Posts

Showing posts from August, 2024

சூலூர் நகர திமுக சார்பில் பொது உறுப்பினர் கூட்டம் கோவை எம்பி தெற்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு

Image
சூலூர் நகர திமுக சார்பில் பொது  உறுப்பினர் கூட்டம் சூலூர் எஸ். ஆர்  எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்களவை உறுப்பினர் கணபதி ராஜ்குமார் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார் கோயமுத்தூர் தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் முன்னிலையில் நடைபெற்ற நகர பொது உறுப்பினர் கூட்டத்தில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிகப்படியான வாக்குகளை பெற்ற பூத் நிர்வாகிகளுக்கு ரொக்க பரிசம், நினைவு பரிசு வழங்கப்பட்டது . தொடர்ந்து கழக உறுப்பினர்களின் இல்லங்களில் ஏற்பட்ட மறைவுக்கும்,  கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்த குடும்பத்தினருக்கும் கேரளாவில் மழை வெள்ளத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு நன்றியறிவிப்பு மற்றும் வாழ்த்து  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டம் நடைபெற்றது. நகர அவை தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகர செயலாளர் கௌதமன் வரவேற்புரையாற்றினார் சூலூர் பேரூராட்சி தமிழ்நாட்டின் முதன்மை பேரூராட்சியாக விருது பெற்றதற்கு பேரூராட்சித் தலைவர் தேவி மன்னவனுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு சிறப...

முன்னாள் முதல்வர், எடப்பாடி கே.பழனிச்சாமி பண்ணாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம்.

Image
ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலத்தில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற அருள்மிகு, பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில், சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வரு மான,எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று குடும்பத்தாருடன் சாமி தரிசனம் செய்தார்.கோவில் நிர்வாகி கள் அவரை வரவேற்று, சாமி பிரசாதங்கள் வழங்கினர். பின்னர் கோவில் பணியாளர்கள் அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.  

மயிலாடுதுறை ஆர்எம்எஸ் தபால் நிலையத்தை மீட்டெடுக்க எம்பி சுதா துரித நடவடிக்கை திருச்சியில் ரயில்வே துறை உயர் அதிகாரிகளுடன் சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் நேரில் மனு

Image
மயிலாடுதுறை ஆர்எம்எஸ் தபால் நிலையத்தை மீட்டெடுக்க எம்பி சுதா துரித நடவடிக்கை திருச்சியில் ரயில்வே துறை உயர் அதிகாரிகளுடன் சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் நேரில் பேச்சுவார்த்தை  பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர். R. சுதா அவர்கள் திருச்சி ரயில்வே கோட்ட பொது மேலாளர் DRM அவர்களிடம், மயிலாடுதுறை ஆர் எம் எஸ் தபால் நிலையத்திற்கு இடம் ஒதுக்குவது குறித்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென்று தொலைபேசியில் பேசியதுடன், சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் அவர்களையும் தொழிற்சங்க நிர்வாகிகளையும் உடனடியாக திருச்சிக்குச் சென்று ரயில்வே துறை உயர் அதிகாரிகளை சந்திக்க அறிவுறுத்தினார். அதனை அடுத்து திருச்சி கோட்ட வணிக மேலாளர் மோகனப்பிரியா அவர்களிடம், திருச்சி கோட்ட ஒருங்கிணைந்த பொறியாளர் நந்திலால் அவர்களிடமும் நேரில் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நூறு ஆண்டுகளாக இயங்கி வரும் ஆர் எம் எஸ் தபால் நிலைய இட பிரச்சினை குறித்து திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்திற்கு நேரில் சென்று எடுத்து கூறி சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் கோரிக்கையை முன் வைத்தார். ரயில்வேதுறை அதிகாரிகளும் மயிலாடுதுறையில் ஆர் எம் ...

