சீனா எதிர்ப்பு!!

Image
ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் தொடர்ச்சியாக பொருளாதார தடை விதித்து வரும் நிலையில் அதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யா மீது அறிவிக்கப்படும் பொருளாதார தடைகள் ஒரு தலைப்பட்சமானது எனக் கூறி சீன வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்துள்ளது.

குழந்தைகள் கக்கூஸ் ஐ கூட எட்டி பார்க்காத நகராட்சி கமிஷனர். - இவர் குழந்தை இங்க படிச்சா? பெற்றோர்கள் குமறல்.

Image
சத்தியமங்கலம் - பிப்.28 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் எதிர்புறம் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில்படிக்கும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து பெற்றோர்கள் தமிழ் அஞ்சல் நாளிதழுக்கு அளித்த பிரத்யோக பேட்டியில், நூறு வருஷம் பழமை வாய்ந்த கட்டிடம். கூரை ஓடுகள் தன்னப்போல பேய்ந்து, பேய்ந்து விழுகுது.குழந்தைகள் மதிய வேளையில், அங்கு தான் உட்கார்ந்து சாப்பிடறங்கா.ஆபத்தை உணராத குழந்தைகளும், ஆபத்தை கண்டுக்காத நகராட்சி நிர்வாகமும்.மூணு வருஷம் மனு கொடுத்து பாத்துட்டோம்.மறியல் பண்ணுன அடுத்த பத்து நிமிஷத்துல செஞ்சு தரதா சொல்றாங்க.கக்குசு கிளீன் பண்ண தினமும் ரெண்டு ஆளை அனுப்புறதா சொல்றாங்க. மூணு வருஷமா செஞ்சிருந்தா நாங்க எதுக்கு ரோட்டில உட்காறோம். பள்ளி கூட கக்கூசு சுத்தம் இல்லாம, குழந்தைகளுக்கு யூரியன் இன்பெக்க்ஷன் வருது. குழந்தைகள் உசுருக்கு ஆபத்துன்னா, 100 வருஷம் பழமையை காக்கிறோம் என்கிறாங்க. குழந்தைகள் உசுருக்குபயந்து பள்ளிகூடம் அனுப்ப முடியுமா? மலைப்பகுதியில் 6 குழந்தைக்கு 1 டீச்சர்ங்கறாங்க. ஆனா இங்க 500 குழந்தைகளுக்கு 6 டீச்சரு. இப்படிய...

தாளவாடி அருகே அடிப்படை வசதி கேட்டு வகுப்பறையை புறக்கணித்துமாணவ மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

Image
தாளவாடி,மார்ச்.01: ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள குன்னன்புரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கழிப்பிட வசதி, அடிப்படை வசதிகள் மற்றும் ஆசிரியர் பற்றாக்குறையை சரி செய்து தராத பள்ளி நிர்வாகத்தை கண்டித்து 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து மரத்தடியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் அவர்களின் பெற்றோர்களும் அங்கு வருகை தந்துள்ளனர். தாளவாடி அருகே உள்ள குண்ணன்புரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு தாளவாடி சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் அதிகமாக பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியில் அடிப்படை வசதிகள், கழிப்பிட வசதிகள் இல்லை என அங்கு பயிலும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும்,வகுப்பறை கட்டிடங்களும் குறைவாக உள்ளதாகவும், அதனை சரிசெய்து செய்யக் கோரி பலமுறை மாணவ, மாணவியர்கள் பெற்றோர்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க...

உக்ரைனில் இருந்து இந்தியர்களை அழைத்து வர நான்கு மத்திய அமைச்சர்களை நேரடியாக அனுப்ப முடிவு!

Image
உக்ரைன் ரஷ்ய போரால் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களையும் பிற இந்தியர்களையும் மீட்டு வருவதற்காக, இந்திய அரசு நான்கு அமைச்சர்களை அனுப்புவதாக இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சிறப்புத் தூதுவராக மூத்த அமைச்சர்களை அனுப்பி, இந்தியர்களை வெளியேற்றும் செயல்முறையை ஒருங்கிணைக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளதாகவும் தெரியவந்திருக்கிறது. மத்திய அமைச்சர்கள், ஜோதிராதித்ய சிந்தியா, ஹர்தீப் சிங் பூரி, கிரண் ரிஜிஜு மற்றும் ஜெனரல் விகே சிங் ஆகியோர் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சிறப்பு தூதுவர்களாகச் சென்று, இந்தியர்களை உக்ரைனின் இருந்து வெளியேற்றும் பணியை ஒருங்கிணைப்பார்கள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். உக்ரைன் வான்வெளி மூடப்பட்டுள்ளதால், இந்திய மாணவர்களை கீயவில் இருந்து வெளியேற்ற உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா மற்றும் ஹங்கேரியை இந்தியா பயன்படுத்துகிறது. இந்தியர்களை வெளியேற்றும் திட்டம் குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோதி திங்கள் கிழமை காலை அவசரக் கூட்டத்தை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் இந்த நாடுகள் வழியாக இந்தியர்களை அழைத்து வருவதற்கான தூதரக தடைகளைச் சமாளிக்...

தமிழக மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு*

Image
இராமேஸ்வரம் பிப் 28 இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த 12-ந் தேதி கடலுக்கு சென்றனர் அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டு இருக்கும் போது நள்ளிரவு அங்கு வந்த இலங்கை  கடற்படையினர் இரண்டு விசைப் படகில் இருந்த 12 மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்து இலங்கை கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.  12 மீனவர்களையும் எதிர்வரும் 28ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார் நிலையில் இன்று மீண்டும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் வழக்கை விசாரித்த நீதிபதி சிவபாதசுந்தரம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்வதாக உத்தரவிட்டார் பிணையில் .

உச்சிப்புளி அரியமான் கடற்கரை பகுதியில் 16 வயது பள்ளி மாணவன் கடலில் மூழ்கி பலி உச்சிப்புளி போலீசார் வழக்கு..

Image
விருதுநகர் மாவட்டம் சின்னப்ப ரெட்டியாபட்டி பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் அவருடைய உறவினர் இறப்பிற்கு திதி கொடுப்பதற்காக ராமேஸ்வரம் வந்த பின்னர் உச்சிப்புளி அருகே உள்ள அரியமான் கடற்கரையில் குடும்பத்தினருடன் கடலில் இறங்கி குளித்த போது சுந்தரமூர்த்தியின் 16 வயது மகன் பிரசன்னா கடல் அலையில் சிக்கி உள்ளார் இதையடுத்து சுந்தரமூர்த்தி உறவினர்கள் கடல் அலையில்  சிக்கிய 16 வயது பிரசன்னாவை மீட்டு உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்து சேர்த்த பின்னர் மருத்துவர்கள் பிரசனாவை பரிசோதித்தப்  போது இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரஷ்யாவுக்கு எதிராக UNSC-ல் மீண்டும் வாக்கெடுப்பு - புறக்கணித்த இந்தியா

Image
ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு அவையில் ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பை மீண்டும் ஒருமுறை இந்தியா புறக்கணித்தது. https://twitter.com/IndiaUNNewYork/status/1498039635783696386?t=E31qzordYNCxi80SMvLNjg&s=19 யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்பாக பொதுச் சபையில் விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் 11 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. ரஷ்யா எதிர்த்து வாக்களித்தது. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. எனினும் இந்தத் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளின்படி வீட்டோ செய்ய முடியாது என்பதால், 11 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று இரவு ஐநா பொதுச் சபைக் கூட்டம் நடக்க இருக்கிறது. இதில் 193 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்.

உக்ரைன் நாட்டில் தவிப்பவர்களை மீட்க தூத்துக்குடி மாவட்ட தொடர்பு அலுவலர் நியமனம் - ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்!

Image
உக்ரைன் நாட்டில் சிக்கி தவிப்பவர்கள் தொடர்பு கொள்வதற்காக தூத்துக்குடி மாவட்டத்துக்கு தொடர்பு அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உக்ரைன் நாட்டில் சிக்கி தவிப்பவர்கள் தொடர்பு கொள்வதற்காக தூத்துக்குடி மாவட்ட தொடர்பு அலுவலராக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா நியமிக்கப்பட்டுள்ளார்.  அவரது தொலைபேசி எண் : 9445008155 மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் : 0461-2340101, 2340603 ஆகிய எண்களில் உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த குடும்பத்தினர் தொடர்பு அலுவரை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிக்கலாம். மேலும், தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையராக ஜெசிந்தா லாசரஸ், அவர்களது தொலைபேசி எண்கள் 9445869848, 9600023645, 9940256444 மற்றும் மாநில கட்டுப்பபாட்டு மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் : 1070 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது நடவடிக்கையை கண்டித்து தூத்துக்குடியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.!*

Image
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து அதிமுக வினர் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர். வரலாறு காணாத வன்முறைகளை நிகழ்திய திமுகவினர் நடவடிக்கைகளை தட்டிக்கேட்ட அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்ட திமுக அரசை கண்டித்து தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே தெற்கு மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில்  முன்னாள் அமைச்சர் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ ஆகியோர் தலைமையில் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் ஒழிப்போம் திமுக அரசை விரட்டுவோம். அஞ்சமாட்டோம் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம் என்ற பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.  ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் சின்னதுரை, மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்  சின்னப்பன், மோகன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர்,  மாவட்ட துணைச்செயலாளர் சந்தனம், இணைச்செயலாளர் செரினாபாக்கியராஜ், மாநில மருத்துவ அணி துணை செயலாளர் ராஜசேகர், வக்கீல் அணிசெயலாளர் சேகர்,  எ...

அணு ஆயுத தாக்குதல் அபாயம் - ரஷ்யாவின் அணு ஆயுதப் படைப் பிரிவுக்கு புடின் சிறப்பு உத்தரவால் பரபரப்பு.!

Image
ராணுவத்தின் “அணுஆயுதப் படை பிரிவை” தயார் நிலையில் இருக்குமாறு ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூலோபாய ஏவுகணை படைக்கு இது உயரிய ஆணையாகும். பாதுகாப்பு அமைச்சர் செர்கேய் ஷோகு உட்பட தனது மூத்த ராணுவ அமைச்சர்களிடம் பேசிய புதின், “ஞாயிற்றுக்கிழமை அரசு தொலைக்காட்சியில் பேசிய அவர், “நீங்கள் பார்ப்பது போல், மேற்கத்திய நாடுகள் பொருளாதார பரிமாணத்தில் நம் நாட்டிற்கு எதிராக நட்பற்ற நடவடிக்கைகளை எடுப்பது மட்டுமல்ல - சட்டத்திற்குப் புறம்பான தடைகள் என்பது அனைவருக்கும் தெரியும். "ஆனால் முன்னணி நேட்டோ நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகளும் எங்கள் நாடு தொடர்பாக ஆக்ரோஷமான அறிக்கைகளை வெளியிட அனுமதிக்கின்றனர். "இந்த காரணத்திற்காக நான் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொதுப் பணியாளர்களின் தலைவருக்கு சிறப்புப் போர் கடமையில் தடுப்புப் படைகளை வைக்க உத்தரவிடுகிறேன்."” என்று தெரிவித்தார். மேலும் இதற்கான எதிர்வினை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

புலிகள் காப்பக பகுதியில் போக்குவரத்திற்கு தடை செய்வதை கண்டித்து மூன்று மாநிலங்களில் ஆர்ப்பாட்டம். புலிகள் காப்பக மக்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பு முடிவு.

Image
புலிகள் காப்பக மக்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஆலோசனைக்கூட்டம்,இன்று சத்தியமங்கலம், இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.  கூட்டத்தில், கூடலூர்,பந்திப்பூர், சுல்த்தான் பத்தேரி,முத்தங்கா,குண்டல்பேட்டை,தாளவாடி,ஆசனூர்,கடம்பூர்,சத்தியமங்கலம்,தெங்கு மரஹாடா,உதகை,மசினகுடி, கண்ணியாகுமரி ஆகிய புலிகள் காப்பக பகுதிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். வன உரிமைச் செயல் பாட்டாளர் சி.ஆர்.பிஜாய்,உயர் நீதி மன்ற வழக்கறிஞர் கீதா,நீலகிரி எம்.எஸ்.செல்வராஜ்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம்,திம்பம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் யுவ பாரத், தாளவாடி விவசாயிகள் சங்க நிர்வாகி கண்ணையன், முத்தங்கா வனப்பகுதியிலிருந்து கீதானந்தன்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் பின் வரும் முடிவு மேற்கொள்ளப்பட்டது: ♦"வன உரிமைச் சட்டத்திற்கும்,வன விலங்கு பாதுகாப்புச் சட்ட      திருத்தத்திற்கும், விரோதமான புலிகள் காப்பக நடவடிக்கைகளை கண்டித்தும்.. ♦புலிகள் காப்பக பகுதிகளில் போக்குவரத்திற்கு தடை விதிப்பதை கைவிடக்கோரியும்... ♦ஒன்றிய அரசின் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம்,(NTCA) ம...

திமுகவின் கோட்டை சூலூர் - நிரூபித்தது

Image
பிப்ரவரி 27  கடந்த பிப்ரவரி 22ல் நடைபெற்ற உள்ளாட்சிக்கான தேர்தலில் சூலூர் பேரூராட்சியில் போட்டியிட்ட திமுக கூட்டணி 18 வார்டுகளில் 17வார்டுகளை வாரி சுருட்டியதோடு புதிய வரலாற்றையும் பதித்திருக்கிறது நாத்திக பூமியில் ஆத்திகமும் ஆல்போலேயே தழைத்து இழையோடுகிறது சூலூரெங்கும்  பகுத்தறிவை ஒரு பக்கம் விதைத்தாலும் பண்பாட்டிற்கு பங்கம் விளைவிக்காமல் பொதுமக்களின் கலாச்சாரங்களுக்கு பெருமதிப்பும் மரியாதையும் கொடுக்கத் தவறியதே இல்லை இந்த சூலூர் மண்  ஆயிரம் கட்சிகள் ஆயிரம் கிளைகள் ஆயிரம் குளறுபடிகள் நிலவினாலும் வேற்றுமையில் ஒற்றுமையை உயர்த்திப் பிடித்து தேசத்திற்கே முன்னோடியாகத் திகழ்வது தமிழ்நாடு கோவை மாவட்டத்தில் ஜொலிக்கும் சூலூரே பெரியார் மட்டுமல்ல வாரியாரும் மிதித்த மண் வள்ளுவன் குறள் மட்டுமல்ல வள்ளலார் குரலும் ஓங்கி ஒலிக்கும் மண் கடவுள் பாதி மிருகம் பாதி அல்ல கடவுள் பாதி மனிதம் பாதி என மலர்ந்து வாழும் மண் சூழ்ச்சிகள் சூலூரை சூழமுடியாது என பலமுறை நிரூபித்த மண் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாகவே திமுகவின் தலைமை கொண்ட மண் இந்த வெற்றியைப்பற்றி திமுகவின் சூலூர் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளரும், ச...

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் மற்றும் 1 விசைப்படகுடன் கைது.!

Image
இராமேஸ்வரம் பிப் 27 இலங்கை கடற்படை தொடர்ச்சியாக தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை கைது நடவடிக்கை தற்போது அதிகரித்து வருகிறது கடந்த 25ஆம் தேதி நாகப்பட்டினத்தை சேர்ந்த 22 மீனவர்களை இரண்டு விசைப்படகுடன் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து  300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ஒரு விசைப்படகு மற்றும் அதில் இருந்த 8 மீனவர்களை கைது செய்து  தலைமன்னார் துறைமுகத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றனர் மேலும் தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகள் படகுகளை அரசுடமையாக்க படுவது போன்ற செயலால் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு வாக்கு சதவீதம் ? - மாநில தேர்தல் ஆணையம் வெளியீடு.! திமுக அபாரம், அதிமுகவுக்கு சரிவு.! , பாஜகவுக்கு 3ம் இடம்.!

Image
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு வாக்கு சதவீதம் என மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 43 சதவீதம் வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளது, அதிமுக இரண்டாம் இடத்திலும் , பாஜக 3ம் இடத்திலும் உள்ளன, அதே நேரத்தில் அதிமுக, தேமுதிக, பாமக, நாதக, மநீம ஆகிய கட்சிகளின் வாக்கு வங்கி சரிந்து இருப்பது மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டதன் மூலம் தெரிய வந்துள்ளது.  தமிழகத்தில் மாநகராட்சிகளில் 1,374 வார்டுகள், நகராட்சிகளில் 3,843 வார்டுகள், பேரூராட்சிகளில் 7,621 வார்டுகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள், 22ம் தேதி வெளியாகின. இந்த தேர்தலில் மாநகராட்சியில் திமுக 952 வார்டுகளையும், அதிமுக 164 வார்டுகளையும், காங்கிரஸ் 73 வார்டுகளையும், பாஜ 22 வார்டுகளையும், சிபிஐ 13 வார்டுகளையும், சிபிஎம் 24 வார்டுகளையும், மதிமுக 21 வார்டுகளையும், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் 16 வார்டுகளையும், பாமக 5 வார்டுகளையும், அமமுக 3 வார்டுகளிலும் கைப்பற்றியுள்ளது. “நகராட்சிகளில் திமுக 2,360  வார்டுகளையும், அதிமுக 638 வார்டுகளையும், கா...

வேலூரில் 6வது வார்டில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் திமுகவில் இணைந்தார்

Image
நடைபெற்ற வேலூர் மாநகர தேர்தலி்ல் 6வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிப்பெற்ற சீனிவாசன் கழக பொதுச்செயலாளர்,  நீர்வளம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர்  அண்ணன் துரைமுருகன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தார்.

காவனூர் அருகே வேப்ப மரம் மற்றும் வேலமரம் திருட்டு - கே வி குப்பம் போலீசார் விசாரணை.!*

Image
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் தாலுக்கா காவனூர் பாலாற்றுக் கரை ஓரம் வேலமரம் மற்றும் வேப்பமரம்  மர்மநபர்கள் வெட்டி கடந்த சில நாட்களாக திருடிச் சென்றுள்ளனர்.  விஏஓ கலைவாணி கே வி குப்பம் போலீசில் புகார் மனு அளித்துள்ளார். இதுகுறித்து  மர்ம நபர்கள் யார் என்று  கே வி குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தன்னை ஏற்ற மறுத்த அரசு பஸ்சை ஆட்டோவில் விரட்டிச் சென்று நியாயம் கேட்ட கர்ப்பிணி பெண்ணால் பரபரப்பு

Image
 திருப்பூர் பழைபேரூந்து நிலையம் அருகே தன்னை ஏற்ற மறுத்த அரசு பஸ்சை ஆட்டோவில் விரட்டிச் சென்று கர்ப்பிணி பெண் நியாயம் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.. ஊட்டி மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சமீமா பர்வின் 24 வயது கர்பிணியான சமீமா பர்வின் இன்று மதியம் மேட்டுப்பாளையத்திலிருந்து திருப்பூரில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு வருவதற்காக அரசு பஸ் ஒன்றில் வந்தார் திருப்பூர் அவிநாசி ரோட்டில் உள்ள எஸ்ஏபி பஸ் நிறுத்தத்தில் இறங்கிய அவர் அங்கிருந்து திருப்பூர் பழைய பஸ் நிலையம் செல்வதற்காக அந்தவழியாக வந்த அரசு டவுன்பஸ்ஸில் ஏறுவதற்காக சமீமா பர்வின் நின்றிருந்தார். அப்போது அந்தவழியாக வழித்தட எண் 10ம் நெம்பர் பேரூந்தில் சமீமா பர்வின் ஏற முற்பட்டபோது அவர் ஏறுவதற்குள் கண்டக்டர் சுரேஸ் விசிலடித்ததையடுத்து ஓட்டுனர் சதாசிவம் பேருந்தை வேகமாக ஓட்டிக்கொண்டு சென்று விட்ட்டார். இதனால் விரக்தியடைந்த சமீமா பர்வின் பழையபஸ்நிலையம் அருகில் இருக்கும்அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்து விட்டு அங்கிருந்த ஆட்டோவைப்பிடித்துக்கொண்டு தன்னை ஏற்ற மறுத்துவிட்டு சென்ற பஸ்சை பின்தொடர்ந்து சென்றார் அப்போது பழைய பஸ்நி...

பூணூல் அறுப்பு போராட்டம் - இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் கைது

Image
கர்நாடகாவில் ஹிஜாப்புக்கு தடை விதிப்பதை கண்டித்து தமிழகத்தில் பூணூல் அறுக்கும் போராட்டம் அறிவித்த இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீமை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். கர்நாடக கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. இந்நிலையில், ஹிஜாப்புக்கு தடை விதிப்பதை கண்டித்து ‘பூணூல் அறுப்பு போராட்டத்தை தொடர்வோம்' என இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா அப்துல் ரஹீம் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு இஸ்லாம் அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், இந்து முன்னணி சென்னை மாநகர பொதுச் செயலாளர் பி.மேகநாதன் கடந்த 21-ம் தேதிமாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘இஸ்லாமிய சமூக மக்களின் மனதில் வன்மத்தை விதைத்து மத ரீதியிலான கலவரத்தை உருவாக்கும் வகையிலும், நாட்டின் இறையாண்மைக்கு தீங்கிழைக்கும் வகையிலும் உள்நோக்கத்துடன் தடா ரஹீம் செயல்படுகிறார். எனவே, அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தி...

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு கனிமொழி கருணாநிதி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் ஆறுதல்.!*

Image
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள துறையூரில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட வெடி விபத்தில் ராமர், ஜெயராஜ், கண்ணன், தங்கவேல் ஆகிய 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.  இந்நிலையில் 4 தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண உதவி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன்,  ஆகியோர் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், முன்னிலையில்,  கோவில்பட்டி பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் உயிரிழந்த ஜெயராஜ் குடும்பத்திற்கு இன்று  நேரில் ஆறுதல் தெரிவித்து, அன்னாரது வாரிசுதாரருக்கு முதலமைச்சர் நிவாரண நிதி உதவித்தொகை ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்கள்.  உடன் விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன்,  உள்ளாட்சி பிரதிநிதிகள், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர், கோவில்பட்டி மற்றும் கய...

ஸ்ரீ வேம்படி சுடலை மாடசாமி திருக்கோவில் 30ம் ஆண்டு மாசி மாக கொடை விழா முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ பங்கேற்பு.!*

Image
கோவில்பட்டியில் ஸ்ரீ வேம்படி சுடலை மாடசாமி திருக்கோவில் 30ம் ஆண்டு மாசி மாக கொடை விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுக்கிராமம் பகுதியில் உள்ள இல்லத்துப் பிள்ளைமார் இளைஞர் சமுதாயத்துக்கு சங்கத்துக்கு பாத்தியப்பட்ட ஆறுமுகமங்கலம் வழியில் வந்த ஐகோர்ட் ஸ்ரீ மகாராஜா அருள்மிகு ஸ்ரீ வேம்படி சுடலை மாடசாமி திருக்கோவில் 30ம் ஆண்டு மாசி மாக கொடை விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.  கடந்த 18ம் தேதி அன்று கால் வைத்த விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 4 மணி அளவில் ஸ்ரீ சுடலை மாடசாமி திருக்கோவில் தீர்த்தம் குடம்  எடுத்து வந்து மேளதாளங்கள் முழங்க மகா கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் சிறப்பு தீபாராதனைகள்  முளைப்பாரி ஊர்வலம், நடைபெற்றது.  இதனை தொடர்ந்து சாமக் கொடை, பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ‌இதில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிச...

கோவில்பட்டியில் ஸ்ரீ வேம்படி சுடலை மாடசாமி திருக்கோவில் 30ம் ஆண்டு மாசி மாக கொடை விழா.!

Image
கோவில்பட்டியில் ஸ்ரீ வேம்படி சுடலை மாடசாமி திருக்கோவில் 30ம் ஆண்டு மாசி மாக கொடை விழாவில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி மற்றும் சாமக்கொடை விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுக்கிராமம் பகுதியில் உள்ள இல்லத்துப் பிள்ளைமார் இளைஞர் சமுதாய சங்கம் பாத்தியப்பட்ட ஆறுமுகமங்கலம் வழியில் வந்த ஐகோர்ட் ஸ்ரீ மகாராஜா அருள்மிகு ஸ்ரீ வேம்படி சுடலை மாடசாமி திருக்கோவில் 30ம் ஆண்டு மாசி மாக கொடை விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.  கடந்த 18ம் தேதி அன்று கால் வைத்த விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 4 மணி அளவில் ஸ்ரீ சுடலை மாடசாமி திருக்கோவில் தீர்த்தம் குடம்  எடுத்து வந்து மேளதாளங்கள் முழங்க மகா கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் சிறப்பு தீபாராதனைகள்  முளைப்பாரி ஊர்வலம், நடைபெற்றது.  இதனை தொடர்ந்து பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர் ‌ சாமக் கொடை மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்....

பெரியார் வேடமிட்டு நடித்த குழந்தைக்கு கொலை மிரட்டல் : கொடூர நபர் கைது - தூத்துக்குடி காவல்துறை நடவடிக்கை.!

Image
பெரியார் வேடமிட்டு நடித்த  குழந்தையை அடித்துக்கொன்று பொது இடத்தில் தூக்கில் தொங்க விட வேண்டும் என சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கொடூர நபரை தூத்துக்குடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில், பெரியார் வேடமணிந்து குழந்தையொன்று நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றிருந்தார். அந்நிகழ்ச்சியில், பெரியாரின் கருத்துகளை அக்குழந்தை பகிர்ந்திருந்தார். அக்குழந்தைக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில், கோவில்பட்டியைச் சேர்ந்த வெங்கடேஷ் குமார் பாபு என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பெரியார் போல் வேடமிட்டு நடித்த குழந்தையை அடித்துக்கொன்று பொது இடத்தில் தூக்கில் தொங்க விட வேண்டும் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருந்தார். அப்படி செய்தால்தான், மற்ற குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் பயம் வரும் என்றும் வெங்கடேஷ்குமார் பாபு பதிவிட்டிருந்தார் அந்நபர். இப்படி பீதியையும், சட்டம் ஒழுங்கு பிரச்னையையும் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட வெங்கடேஷ்குமார் பாபு மீது கயத்தாறு காவல்துறையினர் குற்ற எண் 100/22 U/S 153 (அ), 505 (1), 506 (1) IPC - Sec 67 IT A...

