Posts

முதல்வா் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சாத்தான்குளத்தில் சரவணன் எம்.எல்.ஏ நலத்திட்ட உதவிகள் அன்னதானம் வழங்கினாா்.

Image
  தூத்துக்குடி தமிழக வெற்றிக்கழக தலைவரும் முதலமைச்சருமான விஜய் 52வது பிறந்தநாளையொட்டி ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி சாத்தான்குளத்தில் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கேக் வெட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினாா்.  நிகழ்ச்சியில் எஸ்டிஆா் விஜயசீலன் உள்பட பலர் உள்ளனா்.

தூத்துக்குடியில் முதல்வா் விஜய் பிறந்தநாளை யொட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அமைச்சா் ஸ்ரீநாத் வழங்கினாா்.

Image
தூத்துக்குடி தமிழக வெற்றிக்கழக தலைவரும் முதல்வருமான விஜய் 52வது பிறந்தநாளையொட்டி தூது்துக்குடி அரசு மருத்துவகல்லூாி மருத்துவமணையில் பிறந்த 6 குழந்தைகளுக்கு தூத்துக்குடி தவெக பிரமுகா் திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அமைச்சா் ஸ்ரீநாத் அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமணையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தாா். விழாவில் மத்திய மாவட்ட செயலாளர் சாமுவேல்ராஜ், மாவட்ட பொருளாளா் சிவக்குமாா், செயற்குழு உறுப்பினா் சதிஷ்குமாா் மகேஸ்வரன் ஜோசப் ஆனந்த் இளைஞர் அணி சுதாகா் மாணவரணி முருகன் நிா்வாகிகள் நேவிஸ் பாாி மைக்கேல் டைகா் சிவா ரவி பொ்னான்டோ உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தூத்துக்குடியில் முதல்வா் விஜய் பிறந்தநாளையொட்டி 520 பேருக்கு நலத்திட்ட உதவிகளை தவெக மத்திய மாவட்ட செயலாளர் சாமுவேல் ராஜ், வக்கீல் பன்னீர் வழங்கினாா்கள்.

Image
  தூத்துக்குடி தமிழக வெற்றிக்கழக தலைவரும் முதலமைச்சருமான விஜய் 52வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி 50வது வாா்டு அமுதாநகாில் நடைபெற்ற விழாவிற்கு வாா்டு பொறுப்பாளா் வழக்கறிஞா் டாக்டா் பன்னீா் தலைமையின் ஏற்பாட்டில் நிா்வாகிகள் இபி தொழிற்சங்க நிர்வாகி ஆக்னல் சேசுராஜ், வீரமணி, சிவராமன், முனியசாமி,  ராமு, சண்முகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ராஜா வரவேற்புரையாற்றினாா்.  200 மாணவ மாணவிகளுக்கு நோட்புக் பள்ளி சீருடை புத்தகப்பை பெண்கள் 320 பேருக்கு சேலைகள் என 520 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மத்திய மாவட்ட செயலாளர் சாமுவேல்ராஜ், வழக்கறிஞர் டாக்டா் பன்னீா் ஆகியோா் வழங்கினாா்கள். முன்னதாக 10 கிலோ கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.  மாவட்ட செயலாளர் சாமுவேல்ராஜ் பேசுகையில் தமிழகத்தில் தற்போது உள்ள தலைவர்களில் ஒரே தலைவர் தமிழக முதலமைச்சர் விஜய் மட்டும் தான் நல்ல தலைவராக உள்ளார் கடந்த ஐந்து ஆண்டு திமுக ஆட்சியில் தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. எல்லா கட்சியும் தமிழகத்தில் முடிந்து விட்டது இனி ஒரே கட்சி தான் அதுவும் தமிழக வெற்றி கழகம் தான். தமிழகத்தை காப்பாற்ற தமிழக முதல்வர் விஜ...

ஒட்டன்சத்திரத்தில் புதிய துறைமுகம் : சாத்தியக்கூறுகளை ஆராய மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

Image
  “மழை பெய்ஞ்சா ரோடு ஏரியாகும்னு கேள்விப்பட்டிருக்கோம்… ஆனா, துறைமுகமாவே மாறும்னு இப்பதான் பார்க்குறோம்!” – இப்படி ஒரு நூதனமான, அதேசமயம் அதிகாரிகளுக்குச் சுருக் என்று உறைக்கும்படியான புகாரை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி பரபரப்பைக் கிளப்பியுள்ளனர் ஒட்டன்சத்திரம் பகுதி பொதுமக்கள். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம், தங்கச்சியம்மாபட்டி ஊராட்சியில் பிரசித்தி பெற்ற காந்தி காய்கறி சந்தை அமைந்துள்ளது. இதன் முன்பாகச் செல்லும் SNH-381 தேசிய நெடுஞ்சாலையில், மழைக்காலங்களில் 3 முதல் 4 அடி உயரம் வரை தண்ணீர் தேங்குவது காலங்காலமாக நடக்கும் ‘வழக்கமான’ ஒரு திருவிழாவாகவே மாறிவிட்டது. நேற்று பெய்த லேசான மழைக்கே இந்த ரோடு, சுந்தரபாண்டியன் பட பாணியில் கடலாக மாறியுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என அனைவரும் “ரோட்டுல போறோமா… இல்ல ஆத்துல போறோமா?” என்று தெரியாமல் திணறிப் போயுள்ளனர். இப்பிரச்சினை குறித்து ‘நீதியின் கண் சமூக நலக்குழு’ தலைவர் நவீன்குமார் மணிவண்ணன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்திக்கு அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் அதிகாரிகளின் அலட்சியத்தை வெள...

தூத்துக்குடி: விமான நிலையம் அருகே நேற்று அரிதினும் அரிதான ஒரு சூறாவளி.! வானில் இருந்து தரை நோக்கி திடீரெனப் பாய்ந்த இந்த ராட்சத சூறாவறளிக் காற்று: விமான நிலைய மேற்கூரை விழுந்து 6 பேர் படுகாயம்!

Image
  தூத்துக்குடியில் இன்று திடீரென வீசிய பலத்த சூறாவளிக் காற்றில் விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காகப் போடப்பட்டிருந்த தற்காலிகத் தகர மேற்கூரை பறந்து வந்து விழுந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர். தூத்துக்குடி வாகைகுளம் சுங்கச்சாவடி பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை திடீரெனப் பயங்கர வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசியது. அப்போது அந்தப் பகுதியில் அமைந்துள்ள தூத்துக்குடி விமான நிலையப் பணிகளுக்காகத் தற்காலிகமாகப் போடப்பட்டிருந்த தகர வீடுகளின் மேற்கூரைகள், சுங்கச்சாவடியின் மேற்கூரைகள் காற்றின் வேகம் தாங்காமல் திடீரெனப் பெயர்ந்து காற்றில் பறந்து வந்தன. அவை அங்குள்ள 'பீடவுன்' பகுதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மீது விழுந்து விபத்தை ஏற்படுத்தின. இவ்விபத்தில் வடக்கு காலாங்கரையைச் சேர்ந்த சண்முகராஜ் மகன் மோகன்குமார், காலாங்கரையைச் சேர்ந்த முனியசாமி மகன் ஐயப்பன் ஆகிய வெல்டிங் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். மேலும், திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா தருவை எம்எஸ்பி நகரைச் சேர்ந்த தங்கராஜ் மனைவி ஆறுமுகத்தாய், அவரது மகள் ஆகாஷினி மற்றும் நெட்டூர் மாதாக...

கோவில்பட்டியில் அமையும் விமானப் பயிற்சி மையம்; கட்டுமானப் பணிகள் கண்காணிப்புக்கு டெண்டர் அறிவிப்பு வெளியீடு.!

Image
பிளையிங் ட்ரைனிங் ஆர்கனைசேஷன் FT0 கோவில்பட்டி வட்டம் கயத்தாறு பகுதியில் அமைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தோணுகால் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் விமானப் பயிற்சி மையத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை கண்காணிப்பதற்காக தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசின் நிறுவனமான தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம், கோவில்பட்டியில் உருவாகி வரும் விமானப் பயிற்சி அமைப்பு எனப்படும் பிளையிங் டிரெயினிங் ஆர்கனைசேஷன் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட சுயாதீன பொறியாளரை தேர்வு செய்வதற்கான மின்னணு டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, கட்டுமானப் பணிகளின் தரம், தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் திட்ட முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணித்து ஆலோசனை வழங்கும் தகுதியான நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள நிறுவனங்கள் டெண்டர் ஆவணங்களை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு அரசின் மின்னணு டெண்டர் இணையதளங்களில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒப்ப...

போதையில் கார் ஓட்டி விபத்து ‘தூத்துக்குடி சஸ்பெண்ட்’ அதிகாரி கைது.!

Image
  திருப்பூர்: மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத் திய, 'சஸ்பெண்ட்' ஆன, துாத்துக்குடி மாநகராட்சி அதிகாரியை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் அடுத்த மங்கலத்தை சேர்ந்த வர் ஹக்கீம், (52). த.மு.மு.க., முன்னாள் ஒன்றிய செயலர். ஜூன் 10 ம் தேதி இரவு, டூ -வீலரில் ரோட்டை கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த கார் மோதி காயமடைந்தார். காரை ஓட்டி வந்தவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. மங்கலம் போலீசாரின் விசாரணையில், கார் ஓட்டியவர், கோவை மாவட் டம், சூலுாரை சேர்ந்த சர வணகுமார், 49, என்பதும், துாத்துக்குடி மாநகராட்சி துணை கமிஷனராக பணி யாற்றி, மூன்று மாதங்கள் முன் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. விபத்தை ஏற்படுத்திய சரவணகுமாரை போலீசார் கைது செய் தனர். அவருக்கு உடல் நலம் சரியில்லாததால், நீதிமன்ற உத்தரவில், கோவை அரசு மருத்து வமனையில் போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர், தஞ்சாவூர் மாநகராட்சி கமிஷனராக பணியாற்றிய போது, பயோ மைனிங் குப்பை ஒப்பந்தத்தில், அரசுக்கு, 9.57 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.