சூலூர் ஒன்றிய தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் சூலூர் எம்எல்ஏவுக்கு விநாயகர் சதுர்த்தி விழா அழைப்பிதழ்

Image
சூலூர் ஒன்றிய தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பாக வரும் 9ம் தேதி சூலூரில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன பொது கூட்டத்திற்கான அழைப்பிதழை சூலூர் தொகுதி எம்எல்ஏ கந்தசாமி அவர்களுக்கு தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார், வழக்கறிஞர் ரவீந்திரன், மாவட்ட இணை செயலாளர் நாகராஜ் மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர் கிருஷ்ணமாச்சாரி, ஒன்றிய செயலாளர் மோகன் ஆகியோர் சதுர்த்தி அழைப்பிதழை வழங்கி நிகழ்ச்சிக்கு வர அழைப்பு விடுத்தார்கள் அழைப்பை ஏற்று வருவதாக உறுதியளித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொது மக்கள் குறை தீர்க்கும் முகாம் : மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்று கொண்டனர்

Image
 தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொது மக்கள் குறை தீர்க்கும் முகாம் : மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்று கொண்டனர்    தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.  தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வாரம் தோறும் பொதுமக்களின் கோாிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மண்டல வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று தெற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தலைமை வகித்து, மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்டனர். உடன் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறையில் 100 ஆண்டுகள் பழமையான ஆர்.எம்.எஸ் தபால் துறைக்கு உரிய இடம் வழங்க ரயில்வே துறைக்கு சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் கோரிக்கை

Image
*மயிலாடுதுறையில் 100 ஆண்டுகள் பழமையான ஆர்.எம்.எஸ் தபால் துறைக்கு உரிய இடம் வழங்க ரயில்வே துறைக்கு சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் கோரிக்கை!*  மயிலாடுதுறை இரயில் நிலையைத்தில் சுமார் 100 ஆண்டுகளாக மயிலாடுதுறை RMS இயங்கி வருவதை அனைவரும் அறிவோம். இந்த அலுவலகத்தினால் பொது மக்கள் எண்ணற்ற பயன் அடைந்து வருகின்றனர். தற்போது மயிலாடுதுறையி இரயில் நிலையத்தில் விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக FOB எனப்படும் Foot over Bridge RMS அலுவலகத்தில் ஒரு பாதியில் அமைய இருப்பதாகக் கூறி, அப்பகுதியை காலி செய்து தருமாறு இரயில்வே துறை கேட்டுக்கொண்டது. மேலும் இதற்கு மாற்று இடம் வழங்குகிறோம் என்று இரயில்வே துறையினர் உறுதி அளித்ததன் பேரில் RMSன் ஒரு பகுதியை காலி செய்து கொடுத்தார் கள், அந்த பகுதிக்கு மாற்றாக இரயில்வே Quartersல் 229 என்ற கட்டிடத்தை தற்காலிகமாக இரண்டு மாத காலத்திற்கு கொடுத்தனர்(அந்த கட்டிடமும் RMS அலுவலகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்க போதுமானதாக இல்லை). இதன் தொடர்ச்சியாக முழு கட்டிடத்தையும் காலி செய்யுமாறு கூறுகின்றனர், ஆனால் இரயில்வே எல்லையில் வேறு மாற்று இடம் கட்டி தருவத...

சென்னை ஆவடி மாநகராட்சி ஆணையரிடம் தமிழ்நாடு இந்து சேவா சங்கத்தின் மாநில தலைவர் ஆவடி ஸ்டாலின் புகார் மனு

Image
சென்னை ஆவடி மாநகராட்சி ஆணையருக்கு தமிழ்நாடு இந்து சேவா சங்கத்தின் மாநில தலைவர் ஆவடி ஸ்டாலின் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார் அதில் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட நந்தவன மேட்டூர் பகுதியில் ஸ்ரீ வினை தீர்த்த வினாயகர் ஆலயம் அமைந்துள்ளது ஆலயத்தின் அருகாமையில் குப்பைகளை கொட்டி மிகவும் மோசமான நிலை உருவாகி வருகிறது . தின திடக்கழிவு வரி வசூல் செய்தும் வீடுகளில் இருந்து குப்பைகளை எடுக்காமல் அப்பகுதி மக்கள் குப்பைகளை கொண்டு வந்து கோவில் அருகாமையில் கொட்டுகின்றனர் அப்பகுதியில் இருக்கும் தெரு நாய்கள் இந்த குப்பைகளை இழுத்து வந்து கோவிலுக்குள்ளும் , தெருகளிலும் போடுகின்றன மாலை நேரங்களில் அப்பகுதியில் நடமாடும் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அதே போலவே இரண்டாம் படை வீடான ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் விவேகானந்தா பள்ளிக்கூடம் உள்ளது .இதன் அருகாமையிலும் அதிக குப்பைகளை பொதுமக்கள் கொண்டு வந்து கொட்டுகின்றனர் இதே போலவே கோவில்கள் இருக்கும் பகுதிகளில் தொடர்ந்து இந்த செயல் நடந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நோய் தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளதால் மாநகராட்சி நிர்வாக...

மயிலாடுதுறை ஓம் சக்தி மன்ற ஆன்மீக ஊர்வலம் முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் தொடங்கி வைத்தார்

Image
மயிலாடுதுறை *ஓம் சக்தி மன்ற ஆன்மீக ஊர்வலம் முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் தொடங்கி வைத்தார்!*   மயிலாடுதுறை உள்கேணி ஓம் சக்தி வார வழிபாட்டு மன்றத்தின் சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பூரகஞ்சி கலயம் ஏந்தி வரும் ஆன்மீக ஊர்வலம் வார வழிபாட்டு மன்ற நிர்வாகி கௌரிசங்கர் கங்கை ஆறுமுகம் தலைமையில் கிட்டப்பா நகர் பாலம் அருகில் இருந்து தொடங்கியது. நூற்றுக்கணக்கான செவ்வாடை அணிந்த பெண்கள் கஞ்சி கலயம் ஏந்தியும் தீச்சட்டி சுமந்தும் ஊர்வலத்தில் பங்கேற்றார்கள். ஆன்மீக ஊர்வலத்தினை மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் தொடங்கி வைத்தார். உலக நன்மைக்காகவும் மழை வளம் வேண்டியும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் அனைவருக்கும் கிடைத்திட வேண்டும் என்றும் மழை வளம் பெருகி விவசாயம் சிறக்க வேண்டும் என்றும் பிரார்த்தனைகளை முன்வைத்து இப்பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை நகர்மன்ற உறுப்பினர் ஆர்.சபா, சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் உள்பட ஏராளமான ஆன்மீக அன்பர்கள் பங்கேற்றார்கள். ஊர்வலம் கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவில் வழியாக அண்ணா வீதி, பெரியார் ஈவேரா தெரு, மேல ஒத்த சரகு வழி...

2 நாய்களை தூக்கிட்டு கொல்லும் நபர்கள்.. அதிர்ச்சி வீடியோ

Image
 திருப்பூர் அருகே 2 நாய்களை தூக்கிட்டு கொல்லும் நபர்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், விலங்குகள் நல ஆர்வலர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே உள்ள முளையாம்பூண்டி பகுதியில் உள்ள வேப்பமரத்தில் 2 நாய்கள் தூக்கில் தொங்கவிடப்பட்டு கொல்லப்பட்டதாக திருப்பூர் மாவட்ட பிராணிகள் வதை தடுப்புச்சங்கத்தினருக்கு புகார் வந்தது. இத்துடன் அந்த பகுதியில் இரண்டு நாய்களை சிலர் கொடூரமாக தூக்கிலிட்டும், அடித்தே கொல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட பிராணிகள் வதை தடுப்பு சங்க நிர்வாகி நாகராஜ் என்பவர் இதுகுறித்து மூலனூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் மூலனூர் அருகே உள்ள முளையாம்பூண்டி, கோவில்மேட்டுப்புதூரில் உள்ள முத்துசாமி கோவில் பகுதியில் வசிக்கும் கிட்டுச்சாமி என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து, அவரது வளர்ப்பு நாயையும், இன்னொரு தெருநாயையும் மரத்தில் கட்டி தூக்கில் தொங்கவிட்டும், அடித்தே கொன்றதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்....

தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சூலூர் ஒன்றிய விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் மாநில இணை பொது செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது

Image
தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சூலூர் ஒன்றிய விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் பாப்பம்பட்டி பிரிவு அருள்மிகு மகாலட்சுமி அம்மன் கோவிலில் நடைபெற்றது. தலைமை வழக்கறிஞர் விஜயகுமார் மாநில இணை பொதுச் செயலாளர், வரவேற்புரை கணேஷ் மாநகர் மாவட்ட இணைச் செயலாளர், முன்னிலை ஆனந்த் இன்ஜினியர் மாநகர் மாவட்ட துணைத் தலைவர், மாநகர் மாவட்ட பூசாரி பேரவை இணை அமைப்பாளர் சரவணன் மற்றும் மாநகர் மாவட்ட இணை செயலாளர் நகராஜ், மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணமாச்சாரி, இளைஞர் அணி ஒன்றிய அமைப்பாளர் சபரிநாதன், இணை அமைப்பாளர் பிரவீன் குமார் நகர இளைஞரணி அமைப்பாளர் சபரி ஆகியோர் விழா குறித்து கருத்துகளை வழங்கினர் நன்றியுரை லீலா கிருஷ்ணன் ஒன்றிய இணைச் செயலாளர் தெரிவித்தார் இச்செயற்குழுவில் 1) சூலூர் ஒன்றியத்தில் 50 இடத்தில் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்து  சூலூரில் விஜர்சன ஊர்வல பொதுகூட்டம் நடத்தி குளத்தில் கரைப்பது. 2) விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் ஆர்.ஆர் கோபால் தினமலர் வெளியீட்டாளருக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் சூலூர் எம்எல்ஏ கந்தசாமி ஆகியோருக்கும் சிறப...

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர் அறிக்கை

Image
வாசிப்பை முதல்வர் நேசிக்கிறாராம்  ஒரு பத்திரிக்கை தலைப்புச் செய்தி எழுதுகிறது  இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஆயிரத்து 30 நகர்புற நூலகங்கள் .. அதனுடைய நூலகர்கள் இன்னும் கடைசி மட்ட ஊழியர்களாகவே இருக்கிறார்கள்..  அவர்களுடைய சர்வீசுக்கு தகுந்த மாதிரியான அளவு ஊதியம் உயர்த்தப்படவில்லை  நூலகங்களின் தரமும் உயர்த்தப்படவில்லை  எத்தனையோ கோடிகளை எங்கு எங்கோயோ கொண்டு கொட்டுகின்ற தமிழக அரசு  படிப்புக்கும் வாசிப்புக்கும் கிராமத்து வாசகனை ஊக்குவிக்க இதில் கவனம் செலுத்துமா?  இன்றைக்கு எல்லாமே ஆன்லைன் எல்லாமே செல்போன் எல்லாமே எலக்ட்ரானிக் என்றாலும்.. நூலகங்கள் அதன் பங்கை செய்யத்தான் செய்கிறது  நூலகங்களை நாம் கைவிட்டு விட்டோம் என்றால் கிராமத்து சாதாரண ஏழை மக்களை நாம் உயர்த்துவது சாத்தியமே அல்ல  தமிழக முதல்வர் சிந்திப்பாரா? இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார் 

சென்னையில் சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா சுகாதாரத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் கலந்து கொண்டு விருது வழங்கினார்

Image
சென்னை வேல்டெக் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை (24.08.2024) அன்று தமிழக அளவில்  சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது அதில் சுகாதாரத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாண்புமிகு மா. சுப்ரமணியம் கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கு விருது வழங்கினார். செந்தமிழ் நுகர்வோர் விழிப்புணர்வு நல சங்கத்தின் மாவட்ட தலைவர் பி. சையது முகம்மது மீரான் சகோதரர் சனா மாடல் ஸ்கூல் (சிபிஎஸ்சி) பள்ளியின் ஆசிரியர் பி.முகமது ஆசிப் உசேன் தமிழக அளவில் அவரும் ஒருவராக நல்லாசிரியர் விருது பெற்றார் மற்றும் அவரின் சக ஆசிரியருமான முஹம்மது சாலிம் நல்லாசிரியர் விருது பெற்றார்

கள்ளப்பாளையம் ஊராட்சி நிர்வாகம், கோயம்புத்தூர் கேன்சர் புவுண்டேஷன், கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனை இணைந்து நடத்தும் பெண்களுக்கான பரிசோதனை முகாம்

Image
கள்ளப்பாளையம் ஊராட்சி நிர்வாகம், கோயம்புத்தூர் கேன்சர் புவுண்டேஷன், கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனை இணைந்து நடத்தும் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் வெள்ளிக்கிழமை 23/08/2024  அன்று கள்ளப்பாளையம் கிராமத்தில் நடைபெற்றது.  வெளி மருத்துவமனைகளில் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஆறாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை செலவாகும். இந்தப் பரிசோதனை  கள்ளப்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் முற்றிலும் இலவசமாக  நடத்தப் பட்டது. கள்ளப்பாளையம், சின்னக்குயில் பாப்பம்பட்டி, பகுதிகளைச் சேர்ந்த 130 க்கும் மேற்பட்ட பயனாளிகள் இந்தப் பரிசோதனையை மேற்கொண்டு பயனடைந்தனர்.  சமூக ஆர்வலர் பொன்.கார்த்திகேயன் மற்றும் கள்ளப்பாளையம் ஊராட்சியில் தொடர்ந்து 25ஆண்டுகாலமாக மக்கள் பிரதிநிதியாக இருந்துவரும் ஒன்றாவது வார்டு சாதனை உறுப்பினர்  கவிதா கார்த்திகேயன் ஆகியோர் இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை முன்னின்று நடத்தினார்

தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு துணை போவதா ? ரங்கசாமிக்கு புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழக சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன் கண்டனம்

Image
புதுச்சேரி மாணவர்களுக்கு 50% மருத்துவ இடங்களை பெற்று தராமல் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு துணை போவதா ?  ரங்கசாமிக்கு புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழக சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன் கேள்வி? புதுச்சேரி மாணவர்களுக்கு தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெற்று தராமல், மருத்துவம் படிக்க துடிக்கும் மாணவர்களின் கனவில் மண்ணை அள்ளி போட்டு விட்டு தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு துணை போவது ஒரு முதல்வருக்கு அழகல்ல. நம்மை சுற்றியுள்ள மாநிலங்களான தமிழ்நாடு,ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் 50 சதவீத மருத்துவ இடங்களை பெற்றிருக்கிறார்கள் . ஆனால் புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி ஏன் தயங்குகிரார் என்று தெரியவில்லை. இது ரங்கசாமிக்கே வெளிச்சம். மாணவர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர் என்று மக்கள் மத்தியில் பரவலாக பேசும் நிலையில் , அக்கறை இருப்பது போல் நடிக்கிறாரா என்று பேச ஆரம்பித்து விடுவார்கள். ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலில் மக்கள் செல்வாக்கை இழந்த ரங்கசாமி , மாணவர்கள் விஷயத்தில் அவர்களது மருத்துவ கனவை சிதைப்பது போல் நடந்து கொள்வது எதிர்காலத்தில் மாணவர்கள் ,மற்றும் இளைஞர்கள் மத்த...

சூலூர் ஒன்றிய விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலத்திற்கு வருகை தர வேண்டி பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களுக்கு அழைப்பிதழ்

Image
தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் கோவை மாநகர் மாவட்ட சூலூர் ஒன்றிய விநாயகர் சதுர்த்தி விழா அழைப்பிதழை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களுக்கு விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலத்திற்கு வருகை தர வேண்டி  மாநில இணை பொதுச் செயலாளர்  வழக்கறிஞர்.விஜயகுமார்,வழக்கறிஞர்.ரவீந்திரன்,திருஞானசம்பந்தம் கோவை மாநகர் மாவட்ட பூசாரி பேரவை அமைப்பாளர் மற்றும் சிவகுரு மாநகர் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர்,ரங்கசாமி கொங்கு மண்டல இணை அமைப்பாளர் பூசாரி பேரவை, சரவணன் மாநகர் மாவட்ட இணை அமைப்பாளர் ஆகியோர் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கியதோடு விழா சிறக்க ஆசீர்வாதம் பெற்றனர்

கோவை சர்க்கார் சாமக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக மாபெரும் இரத்த தான முகாம்

Image
கோவை சர்க்கார் சாமக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக மாபெரும் இரத்த தான முகாம் அத்திப்பாளையம் ஸ்ரீவாரி விவாக மகாலில் நடைபெற்றது  இதில் ஏ.சி.எச் மாணவர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர் நிகழ்ச்சியில் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் சர்க்கார் சாமக்குளம் வட்டார மருத்துவ அலுவலர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் பொது மக்கள் குறை தீர்க்கும் முகாம் : மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்று கொண்டனர்

Image
  தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.  தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வாரம் தோறும் பொதுமக்களின் கோாிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மண்டல வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தலைமை வகித்து, மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்டனர். உடன் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பூரில் அண்ணாமலை பேட்டி

  பேட்டி வீடியோ

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வலியுறுத்தி புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

Image
புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வலியுறுத்தி புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது  வில்லியனூர் சாலை,ஜவஹர் நகர் சந்திப்பில் உழவர்கரை நகராட்சி மற்றும் பிபிஏ அலுவலகம் எதிரில், கழகத் தலைவர் பேராசிரியர் மு. ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கழக சேர்மன் ஆர்.எல். வெங்கட்டராமன் , பொதுச்செயலாளர் எ .மு.ராஜன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் மாநில நிர்வாகிகள், அணித்தலைவர்கள், மற்றும் கழக உறுப்பினர்கள் 500க்கும்  மேற்பட்டோர்  ஊர்வலமாக சென்று கையில் கோரிக்கை பதாகைகள் கொடிகளுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வலியுறுத்தி கோஷமிட்டு சென்று உழவர்கரை நகராட்சி அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பந்தலில் கலந்து கொண்டனர் மாநில நிர்வாகிகள் உள்ளாட்சி தேர்தலின் அவசியம் குறித்து வலியுறுத்தி பேசினர்.இதில் இறுதியாக பேசிய கழகத் தலைவர் பேராசிரியர் மு. ராமதாஸ் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் மக்களின் அடிப்படை அதிகாரம் முடக்கப்பட்டுள்ளது.  ராஜீவ் காந்தி பிறந்த தினம் அன்று அவர் மக்களுக்கு அதிகா...

