.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வு கடந்த ஜன., யிலும், அதில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முக தேர்வு கடந்த ஏப்., மாதமும் நடந்தது. இறுதி தேர்வு முடிவுகள் இன்று(மே 30) வெளியிடப்பட்டது. அதில், 685 பேர் தேர்ச்சி பெற்றனர். கோவையை சேர்ந்த ஸ்வாதி ஸ்ரீ தேசிய அளவில், 42-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கோவை தொப்பம்பட்டியை சேர்ந்த தியாகராஜன் - லட்சுமி தம்பதியின் மூத்த மகள் ஸ்வாதிஸ்ரீ, 25. இளங்கலை வேளாண் பட்டதாரி. வேளாண் கல்வி மீது பள்ளி பருவத்திலிருந்தே நாட்டம் அதிகம். கோவை வேளாண் பல்கலையின் கீழ், தஞ்சாவூரில் உள்ள தனியார் வேளாண் கல்லுாரியில், இளங்கலை வேளாண் பட்டம் பெற்றவர். மூன்றாவது முறையாக தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார். தேர்வில் வெற்றி பெற்றது குறித்து ஸ்வாதிஸ்ரீ கூறியதாவது: தேசிய அளவில், 42 வது இடம், தமிழகளவில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தாத்தா - பாட்டி வேளாண் தொழிலில் ஈடுபட்டதை பார்த்து ஆசைப்பட்டே வேளாண் படிப்பில் சேர்ந்தேன். பட்டம் பெற்ற பின் குடிமைப்பணித் தேர்வை எழுதினேன். சென்னை மனிதநேயம் அறக்கட்டளை, அறம் பயிற்சி மையத்தில் குடிமைப்பணி தேர்வ...