Posts

Showing posts from April, 2020

சென்னையில் இருந்து வேப்பூருக்கும் வந்தது கொரோனா:  இருவருக்கு தொற்று உறுதியானதால் பரபரப்பு 

Image
சென்னை கோயம்பேட்டிலிருந்து வேப்பூர் பகுதிக்கு வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூன்று தினத்திற்கு முன்பு  மூடப்பட்டது.  கோயம்பேடு பகுதியில்  வேலை செய்தவர்களுக்கு கொரோனா  வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், வேப்பூர் அடுத்த தொண்டாங்குறிச்சியைச் சேர்ந்த இருவருக்கு   கொரோனா வைரஸ் பாதித்துள்ளதாக சென்னையிலிருந்து அறிவிக்கப்பட்டது.  இதனையறிந்த வேப்பூர் போலீசார், திட்டக்குடி வட்டாட்சியர்,  மற்றும் மங்களூர் வட்டார வாளர்ச்சி அலுவலர் சங்கர் மற்றும்  அதிகாரிகள் அவர்களை தனிமைப்படுத்தி ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பின்னர், திட்டக்குடி தாசில்தார் செந்தில் வேல் தலைமையிலான அதிகாரிகள் கிராம வழித்தடங்களை மூடி, கிருமி நாசினி தெளித்து சுகாதார நடவடிக்கைகள் மேற்கொண்டனர் அதனை தொடர்ந்து, வேப்பூர் சுற்றுப்புற கிராமங்களில் கோயம்பேட்டில் இருந்து வந்தவர்களை பிடித்து பரிசோதனை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

காவலர்களுக்கான ஹோமியோபதி மருத்துவ முகாம்: சேவாபாரதி சார்பில் நடைபெற்றது

Image
கொரோனா பாதிப்பு காலங்களில் பொதுமக்களுக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் காவல்துறையினர்களுக்கு சேவாபாரதி சார்பாக ஹோமியோபதி மருத்துவத்தின் மூலம் நோய் தொற்று எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில் பணியாற்றிவரும் காவலர்களுக்கு  இன்று மருத்துவர் கார்த்திக் பாபு தலைமையில் ஹோமியோபதி மருத்துவப்   பரிசோதனைகள் நடத்தப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை பரிந்துரைக்கப்பட்டது. மத்திய காவல் ஆய்வாளர் ஜெய்சங்கர், உதவி ஆய்வாளர் முத்துக்குமார்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுமார் 90க்கும் மேற்பட்ட காவலர்கள் -ஊர்க்காவல் படை வீரர்கள் அவர்களது குடும்பத்தினர்களுக்கும் உடல் வெப்ப அளவு, ரத்தத்தில் சர்க்கரை அளவும் சரிபார்க்கப்பட்டு எதிர்ப்பு சக்தி மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஹிந்து முன்னணி மாவட்டப்பொதுச்செயலாளர் செந்தில்குமார், நகர பொதுச்செயலாளர் சதீஸ்குமார்,  சேவாபாரதி தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. நாளை (01.05.2020 - வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணியளவில் திருப்பூர் மாவட்ட நாளித...

ஒரே நாளில்சென்னையில்138 தமிழகத்தில்161...லாக்டவுன் கெடுபிடிகளை கடுமையாக்கும் கொரோனா

Image
உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா தொற்று நம் நாட்டையும் விட்டு வைக்கவில்லை: நாடு முழுவதும் 33000 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. தமிழ்நாட்டில் இன்று மட்டும் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 138 பேர் சென்னைக்காரர்கள். சென்னையில் அதிவேகமாக கொரோனா தொற்று பரவுவதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்த எண்ணிக்கை 2,323 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. சென்னை கோயம்பேட்டில் காவல் ஆய்வாளர் உள்பட பூக்கடையில் வேலை செய்யக்கூடிய 5 பேருக்கு கொரோனா முதல்நிலை தொற்றாக ஏற்ப்பட்டு உள்ளது. பழக்கடை ஒன்றில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த 9 பேருக்குமே முதல்நிலை தொற்றாக உள்ளது.  சென்னையில் அதிகளவில் பரிசோதனை செய்யப்படுவதால் எண்ணிக்கை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. அதே நேரம் தமிழக அரசின் செய்திக்குறிப்பின்படி முதல்நிலைத்தொற்று எனக்குறிப்பிடப்பட்டுள்ள பலர் எங்கிருந்து நோய் பெற்றார்கள் என்பது குறிப்பிடப்படவில்லை.    இதைக்கட்டுப்படுத்த மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக முதல்வர் சுகாதாரத்துறையினருடன் ஆலோசனை நடத்த...

சாலையில் அறுந்து விழுந்த மின் கம்பம்: மீட்புப்பணிகளை முடுக்கி விட்ட இன்பதுரை எம்.எல்.ஏ

Image
வடக்கன்குளத்தில்  கனமழை காரணமாக காவல்கிணறு− ராதாபுரம் சாலையில் திமுக பிரமுகரும் நெல்லை மாவட்ட முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான கிரஹாம்பெல் வீட்டு அருகே மரம் மற்றும் மின்கம்பங்கள் சரிந்து விழுந்தது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.அந்த வழியாக வாகனத்தில் சென்றுகொண்டிருந்த  இராதாபுரம் சட்ட மன்ற உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை  உடனே சம்பவ இடத்திலிருந்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக சாலையின் குறுக்கே விழுந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னையில் 94 பேர் உள்பட தமிழகத்தில் 104 பேருக்கு கொரோனா: உயரும் எண்ணிக்கை ஊரடங்கை நீட்டிக்குமா

Image
நாடு முழுவதும், இன்றைய நிலவரப்படி 31,787 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 9,318 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  கேரளாவில் இன்று மட்டும் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கேரளாவில் மொத்த பாதிப்பு 495 ஆக உள்ளது.  தமிழகத்தில் இன்று 104 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த எண்ணிக்கை 2,162 ஆனது. சென்னையில் 94 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் 768 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 4 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 3 பேருக்கும், விழுப்புரத்தில் 2 பேருக்கும், திருவள்ளூரில் ஒருவருக்கும், கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  இன்று 2பேர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழகத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதுவரை 1,210 பேர் குணமடைந்து உள்ளனர்.  இன்னும் 952 பேர் தான் கொரோனா பாதிப்பால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் இன்ற...

பல்லாவரம், அனகாபுத்தூர் பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை

Image
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதால் தொடர் 144 ங்கு ஊரடங்கு உத்தரவினை மற்ற மத்திய மாநில அரசுகள் பிறபித்துள்ளன இதில் சில மாவட்டங்களில் நோய் தொற்று அதிகரித்து வருவதால் சென்னை, கோவை ,மதுரை உள்ளிட்ட ஐந்து மாநகராட்சிகளில்  26 காலை இன்று வரை 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்திரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதனால் மருத்துவ சேவைகள்,அத்தியவாசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கபடும் என்றும் பால் மற்றும் காய்கறிகள் வீட்டிற்கே வந்து  விநியோகிக்கப்படும் என்றும் அறிவிக்கபட்டுள்ளது. மேலும் தடை உத்திரவை மீறி வரும் மற்ற  வாகங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.இதனை அடுத்து சென்னையின் நுழை வாயிலான பெருங்களத்தூர் வண்டலூர் பகுதியில் உள்ள இரணியம்மன் கோவில் அருகே சோதனை சாவடி அமைக்கபட்டு  போலிசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் தாம்பரம் சேலையூர் மேடவாக்கம் சோழிங்கநல்லூர்  கேளம்பாக்கம் குரோம்பேட்டை பல்லாவரம் அனகாபுத்தூர் ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் இதில்...

மொடச்சூர்,வெள்ளாங்கோவில் ஊராட்சிகளில் துப்புரவுப் பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்: அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்

Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட மொடச்சூர்,வெள்ளாங்கோவில் ஆகிய ஊராட்சிகளில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக தூய்மை பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  வழங்கினார். மேலும் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு புதிய ரேஷன் கார்டு மற்றும் முதியோர் உதவி தொகை வழங்குவதற்கான ஆணை போன்றவற்றையும் வழங்கினார். இதில் கோட்டாட்சியர் ஜெயராமன், தாசில்தார் சிவசங்கர்,வட்டார வளர்ச்சி அலுவலர் பஷீர்,குணசேகர், யூனியன் சேர்மன் மௌதீஸ்வரன்,ஒன்றிய செயலாளர் சிறுவலூர் மனோகரன்,யூனியன் கவுன்சிலர்கள் வெங்கடேஸ்வரி முருகேசன்,ஆப்பிள் டி.சாந்தி தன்னாசி,  மொடச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன்,ஊராட்சி செயலர் ராஜாமணி,அதிமுக ஊராட்சி கழக செயலாளர் சந்திரசேகர், துணை தலைவர் கருப்புசாமி, முன்னாள் நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் கந்தசாமி,  வெள்ளாங்கோவில் ஊராட்சி மன்ற தலைவர் சாமியாத்தாள்,சொசைட்டி தலைவர் பாலசுப்பிரமணியம், ஞானசுந்தரம், ஊராட்சி மன்ற செயலாளர் சண்முகம்  உட்பட பலர் கலந்...

அரசு மருத்துவமனைக்கு இரண்டு அதிநவீன கார்டியோ மானிட்டர் கருவிகள்: இன்பதுரை எம்.எல்.ஏ., வழங்கினார்

Image
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக  சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது மார்ச் மாத சம்பளத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்க வேண்டும் எனவும்  சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நடப்பு ஆண்டில் தலா ரூ.25 லட்சமும் வரும் நிதியாண்டில் ரூ.ஒரு கோடியும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். இவ்வாறு பெறப்படும் நிதியிலிருந்து சம்மந்தபட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ கழகம் மூலம் தேவையான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொள்ளலாம் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இதை தொடர்ந்துராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை முதல் கட்டமாக ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்து அந்த தொகையில் தனது சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராதாபுரம், வள்ளியூர், கூடங்குளம் ஆகிய ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கும், திசையன்விளை, பணகுடி, வடக்கன்குளம், கள்ளிகுளம், நவ்வலடி, துலுக்கர்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் தேவையான மருத்துவ உபகரணங்க...

வாகனங்களில் செங்கல் எடுத்துச்செல்ல அனுமதி வேண்டும்: ராதாபுரம் எம்எல்ஏ  இன்பதுரையிடம் பணகுடி நாட்டுச் செங்கல் சூளை உரிமையாளர்கள் கோரிக்கை!

Image
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதிக்குட்பட்ட பணகுடி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட  செங்கல் சூளைகள் இயங்கி வருகிறது. இங்கு தயாரிக்கப்படும்  நாட்டு செங்கல்களுக்கு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கடும் கிராக்கி  உள்ளது.  தற்போது தமிழகத்தில் 144 தடை உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளதால் செங்கல் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டும் அதனை வியாபாரத்திற்காக வாகனங்களில் எடுத்துச்  செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான செங்கல் சூளை உற்பத்தியாளர்கள் மற்றும் அதனை நம்பி தொழில் செய்யும் பணியாளர்கள் மற்றும் செங்கல் சூளை கூலித்தொழிலாளர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் நெல்லை மாவட்ட  நாட்டுச் செங்கல் சூளை உரிமையாளர் சங்க தலைவர் ராஜன், செயலாளர் ஸ்டீபன், பொருளாளர் டேவிட் ஆகியோர் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரையை நேரில் சந்தித்து  ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது:− தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கட்டுமான தொழிலை தொடரலாம் என அர...

சென்னையில் கால்பரப்பும் கொரோனா: ஒரே நாளில் 103 பேருக்கு பாதிப்பு.. தமிழகத்தில் இன்று 121 பேருக்கு தொற்று உறுதி

Image
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று தமிழகத்தில் மட்டும் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2058 ஆக உயர்ந்து உள்ளது. இதில் சென்னையில் 103 பேர், செங்கல்பட்டில் 12 பேர், கள்ளக்குறிச்சியில் 3 பேர், நாமக்கல் 2 பேர், காஞ்சிபுரம் ஒருவர் ஆவர்.  சென்னை மேலும் அதிகளவில் பாதிப்பு உள்ள பகுதியாக மாறி வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகளவில் பாதிப்பு உள்ளது. சென்னையில் தொற்று ஏற்ப்பட்டவர்களில் 12 பேர் முதல்நிலை தொற்று ஏற்பட்டவர்கள் ஆவர். சென்னையில் ராயபுரம், திருவிக நகர், தண்டையார்பேட்டை உள்ளிட்ட ஆறு மண்டலங்கள் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளாக உள்ளது.  தமிழக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 30 சதவீதம் பேர் சென்னைக்காரர்கள்.  இதுவரை 1,128 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் இருந்த 69 பேரும் குணமடைந்து வீடுகளுக்கு சென்று விட்டதால் அந்த மாவட்டம் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக உள்ளது. முன்னதாகவே கிருஷ்ணகிரி கொரோனா இல்லாத மாவட்டமாக உள்ளது. இதுவரை தமிழகத்தில் 23 பேர் உயிரிழந்துள...

ஒருத்தருக்கு கூட தொற்று இல்லை.. கொரோனாவை தட்டி தூக்கிய ஈரோடு.. மாவட்ட நிர்வாகம், காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு

Image
கொரோனா நோயால் ஆரம்ப கட்டத்திலேயே பாதிக்கப்பட்ட மாவட்டம் ஈரோடு. அங்கு வெளிநாட்டிலிருந்து வந்து தங்கி இருந்தவர்களால் கொரோனா நோய்த்தொற்று பரவியது. இதனால் மாவட்ட நிர்வாகம், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.  இதன்மூலம் 70 கொரோனா நோயாளிகள் இருந்த ஈரோடு மாவட்டம், இன்று கொரோனா இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது. இன்று கடைசியாக இருந்த 4 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் 69 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஒருவர் இறந்து விட்டார். இதன்மூலம் இன்றைய நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா இல்லை. முதல்கட்டப்பரவலில், கொரோனாவை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தி, வெற்றி கொள்ளும் மாவட்டம்  ஆனது ஈரோடு.   ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையிலான அனைத்து துறை அதிகாரிகள், பணியாளர்கள், போலிஸ் எஸ்.பி., சக்திகணேசன் தலைமையிலான போலீசார், மருத்துவத்துறையினர் உள்பட அனைத்து அரசுத்துறையினரும்  இதற்காக அரும்பாடு பட்டு இருந்தனர்.  கொரோனாவை ஒழிக்க ஈரோடு மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் மற்ற மாவட்டங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்தது. எனவே ஈரோடு மாவட்ட நிர்வாகத்துக்கு தம...

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை.. 5 ஊராட்சிகளில் நிவாரணப் பொருட்கள்அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.

Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி நம்பியூர் ஒன்றியதிற்கு  உட்பட்ட எம்மாம்பூண்டி , ஒழலக்கோயில், அஞ்சானூர், வேமாண்டம்பாளையம், லாகம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்ச்சியாக தூய்மை பணியாளர்கள்,  துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு, அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் போன்ற வற்றை தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.  செங்கோட்டையன் வழங்கினார். மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் முதியோர்களுக்கு புதிய ரேசன் கார்டு மற்றும் முதியோர் உதவி தொகை வழங்கினர். இதில் கோட்டாட்சியர் ஜெயராமன்,தாசில்தார் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாவேசு, நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம்,மாவட்ட கவுன்சிலர் கௌசல்யா ஈஸ்வரமூர்த்தி, யூனியன் சேர்மன் சுப்பிரமணியம்,ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி மற்றும் துணைத் தலைவர் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பாளையில் சலூன் கடைக்கு சீல்: உரிமையாளர் ஊழியர் தப்பி ஓட்டம்

Image
நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டல பகுதிகளில்  ஊரடங்கு உத்தரவை மீறிய சலூன் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. தமிழகத்தில் கொரானா தொற்று அதிகரித்த நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. அனுமதிக்கப்பட்ட மளிகை பொருட்கள்,காய்கறி கடைகள் மற்றும் பால்,மருந்தகம்,இறைச்சி கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சலூன் கடைகள்,பியூட்டி பார்லர்கள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஒரு சில இடங்களில் சலூன் கடைகளை திறந்து பணிபுரிவதாக நெல்லை மாநகராட்சி ஆணையாளருக்கு புகார் வந்ததை தொடர்ந்து கடந்த வெள்ளிகிழமை அன்று பாளை மண்டலத்தில் 3 க்கும் மேற்ப்பட்ட கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகளும்,காவல் துறையினரும் இணைந்து சீல் வைத்தனர். மேலும் நகரின் அனைத்து பகுதிகளிலும் மாநகராட்சி மற்றும் காவல்துறை மூலம் ஒலிப்பெருக்கியின் வாயிலாக அறிவிப்பு செய்த பின்னரும் அரசின் உத்தரவினை துட்சமென மதித்து நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் எதிரில் உள்ள ஒரு கடையை துணிச்சலாக திறந்து முகச்சவரம், சிகை அலங்காரம் செய்வதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுகாதார ஆய்வாளர் இளங்கோ, க...

அளுக்குளி ஊராட்சியில் 20 ஆயிரம் குடும்பங்களுக்கு உணவுப்பொருட்கள்: அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்

Image
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகாக     ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அ தி மு க சார்பில் 20000ஏழை குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதற்கட்டமாக  அளுக்குளி ஊராட்சியில் உள்ள  அம்பேத்கர் நகர்,பள்ளத்து தோட்டம் காலனி, சந்தை கடை, நரிக்குறவர் காலனி  திருவள்ளுவர் நகர் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கி தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக நம்பியூர் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட கரட்டுபாளையம் பகுதியில் உள்ள கலை கூத்தாடி குடும்பங்கள் மற்றும் நரிக்குறவர் இன மக்களுக்கும் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். பின்னர்  செய்தியாளர்களிடம் கூறியதாவது....  இந்த 20000 குடும்பங்களுக்கும் மூன்று நாட்களுக்குள் பொருட்கள்  வழங்கப்படும் எனவும் ,கோபி நாகதேவன் பாளையம் அரசு துவக்க பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் தங்களிடம் படிக்கும் மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 1000வழ...

தமிழகத்தில் இன்று 64 பேருக்கு கொரோனா.. சென்னையில் 28 பேருக்கு இன்று பாதிப்பு...தமிழகத்தில் இதுவரை 1885 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், 5 மாநகராட்சிகளுக்கு 4 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சில மாவட்டங்கள் இன்றொரு நாள் முழு ஊரடங்கில் இருக்கின்றன.  இந்த நிலையில், இன்று 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,885 ஆனது.  மாவட்ட வாரியாக இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் விவரம்: சென்னை-28, மதுரை-15, விருதுநகர்-7, விழுப்புரம்-4, நாமக்கல்-4, திருப்பூர்-2,  கள்ளக்குறிச்சி-1, சிவகங்கை-1, சேலம்-1, திருவள்ளூர்-1,  இன்று ஒரே நாளில் 60 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மொத்தமாக 1020 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இன்னும் 865 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள்.       

10 ஊராட்சிகளிலுள்ள 5000 குடும்பங்களுக்கு, 20 லட்சம் மதிப்புள்ள, அரிசி, மளிகை பொருட்கள் எம்.எல்.ஏ கே.என். விஜயகுமார் சொந்த செலவில் வழங்கினார்

Image
திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பத்து ஊராட்சிகளிலுள்ள ஐந்தாயிரம் குடும்பங்களுக்கு திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என். விஜயகுமார் சொந்த செலவில் இருபது லட்சம் மதிப்புள்ள அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை  8 வாகனங்களில் வழங்கினார். இந்த வாகனங்களை தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்  கொடியசைத்து அனுப்பி வைத்தார். இந்நிகழ்வுக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாலரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன்,  திருப்பூ ர் வடக்கு எம்எல்ஏ விஜயகுமார் தலைமை தாங்கினார்.  , திருப்பூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சொர்ணாம்பாள் பழனிச்சாமி, மாவட்ட கவுன்சிலர் வேல்குமார் எம். சாமிநாதன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஐஸ்வர்யம் மகராஜ், சங்கீதா, ஊராட்சி தலைவர்கள் சுலோச்சனா வடிவேல், ரெஜீஸ், ஒன்றிய பாசறை செயலாளர் சந்திரசேகர், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் தங்கராஜ், மூர்த்தி, பொன்னுச்சாமி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நத்தத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

Image
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தனிமைபடுத்தபட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள மீனாட்சிபுரம், தர்பார் நகர்,முஸ்லீம்தெரு, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு)கந்தசாமி ஆய்வு செய்தார். ஆய்வில் தாசில்தார் ராதாகிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலர் சேக்அப்துல்லா, சுகாதார மேற்பார்வையாளர் மகாராஜன், துப்புரவு ஆய்வாளர் சடகோபி, கிராம நிர்வாக அலுவலர் சுரேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.தொடர்ந்து செங்குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில் வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.

மருந்துக்குகூட ஆள் வரல.. ஊரடங்கால் முழு அமைதி.. கழுகுப்பார்வையில் திருப்பூர்!

Image
திருப்பூரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் காலை முதலே வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ள 3 நாட்கள் முழு ஊரடங்கு திருப்பூரில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் மருந்து வாங்க செல்வதாக கூறிக்கொண்டு வெளியில் செல்வதை தடுக்கும் வண்ணம் மருந்தகங்கள் மூன்று நாட்களும் முழுமையாக அடைக்கப்பட்டன. மாநகர எல்லைக்குள் ஊரடங்கை மீறியதாக   மாலை 4 மணி நிலவரப்படி 104 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.   பொதுமக்களும் பெரும்பாலோனோர் வீடுகளில் முடங்கி இருப்பதால் கடந்த 30 நாள் ஊரடங்கை விட இன்று திருப்பூர் மிகவும் அமைதியான நகரமாக இருந்தது. திருப்பூரில் கறிகடைக்காரர்கள் நேற்று இரவிலிருந்து அதிகாலை வரை கடைகள் வைத்து வியாபாரம் செய்தனர். வீடுகளுக்கு இறைச்சி டெலிவரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், போன் செய்தாலும் யாரும் இறைச்சி டெலிவரி செய்யவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.  மருந்துக்கடைகளும் மூடப்பட்டு இருந்ததால், மருந்து வாங்க கூட ஆட்கள் வராமல் திருப்பூர் முழு அமைதி கொண்டிருந்தது.   கொர...

தேவனந்தல் ஊராட்சியில் தூய்மைக் காவலர்களுக்கு நிவாரணம்; துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வழங்கினார்

தேவனந்தல் ஊராட்சியில் தூய்மைக் காவலர்களுக்கு நிவாரணம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வழங்கினார் திருவண்ணாமலை ஏப். 26 - திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தேவனந்தல் ஊராட்சியில் தூய்மைக் காவலர்களுக்கு நிவாரண பொருட்களை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சேதுராமன் நேற்று வழங்கினார். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 69 ஊராட்சிகளிலும் கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைக்காவலர்கள் டேங்க் ஆபரேட்டர்களுக்கு அந்தந்த ஊராட்சிகள் சார்பில் கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேவனந்தல் கிராமத்தில் ஊராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 22 பேருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜி.ரமேஷ் முன்னிலை வகித்தார். இதில் கலந்து கொண்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சேதுராமன் தூய்மைப் பணியாளர்களுக்கு முகக்கவசம் கிருமிநாசினி சோப்பு மற்றும் காய்கறி அரிசி மற்றும் உணவு பொருட்களையும் வழங்கினார். இதில் ஊராட்சி செயலர்கள் செல்வமணி (தேவனந்தல்), எஸ்.வி. முருகன் (அடிஅண்ணாமலை), தேவனந்தல் ...

கிருத்துவ கல்வி நிறுவனங்கள் சார்பில் 300 குடுகுடுப்பை குடும்பங்களுக்கு 2000 கிலோ அரிசி

திருவண்ணாமலையில் கிருத்துவ கல்வி நிறுவனங்கள் சார்பில் 300 குடுகுடுப்பை குடும்பங்களுக்கு 2000 கிலோ அரிசி நிவாரணம் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தி வருகின்றது. இதனால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொது மக்கள் வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவால் பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், உணவு விடுதிகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் முடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏழை எளிய பொது மக்களுக்கு மாவட்ட நிர்வாகம், மற்றும் தன்னார்வளர்கள் உள்ளிட்ட அனைத்து தொண்டு நிறுவனங்களும் நிவாரணப்பொருட்கள் வழங்கி வருகின்றது. திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள அய்யம்பாளையம் புதூர் கிராமத்தில் உள்ள குடுகுடுப்பை சமூகத்தைச் சேர்ந்த 300 பேருக்கு நிவாரணப்பொருட்கள் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதனை தொடர்ந்து திருவண்ணாமலை செங்கம் சாலையில் ரமணமகரிஷி லொயோலா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மவுண்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த தனியார் கிருத்துவ கல்வி நிறுவனங்கள் சார்பில் 300க்கும் மேற்பட்ட குடுகுடுப்பை குடும்பத்தினர்களுக்கு 2 ஆயி...

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறும்பட போட்டி

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறும்பட போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடந்த மாதம் 25ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். எனவே அவர்களிடையே உள்ள திறமையை வெளிக்கொண்டுவரவும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வில் பள்ளி மாணவர்களை பங்கேற்க வைக்கவும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது அதன்படி கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு குறும்பட போட்டி அறிவிக்கப்பட்டது. 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புவரை உள்ள மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடி இந்த போட்டியில் பங்கேற்கலாம். 2 நிமிடங்களில் ஒளிபரப்பக்கூடிய வகையில் குறும்படம் அமைந்திருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. அதன்படி மாவட்டம் முழுவதும் 312 மாணவ மாணவிகள் குறும்படங்களை எடுத்து வாட்ஸ்அப் மூலம் அனுப்பிவைத்தனர். அதில் 8 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் நடந்தது. அப்போது போட்டியில் வெற்றிபெற்ற திருவண்ணாமலையை சேர்ந்த மாணவர்கள் பேட்ரிக்லிபன் பிரபாகரன் சுருதி அபிநயா, அ...

அத்தியந்தல் ஊராட்சியில் 500 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள்; ஊராட்சி மன்ற தலைவர் முருகன் வழங்கினார்

அத்தியந்தல் ஊராட்சியில் 500 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் வழங்கினார் திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இப்பணிகளில் சுகாதார துறை வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை  ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அத்தியந்தல் ஊராட்சியில் ஊராட்சி மன்றம் மற்றும் ராதே சைதன்யா பிரந்தாவன் டிரஸ்ட், அரிஷ் லைட் அவுஸ் சார்பில் ஊரடங்கால் வேலையின்றி தவிக்கும் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று அத்தியந்தல் ஊராட்சி மன்ற தலைவர் இரா.முருகன் அத்தியந்தல், சின்னகோட்டாங்கல், பெரியகோட்டாங்கல் ஆகிய கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மளிகை பொருட்கள், காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பையை வழங்கியதோடு கிருமிநாசினி முகக்கவசம் கையுறை கொரோனா பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினார். அப்போது அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் கொரோனா வைரஸ் நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஒவ்வொருவரும் முகக்கவசம் கட்டா...

நெய்வானத்தம் ஊராட்சியில் ரூ.3 லட்சம் மதிப்பில்750 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்

நெய்வானத்தம் ஊராட்சியில் ரூ.3 லட்சம் மதிப்பில்750 குடும்பங்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்கள் ஆணையாளர் மகாதேவன் வழங்கினார் திருவண்ணாமலை ஏப். 26 - திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நெய்வானத்தம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 3 லட்சம் மதிப்பில் 750 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்களை கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கே.பி.மகாதேவன் வழங்கினார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் ஊராட்சி மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் முக்கிய அரசியல் கட்சிகள் சார்பில் நிவாரண உவித்தொகை அத்தியாவசிய நிவாரண பொருட்கள் கபசுர குடிநீர் வழங்குதல் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் வேட்டவலம் அடுத்த நெய்வானத்தம் ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ர.ரமேஷ் தலைமையில் தனது சொந்த செலவில் ரூ.3 லட்சம் மதிப்பில் 750 ஏழை எளியோர் மற்றும் ஊரடங்கு காரணமாக வேலையின்றி வருமானமில்லாமல் வீட்டிலிருக்கும் ஏழைகளுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி...

சேலம் மாநகரத்தில் புதுப்பிக்கப்பட்டு புதிய தார் சாலை

Image
கொரோனோ நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை முன்னிட்டு ஊரடங்கு உத்தரவால் சாலைகள் வெகுநாட்களாக மூடப்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து பாதாள சாக்கடை பணிகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு சேலம் மாநகரத்தில் உள்ள  பட்டைக்கோயில் முதல் ஸ்ரீ கன்னிகாபரமேஸ்வரி கோயில் வரை . சின்ன கடைவீதி,  கடைவீதி சாலைகள் முழுமையாக,  மாநகராட்சி சார்பில் நேற்று இரவு புதுப்பிக்கப்பட்டு புதிய தார் சாலைகள் அமைக்கப்பட்டது.

சுரண்டை அருகே சாராயம் வடித்த 6 பேர் கைது

Image
சுரண்டை அருகே உள்ள ஊத்துமலையில் சாராயம் காய்ச்சுவதற்காக போட்டு வைத்திருந்த ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர். 6பேர் கைது செய்யப்பட்ட னர். தெற்கு பனவடலிசத்திரத்தை சேர்ந்த ராமையா என்பவருக்கு ஊத்துமலை அருகில் உள்ள தங்கம்மாள்புரம் கிராமத்திற்கு அருகே காட்டு பகுதியில் வயல் உள்ளது. இப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்டு வைத்திருப்பதாக ஊத்துமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்று போலீசார் அதிரடி சோதனை செய்தனர் அப்போது அங்கு 20 லிட்டர் பிளாஸ்டிக் குடத்தில் சாராயம் காய்ச்சுவதற்கு ஊறல் போட்டு வைத்து இருப்பதை கண்டனர்.   'தொடர்ந்து போலீசார் விசாரணை யில் பனவடலி சத்திரத்தை சேர்ந்த சேர்ந்த ராமையா மகன் காளிமுத்து(8),  சண்முகையா மகன் தங்க முத்து(40), முத்தையா மகன் தங்கராஜ் (32), வேல்சாமி மகன் முருகன் (35), மாரிமுத்து மகன் காளிமுத்து(30), வெள்ளையன் மகன் பாண்டியராஜ்(38) ஆகியோர் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்டுவைத்திருப்பதை அறிந்து அதனை அழைத்தனர். இச்சம்பவம் குறித்து ஊத்துமலை இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தார்.

இப்படியும் ஒரு தலைமை ஆசிரியரா; மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 1000, பழம் மற்றும் காய்கறிகள்

Image
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகாகவும், ஊரடங்கு அமலில் உள்ள போது வறுமையால் வாடும் குடும்பங்களுக்கு  நலத் திட்டங்களை தமிழக அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல்வேறு உதவிகள் செய்து வருகிறது. தமிழகத்தில் முதல் முறையாக தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தலைமை ஆசிரியரும், தன்னுடன் பணிபுரியும் உதவி ஆசிரியரும் சேவை செய்தது குறிப்பிடதக்கது.  ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நாகதேவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில்  23மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் தினக்கூலி செய்து வருவதை தொடர்ந்து,நாகதேவம் பாளையம், வெள்ளை பெரிச்சி புதூர்(ஊஞ்சகரை )ஆகிய கிராமங்களில் வசிக்கும் மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 1000ரூபாய் மற்றும் பழம் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை பள்ளியின் தலைமை ஆசிரியர் கு. ஜெயந்தி கிருஷ்ணன்,உதவி ஆசிரியர் ஆ. மயில்சாமி  ஆகியோர் மாணவர்களின் இருப்பிடத்திற்க்கு சென்று வழங்கினார்கள்.இதனை மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்களை பெரிதும் பாராட்டினர்.

கோபி உட்கோட்ட காவல்துறை சார்பில் பத்திரிகையாளர்களுக்கு முகக்கவசம், கையுறை, சானிடைசேர்

Image
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைக்காக ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சக்திகணேஷ் அவர்களின் ஆலோசனையின் படி கோபி உட்கோட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தங்கவேல் தலைமையில் கோபி காவல் ஆய்வாளர் சோமசுந்தரம்  முன்னிலையில் உட்கோட்ட பகுதியில் பணிபுரியும் கோபி பத்திரிகையாளர்களுக்கு முகக்கவசம், கையுறை, சானிடைசேர் ஆகியவற்றை வழங்கினர்.

இன்னும் 52 பேருக்குத் தான் கொரோனா: திருப்பூர் கலெக்டரின் டிரெண்டிங் மெசேஜ்

Image
திருப்பூர் மாவட்டம் கொரோனா பாதிப்பில் ’ரெட் ஜோன்’ பகுதியாக உள்ளது. இங்கு இதுவரை 110 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.  பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களில் விறுவிறுவென உயர்ந்தது. மாவட்டத்தில் 110 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மாநிலத்தில் மூன்றாவது இடத்தில் திருப்பூர் உள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனாவில் இருந்து சிகிச்சை பெற்று மீண்டு வீட்டுக்கு செல்வோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. நேற்று முந்தினம் 15 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்றனர். நேற்று 18 பேர் குணமடைந்தனர். இன்று மேலும் 13 பேர் சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்து வீடுகளுக்கு செல்கின்றனர்.  இதன்மூலம் திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 58 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர். தற்போது 52 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். அனைவரது உடல்நிலையும் சீராக இருப்பதாக கலெக்டர் விஜயகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார். பத்திரிகைகளுக்கு செய்தி தருவதற்கு முன்பே தனது சமூக வலைத்தள ரசிகர்களுக்கு, தகவல்களை அளித்து எப்போதும் டிரெண்டிங்கில் இருப்பவர் நமது திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்த...