இன்றைய கல்வி எவ்வாறு இருக்க வேண்டும்? அரவிந்தன் நீலகண்டன் பேச்சு

Image
 திருப்பூர், அறம் அறக்கட்டளை சார்பில், இன்றைய கல்வி எவ்வாறு இருக்க வேண்டும்? என்ற தலைப்பில் கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பத்திரிகையாளரும் எழுத்தாளருமான அரவிந்தன் நீலகண்டன் கலந்துகொண்டார்.அரவிந்தன் நீலகண்டன் பேசியதாவது… ”நம் பாரத நாடு சுதந்திரமடைந்து செங்கோட்டையில் மூவர்ணக் கொடி பறந்தாலும், மனதளவில் ஆங்கிலேயர்களின் கல்வியே நிறைந்து, அவர்களது குமாஸ்தா கல்வி முறையிலேயே உழன்று, வெளிநாட்டிற்கு சென்று வேலை பெறுவதே லட்சியமாகவும் தாய்நாட்டின் அருமை பெருமைகளை மறந்தும் முழுமையாக அதனைப் பற்றி  அறியாமலும் வாழ்கிறோம்.  கல்வி என்பது கலை, ஞானம், மெய்ஞானம் என்று உலக விஷயங்களையும் இறை தத்துவத்தையும் அறியும் ஒன்றாக இருக்க வேண்டும்.  ஒரு நாட்டின் சரித்திரம் என்பது வாழும் அல்லது தற்போது வாழ்ந்து முடிந்த ஒருவரின் தனிப்பட்ட வாழ்வியலை பற்றி குறிப்பிடும் குறிப்பேடாக இல்லாமல் அந்த நாட்டின் பாராம்பரியத்தையும் பண்பாட்டையும், அதற்கே உரித்தான மண்ணின் மாண்பையும் விவரிக்கும் ஒன்றாக இருக்க வேண்டும்.   ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் புராதன கோவில்களுக்கான ஸ்தல புராணங்கள் யாவு...

திருப்பூர் தடகளத் திருவிழா; வாகை சூடிய வீரர்கள்

Image
திருப்பூர் மாவட்ட அளவிலான தடகளப் போட்டி அவிநாசி அருகிலுள்ள பழங்கரை டீ பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில தடகள சங்கத்தின் வழிகாட்டுதலுடன், திருப்பூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட அளவிலான ஜூனியர் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. அதன் தொடர்ச்சியாக 6வது ஆண்டு மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள சேம்பியன்ஷிப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை, அவிநாசி அருகிலுள்ள, பழங்கரை டீ பப்ளிக் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 1500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 14,16,18 மற்றும் 20 வயதிற்குட்பட்டோர்கள் என நான்கு பிரிவுகளாக ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே 87 வகையான தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டது. முற்றிலும் மின்னணு தொழில்நுட்ப கருவிகள் மூலம் தூரம் மற்றும் நேரம் கணக்கிடப்பட்டது. முன்னதாக நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் மாவட்ட தடகள சங்க தலைவர் சண்முகசுந்தரம் வரவேற்புரை கூறினார். டீ பப்ளிக் பள்ளி குழுமத்தின் சேர்மன் ஈஸ்ட்மேன் சந்திரன் தலைமை வகித்தார். தடகள சங்க மூத்த துணைத் தலைவர் மோகன் கார்த்திக், செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தனர். திருப்பூர் ...

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு டாக்டர்கள் நியமிக்க வேண்டும்... முன்னாள் எம்எல்ஏ ஜெக வீரபாண்டியன் கோரிக்கை

எம்ஆர்ஐ க்கு டாக்டர், நிரந்தர அறுவை சிகிச்சை டாக்டர், மருத்துவ கல்லூரி விரைந்த அமைத்தல் குறித்து சென்னையில் சுகாதாரத்துறை இயக்குனரிடம் முன்னாள் எம்எல்ஏ ஜெக வீரபாண்டியன் நேரில் கோரிக்கை விடுத்தார்.   மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு நிரந்தரமாக அறுவை சிகிச்சை டாக்டர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும்  பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள எம் ஆர் ஐ ஸ்கேன் கடந்த ஓராண்டாக முறையான சேவை இல்லாமல் ரிப்போர்ட் கொடுப்பதற்கு டாக்டர் இன்றி இருப்பதால் மக்களுக்கு பயன்படாமல் உள்ளது. இந்த நிலையை எடுத்துரைத்து விரைந்து ஸ்கேன் டாக்டர் நியமிக்க வேண்டும் என்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என்றும் விரைந்து மயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி அமைத்திட முழு நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்றும் கோரி, தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் ஜெய ராஜமூர்த்தியை நேரில் மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெக வீரபாண்டியன் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார். இதுகுறித்த  மனுவினை அவரிடம் வழங்கினார். மிக முக்கியமான மூன்று கோர...