எட்டையபுரத்தில் சாலை விபத்தில் தாய் மகள் உள்பட 3 பேர் பலி

Image
கோவில்பட்டி  அருகே அதிகாலை நேரத்தில் நடந்த சாலை விபத்தில் தாய் மகள் உட்பட 3 வர் பலி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே  எட்டயபுரம் தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை வழியாக  இருசக்கர வாகனத்தில் மதுரையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற  மணிகண்ட ராஜா, கன்னிச்செல்வி,மாரியம்மாள் ஆகிய மூவர் சோழபுரம் அருகே சென்று கொண்டு இருந்த போது அவ்வழியாக சென்ற  சரக்கு லாரி மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பின்னால் உள்ள சக்கரத்தில் சிக்கி  மாரியாம்மாள்,கன்னிச்செல்வி ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இச்சம்பவம் அறிந்த வந்த காவல்துறை படுகாயங்கள் உடன் கிடந்த மணிகண்டன ராஜா தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு  அனுப்பி வைத்தனர் ஆனால் கொண்டு செல்லும் வழி அவரும் உயிரிழந்தார் ..  மாரியம்மாள் கன்னிசெல்வியின் தாயர் ஆவர்,மணிகண்டராஜா கன்னிச்செல்வியின் அக்கா கணவர் ஆவார் என்பது குறிப்பிடதக்கது. இச்சம்பவம் குறித்து எப்போதும் வென்றான் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தூத்துக்குடி மேயராக பதவியேற்கவுள்ள ஜெகன் பெரியசாமிக்கு ஐஜேகே தென் மண்டல இணைச்செயலாளர் அருணாதேவி வாழ்த்து.!

Image
தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 50 இடங்களில் வெற்றி பெற்றது.  சுயேட்சையாக வெற்றி பெற்றவர்களில் 3 பேர் கனிமொழி கருணாநிதி எம்.பி, வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் மகளீர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். மாநகராட்சி திமுக கூட்டணி பலம் 53ஆக உயர்ந்துள்ளது. இதில் 20வது வார்டில் வெற்றி பெற்ற திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமிக்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வருகின்ற 4ம் தேதி மேயராக பொறுப்பேற்க உள்ள நிலையில் அவரது அலுவலகத்தில் இந்திய ஜனநாயக கட்சி தென்மாநில இணைச்செயலாளர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன் பூங்கொத்து கொடுத்து நிர்வாகிகளுடன் வாழ்த்து தெரிவித்தார்.  நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொருளாளர் சுசி.ரவீந்திரன், தலைமை பேச்சாளர்கள் இருதயராஜ், சரத்பாலா, தமிழன்பண், மாவட்ட தொண்டரணி துணைச்செயலாளர் ராமர்,  போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் லிங்கராஜா, பிரபாகர், முன்னாள் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் இம்மானுவே...

ரஷ்யா - உக்ரைன் போர் கச்சா எண்ணெய் மட்டுமல்ல, சமையல் எண்ணெய்யும் விலை உயரும் அபாயம்

Image
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடுத்துள்ள நிலையில் கச்சா எண்ணெய் மட்டும் அல்லாமல், சமையல் எண்ணெய்யும் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியில் 80% உக்ரைனில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால்  உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் உலகெங்கிலும் உள்ள எண்ணெய் சந்தையையும் இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சமையல் எண்ணெயின் சில்லறை விலைகள் ஏற்கனவே கடும் விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில் ,இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி கடும் பாதிப்பை சந்திக்கும் என இறக்குமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் உலகெங்கிலும் உள்ள கச்சா எண்ணெய் சந்தையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இது இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தத் தயாராக உள்ளது. இருப்பினும், இந்த மோதலால் இந்தியா எதிர்கொள்ள வேண்டிய ஒரே பிரச்சினை அது மட்டுமல்ல.  இந்தியாவின் தேவையை பூர்த்தி செய்ய சமையல் எண்ணெய் இறக்குமதியை பெரிதும் நம்பியிருக்கும் இந்தியா,  சூரியகாந்தி விதை எண்ணெய் இறக்குமதியில் கிட்டத்தட்ட 93 சதவீதம் உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்து...

லத்தேரி காவல் நிலையத்தில் டி.ஐ.ஜி ஆனி விஜயா வருடாந்திர ஆய்வு

Image
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த லத்தேரி காவல் நிலையத்தில்  வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.  இந்த ஆய்வின் போது  காவல் நிலையத்தில் உள்ள மரக்கன்றுகள், சுற்றுசூழல் ஆகியவை பார்வையிட்டார்.  பின்னர் காவல் நிலையத்தில் உள்ள  கோப்புகளை,  சரிப்பார்த்தார். இதனை தொடர்ந்து காட்பாடி டி.எஸ்.பி பழனி, இன்ஸ்பக்டெர் சுப்பிரமணி உள்ளிட்ட காவல் நிலையத்தில் உள்ள போலிசாரிடம்  குறை, நிறைகளை கேட்டறிந்தார். ஆய்வின் முடிவில் நிருபர்களிடம் கூறியதாவது:  காவல் நிலையங்களில் உள்ள போலிசார் எப்போதும் குற்றங்களை கண்காணிக்கும் நோக்கத்தோடு பணியாற்ற வேண்டும் , காவல் நிலைய தேவை, காவலர்களின் தேவை, விசாரணை முறையை துரிதப்படுத்த போலிசார் முன்வர வேண்டும்.  இதனை தொடர்ந்து பேசிய அவர் காவல் நிலையத்தின் தரம், காவலர்களின் விசாரணை முறை, பொதுமக்களிடம் அனுகும் முறை, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அதன் அவசியமறிந்து சுமார் 15 நாட்களுக்குள் வழக்குகளை  முடிக்க வேண்டும். காவல் நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை சரிசெய்ய வேண்டும். காவல் நிலையத்தில் பணிபுரியும் இர...

வேப்பங்கநேரி கிராமத்தில் 53-ம் ஆண்டு மாடு விடும் திருவிழா

Image
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த வேப்பங்கநேரி கிராமத்தில் 53-ம் ஆண்டு மாடு விடும் திருவிழா நடைபெற்றது. முதல் பரிசு ரூ. 77,777, இரண்டாம் பரிசு ரூ.55,555, மூன்றாம் பரிசு ரூ.44,444 உள்பட  58 பரிசுகள் 5 சிறப்புப் பரிசுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது.  பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 105 மாடுகள் போட்டியில் கலந்து கொண்டன.  பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வாலிப ரசிகர்கள், மாடுகள் ஓடும் போது பாதையின் குறுக்கே நின்றபடி அவற்றை உற்சாகப்படுத்தினர்.  முதல் பரிசுத் தொகையை போடிரெட்டியார் பைபாஸ் மாடு பெற்றது. இரண்டாவது பரிசை தொண்டான் துளசி காலபைரவர் மாடு பெற்றது. மூன்றாவது பரிசை லத்தேரி என்.டி.ஆர். மாடு பெற்றது. இதுபோல் 5 சிறப்பு பரிசுகள் உள்பட மொத்தம் 63 பரிசுகள் வழங்கப்பட்டன. 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு 2  பேருக்கு பெருங்காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பெற்றுச் சென்றனர். இதேபோல 4 மாடுகளுக்கு  லேசான காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுச் சென்றன.   விழாவில் கோட்டாட்சியர் தனஞ்செயன், தாசில்தார் சரண்யா, மண்டல துணை தாசில்தார்...

வாடகை வீட்டில் குடியிருந்தவரின் மண்டையை உடைத்த வீட்டின் உரிமையாளர்

Image
வீட்டு உரிமையாளருக்கும், வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கும் ஏற்பட்ட பிரச்னையில், வாடகைதாரரின் மகளின் மண்டை உடைக்கப்பட்ட புகாரில், வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.  சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், மாணிக்கம் நகரைச் சேர்ந்தவர், ராஜசேகரன். இவரது, மனைவி சுமதி. தம்பதிகளுக்கு, 21 வயதில் மகனும், 17 வயதில் மகளும் உள்ளனர்.  மகன், பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வரும் நிலையில், மகள் அங்குள்ள அரசு பள்ளியில், பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  கடந்த, 16ம் தேதி, திடீரென வீட்டின் உரிமையாளர், ரமேஷ் என்பவர், வீட்டை இரவோடு இரவாக காலி செய்யுமாறு, சுமதியிடம் கூறியுள்ளார். அதற்கு, தான் முன்பணமாக கொடுத்த, 50 ஆயிரம் ரூபாயை கொடுக்குமாறு கேட்டுள்ளார்.  அதை, கொடுக்க மறுத்த, ரமேஷ் மற்றும் அவரது மகன்கள், வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து வெளியே வீசி, சுமதியை ஆபாசமாக பேசி உள்ளனர்.  அதை தட்டிகேட்ட, சுமதியின் மகளிடம், ரமேஷின் இரண்டாவது மகன் அத்துமீறி நடந்ததுடன், ஆபாசமாக பேசி உள்ளார்.  இது தொடர்பாக, கடந்த, 17ம் தேதி சுமதி அளித்த, புகாரை சேலையூர் போலீசார், விசாரிக...

பள்ளி நேரத்தில் பேருந்து நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் சாலை மறியல்.!

Image
பவானிசாகர் - பிப்.26 ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை அடுத்த பவானி சாகர் அருகே புதுபீர்கடவு கிராமம் உள்ளது. இந்த கிராம த்திலிருந்து மேல்நிலைக் கல்வி பயில மாணவ, மாணவி யர் தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வருகின்றனர். வழக்கம் போல் காலை 8.30  மணி அளவில் புதுப்பீர் கடவு பிரிவு அருகே மாணவ, மாணவியர் பேருந்துக்காக காத்திருந்த போது, அவ்வழியே வந்த பி.1நம்பியூர் கிளை அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சென்றதால், மாணவ, மாணவியர் பள்ளிக்கு செல்ல முடியாமல் சாலையில் காத்திருந்தனர். இதனை அறிந்த அப்பகுதி பொது மக்கள்  பி-1 பேருந்து திரும்பி வரும்போது, பஸ்சை வழி மறித்து மறியல் செய்தனர். தகவல்அறிந்து சம்பவ இடம் விரைந்தபவானிசாகர் காவல் ஆய்வாளர் பிரபாகரன்,சத்தி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் இந்திரா சோபியா மற்றும்  பவானிசாகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி. எல். சுந்தரம் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் முடிவில் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநர் தவறை ஒப்புக் கொண்டு, இனிமேல் பள்ளி நேரத்தில் வாகனத்தை நிறுத்தி மாணவர்களை அழைத்துச் செல்வதாகவும் உறுதியளித்தார். மேலும் இவ்...

நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்களுக்கு சிறைக்காவல் நீடிப்பு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு.!

Image
இராமேஸ்வரம் பிப் 25 இலங்கை கடற்படையால் லட்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நேற்று சிறைபிடிக்கப்பட்ட நாகப்பட்டினத்தை சேர்ந்த இரண்டு விசைப்படகு மற்றும் அதில் இருந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தனர் அவர்களை இன்று இலங்கையிலுள்ள கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்  வழக்கை விசாரித்த நீதிபதி எதிர்வரும் 28ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார் இதனையடுத்து 22 மீனவர்களையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர் மேலும் நாகப்பட்டினத்தை சேர்ந்த 23 மீனவர்களும்   ராமேஸ்வரத்தை சேர்ந்த 21மீனவர்களும் இலங்கை சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது

தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி உயிரிழப்பு

Image
வாணியம்பாடி நியூ டவுன் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி  மீது ரயில் மோதி உயிரிழப்பு சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற விரைவு ரயில் மோதியதில் உடல் சிதைந்து உயிரிழப்பு

திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் 44 வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் விரக்தி.மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை.

Image
திருப்பூர் கல்லூரி சாலை கொங்கணகிரி பகுதியில் வசித்து வருபவர் மணி(55). மூட்டை தூக்கும் தொழிலாளி.இவரது மனைவி சுப்பாத்தாள்(50). மணி மக்கள் நீதி மையத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் நடந்த திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் 36 வார்டில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிட்டார். மேலும் தேர்தல் செலவுக்காக அக்கம் பக்கத்தில் 50 ஆயிரம் வரை கடன் வாங்கி செலவு செய்துள்ளார்.  அந்த பகுதியில் தனக்கு செல்வாக்கு உள்ளதாகவும், கண்டிப்பாக வெற்றி பெறுவேன் எனவும் அப்பகுதி மக்களிடம் கூறிவந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 22ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது, மக்கள் நீதி மையம் வேட்பாளர் மணி வெறும் 44 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் திவாகரன் 3,319 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றர். தான் வெற்றி பெற்று விடுவோம் என்ற எண்ணத்தில் இருந்த மணி, வெறும் 44 ஓட்டுகள் மட்டுமே கிடைத்ததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். மேலும் தேர்தல் செலவுக்காக அக்கம்பக்கத்தினர் வாங்கிய கடன் 50 ஆயிரத்தை எப்படித் திருப்பி தருவது என தெரியாமலும் இறந்துள்ளார் இதன் காரணமாக...

திருப்பூர் மேயர் யாரு...? சென்னையில் முகாமிட்டு ‘அரசியல் சதுரங்கம்’

Image
2008-ம் ஆண்டு திருப்பூர் மாநகராட்சி உருவாக்கப்பட்டது. க.செல்வராஜ் மேயராக இருந்தார். அதைத்தொடர்ந்து வந்த 2011 தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடித்தது. திருப்பூர் மாநகரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு 2021 சட்டமன்ற தேர்தலில்  எம்.எல்.ஏ., சீட்டை பிடித்தது திமுக;  மத்திய மாவட்ட பொறுப்பாளராக இருக்கும் க.செல்வராஜ்  எம்.எல்.ஏ., ஆனார்.  தொடர்ந்து நடந்த உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 கவுன்சிலர் சீட்டுகளில் 37 ஐ திமுக கூட்டணி கைப்பற்றி உள்ளது. 19 கவுன்சிலர் சீட்டுகள் அதிமுக வசமாகி உள்ளது. 2 இடங்களை பா.ஜ.க.,வும், இன்னும் இரண்டு இடங்களை சுயேட்சைகளும் வென்று உள்ளனர். இந்த நிலையில் திருப்பூர் மேயர் சீட்டை பிடிக்க திமுக கூட்டணியில் கடும் போட்டி நிலவுகிறது. திமுகவில் வென்ற கவுன்சிலர்களில் பலரும், கூட்டணி கட்சியினரில் பலரும் மேயர், துணை மேயர், மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் என பல்வேறு பதவிகளை பிடிக்க சென்னையில் முகாமிட்டு காய் நகர்த்தி வருகிறார்கள் என திமுக வட்டாரத்தில் தகவல் கசிகிறது.   திருப்பூர் 41 வது வார்டில் வென்ற அக்கட்...

உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கியது ரஷ்யா - தலைநகர் கீவ் மற்றும் டோனட்ஸ்க் உள்ளிட்ட நகரங்கள் மீது குண்டு வீச்சு.!

Image
  உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு உக்ரைனின் டோனட்ஸ்க் உள்ளிட்ட நகரங்கள் மீது ரஷ்ய படைகள் முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தநிலையில்,  உயர் துல்லியமான துல்லியமான ஆயுதங்களை கொண்டு ராணுவ மற்றும் விமான தளங்களை ரஷ்யா தாக்கி வருகிறது.  தாக்குதலில் பொதுமக்கள் மீது குறிவைக்கவில்லை எனவும் உக்ரைனில் உள்ள ராணுவ மற்றும் விமான தளங்கள் மீது மட்டுமே தாக்குதல் நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது