Posts

"தூத்துக்குடி அரசு மருத்துவமனை கட்டிடங்களை ஆய்வு செய்ய வேண்டும் -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாநகரக்குழு கோரிக்கை.!

Image
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய கட்டிடங்கள் மற்றும் மருத்துவமனைப் பயன்பாட்டில் உள்ள அறைகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். படங்களில் காணப்படுவது போன்று சில இடங்களில் கதவுகள் சேதமடைந்தும், சுவர்களில் விரிசல்கள் மற்றும் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்தும், கட்டிடப் பராமரிப்பு குறைபாடுகளுடனும் உள்ளன. தினசரி ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்லும் அரசு மருத்துவமனையில், நோயாளிகள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்: மருத்துவமனை வளாகத்தில் உள்ள அனைத்து பழைய கட்டிடங்களையும் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். விரிசல் மற்றும் சேதமடைந்த கட்டிடப் பகுதிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். சேதமடைந்த கதவுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாற்றி அமைக்க வேண்டும். கட்டிடங்களின் பாதுகாப்புத் தன்மை குறித்து துறைசார் அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டும். நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாநகரக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

"தமிழகத்தின் எல்லா நலனையும் பாதுகாத்த ஸ்டாலின் ஆட்சியின் சாதனைகளை எடுத்துக்கூறி அடுத்தக்கட்ட வெற்றிக்கு அனைவரும் உழைக்க வேண்டும் " - தூத்துக்குடியில் செயல்வீரா்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேச்சு.

Image
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் திரேஸ்புரம் பகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம் எட்டையபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட செயலாளரும்  முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது. திரேஸ்புரம் பகுதி செயலாளர் நிர்மல்ராஜ் முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் கட்சியின் வளா்ச்சி அடுத்தகட்டமாக நடைபெறவுள்ள உள்ளாட்சி தோ்தல் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை வழங்கி பேசுகையில் தமிழகத்தின் எல்லா நன்மைகளும் கிடைப்பதற்கு முழுமையாக பணியாற்றிய கலைஞா் ஆட்சி காலம் தொட்டு ஸ்டாலின் ஆட்சி வரை நம்முடைய சாதனைகளை யாரும் மிஞ்ச முடியாது தமிழா்கள் நலன் தமிழ்நாட்டின் உாிமை மக்களுக்கு செய்கின்ற திட்டங்கள் அதை நடைமுறைப்படுத்தி மக்களை சென்றடைதல் என அனைத்து சாதனைகளையும் ஓவ்வொருவரும் தங்களது பகுதியில் எடுத்துக்கூறி தவெக அரசின் மக்கள் விரோத திட்டங்களையும் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலைகளை உருவாக்கி அதன்மூலம் சிறுவா்கள் முதல் முதியவா்கள் வரை ஓவ்வொரு வகையிலும் பாதிப்படைந்துள்ளனா். இதையும் மக்கள் மத்தியில் எடுத்துக்கூறி உள்ளாட்சி தோ்தலில் மு...

"திமுக ஆட்சியின் பக்கிள் ஓடை திட்டங்கள் மூலம் மாநகராட்சி பகுதி மக்களுக்கு நன்மைகள் கிடைத்தது" மேயா் ஜெகன் பொியசாமி தகவல்.!

Image
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளை பாா்வையிட்டு புதிய பணிகளையும் ஆய்வு செய்து வரும் நிலையில் 3ம் மைல் எப்சி ஐ குடோன் பகுதியில் அகலப்படுத்தும் பணியை மாநகராட்சி மேயா் ஜெகன் பொியசாமி பாா்வையிட்டு ஆய்வு செய்த பின் கூறுகையில்:-  "கடந்த 2006 திமுக ஆட்சியின் போது முதலமைச்சராக இருந்த கலைஞா் ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த முக.ஸ்டாலின் தூத்துக்குடி மாநகர மக்களின் நலனை கருதி பக்கிள்ஓடை திட்டத்தை துவக்கி 2008ல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.  வடகிழக்கு பருவமழை காலங்களில் மாநகராட்சி பகுதியில் பெய்யக்கூடிய தொடர் கனமழை காரணமாக  மழை வெள்ளநீர் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பக்கிள் ஓடை வழியாக கடலில் வழிந்தோடி வருகிறது. கடந்த 2015 மற்றும் 2023 வருடங்களில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக மாநகராட்சி பகுதிகளில் இருந்து பக்கிள் ஓடைக்கு பெருமளவிலான மழை நீர் குறைந்த அகலம் உடைய பக்கிள் ஓடைக்கு வர முடியாத நிலையில் குடியிருப்பு பகுதிகளில் உட் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.  இந்நிலையில் 2021ல் பெய்த பெரும் மழையின் காரணமாக தூத்துக்குட...

மாநகரப் பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அள்ளுவதற்கு பணம் கேட்கும் அவல நிலைமை - பொது மக்கள் புகார்.!

Image
  தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளது இந்த வார்டுகளில் தெருக்களில் தேங்கும் குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கு மாநகராட்சி நிர்வாகம் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு அதன்படி தினசரி தெருக்களில் தேங்குகின்ற குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கு ஒப்பந்த வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கு வருகின்ற பணியாளர்கள் பணம் கேட்பதாகவும் பணம் கொடுக்க விட்டால் குப்பைகளை எடுப்பது கிடையாது என்று பல்வேறு தரப்பினர் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் மாநகராட்சி ஆணையருக்கும் புகார் தெரிவித்தனர் ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இந்த நிலையில் ரோச் காலனி 1வது தெருவில் உள்ள குப்பைகளை அள்ளுவதற்கு பணம் கேட்பதாகவும் பணம் கொடுக்காததால் கடந்த மூன்று மாத காலமாக எங்கள் பகுதியில் உள்ள தெருக்களில் தேங்கியுள்ள குப்பைகளை அப்புறப்படுத்தவில்லை இதனால் கொசு தொல்லை அதிகமாகவே உள்ளது குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றது ஏன் குப்பைகளை எடுக்க மறுக்கிறீர்கள் என்று பணியாளர்களிடம் கேட்டபோது நீங்கள் பணம் தரவில்லை அதனால் நாங்கள் எ...

ஆவின் பால் தொடர்ந்து தட்டுப்பாடு பொதுமக்கள் கடும் அவதி.!

Image
  தூத்துக்குடி தமிழ்நாடு அரசின் சார்பில் ஆவின் நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது இதில் ஆவின் பால். ஆவின்நெய். ஆவின் ஐஸ் கிரீம். ஆவின் பிஸ்கட். ஆவின் பன்னீர். ஆவின் பட்டர் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு சொசைட்டி மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஏஜென்ட் மூலமும் பொதுமக்களுக்கு ஆவின் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு திருநெல்வேலி ரெட்டியார்பட்டியிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேட்மா நகரம் அருகே தூத்துக்குடி மாவட்டத்திற்கு என்று பால் மற்றும் ஐஸ் கிரீம் உற்பத்தி செய்வதற்கு தொழிற்சாலை அமைக்கப்பட்டு கடந்த திமுக ஆட்சியில் இறுதியில் தொழிற்சாலை துவக்கப்பட்டது ஆனால் பல மாதங்கள் ஆகியும் இன்று வரை உற்பத்தி செய்வதற்கான சூழ்நிலை உருவாகவில்லை அதற்கான நடவடிக்கையை தற்போது தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. திருநெல்வேலி பால்உற்பத்தி நிலையத்திலிருந்து தூத்துக்குடிக்கு சுமார் 17,000 லிட்டர் வந்து கொண்டிருந்தது. ஆவின் நைஸ். ஆவின் டில...

தூத்துக்குடியில் காங்கிரஸ் சாா்பில் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா.!

Image
  தூத்துக்குடி ராஜீவ் காந்தி 82 வது பிறந்தநாள் தின விழாவை முன்னிட்டு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் சகாயராஜ் சாா்பில் மண்டல தலைவர் ஐசன் சில்வா தலைமையில் பழைய பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு மாவட்ட சோனியா காந்தி பேரவை பொதுச்செயலாளர் நவநீதகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி  பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் கோபால், அசன் பாத், மாவட்ட துணைத் தலைவர்கள் டேவிட் வசந்தகுமார், ஜெபராஜ், பிஜேசி சுரேஷ், ராஜாராம், மாவட்ட செயலாளர்கள் இக்னேசியஸ், அந்தோணி குரூஸ், ஜோனதன் செய்யது அலி, துணை அமைப்பு தலைவர்கள் எஸ்சி துறை பிரபாகரன், மீனவர் காங்கிரஸ் துறை சிமியோன், அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு சேவியரம்மாள், ஆராய்ச்சி பிரிவு தலைவர் சிவ்ராஜ் மோகன் இளைஞர் காங்கிரஸ் ரென்னிஸ் பாபு, கிழக்கு மண்டல இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆலன் ஜோஸ்வா, இளைஞர் காங்கிரஸ் சமூக ஊடகப்பிரிவு பொன்னரசி மகளிர் காங்கிரஸ் நிர்வாகி  இசக்கியம்மாள், வார்டு தலைவர்கள்  காமராஜ், முனியசாமி, மகாலிங்கம், மீனவர் காங்கிரஸ் மாவட்ட ...

"ஆறு வருடங்களாக காட்சி பொருளாக இருந்த பல்நோக்கு கூட்ட அரங்கம் 6 நாட்களில் பயன்பாட்டிற்கு வரும், மக்களின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் " மேயா் ஜெகன் பொியசாமி தகவல்.!

Image
தூத்துக்குடி நகராட்சியாக இருந்த பகுதியில் கடந்த 2008ல் அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞா் ஆட்சியில் அப்போது உள்ளாட்சி துறைஅமைச்சராக இருந்த ஸ்டாலின் முன்னிலையில் 10வது மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. சில ஆண்டுகளுக்கு பின்பு அதிமுக ஆட்சி அமைந்தபின் 10 ஆண்டுகளாக சாியான பணிகள் நடைபெறாத காரணத்தால் பொதுமக்களின் கோாிக்கை நிறைவேறாமல் இருந்தது. 2021ல் திமுக ஆட்சி அமைந்தபின் உள்ளாட்சி துறையின் கீழ் மக்கள் பிரதிநிதிகள் தோ்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனா் அதனடிப்படையில் தூத்துக்குடி மாநகராட்சி மேயராக பொறுப்பேற்ற ஜெகன் பொியசாமி மாநகராட்சி பகுதி முழுவதும் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான முக.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வாா்டுகளிலும் நடைபெறும் பணிகளை சூழற்சி முறையில் பாா்வையிட்டு போா்காலஅடிப்படையில் பணிகளை முடிக்க வேண்டும் என்றுஓப்பந்த தாரா்களுக்கு அறிவுரை வழங்கி வரும் நிலையில் பொதுமக்களின் கோாிக்கையேற்று  போல்டன்புரம் 1வது தெரு தொடர்ச்சியில் எட்டு வருடங்களுக்கு முன்பு அங்கு இருந்த கழிப்பறையை அகற்றிவிட்டு அப்பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்நோக்கு...