Posts

Showing posts from March, 2023

ஒரு கையில் ஸ்டியரிங்... இன்னொரு கையில் கியர் ராடு.. பதறாமல் பஸ் ஓட்டும் கோயம்புத்தூர் பொண்ணு..

Image
சோமனூர் - காந்திபுரம் வழித் தடத்தில் ஆண்களுக்கு நிகராக பஸ் ஓட்டும் இளம்பெண் ஷர்மிளா, அந்த பகுதி மக்களிடையே சிங்கப்பெண்ணாக மிளிர்கிறார். கோவை அருகே உள்ள வடவள்ளியை சேர்ந்த மகேஷ் - ஹேமா தம்பதியரின் மகள் ஷர்மிளா. 24 வயதான இந்த இளம்பெண் தான் கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து சோமனூருக்கு தனியார் பஸ் ஒன்றை அசால்டாக பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று வருகிறார். தந்தையின் டிரைவர் பணியால் ஈர்க்கப்பட்டு பஸ் ஓட்டுவதை லட்சியமாக கொண்டு பஸ் ஓட்டுகிறார். ஷர்மிளா கியர் ராடு பிடித்து, ஸ்டியரிங் சுழற்றும் லாவகம் பார்த்து, பஸ்ஸில் வரும் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் அசந்து தான் போகிறார்களாம்.  கோவையின் முதல் பெண் பஸ் டிரைவராக கலக்கும் ஷர்மிளா வின் பஸ்ஸில் ஏறி செல்ல தனி மகளிர் கூட்டமே இருக்கிறது என்கிறார்கள். "டாடி டிரைவர் என்பதால் எனக்கு ஆர்வம் அதிகம். சிலிண்டர் கொண்டு செல்லும் வாகனம் ஓட்டினேன். அதன் பின்னர் ஆட்டோ ஓட்டினேன். அப்புறம் கனரக வாகன பயிற்சி பெற்று வேலைக்காக காத்திருந்தேன். மகளிர் தினத்தன்று வேலைக்காக காத்திருக்கும் என்னை பற்றிய தகவல்கள் செய்தியாளர்கள் மூலமாக வெளிவந்தது. அதனை தொடர்ந்து சோமனூர்...

சென்னை -கோவை இடையே வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்... சேலத்தில் வரவேற்பு

Image
 தமிழ்நாட்டில் சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ரயிலை வருகிற 8 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிலையில் வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. காலை 5.40 மணிக்கு சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் கிளம்பிய வந்தே பாரத் ரயில் காலை 9.15 மணிக்கு சேலம் ஜங்சன் ரயில் நிலையத்தினை வந்தடைந்தது. சேலம் ஜங்சனில் 4 வது பிளாட்பாரம் வந்த இந்த ரயிலை கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சிங் தலைமையிலான ரயில்வே அதிகாரிகள் இந்த ரயிலை வரவேற்றனர்.  முழுமையான சொகுசு ரயிலாக இயக்கப்படுகிற இந்த ரயில் தான் தமிழ்நாட்டிலேயே இயக்கப்படுகின்ற அதிவேக ரயிலாக இருக்கும்.  -கண்ணன்

திருப்பூரில் பள்ளி வாகனம் மோதி பெண் பலி:பிணத்தை எடுக்க விடாமல் பொதுமக்கள் போராட்டம்

Image
 பள்ளி வாகனம் மோதி பெண் பலியான சம்பவத்தில்  பிணத்தை எடுக்க விடாமல் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். திருப்பூர் ஊத்துக்குளி ரோடு பாரப்பாளைளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராதா. இவர் இன்று காலையில் பள்ளியில் குழந்தையை விடுவதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் வந்தார்.  அப்போது திருப்பூர் கூலிபாளையம் நால் ரோட்டில் இருந்து வாவிபாளையம் செல்லும் வழியில் உள்ள விகாஸ் வித்யாலயா பள்ளி அருகே அந்த பள்ளியின் வாகனம் அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்குளி போலீசார் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது விபத்தில் பலியான ராதாவின் உறவினர்கள் அங்கு ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  மேலும் உரிய நியாயம் வேண்டும் என்றும் விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், சடலத்தை அப்புறப்படுத்த விடாமல் போலீசாரை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு... திருப்பூரில் முன்னாள் எம்.எல்.ஏ., சு.குணசேகரன் தலைமையில் கொண்டாட்டம்

Image
 அ.இ.அ.தி.மு.க. பொதுக்குழு தீர்ப்பு செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையொட்டியும், பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டியும் திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பாக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர். அ.இ.அ.தி.மு.க. பொதுக்குழு தீர்ப்பு செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது, இதை தொடர்ந்து பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து  திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் முன்னாள் எம்எல்ஏ சு.குணசேகரன் தலைமையில் அதிமுகவினர் திரண்டு திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் அதிமுகவினர் கொண்டாடினார்கள். இந்த நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள் பூலுபபட்டி பாலு, சங்கீதா சந்திரசேகர், பகுதி கழக செயலாளர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, கேசவன், ஏ.எஸ்.கண்ணன...

'பல் பிடுங்கி பல்பீர் சிங்' விவகாரம் - 12 பேரிடம் சப்-கலெக்டர் விசாரணை - பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகள் உள்பட அனைவரும் நேரில் ஆஜராக உத்தரவு.!

Image
நெல்லை மாவட்டம் அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று அவர்களது பற்களை பிடுங்கி கொடூர செயலில் அவர் ஈடுபடுவதாக சிலர் புகார் கூறியதையடுத்து, அம்பை, கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையங்களில் சம்பவம் நடந்த அன்று பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகள் உள்பட அனைவரும் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் காட்சிகள் வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதனை விசாரிக்க, சேரன்மாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டு இருந்தது.  அதன்படி பாதிக்கப்பட்ட லெட்சுமி சங்கர், வெங்கடேஷ், சூர்யா உள்ளிட்ட 3 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அந்தந்த கிராம வி.ஏ.ஓ.க்களுடன் நேரில் ஆஜராக சப்-கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். நேற்று பகல் முழுவதும் யாரும் வராமல் இருந்த நிலையில், கல்லிடைக்குறிச்சி பகுதியை ...

குறைந்த செலவில் கேதர்நாத் பயணம்!

Image
 தமிழ்நாட்டில் இருந்து 3000 கி.மீ., தூர வாகன பயணம்., இமய மலையில் 19 கி.மீ., தூர நடைப்பயணம்., 12 ஆயிரம் அடி உயரத்தில் உடலை உறையச் செய்யும் மைனஸ் குளிர்.,  இத்தணை சிரமங்களை கடந்தும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் படையெடுத்துச் சென்று தரிசிக்கும்  சிவன் கோவில் தான் கேதர்நாத் கோவில்.. உலகம் முழுவதும் இருக்கும் இந்து சமயத்தினர் இந்த கோவிலுக்கு புனிதயாத்திரை மேற்கொள்வது வழக்கம்.  உத்தரகாண்ட் மாநிலத்தில், சிவாலிக் மலைத்தொடரில் 12 ஆயிரம் அடி உயரத்தில் இருக்குதுங்க கேதர்நாத் கோவில்.,  கேதர்நாத் கோவில் பஞ்சபாண்டவர்கள் காலத்தில் உருவான கோவில். இந்த கோவிலில் கேதாரீஸ்வரர் முக்கோண வடிவிலான லிங்கமா இருந்து பக்தர்களுக்கு அருள் கொடுக்கிறார்ங்க..,  இமயமலையில் மந்தாகினி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது கேதார்நாத் கோவில். சம்பந்தராலும் சுந்தரராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் வட நாட்டுத் தலங்களில் இந்த கோவிலும் ஒன்னுங்க. இங்கு பாண்டவர்கள் சிவபெருமானை நோக்கித் தவமிருந்ததாகவும், அவர்களே இக்கோயிலை கட்டியதாகவும் சொல்றாங்க., ஆதிசங்கரர் காலத்துல கோவில் புனரமைக்கப்பட்டிருக்கு.,...

கச்சத்தீவில் புத்தவிகாரம் கட்டியதாக பாதிரியார் புகார்... கச்சத்தீவு திருவிழாவுக்கு வந்த புத்த பிட்சுகள்... என்னப்பா நடக்குது அங்கே?

Image
கச்சத்தீவில் புத்த விகாரங்களை இலங்கை அரசு கட்டியுள்ளதாக கூறியுள்ள  இலங்கை நெடுந்தீவு பகுதியை சார்ந்த பாதிரியார் வசந்தன்,  இதற்கான புகைப்படங்களையும் பகிர்ந்து உள்ளார்.  இந்த நிலையில் கச்சத்தீவு திருவிழாவிற்கு புத்த பிட்சுகள் வந்திருந்த காரணம் சமூக நல்லிணக்கம் இல்லையா? வேறு ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா?  என்ற கேள்வி எழுந்துள்ளது. மார்ச் மாதம் 3,4 தேதிகளில் கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவினை இலங்கை அரசு நடத்தியது. இந்த விழாவில் இந்தியாவில் இருந்தும், இலங்கையில் இருந்தும் சுமார் 10 ஆயிரம் பேர் திருப்பயணிகளாக கலந்து கொண்டனர்.  இந்த விழாவுக்கு வந்திருந்த இலங்கை நெடுந்தீவு பகுதியை சேர்ந்த பாதிரியார் வசந்தன், ‘கச்சத்தீவில் இரண்டு புத்த விகாரங்கள் கட்டப்பட்டு இருப்பதாக பிபிசி தொலைக்காட்சியிடம் தெரிவித்து இருந்தார். அந்த விகாரங்கள் பனை ஓலை தட்டியால் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது என்றும், அந்த மறைப்புக்கு கடற்படையினர் காவல் நிறுத்தப்பட்டு இருந்தததுடன், அந்த இடத்துக்கு பக்கத்தில் கூடயாரும் அந்த பகுதியில் அனுமதிக்கப்படவில்லை எனவும் கூறி இருந்தார்.  5 அடி உயர...

திருப்பூரில் தடகள மைதானம் அமைக்கும் பணி விறுவிறு...

Image
 திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி பின்புறம், எட்டு ஏக்கரில் விரிவான விளையாட்டு மைதானம், 400 மீட்டர் தடகள மைதானம் அமைக்க முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், 18 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில், முதற்கட்டமாக ஒன்பது கோடி ரூபாய், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், பொதுப்பணித்துறை மூலம் பணிகள் நடக்கிறது. கடந்தாண்டு திருப்பூர் வருகைதந்த அன்றைய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், இந்த இடத்தை ஆய்வு விபரங்களை கேட்டறிந்தார். ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு மண் ஓடுபாதை அமைக்கப்படுவதாகவும், அதில் தேசிய, சர்வதேச தடகள போட்டியை நடத்த முடியாது என்பதால் கைவசமிருக்கும் ஒன்பது கோடி நிதியை கொண்டு செயற்கை இழை தடகளப்பாதை அமைக்கவும், கூடுதல் நிதி தேவைப்பட்டால் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்து தருவதாகவும் கூறினார். ஆனால் இதுவரை கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை. தற்போதைய விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றபின் எங்கெங்கு தடகள மைதான பணிகள் நடைபெறுகிறது, போதிய நிதிவசதியின்றி மெதுவாக பணிகள் நடைபெறும் மைதானங்கள் & அதன் விபரங்களை கேட்டறி...

கடத்தப்பட்ட குழந்தை தாயிடம் ஒப்படைப்பு

Image
 திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 7 நாளே ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்ட நிலையில் 14 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.  திருப்பூர் செரங்காடு மூன்றாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கோபி (30). இவரது மனைவி சத்யா (28). இவருக்கு கடந்த 18-ம் தேதி வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் கோபி அவரை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இதற்கிடையே கடந்த 19-ம் தேதி சத்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தைகள் வார்டில் தாயும் சேயும் இருந்தனர். சத்யாவை குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக வேறு வார்டுக்கு மாற்றி உள்ளனர். அப்போது அருகில் இருந்த பெண் ஒருவர்  இந்த சம்பவத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு குழந்தையை கடத்தி சென்றார்.  இதையடுத்து திருப்பூர் தெற்கு போலீஸ் உதவி ஆணையர் கார்த்திகேயன்,  இன்ஸ்பெக்டர் பிச்சையா தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகளை வெளியிட்டும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். இந்த நி...

திருப்பூர் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை 14 மணி நேரத்தில் மீட்பு... பெண் கைது

Image
 திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 7 நாளே ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்ட நிலையில் 14 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.  திருப்பூர் செரங்காடு மூன்றாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கோபி (30). இவரது மனைவி சத்யா (28). இவருக்கு கடந்த 18-ம் தேதி வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் கோபி அவரை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இதற்கிடையே கடந்த 19-ம் தேதி சத்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தைகள் வார்டில் தாயும் சேயும் இருந்தனர். சத்யாவை குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக வேறு வார்டுக்கு மாற்றி உள்ளனர். அப்போது அருகில் இருந்த பெண் ஒருவர் இந்த சம்பவத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு குழந்தையை கடத்தி சென்றார். இதையடுத்து திருப்பூர் தெற்கு போலீஸ் உதவி ஆணையர் கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் பிச்சையா தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகளை வெளியிட்டும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். இந்த நிலையில் இன்று கா...

திருப்பூர் குழந்தை கடத்தல் விசாரணையில் ஐந்து தனிப்படைகள்.... சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு போலீசார் தேடுதல் வேட்டை

Image
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 7 நாளே ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருப்பூர் செரங்காடு மூன்றாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கோபி (30). இவரது மனைவி சத்யா (28). இவருக்கு கடந்த 18-ம் தேதி வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் கோபி அவரை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இதற்கிடையே கடந்த 19-ம் தேதி சத்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.  இந்நிலையில் குழந்தைகள் வார்டில் தாயும் சேயும் இருந்தனர். இருவரையும் கோபி மற்றும் உறவினர்கள் கவனித்து வந்தனர். மாலை கோபி வெளியே சென்று விட்டார். உறவினர்களும் அந்த பகுதியில் இல்லை. சத்யாவும் குழந்தையும் இருந்துள்ளனர்.  சத்யாவை வேறு வார்டுக்கு மாற்றி உள்ளனர். அப்போது அருகில் இருந்த பெண் ஒருவர் குழந்தையை பார்த்துக் கொள்வதாக கூறி வாங்கி உள்ளார். பின்னர் அவர் வெளியே செல்வதாகவும் சத்யாவின் மாமியாரிடம் குழந்தையை கொடுத்துவிட்டதாக தெரிவித்தார். இதில் சந்தேகமடைந்த சத்யா உள்ளே சென்று பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இத...

பவானி ஆற்றில் பரிசலில் வந்த பண்ணாரி அம்மன்... பொதுமக்கள் திரண்டு சாமிதரிசனம்

Image
 ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன், சருகுமாரியம்மன் சப்பரத்தில் எழுந்தருளி பரிசல் மூலம் பவானி ஆற்றை கடந்த திருவீதி உலா நடைபெற்றது.  ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை அடுத்த, பண்ணாரியில்  பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோவில் குண்டம் திரு விழா வெகு விமர்சியாக நடைபெற உள்ளது. குண்டம் திருவிழாவை யொட்டி,சப்பரத்தில் எழுந்தருளியு ள்ள ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன். சருகு மாரியம்மன் சப்பரம், கடந்த 21ம் தேதி முதல் சிக்கரசம்பாளையம், புதூர், அக்கரை நெகமம் புதூர்,வெள்ளியம்பாளையம், கொத்தமங்கலம், தொட்டம்பாளையம் வழியாக இக்கரை தத்தப் பள்ளிகிராமத்தை வந்தடைந்தது.  4வது நாளான இன்று.இக்கரைத்தத்தப்பள்ளியில் இருந்து, பரிசல் மூலம் பவானி ஆற்றை கடந்து. அக்கரைதத்தப்பள்ளி கிராமத்தை வந்தடைந்தது. இரவு இக்கிராமத்தில் தங்கி இருக்கும்.  5வது நாளான நாளை இக்கிராமத்தில் திருவீதி உலா முடிந்து, நாளை இரவு சத்தியமங்கலம் வந்தடைய உள்ளது. பரிசலில் வந்த பண்ணாரி அம்மன், சருகுமாரி அம்மனை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

மது போதையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு.!

Image
  தூத்துக்குடியில் மது போதையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.  தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரி மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ண ராஜா (39). இவர் தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழக புறநகர் டிப்போவில் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவர் 22-ந்தேதி இரவு தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு பஸ்சை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது இதை அறிந்த பயணிகள் அரசு போக்குவரத்து கழக அதிகாரியிடம் செல்போனில் புகார் அளித்தனர். உடனே அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ராமகிருஷ்ண ராஜா ஓட்டிச் சென்ற பஸ்சை, புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் அருகே நிறுத்தி பயணிகளை வேறு பஸ்சில் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ராமகிருஷ்ண ராஜா மீது புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் டிப்போ மேனேஜர் மாடசாமி புகார் அளித்தார். அதன்பேரில் ராமகிருஷ்ண ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலாளர் தகவல் தெரிவித்தார்.

குடிபோதையில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுனர்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்! - நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை.!

Image
  தூத்துக்குடியில் குடி போதையில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுனரால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் விபத்தின்றி உயிர் தப்பினர். தூத்துக்குடியிலிருந்து இன்றிரவு 7.40 மணியளவில் மதுரைக்கு புறப்பட்ட அரசுப் பேருந்தில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் பேருந்து தாறுமாறாக ஓடியதை கண்ட பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்த பயணிகள், பேருந்தை பாதியில் நிறுத்தி ஓட்டுநருடன் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர். பயணிகளின் எதிர்ப்பால் நடத்துனர், டிரைவரிடம் சென்று பேசியுள்ளார்.அப்போது டிரைவர் மிதமிஞ்சிய குடிபோதையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.  இதனையடுத்து புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் அருகே பேருந்து நிறுத்தப்பட்டு உடனடியாக பணிமனை மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், பயணிகள் அனைவரும் வேறு பேருந்தில் பத்திரமாக ஏற்றி அனுப்பப்பட்டனர். குடிபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுனர் மீது கடும் நடவடிக்கை எடுக்க பயணிகள் வேண்டுகோள் விடுத்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜயாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் நிகழ்ச்சி

Image
திருப்பூர் விஜயாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.  விழாவிற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஆர்.மீனா தலைமை தாங்கினார். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரேமலதா முன்னிலை வகித்தார்.  கல்வியாளர் வெங்கட் ராஜா, வழக்கறிஞர் மோகன், 3- மன்றத் தலைவர் சி. கோவிந்தசாமி, கவுன்சிலர் ஜெயசுதா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். விழாவில் 1 வகுப்பு முதல் 3-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு ஆடல், பாடல், கதை, கணித விளையாட்டு, சொல்லட்டை மூலம் வாசித்தல் (தமிழ்/ ஆங்கிலம்) போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.  விழாவில் எஸ்.எம்.சி. உறுப்பினர்கள் உதயா,ராமன்,  லட்சுமி, தெய்வானை, அரியநாச்சி, மதன், கவிதா, ராசாத்தி, சாந்தி உள்ளிட்ட மற்றும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் என்னும் எழுத்தும் திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது மேலும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மகளை காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்... நடுரோட்டில் மருமகனை வெட்டிச்சாய்த்த மாமனார்... வைரலாகும் பரபரப்பு வீடியோ

Image
கிருஷ்ணகிரி மாவட்டtத்தில் உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 27).  இவர் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார்.  ஜெகன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கிருஷ்ணகிரி,  அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சங்கரின் மகள் சரண்யாவை    காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது  காதல் திருமணம்  பெற்றோருக்கு பிடிக்கவில்லை. அதனால் மிகவும் வருத்தத்தில் இருந்தனர் இப்படி இருக்கும் போது, இன்று மதியம் ஜெகன் கிட்டம்பட்டியில் இருந்து  டேம் ரோடு பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த ஜெகனின் மாமனாரான சங்கர் மற்றும் அவரது உறவினர்கள் ஜெகனை தடுத்தனர். அவரை தாக்கி கீழே தள்ளி மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவனது கழுத்தை  அறுத்தனர். மேலும் கீழே கிடக்கும் ஜெகனை தாறுமாறாக கத்தியில் வெட்டினார்கள். இதை அந்த வழியே சென்றவர்கள் வீடியோ பதிவு செய்தனர். வெட்டுக்காயம் பட்ட ஜெகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போத...

தேர்தல் வாக்குறுதியான பணிநிரந்தர அறிவிப்பு பட்ஜெட்டில் நிறைவேறவில்லை. பகுதிநேர ஆசிரியர்கள் அதிருப்தி...

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், பகுதி நேர ஆசிரியர் ஒருவர் நமக்கு அனுப்பிய கடிதம் இது... தமிழக அரசின் பார்வைக்காக வெளியிடப்படுகிறது.   அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் கடந்த 2012 மார்ச் மாதம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் சுமார் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடங்களை இவர்கள் பயிற்றுவிக்கிறார்கள். இவர்கள் தினமும் மூன்று மணி நேரம், வாரத்திற்கு மூன்று அரை நாட்கள் வீதம், மாதம் 12 அரை நாட்கள் மட்டுமே இவர்களது பணி. தொடக்கத்தில் ரூ.5,000 சம்பளமாக வழங்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு தேர்ல் நேரத்தின்போதும் முறையே ரூ.7,000, ரூ.7,700 என தற்போது ரூ.10.000 மட்டுமே ஊதியமாக பெற்று வருகிறார்கள். பலர் இறந்ததாலும், ஓய்வுபெற்றுவிட்டதாலும் சுமார் 12,000 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இப்போது குறைந்த ஊதியமாக இருந்தாலும், எதிர்காலத்தில் எப்படியும் அரசு தங்களை பணி நிரந்தரம் செய்து விடும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.  அனைவருக்கும் கல்...

திருப்பூரில் அமமுக நிர்வாகிகள் கூட்டம்...முன்னாள் மேயர் அ.விசாலாட்சி தலைமையில் நடந்தது

Image
 திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக    கொங்கு நகர் பகுதி கழகத்தின் சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்  நடைபெற்றது.  திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி சிறப்புரையாற்றி அடையாள அட்டைகளை வழங்கினார். இந்த கூட்டத்தில் புல்லட் ரவி, இறை ஆர். வெங்கடேஷ், முத்துக்குட்டி,  ஜான் பிரான்ஸ் வா, பாலகிருஷ்ணன், காட்டன் சக்திவேல், பழனிச்சாமி, மாபு பாஷா, , திலகவதி, சாகுல் அமீது, சுரேஷ் ராஜ், பச்சமுத்து, பகுதி செயலாளர்கள் சிவசக்தி, கந்தசாமி, எக்.முருகன், ராஜாங்கம், ஜெகதீஷ், சிவக்குமார், ஹைதர் அலி, சதீஷ், பாலு, புல்லட் ராஜா, தங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குப்பை வண்டியில் சென்று பொதுமக்கள் குறை கேட்ட திருப்பூர் மாநகராட்சி மண்டல தலைவர் கோவிந்தராஜ்

Image
திருப்பூர் மாநகராட்சியின் 2 வது மண்டல தலைவர் கோவிந்தராஜ் 32 வது வார்டுக்குட்பட்ட டிபிஆர் காலனி பகுதியில் வீடுகளுக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் குறை கேட்டார்.  அப்போது டிபிஆர் காலனி, எம்.கே.ஜி.நகர், ஆதி திராவிடர் காலனி ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் குறை கேட்டார். பொதுமக்களிடம் மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பைகளை பிரித்து வழங்க பொதுமக்களை அறிவுறுத்தினார். வீட்டு குடிநீர் இணைப்பு கேட்ட பொது மக்களிடம் குடிநீர் இணைப்பு வழங்கிட உறுதி அளித்தார்.  அங்குள்ள காலி இடத்தில் சமுதாய கூடம் கட்டிட ரூ.25 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் அவர் ஆதி திராவிடர் காலனி, எம்.கே.ஜி நகர், டி. பி.ஆர் காலனி பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பிரச்சினைகளை கேட்டறிந்தார். அப்போது மூன்று சக்கர குப்பை சேகரிக்கும் வாகனத்தில் சென்று குப்பைகளை பெற்றுக் கொண்டே பொதுமக்களிடம் குறை கேட்டார். வாரம் இருமுறை சாக்கடை கால்வாய்களை தூய்மை செய்யவும் மாநகராட்சி பணியாளர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே படம் திருப்பூரில் ரீலிஸ் ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பில் கொண்டாட்டம்

Image
 தருப்பூர் உஷா திரையரங்குகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான கண்ணை நம்பாதே என்ற திரைபடத்தின் முதல் காலை காட்சி வெளியீட்டு விழா ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற தலைவர் என்எஸ்கே சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.  சிறப்பு விருந்தினராக அமைச்சர்கள் வெள்ளக்கோயில் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், மண்டல தலைவர் பத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். படத்தை காண வந்த ரசிகர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இனிப்பு வழங்கப்பட்டது. விழாவிற்கு ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர்கள் நற்பணி மன்ற நிர்வாகிகள் சஷ்டி விஜயகுமார், செந்தூர் ஆனந்த், தம்பி குருபரணி, பாலகுமார் , ஆட்டோ முருகன், சங்கர், மனோஜ், கவின் குமார் , சூர்யா பிரகாஷ் மணிமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

மோகன்ஸ் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான பேட்மிண்டன் போட்டி... மாணவ மாணவிகள் அசத்தல்

Image
திருப்பூர் அம்மாபாளையத்தில் உள்ள மோகன்ஸ் பேட்மிண்டன் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான மாணவ,மாணவிகளுக்கான  பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது . வெற்றி பெற்ற அனைவருக்கும் திருப்பூர் பேட்மிண்டன் செயலாளர் மோகன் குமார் பரிசுகள் வழங்கினார்.  சிறப்பு விருந்தினராக டி.எம்.எப் மருத்துவமனை டாக்டர் ஜெயராமன் கலந்து கொண்டார். இதில்  11 வயதுக்குட்பட்ட மாணவிகள் பிரிவில் உடுமலைப்பேட்டை மாணவி ஷியாமாஸ்ரீ முதலிடமும், கிட்ஸ் கிளப் சர்வதேச பள்ளியில் பயிலும்,மோகன் அகாடமி மாணவி பவிஷ்னா இரண்டாம் இடம் பிடித்தார்கள். 13 வயது மாணவிகளுக்கான பிரிவிலும் ஷியாமா ஸ்ரீ முதலிடம், தனுஸ்ரீ இரண்டாம் இடமும் பிடித்தார்கள். 15 வயது மாணவிகளுக்கான பிரிவில் ஸ்மிதா ஹசினி முதலிடமும், ஜனனி இரண்டாம் இடம் பிடித்தார்கள். 17 வயது மாணவிகளுக்கான பிரிவில் சங்கமித்தரா  முதலிடமும், ஸ்மிதா ஹாசினி இரண்டாம் இடமும் பிடித்தார்கள், 9 வயது மாணவியருக்கான பிரிவில் நிருல்யா முதலிடமும், சாஸ்னிகா இரண்டாம் இடமும் பிடித்தார்கள். 9 வயது மாணவர்கள் பிரிவில் வீரனேஷ் ஜெயின் முதலிடமும் ஆகிர் இரண்டாம் இடமும் பிடித்தார்கள். 11 வயது மாணவர்களுக்கான பிரி...

காவல் கட்டுப்பாட்டு அறையில் இந்தி மொழி தெரிந்த காவலர் நியமனம் - வடமாநில தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் தூத்துக்குடி மாவட்ட காவல் துறை நடவடிக்கை.!

Image
  தூத்துக்குடி மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் காவல் கட்டுப்பாட்டு அறையில் இந்தி மொழி தெரிந்த காவலரை நியமனம் செய்து  தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சிறப்பான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் இந்தி மொழி தெரிந்த காவலர் திரு. செந்தட்டி என்பவரை நியமனம் செய்து 82493 31660 என்ற புதிய அலைபேசி எண்ணையும் அறிமுகம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ல். பாலாஜி சரவணன் இன்று (09.03.2023) உத்தரவிட்டுள்ளார். வடமாநில தொழிலாளர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலோ குறைகள் இருந்தாலோ மேற்படி செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் காவல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள காவலர் இந்தி மொழியிலேயே பேசி பிரச்சனைகள் என்ன என்பதை கேட்டறிந்து கொண்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையம் மற்றம் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பார். சம்மந்தப்பட்ட காவல்ஹ நிலைய போலீசார் அழைப்பு விடுத்த வடமாநில தொழிலாளர் இருக்குமிடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று நடவடிக்கை எடுப்பார்கள் எனவும், வடமாநில தொழிலா...

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மகளிர் தின கொண்டாட்டம்... விளையாட்டுப்போட்டிகளில் பெண்கள் பங்கேற்பு

Image
திருப்பூர் அதிமுகவினர்  மகளிர் தினத்தை முன்னிட்டும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டும்,  திருப்பூரில் விளையாட்டு போட்டிகளை நடத்தி, கேக் வெட்டி, பெண்களுக்கு அசைவ விருந்து  கொடுத்து கோலாகலமாக கொண்டாடினார்கள். உலகம் முழுக்க மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.  இதில் திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில கே.எஸ்.சி., ஸ்கூல் ரோட்டில்உள்ள  அந்த கட்சி அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதிமுக கட்சியை சேர்ந்த மகளிரணி நிர்வாகிகள் உள்பட 300 க்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்..  அதிமுக மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பழனிசாமி, திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார், திருப்பூர் தெற்கு முன்னாள் எம்.எல்.ஏ., சு.குணசேகரன் ஆகியோர் தலைமையில் மெகா சைஸ் கேக் வெட்டி வழங்கப்பட்டது.   கட்சிஅலுவலகத்தில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்ற்து. கயிறு இழுத்தல், லெமன் ஸ்பூன், லக்கி கார்னர், பலூன் உடைக்கும் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ...

வதந்திகளால் ஏற்பட்ட அச்சத்தை நீக்கி புலம் பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்க!... எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., அறிக்கை

Image
அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், பல்லடம் எம்.எல்.ஏ., வுமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்கபடுவதாக ஏற்பட்ட வதந்தியை தொடர்ந்து அம்மாநில தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக பல தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குறிப்பாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பிஹார், உத்திர பிரதேசம். ஜார்கண்ட் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பல்வேறு துறைகளில் தொழிலாளர்களாக பாணிபுரிந்து வருகின்றனர்.பல்லாண்டுகளாக இவர்கள் இங்கே பணியாற்றியும் ஒரு சிலர் வளர்ந்து இங்கே தொழில் நிறுவனங்களை துவங்கியும் அமைதியான முறையில் வாழ்ந்து வரும் போது இப்போது ஏற்பட்டுள்ள இந்த அசாத்திய சூழ்நிலை துரதிர்ஷ்டவிதமானது. கடந்த எடப்பாடியார் தலைமையிலான அதிமுக ஆட்சியில் கொரோனா கால ஊரடங்கின் போது புலம் பெயர் தொழிலாளர்களின் சிரமத்தினை கருத்தில் கொண்டு அவர்கள் இருக்கும் இடம் தேடி அத்தியாவசிய பொருட்கள் வழங்கபட்டது மேலும் தங்களின் சொந்த ஊர் திரும்ப முடியாம...

இந்திராசுந்தரம் தொண்டுநிறுவனம் சார்பில் 26 சாதனை பெண்களுக்கு விருது

Image
திருப்பூர்  இந்திரா சுந்தரம்  தொண்டு நிறுவனம் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தொடர்ந்து நான்காம் ஆண்டாக மகா திறன் மங்கை என்ற தலைப்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி ராயபுரத்தில் உள்ள எம்.கே.எம் ரிச் ஹோட்டலில் நடைபெற்றது.  முன்னதாக மணியம் எலக்ட்ரிக்கல்ஸ்  சுந்தரம்  அவர்களின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கு ஏற்றினர். இந்நிகழ்சியை திருப்பூர்  இந்திரா சுந்தரம்  தொண்டு நிறுவனத்தின் நிறுவன தலைவர்  இந்திரா சுந்தரம்  தலைமையேற்று நடத்தினார். இதில் திருப்பூர் தெற்கு காவல் துணை ஆணையர் வனிதா, திருப்பூர் மாவட்டம் அவிநாசி கோட்ட கலால் அலுவலர் ராகவி, பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலைக் கல்லூரி ஆங்கிலத்துறை தலைவர் கிருஷ்ணவேணி ஆகியோர் தலைமை விருந்தினர்களாகவும், கிட்ஸ் கிளப் பள்ளி குழும தலைவர் மோகன் கார்த்திக், நடிகர் அருண் குமார் ராஜன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இரத்த தானம், தாய்ப்பால் தானம், வாழ்நாள் சாதனைகள், விளையாட்டு, பறை இசை போன்ற பல துறைகளில் சாதனைபடைத்த...

எடப்பாடியார் தலைமையில் மீண்டும் நல்லாட்சி மலர அயராது பாடுபட வேண்டும்... முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேச்சு

Image
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு  நலத்திட்ட உதவிகள் வழங்கி பொதுக்கூட்டம்  கோல்டன் நகர் பகுதி கழகம் அம்பேத்கர் நகர் ரயில்வே கேட் அருகில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,முன்னாள் அமைச்சர்,பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர்,கழகத் தேர்தல் பிரிவு செயலாளர்,திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் முனைவர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன், தலைமை கழக பேச்சாளர் கோவை புரட்சித்தம்பி ஆகியோர் சிறப்புரையாற்றினர். திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் ஒன்றிய செயலாளருமான கே.என்.விஜயகுமார்,   முன்னாள் அமைச்சரும் கழக அமைப்புச்செயலாளரும், பல்லடம் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கழக அமைப்புச் செயலாளருமான சி.சிவசாமி, திருப்பூர் தெற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளருமான சு.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோல்டன் நகர் பகுதி கழக செயலாளர் ஹரிஹரசுதன் தலைமை தாங்கினார்.  இந்த கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் து...

கச்சத்தீவு திருவிழா நிறைவு... ராமேஸ்வரம் திரும்பிய பயணிகள்

Image
 *கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு சென்ற திரு பயணிகள் திருப்பயத்தை முடித்துவிட்டு மீண்டும் ராமேஸ்வரம் துறைமுகம் வந்தடைந்தனர் இலங்கை இந்தியா இருநாட்டு மக்களின் நல்லுறவை ஏற்படுத்தும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இந்த ஆண்டு 2023 மார்ச் 3 மற்றும் 4 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது  நடைபெற்ற திருவிழாவில் தமிழகத்திலிருந்து 2408 பக்தர்கள் 72 படகுகள் மூலமாக கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருப்பயத்திற்கு சென்றனர் கோவிலில் நேற்று பிப்ரவரி 3ஆம் தேதி சிறப்பு திருப்பலி மற்றும் சிலுவைப்பாதை தேர்பவனி நடைபெற்றது அதனை தொடர்ந்து இன்று காலை நடைபெற்ற சிறப்பு திருப்பல்லியில் ஏராளமான இலங்கை இந்திய பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர் அதனை தொடர்ந்து விழா நிறைவு பெற்றது  வந்திருந்த இலங்கை இந்திய பக்தர்கள் அனைவருக்கும் இலங்கை அரசு சார்பில் உணவுகள் வழங்கப்பட்டது அதன் பின் பல்வேறு கட்ட சோதனைக்கு பின்னர் கச்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்ட இலங்கை பக்தர்களும் இந்திய பக்தர்களும் கச்சத்தீீவில் இருந்து புறப்பட்டனர்  இலங்கையில் இருந்து இந்தியா புறப்பட்ட கட்சாதீவு ...