பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விஞ்ஞான ஏமாற்று வேலை அரங்கேற்றம் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை.!
2021-ல் ரூ.12,110 கோடியை தள்ளுபடி செய்தோம்; இப்போது ரூ. 2,044 கோடி மட்டுமே தள்ளுபடி. 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் உள்ளோருக்கு பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி என தவெக அறிவித்திருந்தது. நிலத்தை அளவிட்டு தராமல், இப்போது பணத்தை அளவுகோலாக வைத்தது மிகப்பெரிய ஏமாற்று வேலை. விவசாயி என்ற முறையில் சொல்கிறேன், விவசாயிகளை ஏமாற்றும் அரசு நிலைத்ததாக சரித்திரம் இல்லை. – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி_