Posts

"UGC அனுமதியோடு 3 தனியார் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றால் தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு" -மருத்துவ துறை அமைச்சர் அருண்ராஜ்

Image
  "UGC அனுமதியோடு 3 தனியார் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றால், இடஒதுக்கீட்டையும் அரசு நிர்ணயித்த கட்டணத்தையும் பின்பற்றாமல் 460 MBBS இடங்களை ஒதுக்கும் நிலை உருவாகியுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடும் பின்பற்றப்படாது. இதுபோல மாநில அரசு அனுமதியின்றி அந்தஸ்து கிடைத்தால் தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவருவதே ஒரே தீர்வு. இருப்பினும் சட்ட நடவடிக்கை எடுப்போம். மத்திய அரசிடமும் முறையிடுவோம்’’ என மருத்துவ துறை அமைச்சர் அருண்ராஜ் தகவல்

அரசு மருத்துவமனைகளில் ஆன்லைனில் OP சீட்டு முன்பதிவு - Hi அனுப்பினால் OP சீட்டு..!

Image
  அரசு மருத்துவமனைகளில் ஆன்லைனில் OP சீட்டு முன்பதிவு வசதிக்காக `நலம் AI' என்ற Whatsapp Chatbot-ஐ தொடங்கிவைத்தார் அமைச்சர் அருண்ராஜ் 96192 22999 என்ற வாட்ஸப் எண்ணிற்கு Hi என்று அனுப்பினால் OP சீட்டு பெறும் வகையில் வசதி. அதேபோல மருத்துவ பரிந்துரைகள், ஆய்வக அறிக்கைகளையும் இதில் பெற்றுக்கொள்ள முடியும்

இஸ்லாமியர்களாக மதம் மாறியவர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரம் - தமிழக அரசு மேல்முறையீடு.!

Image
  இஸ்லாமியர்களாக மதம் மாறியவர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு.! உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் தமிழக அரசு 2024-ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணையை உயர் நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்திருந்தது

வாகன ஓட்டிகளை அலறவிடும் புதிய தானியங்கி டிரைவிங் டெஸ்ட் - 28 பேரில் ஒருவர் மட்டுமே பாஸ்!

Image
தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) தானியங்கி கணினிமயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வு தளம் நடைமுறைக்கு வந்த ஒரே மாதத்தில், ஒரே ஒரு நபர் மட்டுமே தேர்ச்சி பெற்று ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் (Driving License) பெற விரும்புவோர், முன்னதாக மோட்டார் வாகன ஆய்வாளர் (MVI) முன்னிலையில் வாகனத்தை ஓட்டிக் காட்ட வேண்டும். போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைப்பிடிக்கிறாரா என்பதை ஆய்வாளர் நேரில் பார்த்து உரிமம் வழங்குவது பழைய நடைமுறை. தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் தானியங்கி கணினி மூலம் ஓட்டுநர்களைத் தேர்வு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ், தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 2025 - 2026ஆம் ஆண்டு மோட்டார் வாகனத் திட்டத்தின் கீழ், ₹22.11 லட்சம் மதிப்பீட்டில் தானியங்கி கணினிமயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தளத்தில் வாகனம் ஓட்டும்போது விளிம்புக் கோட்டில் மோதாமல் செல்லுதல், முன்னோக்கிச் செல்லுதல், நிறுத்துதல், சரியான பாதையில் இயக்குதல்...

தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியில் சுற்றித்திாியும் தெருநாய்களிடமிருந்து பொதுமக்களை மாநகராட்சி பாதுகாக்குமா?

Image
  தூத்துக்குடி தமிழக அரசு சாா்பில் தமிழகத்தில் உள்ள வளா்ப்பு பிராணிகளுக்கு என்று சில சட்டங்கள் உண்டு அதன்படி சம்பந்தப்பட்ட மாநகராட்சி நகராட்சி பகுதிகள் உள்பட பல இடங்களில் அதிகாாிகளிடம் அனுமதி பெற்றுதான் வளா்க்க வேண்டும் என்ற நடைமுறை இருந்து வருகிறது. இதை பின்பற்றும் வகையில் மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திாிந்து பல்வேறு விபத்துக்களையும் இடையூறுகளையும் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் கால்நடைகளை அதிகாாிகள் கண்டு பிடித்து கோசோலையில் அடைக்க செய்து சில சமயங்களில் அபதாரங்கள் விதிக்கப்பட்டு கடுமையான கண்டிப்புடன் வழங்கப்பட்டு வருகிறது  அதே வேலையில் மாநகராட்சி பகுதி முழுவதும் எல்லா பகுதிகளிலும் தெருநாய்கள் சொாிப்பிடித்தும் வெறிப்பிடித்தும் நாய்கள்உலா வருகின்றன இந்த நாய்களால் அதிகாலை பொழுது மாா்க்கெட்க்கு செல்லும் வியாபாாிகள் பால் மற்றும் நாளிதழ்கள் கொண்டு செல்பவா்களை பலரையும் விரைட்டி கடிக்கின்றனா். பலா் பாதிக்கப்பட்டுள்ள நிலையை நாம் கண்டறிந்துள்ளோம். அதற்கான தீர்வுகள் முழுமையாக கிைடக்க பெறாத நிலை தொடர்கிறது. பல சமயங்களில் சாலையை கடக்கின்ற போது ஏற்படும் விபத்துக்களாலம் உயிாிழ...

தூத்துக்குடியில் 20 வருட தனி நபர் ஆக்கிரமிப்பு இடம் மீட்பு - உடனடியாக சாலை அமைக்க மேயா் ஜெகன் பொியசாமி உத்தரவு.!

Image
தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான ஆசிாியா் காலனி மெயின் ரோடு ரவுண்டானா அருகில் சுமார் 20 வருடங்களாக தனி நபர் ஒருவர் தொடர்ந்து ஆக்கிரமித்து செய்து வந்தார் மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு அகற்றும் மீண்டும் ஆக்கிரமிப்பாளர் ஆக்கிரமிப்பு செய்து கொள்வார் இது தொடர் கதையாகவே இருந்து வந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பொியசாமி பதவி ஏற்ற பின்பு ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டு இந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என்று மாநகராட்சி சார்பில் விளம்பரப் பலகை வைக்கப்பட்டது ஆனால் மீண்டும் ஆக்கிரமிப்பாளர் ஆக்கிரமிப்பு செய்து வந்ததால் இதுபோல பலமுறை தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து வந்ததையடுத்து கடந்த வாரம் மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு இடத்தை அதிரடியாக அகற்றியது. இந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடம் தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஒரு முடிவு எடுக்கப்பட்டது அதன்படி அந்த இடத்தில் சாலை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து உடனடியாக அதற்கான நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது.  இதனைய...

தூத்துக்குடி பள்ளிக் கல்வித்துறை சார்பாக மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்.!

Image
தூத்துக்குடி பள்ளிக் கல்வித்துறை சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு, அரசு உதவி ெபறும், மெட்ரிக் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்காக வயது வாரியான தடகளப் போட்டிகள் “விளையும் பயிர்” என்ற தலைப்பில் மாவட்டம் முழுவதும் வட்டார வாரியாக 6 மையங்களில் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்காக மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் செயின்ட் மேரிஸ் மகளிா் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.  வட்டார அளவில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவ மாணவிகள் பங்கேற்கும் இப் போட்டிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகள் அனைத்தும் தூத்துக்குடி முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி தலைமையிலும், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்ணதாசன் முன்னிலையிலும் நடைபெற்றன. போட்டிகளை தூத்துக்குடி கல்வி மாவட்ட அலுவலர் முனியசாமி மற்றும் சென்மேரிஸ் கல்லூரி முதல்வர் ஷிபானா ஆகிய இருவரும் துவக்கி வைத்தனர். முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி கூறுகையில் பள்ளி மாணவ மாணவிகளின் உடற்திறன் மற்றும் விளையாட்டுத் திறமைகளை இளம் வயதிலேய கண்டறிந்து அவர்களை ஒலிம்பிக் போட...