Posts

கந்துவட்டி சட்டத்தினை மாற்ற வலியுறுத்தி கோவில்பட்டியில் செக் மாலை அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகி.!

Image
தமிழகத்தில் நாளுக்கு நாள் கந்து வட்டி கொடுமையினால் தற்கொலை அதிகரித்து வருவதாகவும், நாள் வட்டி, வார வட்டி, மீட்டர் வட்டி என பல்வேறு கோணங்களில் கந்து வட்டி கும்பல் ஏழை,எளிய மக்களை வாட்டி வதைத்து வருவதாகவும், புரோ நோட் மற்றும் செக் ஆகியவற்றை வைத்து வெவ்வேறு விதங்களில் கடன் பெற்றவர்களை மிரட்டி கந்துவட்டி கும்பல் பணத்தினை பறித்து வருவதாகவும், தமிழகத்தில் கந்து வட்டி கும்பல் நெட்வொர்க் அமைத்து மாபியா கும்பலாக செயல்பட்டு வருவதாகவும், தற்பொழுதுள்ள கந்து வட்டி சட்டம் கந்து வட்டி கும்பல் எளிதில் தப்பித்துக்கொள்ளும் வகையில் இருப்பதால் பொது மக்கள் பாதிக்கப்படும் நிலை இருக்கிறது. எனவே தமிழக அரசு கந்து வட்டி சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும், கந்து வட்டி கும்பல் தப்பித்து விடாத வகையில் கந்து வட்டி சட்டத்தினை கந்து வட்டி வன்கொடுமை தடுப்பு சட்டமாக மாற்ற வேண்டும், கந்து வட்டி கும்பல் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மாவட்ட துணை தலைவர் அய்யலுச்சாமி என்பவர் கழுத்தில் செக் மாலை அணிந்து, கையில் அக்னிச்சட்...

கோவில்பட்டியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Image
கோவில்பட்டி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மாதா கோவில் ரோடு படித்துறை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணைத்தலைவர் தமிழரசன் தலைமை தாங்கினார். மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் விரோத போக்கை கண்டித்தும், பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில வழக்கறிஞர் அணி துணைச்செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின், சி.ஐ.டி.யு. மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட பொது செயலாளர் ராஜசேகரன், எல்.பி.எப். கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் பரமசிவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

சூரிய காந்தி விளைச்சல் பாதிப்பு - விதை நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்

Image
தரமற்ற சூரிய காந்தி விதைகள் காரணமாக விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் சம்பந்தபட்ட விதை நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியினர் சூரியகாந்தி பயிருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  பா.ஜனதா விவசாய அணி மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு, விவசாய அணி சேதுராஜ், இணை பொதுச்செயலாளர் சுரேஷ்குமார், நகர தலைவர் பாலசுப்பிரமணியன் பொதுச்செயலாளர் முனிராஜ், தெற்கு ஒன்றிய தலைவர் அம்மன் மாரிமுத்து, மாவட்ட துணை தலைவர் உமா செல்வி, மாவட்ட விவசாய அணி துணை தலைவர் உத்தண்டுராமன், ஒன்றிய விவசாய அணி தலைவர் ரெங்கசாமி, மாவட்ட மகளிரணி துணை தலைவர் லிங்கேஸ்வரி கருணாநிதி,  உள்பட பலர் கலந்து கொண்டனர்.  தொடர்ந்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவும் வழங்கினர். அந்த மனுவில்  “100 நாள் பயிரான சூரியகாந்தி பயிர்கள் 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. பயிரிட்டு 75 நாட்கள் ஆகியும் சரியான வளர்ச்சி, பூக்கும் திறன் இல்லாமல் பயிர்கள் வாடி வருகின்றன. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்...

ஏப்ரல் 25 முதல் மே 2 வரை 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு..! -தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தகவல்

Image
12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 2ம் தேதி வரை நடைபெறும் எனத் தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் தொடங்க உள்ளதால், செய்முறைத் தேர்வுகளை ஏப்ரல் 25-ம் தேதி முதல் மே 2-ம் தேதிக்குள் நடத்தி முடிக்குமாறு பள்ளிகளுக்கு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் ஜங்ஷன் ஜாகிர் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமம் 9 ஆம் படை வீடு மஹா கும்பாபிஷேக விழா

Image
சேலம் ஜாகிர் அம்மாபாளையம் ஸ்ரீ காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் சேலத்தில் முதல் முறையாக 7 நிலை கருங்கல் ராஜகோபுரம் மற்றும் நூதன விமானங்கள் அமைத்து 164 ஹோம குண்டங்கள் அமைத்து உலகத்தில் முதல் முறையாக 6 கால யாக பூஜையுடன் 108 லட்சுமிகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. 03.04.2022 அன்று அதிகாலை முதல் தொடங்கி தீர்த்தக்குடம் புறப்பாடுடன் தொடங்கி முதல் யாகசாலை, 04.04.2022,05.04.2022, 06.04.2022 புதன் கிழமை 6 கால யாக பூஜைகள் நிறைவுபெற்று காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் மேஷ லக்னத்தில் உலகத்தில் முதல் முறையாக 164 ஹோம குண்டங்களில் 200 வேத விற்பன்னர்களால் 6 கால யாக பூஜையுடன் மஹா கும்பாபிஷேக விழா ஒன்பதாம் படை வீட்டில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு அண்ணக் கொடியேற்றி காலை 7 மணி முதல் இரவு 7 மணி இடைவிடாது அன்னதானங்கள் வழங்கப்படுகிறது. பகல் 12 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ காவடி பழனியாண்டவருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றும்.இரவு 7 மணிக்கு தங்க ரதத்தில் உற்சவர் புறப்பாடு நடைபெறுகிறது. பொதுமக்கள் அனைவரும் திறளாக வந்து கலந்து கொண்டு ஸ்ரீ முருகப் பெருமானின் திருவருளைப் பெற்று செல்லுமாறு பக...

கோபிசெட்டிபாளையம் தனி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை

Image
கோபிசெட்டிபாளையம் தனி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை வலியுறுத்தி அறவழியில் கவன ஈர்ப்பு கையெழுத்து முகாம் நடைபெற்றது. இதில் நம்ம கோபி பவுண்டேஷன் தலைவர் அனூப் தலைமையில் , டாக்டர் பிரபு முன்னிலையில் நடைபெற்றது. இம்முகாமில் கோபி நகராட்சி தலைவர் என்.ஆர்.நாகராஜ்  தங்கள் கையெழுத்தை பதிவு செய்து நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதாக உறுதி அளித்தனர். மேலும் கோபி தோழமை இயக்கங்கள் அரசியல் கட்சிகள் கலந்து கொண்டு தங்களது ஆதரவுகளை பதிவு செய்தனர். Attachments area

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.!- வானிலை ஆய்வு மையம் தகவல்.!

Image
தமிழகத்தில் ஏப்ரல் 1 வரை 3 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்