Posts

Showing posts from June, 2020

இனிமேல் சேலை, சுடிதாரில் தான் வீடியோ...சின்னத்திரை, வெள்ளித்திரையிலும் வருவேன்.. டிக் டாக் புகழ் சூர்யா பேட்டி.

Image
டிக் டாக் தடை செய்தது மகிழ்ச்சியே. இனி புதிய தளத்தில் இழுத்து போர்த்திய புதிய சூர்யாவை காண்பீர்கள். சில நாட்கள் குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்கப் போகிறேன். டிக் டாக் புகழ் சூர்யா பேட்டியளித்தார் .   இந்தியா சீனா எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக தொடர்ந்து இரு தரப்புகளும் ராணுவத்தை எல்லையில் குவித்து வருகின்றனர் இந்நிலையில் இந்திய அரசு சீன செயலிகள் சில இந்திய தகவல்களைத் திருடுவது 59 செல்போன் செயலிகளை தடை செய்தது இதில் பெரும்பாலும் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் டிக்டாக் செயலையும் அடங்கும். இந்த டிக் டாக் செயலியில் பலரும் முழுநேரமாக ஈடுபட்டுள்ள நிலையில் இதன் தடை காரணமாக டிக் டாக் ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர். டிக் டாக் செயலி மூலமாக பிரபலமடைந்த திருப்பூரைச் சேர்ந்த ரவுடி பேபி சூர்யா என்பவர் இதுகுறித்து நமது சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில்  டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டது.சிறிது வருத்தத்தை ஏற்படுத்தினாலும் சீன செயலி என்ற அடிப்படையில் தடை செய்யப்பட்டது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இந்திய பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கும் எனவும் தெரிவித்தார். தனக...

இனியும் ஆட்டம் போடுவீங்க... டிக் டாக் உள்பட 59 சீன ஆப்களுக்கு தடை

Image
இந்தியா சீனா இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. கடந்த வாரததில் லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி 20 இந்திய ராணுவ வீரர்களை கொலை செய்தனர். இதனால் இருபக்கமும் போர்ப் பதற்றம் ஏற்ப்பட்டது. இந்நிலையில் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகம் 59 சீன செல்போன் அப்ளிகேஷன்களை தடை செய்து உள்ளது. நாட்டின் பாதுகாப்பு, ஒற்றுமை, இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்த தடை செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் ஊரே திரண்டு ஆட்டம் போடும் ' டிக் டாக் ' உள்ளிட்ட ஆப்கள் தடை செய்யப்பட்டு உள்ளது. தடை செய்யப்பட்ட ஆபகள் லிஸ்ட் இதோ:

பஸ்கள் ஓடாது...ஸ்கூல் லீவு... ஞாயிறு முழு ஊரடங்கு... தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விவரம்

Image
 முழு ஊரடங்கு , கொரோனா நோய்த்தொற்றை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதற்கு உதவியதால், இந்த முழு ஊரடங்கு மேற்கண்ட பகுதிகளில் மட்டும் 5.7.2020 வரை தொடரும். 19.6.2020க்கு முன்னர் சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் இருந்த ஊரடங்கின் நிலையே 6.7.2020 அதிகாலை 00 மணி முதல் 31.7.2020 நள்ளிரவு 12.00 மணிவரை தொடரும். அதேபோல் மதுரை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் 24.6.2020க்கு முன்னர் இப்பகுதிகளில் இருந்த ஊரடங்கின் நிலையே 6.7.2020 அதிகாலை 00 மணி முதல் 31.7.2020 நள்ளிரவு 12.00 மணிவரை தொடரும். ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காய்கறி/பழக்கடைகளைப் போன்று, பெருநகர சென்னை மாநகராட்சி, மாநகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளிடம் இருந்து முறையான வியாபார அனுமதி பெற்ற மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள் சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்: • நகர்ப்புர வழிபாட்டுத்தலங்களிலும், பெரிய வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு. •...

சென்னை மதுரையில் முழு ஊரடங்கு: தமிழகம் முழுவதும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு

Image
தமிழகத்தில் கொரோனா நோய்ப்பரவல் தீவிரமடைந்து உள்ளது. நேற்று மட்டும் கிட்டத்தட்ட 4 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதில் சென்னை அதிகளவு பாதிக்கப்படும் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மேலும் மதுரை, திருவண்ணாமலை, வேலூர், மாவட்டஙகளிலும் கொரோனா தொற்றுப்பரவல் வேகமெடுத்து உள்ளது. இந்நிலையில் நாளையுடன் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு முடிகிறது. மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்கள் மீண்டும் ஊரடங்கை ஜூலை மாத இறுதிவரை நீட்டித்துள்ளன. தமிழ்நாட்டில் ஊரடங்கு தேவையில்லை; நோய்ப்பரவல் தீவிரமாக உள்ள மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு போடலாம். மற்ற மாவட்டங்களில் தேவை இல்லை என்று சுகாதாரத்துறை மருத்துவக் குழுவினர் தமிழக அரசுக்கு அறிக்கை கொடுத்து இருந்தனர். இந்த நிலையில் எந்தெந்த மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். தமிழக அரசின் அறிவிப்பு எதிர்பார்ப்பு உள்ள நிலையில மாவாட்ட நிலவரததை பொறுத்து ஊரடங்கு நீட்டுக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்து வந்தனர்.  

இருசக்கர வாகனமும் காரும் நேருக்கு நோ் மோதி விபத்து

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாாியூா் வெள்ளாளபாளையம் பிரிவில் இருசக்கர வாகனமும் காரும் நேருக்கு நோ் மோதிய விபத்தில் இருசக்கர வாகத்தில் பயணம் செய்த மூன்று போில்  சத்தியமங்கலம் கொத்துக்காடு பகுதியைச்சோ்ந்த ஒரு ஆண் ஒரு பெண் ஆகிய இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. மேலும் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த மற்றொரு பெண் காாில் பயணம் செய்த ஓட்டுநா் உட்பட இருவா் என மூன்று போ் படுகாயங்களுடன் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். விபத்து குறித்து கோபிசெட்டிபாளையம் காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்...., கூகலூர் உறவிவினர் வீட்டிற்கு சென்று திரும்பி வரும் வழியில் இரு சக்கர வாகனத்தில் வந்த மோகன்ராஜ் 21 சித்ரா 39 ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.. தங்கமணி மற்றும் காரில் பயணம் செய்த இருவர் ஆகியோர் கோபி அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர்

தமிழகத்தில் 3,940 பேருக்கு கொரோனா...54 பேர் பலி... மதுரை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சியில் தீவிர பரவல்

Image
தமிழ்நாட்டில் இன்று 3,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  தமிழ்நாட்டிலேயே 3,761 பேருக்கும், வெளிமாநில, வெளிமாவட்டங்களில் இருந்து வந்த 179 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. மொத்தம் 82,275 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் 1,992 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை 284, செங்கல்பட்டு 183, கள்ளக்குறிச்சி 169, திருவண்ணாமலை 142 பேர் என வெளிமாவட்டங்களில் அதிக தொற்று எண்ணிக்கை கண்டறியப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 1443 பேர் இன்று மட்டும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரை 45,537 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடுகளுக்கு சென்று விட்டனர்.  தற்பொழுது 35,656 பேர் மட்டும் மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  இன்று மட்டும் 54 பேர் செத்துப்போனதுடன் சேர்த்து இதுவரை 1079 பேர் இறந்து உள்ளனர்.    

68 பேர் பலி...3,713 பேருக்கு தொற்று...அனைத்து மாவட்டங்களிலும் கால்பரப்பும் கொரோனா

Image
தமிழகத்தில் இன்று மட்டும் 3,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 68 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா நோய் தொற்று பரவல் சென்னை மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்து உள்ளது. தமிழக அளவில் இன்று மட்டும் 3,714 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதன்மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 78,335 ஆக உள்ளது.  இதில் 33,213 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று 2,737 பேர் உள்பட இதுவரை 44,094 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்று உள்ளனர். மரண எண்ணிக்கையை பொறுத்தவரை இன்று அதிகபட்சமாக 68 பேர் இறந்துள்ளனர். மொத்தமாக 1,025 பேர் இதுவரை இறந்துள்ளனர். இன்று மட்டும் 32,068 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 10 லட்சத்து 25 ஆயிரத்து 59 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.  

பெண் எஸ்.ஐ., க்கு கொரோனா... திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையம் மூடல்

Image
தமிழகத்தில் கொரோனா தீவிரமாக பரவி நோய்த்தொற்று பரவல் வருகிறது. திருப்பூரில் நேற்று மட்டும் 14 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலையில் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சப் இன்ஸ்பெக்டர் மனைவிக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேற்படி சப் இன்ஸ்பெக்டர் மனைவி சென்னை சிட்டி போலீசில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்னர் திருப்பூர் வந்தார். அவருக்கு பரிசோதனை செய்ததில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனே அவரது கணவரான போலீஸ் சப் இன்ஸ்பெக்டருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. மேலும், திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையம் முழுமையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, மூடப்பட்டது.  அதே வளாகத்தில் உள்ள மகளிர் போலீஸ் நிலையத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது. இத்துடன் அவர்கள் தங்கி இருந்த போலீஸ் குடியிருப்பில் கிருமி நாசினி தெலிக்கப்பட்டு உள்ளது. தொடர்பில் இருந்த அனைவருக்கும் நோய் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. மேலும் விவரங்கள் விரைவில் தெரியவரும்.    

3 சிறுவர்கள், 2 கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு...திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 14 பேருக்கு தொற்று

Image
திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 14 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  41 நாட்களாக தொற்று இல்லாமல் இருந்த திருப்பூர் மாவட்டத்தில் திடீரென தொற்று எண்ணிக்கை ஆங்காங்கே தென்பட ஆரம்பித்தது. இந்த நிலையில் இன்று மட்டும் 14 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 141 ஆக உள்ளது. இதில் 24 பேர் மட்டும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மீதியுள்ள அனைவரும் குணமடைந்து வீடுகளுக்குச் சென்று விட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் இன்று தொற்று பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டவர்களில் திருப்பூர் மாநகரைச் சேர்ந்த 5 பேர் அடங்குவர்.  இதில் திருப்பூர் மாநகரில் இரண்டு கர்ப்பிணி பெண்கள், ஒரு 4 வயது சிறுமி உள்பட 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவிநாசியில் ஒரு 45 வயது ஆண், உடுமலையில் 54 வயது பெண் ஆகியோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.  தாராபுரத்தில் 11 வயது சிறுமி, 7 வயது சிறுவன் உள்பட ஆறு பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.  பல்லடத்தில் ஒரு பெண்ணுக்கும் கொரோனா தொற்று உறுத...

3,645 பேருக்கு கொரோனா...46 பேர் மரணம்... சென்னை தவிர பிற மாவட்டங்களிலும் தீவிர பரவல்

Image
தமிழ்நாட்டில் இன்று மட்டும் 3645 பேருக்கு கொரோனா  உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிலேயே பாதிப்புக்குள்ளாகி இருப்பவர்கள் 3,523 பேர்.வெளிமாநில, வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் 122 பேர். சென்னையில் மட்டும் 1956 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதன்மூலம் மொத்த பாதிப்பு 74622 ஆக உள்ளது.  இன்று மட்டும் 32 ஆயிரத்து 317 பேருக்கு சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக ஒன்பது லட்சத்து 92 ஆயிரத்து 991 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டூ உள்ளது. மொத்தமாக 32,305 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  இன்று மட்டும் ஆயிரத்து 388 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடுகளுக்குச் சென்றுளளனர். இதன் மூலம் டிஸ்சார்ஜ் ஆகி சென்று அவர்களின் மொத்த எண்ணிக்கை 41 ஆயிரத்து 357உள்ளது. இன்று மட்டும் 46 பேர் இறந்து போய உள்ளனர். இதுவரை மொத்தமாக 957 பேர் இறந்துவிட்டனர். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 232 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை தவிர பிற மாவட்டங்களிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது.  

கூட்டம் இருந்தால்தான் ஆள் வருவாங்களாம்... கொரோனா காலத்தில் இப்படி ஒரு மனப்பிரமை... சமூக இடைவெளி பின்பற்றாத பேக்கரியில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

Image
தமிழகம் முழுவதும் கோரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்பூரில் மாவட்ட நிர்வாகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பாதிப்பு பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. வெளியூரில் இருந்து வந்தவர்கள் மூலமாக மட்டும் தற்போது ஒரு சில தொற்றுக்கள் வர ஆரம்பித்துள்ளது. இதன்மூலம் இன்றைய நிலைக்கு 128 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதில் 116 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு சென்ற நிலையில் 11 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக முடுக்கி விட்டு உள்ளது. இந்நிலையில், திருப்பூரில் உள்ள பேக்கரிகள் சிலவற்றில் சமூக இடைவெளி, சுகாதாரம் பேணுதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புறந்தள்ளி விட்டு நோய் பரப்பும் மையம் போல செயல்படுகின்றன. குறிப்பாக திருப்பூர் மங்கலம் ரோட்டில் ஏபிடி ரோடு, கார்ணரில் உள்ள அய்யனார் விலாஸ் பேக்கரியில் சமூக இடைவெளி முற்றிலும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. பொது மக்கள் நெரிசலில் நின்று கொண்டு தின்பண்டங்களை வாங்கி கூட்டம் கூட்டமாக நின்று சாப்பிடுவது தொடர்கதையாக உள்ளது.  இங்கு கைகழுவ வாஷ்பேஸினில் ச...

தமிழ்நாட்டில் இன்று 3,509 பேருக்கு கொரோனா

Image
தமிழ்நாட்டில் இன்று 3 ஆயிரத்து 509 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 3,358 பேருக்கு பாதிப்பு உறுதியானது. 151 பேர் வெளிமாநில, வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். இதையும் சேர்த்து இன்றைய பாதிப்பு 3,509 ஆனது. இதன்மூலம் 70,977 பேருக்கு இதுவரை பாதிப்பு உறுதியானது. சென்னையில் இன்று மட்டும் 1,834 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது இன்று மட்டும் 45 பேர் உயிரிழந்து உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 911 ஆக உள்ளது. 

தமிழகத்தில் இன்று 2865 பேருக்கு கொரோனா உறுதி& மீண்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தடை

  தமிழகத்தில் இன்று 2865 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் தமிழகத்திலேயே தொற்றுக்கு உள்ளவானவர்கள் 2774. மீதமுள்ளவர்கள் வெளிமாநில வெளிமாவட்டங்களிலிருந்து வந்தவர்கள்.  இன்று மட்டும் 32079 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதன் மூலம் முடிவுகள் வெளி வந்துள்ளது. இதுவரை மொத்தமாக 9,76,431 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 1654 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 33 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இதுவரைக்கு 866 பேர்  கொரோனாவால் இறந்துள்ளனர். இதுரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  67468 பேர்.  இதில் 28,836 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இன்று மட்டும் 2424 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரைக்கும் 31,763 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மண்டலங்களாக பிரிக்கப்பட்டு போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த முறை முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட...

மண்டலத்திற்குள் போக்குவரத்து முறை முழுவதுமாக ரத்து

  மண்டலங்களாக பிரிக்கப்பட்டு போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த முறை முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களை சில  மண்டலமாக பிரித்து அந்த மண்டலத்திற்குள் இருக்கும் மாவட்டங்களுக்குள் இ-பாஸ் இல்லாமல் செல்லலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.ஆனால் தற்போது எல்லா மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் மாவட்ட எல்லைகளை மூட அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கோரிக்கை வைத்தனர்.இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை மக்களுக்கு உரையாற்றினார். அப்போது தமிழக அரசு எடுத்துவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். மேலும் ‘‘மண்டலத்திற்குள் போக்குவரத்துக்கு அனுமதி என்ற முறை நாளையில் இருந்து வருகிற 30-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், மாவட்டத்திற்குள் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்குச் செல்ல அனுமதி வாங்க வேண்டும்’’ என்று தெரிவித்தா...

திருப்பூரில் கொரோனா வைரசுக்கு முதல் பலி... 23 வயது ஆம்புலன்ஸ் உதவியாளர் இறந்தார்

Image
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த நான்கு நாட்களாக மீண்டும் தலைகாட்ட துவங்கி உள்ளது. ஆரம்பம் முதல் 114 பேருக்கு வைரஸ் பரவல் இருந்த நிலையில் 41 நாட்கள் புதிய தொற்று இல்லாமல் இருந்தது. இதனால் திருப்பூர் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து இருந்தனர். இந்தநலையில் கடந்த சில நாட்களாக திருப்பூர் மாவட்டத்தில் ஓரிரு பாதிப்புகள் தென்பட ஆரம்பித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 120 ஆக உள்ளது. 116 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குச் சென்றுள்ள நிலையில் நாலு பேரு மட்டும் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் கடந்த 18ஆம் தேதி வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட திருப்பூர் மங்கலத்தை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவரும் ஆவார். ஆம்புலன்சில் உதவியாளராக பணியாற்றி வந்த இவர் சொந்த ஊரான திண்டுக்கல்லுக்கு சென்று வந்தபோது வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த வாலிபர் கடந்த 18 ஆம் தேதி முதல் கோவை இ.எஸ்.ஐ.,  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை பரிதாபமாக இறந்தார். திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ்க்கு முதல் பலி ஏற்ப்பட்டு உள்ளது பொ...

தமிழ்நாட்டில் இன்று 2710 பேருக்கு கொரோனா... சென்னை தவிர மற்ற மாவட்டங்களிலும் பரவல் தீவிரம்

Image
தமிழ்நாட்டில் இன்று மட்டும் 2710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை காரர்கள் 1,487 பேர், மற்ற மாவட்டத்துக் காரர்கள் 1223 பேர் ஆவர். இன்று மட்டும் 25 ஆயிரத்து 234 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. மொத்தமாக 8 லட்சத்து 76 ஆயிரத்து 790 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தமாக தொற்றுக்கு ஆளாவர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 87 ஆக உயர்ந்துள்ளது.  இன்று மட்டும் 1358 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குச் சென்று உள்ளனர்.  இன்று 37 பேர் மரணமடைந்துள்ளனர். இப்போதைய 27 ஆயிரத்து நூற்று எழுபத்து எட்டு பேர் மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற அனைவரும் மற்ற அனைவரும் குணமடைந்து வீடுகளுக்குச் சென்று விட்டனர். திருவண்ணாமலை, செங்கல்பட்டு, மதுரை திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில்நோய்தொற்று அதிகமாகி வருவது தமிழக மக்களை கவலையடையச் செய்துள்ளது.  சென்னை தவிர செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவுடன் சேர்த்து மதுரை மாவட்டத்த...

உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை விடுதலை: மற்ற 5 பேருக்கு ஆயுள் தண்டனை

Image
 திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த சங்கர் - கவுசல்யா வெவ்வேறு சாதியினராக இருந்த போதும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதற்கு கவுசல்யாவின் பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் தேதி உடுமலை பஸ் ஸ்டாண்டில் வைத்து சங்கர் பட்டப்பகலில் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி தமிழகத்தை உலுக்கியது. இந்த சம்பவத்தில் கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இதுகுறித்த மேல்முறையிட்டு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியது.  இதில் கவுசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்பட்டார். மற்ற 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு உள்ளது.  சங்கர் இறப்புக்கு பின்னர் சக்தி என்பவரை கவுசல்யா திருமணம் செய்து கொண்டிருந்தார். இது பல தரப்புகளிலும் விமர்சனத்துக்கு ஆளானது. இந்நிலையில் இன்று பேட்டியளித்த கவுசல்யாவின் தாயார், கடவுள் தான் தன் கணவரையும், தன்னையும் காப்பாற்றி நல்ல தீர்ப்பை அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.  

மதுரையில் வாலிபர் கொலை: தலையை தனியாக வெட்டி எடுத்த கொடூரம்

மதுரை, அவனியாபுரம் அருகே பெரியார் நகரில் வாலிபரை வெட்டி தலையை தனியாக எடுத்து வைத்த சம்பவம் நடந்துள்ளது.  அவனியாபுரம் பெரியார் நகரை சேர்ந்த அவ்வா என்ற முத்துச்செல்வம் (வயது 22 ). இவர்  ஏற்கனவே அவனியாபுரம் பாமக பிரமுகர் இளஞ்செழியன் கொலை வழக்கு மற்றும் அவரது தம்பி மாரி கொலை வழக்கு போன்றவற்றில் தொடர்புடையவர். இவர் இருக்கும் இடத்தினை தெரிந்து கொண்ட 5 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து தாக்கி உள்ளனர்.  தப்பி ஓட முயன்றபோது  முத்துசெல்வத்தின் தலை வயிறு ஆகிவற்றில் அரிவாள் மற்றும் கத்தியால் குத்தி கொன்று உள்ளனர். மேலும்,  முத்து செல்வத்தின் தலை தனியாக அறுத்து எடுத்து வைத்து விட்டுச் சென்றனர். இதனால் இப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. 

வறுமை கொடியது...பெற்ற குழந்தையையே ஆற்றில் வீசிச்சென்ற தாய்

கள்ளகுறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் பெற்ற தாயே குழந்தையை ஆற்றில் வீசிசென்ற சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உளுந்தூர்பேட்டை அடுத்த மங்களம் கிராமத்தை சார்ந்த முத்து என்பவரின் மனைவி தீபா(33).  இருவருக்கும் ஏற்கனவே 8 வயதில் ஓர் ஆண்குழந்தை இருக்கும் நிலையில், சில மாதங்களைக்கு முன்னால் சித்தூருக்கு பணிக்கு சென்ற தீபாவிற்கு கடந்த 15ம் தேதி சித்தூர் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அங்கிருந்து தனது தாய் வீட்டிற்கு திருக்கோவிலூர் அடுத்துள்ள மிலாரிபட்டு கிராமத்துக்கு வந்துள்ளார்.  தீபா திருக்கோவிலூர் வந்ததும் யாருக்கும் தெரியாமல் குழந்தையை ஆற்றில் வீசி சென்றுள்ளார். ஆற்றில் குழந்தையின் அழுகுரல் கேட்ட அப்பகுதி மக்கள் உடனே சென்று பார்த்துள்ளனர். பின்னர் குழுந்தையை உடனடியாக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். மருத்துவ மனையின் மூலமாக திருக்கோவிலூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து உடனே விரைந்து வந்த திருக்கோவிலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவசந்திரன் தலைமையிலான போலிசார், ஆற்றில் வீசி சென்ற குழுந்தையின் தாயான தீபாவை ஒரு ...

திருப்பூரில் டிக் டாக்  சூரியா தற்கொலை முயற்சி

Image
திருப்பூர் அய்யம்பாளையம் சபரிநகரை சேர்ந்த சுப்புலட்சுமி என்கிற சூர்யா என்பவர் இன்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.   டிக் டாக் ரவுடி பேபி என தன்னத்தானே அழைத்துக் கொள்ளும் சூர்யா அதே பெயரில் பிரபலமானார். அவர் அரைகுறை ஆடைகளுடன் செய்யும் டிக் டாக் வீடியோக்கள் பல சர்ச்சைகளுக்கு ஆளாகின.   இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் இருந்து திருப்பூர் வந்த இவரை,  இவரது வீட்டுக்கு பக்கத்தில் இருப்பவர்கள் கொரோனா பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தினார்கள்.  ஆனால், தான் ஆம்புலன்சில் வர முடியாது என அடம்பிடித்தார் சூரியா. இவர் அடம்பிடித்த வீடியோக்கள் செய்தியாக பரவின.    இது குறித்த செய்தி வெளியிட்ட பாலிமர் சேனல் செய்தியாளரை சூரியா டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு மிரட்டினார்.     இதனால் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் திருப்பூர் போலீசார் சூரியா மீது வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.    இந்த நிலையில் தான் சூரியா தனது வீட்டில் ...

எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் கபசுரக் குடிநீர் விநியோகம்

Image
எஸ்.டி.பி.ஐ கட்சியின் 12 ஆம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு  அவிநாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேவராயம்பாளையம் ரேஷன் கடை, பஸ்நிலையம் மற்றும் அவிநாசி பகுதியில் உள்ள புது பஸ்நிலையம், தாலுக்கா அலுவலகம் என  நான்கு இடங்களில் கட்சிக்கொடியேற்றப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் கொரோனா பாதிப்பு ஏற்படாவண்ணம் பொதுநலன் கருதி சுமார் 1000 பேருக்கு முகக்கவசம் மற்றும் 40 லிட்டர் கபசுர குடிநீர் கஷாயம் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது.   மேலும் இரண்டு இடங்களில் 3 மரக்கன்றுகள்  நடப்பட்டது. இத்துடன் 5 இளைஞர்கள் புதிதாக கட்சியில் இணைந்தனர். நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைதலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமை தாங்கி கட்சிக்கொடியை ஏற்றினார். மாவட்ட செய்தி தொடர்பாளர் முகமது ஆசிக் பொதுமக்களுக்கு முகக்கவசம், கபசுர குடிநீர் கஷாயம் ஆகியவற்றை வழங்கினார்.   நிகழ்ச்சியில் அவிநாசி சட்டமன்ற தொகுதி தலைவர் முஸ்தபா, தொகுதி செயளாலர் தாரிக், தேவராயம்பாளையம் கிளைத்தலைவர் முபாரக்,  கிளை செயளாலர் பாருக், முன்னாள் பொருப்பாளர் நாசர் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்...

திருப்பூரில் கடைகள் வியாபார நிறுவனங்கள் திறக்கும் நேரம் குறைப்பு

Image
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருப்பூர் பர்னிச்சர் சங்கம், தமிழ்நாடு செல்போன் வியாபாரிகள் சங்கம், திருப்பூர் பாத்திரக்கடை சங்கம் உள்பட அனைத்து வணிகர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் குமரன், மாநிலத் துணைத் தலைவர்கள் பாலநாகமாணிக்கம், ஞானசேகரன், திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் கேசிஎம் துரைசாமி, திருப்பூர் மளிகை வியாபாரிகள் சங்கம் சிதம்பரம், மாவட்ட பேரமைப்பு மாநகரத் தலைவர் ஜான் வல்தரீஸ், துணை தலைவர் லிங்க முருகன், பேரமைப்பு மாவட்ட ஆலோசகர்கள் துரைசாமி பெரியசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் நாளை (23.6.2020) முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மட்டுமே கடைகளை திறந்து வியாபாரம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கங்களை சார்ந்த வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறோம். எ...

தமிழ்நாட்டில் 53 பேர் பலி... 2532 பேருக்கு கொரோனா... சென்னை தவிர மற்ற மாவட்டங்களிலும் நோய் பரவல் தீவிரம்

Image
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 2532 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் தொற்று பாதிப்பு காரணமாக 53 பேர் இறந்துள்ளனர். தமிழ்நாட்டில் கோரோனா நோய் தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக சென்னை மாநகரில் தினமும் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 2,532 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஆயிரத்து 493 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளது தெரியவந்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 127 பேரும் கடலூரில் 90 பேரும், மதுரையில் 68 பேரும் திருவள்ளூரில் 120 பேரும் திருவண்ணாமலையில் 76 பேரும் வேலூரில் 87 பேரும் என மற்ற மாவட்டங்களிலும் நோய் தொற்று பரவல் வேகம் எடுத்துள்ளது. இன்றைய நிலையில் 25 ஆயிரத்து 863 பேர் நோய் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையில் உள்ளனர்.  இன்று ஆயிரத்து 438 பேர் நோய் குணமாகி வீடுகளுக்குச் சென்றுள்ளனர். இதன் மூலம் நோய் குணமடைந்து வீடு சென்றவர் எண்ணிக்கை 32 ஆயிரத்து 754 ஆக உயர்ந்துள்ளது.  தமிழ்நாட்டில் இன்று பாதிக்கப்பட்ட 2532 பேரில் 2450 பேர் மட்டும் இங்கேயே பாதிப...

ஒற்றைக்காலில் நிற்கிறார் அமைச்சர் செங்கோட்டையன்... என்ன மேட்டர்னு நீங்களே பாருங்க

Image
சர்வதேச யோகா தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி கோபியில் உள்ள தனது வீட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் யோகாசனங்கள் செய்தார்.    படங்கள் இதோ

குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தில் தினக்கூலி தொழிலாளர்ளுக்கு கொரோனா நிவாரண உதவி

Image
குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தில் தினக்கூலி தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நிவாரண உதவி கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் சென்னை பல்லாவரம் அஸ்தினாபுரம் பகுதியில் வசிக்கும் ஏழை எளிய தினக்கூலி தொழிலாளர்கள் குடும்பங்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு  கிராம ஏழைகளுக்கான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் மற்றும் கோன்ச் புதுதில்லி அமைப்பும் இணைந்து  அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.இதில் தாம்பரம் தாசில்தார் சரவணன் மற்றும் தாம்பரம் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் ஸ்ரீராம்  அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இறுதியாக இயக்குனர் டாக்டர் இருதயசாமி மற்றும் ராகினி அவர்கள்  குழந்தை தொழிலாளர் சட்டம் மற்றும் பாதுகாப்பு குறித்து பேசினார்  கூறினார்.

44 பேர் பலி...1,843 பெருக்கு கொரோனா தொற்று... இன்று 797 பேர் குணமடைந்தனர்

Image
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தினமும் 2 ஆயிரம் பேருக்கு பாதிப்பு என்ற எண்ணிக்கை நெருங்க ஒரு சில  மட்டுமே குறைவாக உள்ளன. கொரோனா பரவல் அதிகரித்ததால் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டத்துக்காரர்கள், தங்களது சொந்த ஊருக்கு, இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் பயணங்களை மேற்கொண்டனர். இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு 19 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. முழு ஊரடங்கு அறிவிக்கப்படாது என முதல்வர் கூறி இருந்த நேரத்தில் மருத்துவக்குழு பரிந்துரை காரணமாக இந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 1843 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்ப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த தொற்று எண்ணிக்கை 46,504 ஆக உள்ளது. இன்று மட்டும் 18,403 சேம்பிள்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 7,29,002 சேம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.  சென்னையில் மட்டும் 1,257 பேருக்கு தொற்று ஏற்ப்பட்டு உள்ளது. செங்கல்பட்டில் 120, காஞ்சிபுரம் 39, திருவள்ளூர் 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட...

சென்னை ஊரடங்கில் என்னென்ன செயல்படும்.. முழு விவரம்

Image
முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை பெருநகரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நோய்த் தொற்றைத் தடுக்க நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. குறிப்பாக, சென்னையில் 15 மண்டலங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும், இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் மேற்பார்வையில், நோய்த் தொற்று உள்ளவர்களுடன் தொடர்புள்ளவர்களைக் (Contact tracing) கண்டறியும் பணி மண்டல அளவில் மேற்கொள்ளப்படுவதுடன், நோய்த் தடுப்பு பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, அப்பகுதியில் உள்ள ஏழைகளுக்கு முகக்கவசம், வைட்டமின் மாத்திரைகள், கபசுர குடிநீர் போன்றவை வழங்கப்படுகிறது. அவர்களின் வாழ்விடம் நெருக்கமாக இருந்தால், அவர்கள் தனிமை முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர். நோய்த் தொற்று ஏற்பட்டவர்கள் விபரம் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு, தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தவிர, சென்னையில் உள்ள 140 நகர ஆரம்ப சுகாதார மையங்களிலும், 19 மருத்துவமனைகளிலும் காய்ச்சல் சோதனை மையம் (Fever clinic) செயல்படுவதுடன், 300க்கும்...

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு... வாழ்வாதாரத்துக்கு ரூ.1000 தருகிறது தமிழக அரசு

தமிழகத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.  இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்திருந்த நிலையில், சென்னையில் தாறுமாறாக வைரஸ் பரவியது. கிட்டத்தட்ட தினமும் 2 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர்.  சென்னையில் டாக்டர்கள், நர்சுகளுக்கு நோய்த்தொற்று வேகமாக பரவியது அச்சமூட்டி வந்தது.  இதனால் இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் மக்கள் சென்னையை விட்டு அதிகளவில் வெளியேறினர். இந்நிலையில்,   சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. வரும் 19-ஆம் தேதி முதல் 12 நாட்களுக்கு அமலில் இருக்கும் இந்த ஊரடங்கில் அத்தியாவசிய கடைகள் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது. மற்றபடி அனைத்துக்கடைகளும் அடைக்கப்படும். தொழில்நிறுவனங்களும் இயங்காது.  பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.  மேலும், பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்று...

வேகமாக பரவும் கொரோனா...38 பேர் பலி...1,974 பேருக்கு தொற்று...

Image
தமிழகத்தில் இன்று மட்டும் 1974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த எண்ணிக்கை 44,661 ஆனது. இன்று மட்டும் 18,782 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. மொத்தமாக 7,10,599 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.  இதில் 19,676 பேர் ஆஸ்பத்திரிகளில சிகிச்சை பெற்று வருகிறார்கள். 24,547 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு சென்று உள்ளனர். கொரோனா தொற்றுக்கு இன்று தான் அதிகபட்சமாக 38 பேர் பலியாகி உள்ளனர்.இதுவரை 435 பேர் பலியாகி உள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக 1,415 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அடுத்தபடியாக செங் கல்பட்டில் 178 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டு உள்ளது.  

பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் இறந்ததாக உறவினர்கள் போராட்டம்   

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியத்தால் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் இறந்ததாக உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது     திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கேவிஆர் நகர் இரண்டாவது விதி பகுதியை சேர்ந்தவர்கள் பாண்டி மணியாள்  தம்பதியினர்.  இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பாக பிரசவத்திற்காக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் குழந்தையும் நலமுடன் இருந்த நிலையில் நேற்று இரவு மணியாளுக்கு  வயிற்றுவலி ஏற்பட்டதோடு ரத்தக்கசிவு ஏற்பட்டு உள்ளது ஆனால் பணியில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் செவிலியர்கள் மருத்துவம் செய்துள்ளனர் இது பலன் அளிக்காததால் நேற்று இரவு உயிரிழந்துள்ளார் . அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத சூழ்நிலையில் செவிலியர்கள் அலட்சியமாக செயல்பட்டதால் மணியாள்  உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  அங்கு வந்த காவல்துறையினர் நடவடிக்க...

குளக்கரை புதரில் உல்லாசமாக இருந்த காதல் ஜோடி...நேரில் பார்த்த 8 வயது சிறுவனை குத்திக் கொன்ற கொடூரம்

Image
குளக்கரை புதரில் காதலியுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த சிறுவனை குத்திக்கொன்ற கொடூர வாலிபர் கைது.  திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த சொட்டகவுண்டம்பாளையம் பகுதியை சார்ந்தவர்கள் தங்கராஜ்-சுமதி தம்பதியர். பனியன் தொழிலாளியாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்குவிக்னேஷ் (9) பவனேஷ் (8) இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும்  அங்குள்ள அரசு பள்ளியில் 4 மற்றும் 3ம் வகுப்பு பயின்று வருகின்றனர். இந்நிலையில்நேற்று முன் தினம் காலை முதல் இளைய மகன் பவனேஷ் காணாமல் போய் விட்டான். பெற்றோர்கள் அவனை தேடி வந்தன. இந்தநிலையில் நேற்று பள்ளபாளையம் பகுதியில் உள்ள குளக்கரையில் உள்ள புதரில் ரத்தகாயங்களுடன் பிணமாக கிடந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. இது பற்றி ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலிசார் பவனேஷின் பிணத்தை கைப்பற்றி விசாரணையை முடுக்கி விட்டனர். பவனேஷை கழுத்து மற்றும் வயிற்றுப்பகுதியில்  குத்தி கொண்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. விசாரணையில் அப்பகுதியை ...

திருப்பூர் அருகே 8 வயது சிறுவன் கொடூர கொலை !

திருப்பூர் அருகே 8 வயது சிறுவன் கொடூர கொலை !   உல்லாசமாக இருந்ததை பார்த்ததால் காதலர்கள்  வெறிச்செயல்.    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த சொட்டகவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர்கள் தங்கராஜ் - சுமதி தம்பதியர் இவர்களுக்கு  விக்னேஷ்(9) மற்றும் பவனேஷ்(8) என இரண்டு மகன்கள் உள்ளனர். பனியன் தொழிலாளி ஆன இவர்கள் காலையில் வேலைக்கு சென்றால் மாலைதான் வீடு திரும்புவார்கள் இதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில் நேற்றை தினம் பெற்றோர் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ள நிலையில் பவனேஷ் மதியத்தில் இருந்து காணவில்லை என கூறப்படுகிறது.  பின்னர் வேலையை முடித்துவந்த தங்கராஜ் நேற்று இரவு ஊத்துக்குளி காவல் நிலையம் சென்று மகனை காணவில்லை என புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை பல்லகவுண்டன் பாளையம் குளப்பகுதிக்கு சென்றவர்கள் பார்த்துவிட்டு ஊத்துக்குளி காவல் நிலையை போலிசாருக்கு தெரிவித்துளளனர்.  சம்பவ இடத்திற்கு சென்ற  காவல் துறையினர் உடலை கைபற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில் காணமல் போன பவனேஷ் வயிறு மற்றும் கழுத்து பகுதியில் குத்தி கொலை செய்யப்ப...

தூத்துக்குடியில் கொரோனாவுக்கு வாலிபர் பலி

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரானா நோய் தொற்றுக்கு  சிகிச்சைக்கு பெற்று வந்த இளைஞர் உயிரிழந்தார். இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர், வெம்பக்கோட்டை அருகில் உள்ள புள்ள கவுண்டன்பட்டி கிராமத்தை சார்ந்த பாலகிருஷ்ணன் மகன் மணிகண்டன் (வயது - 34). இவர்  சென்னையிலில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 7ம் தன் மனைவி அருள்மொழி (28), மகள் சிஸ்டிகா(4), ஆகியோருடன் சென்னை  வண்டலூரில் இருந்து புறப்பட்டு சொந்த ஊர் வந்தார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேராக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பாட்டார்.  கடந்த 10ம் தேதி இவருக்கும், இவரது மனைவி அருள் மொழிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மனைவி அருள்மொழி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கிசிச்சை பெற்று வரும் நிலையில்.  மணிகண்டன் இன்று அதிகாலை சுமார் 12.30 மணியளவில் இறந்துவிட்டார். இறந்த மணிகண்டன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர். ஏற்கனவே கடந்த ஏப்ரல் 10ம் தேதி தூத்துக்குடியை சார்ந்த மூதாட...

1982 பேருக்கு கொரோனா... மொத்த எண்ணிக்கை 40,698 ஆனது...18 பேர் பலி

Image
தமிழ்நாட்டில் இன்று மட்டும் 1,982 பேருக்கு கோரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம்  தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த மொத்த எண்ணிக்கை 40 ஆயிரத்து 698 ஆக உயர்ந்தது உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 18 பேர் உயிரிழந்து உள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 367 ஆக உள்ளது. இன்று மட்டும் 16,889 பேருக்கு செய்த பரிசோதனையில் இந்த முடிவு தெரிய வந்துள்ளது. மொத்தமாக இதுவரை 6,42,201 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இன்றைய நிலையில் 18,281 பேர் சிகிச்சையில் உள்ளனர். 22,047 குணமடைந்து வீடுகளுக்கு சென்று விட்டனர்.

21 பேர் பலி...1,685 பேருக்கு கொரோனா தொற்று

Image
தமிழகத்தில் இன்று மட்டும் 1685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 12,471 பேருக்கு செய்த சோதனையில் இந்த நோய்த்தொற்று விவரம் உறுதியாகி உள்ளது. மொத்தம் 34,914 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் இன்றுவரை 16,279 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையில் 12,570 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 18,325 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு சென்று விட்டனர்.  இன்று மட்டும் 21 பேர் இறந்துள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 304 பேர் இறந்து போய் விட்டனர்.      

கட்டணம் வசூலிக்க வழி தேடும் தனியார் பள்ளிகள்...ஆன்லைன் வகுப்புகளால் யாருக்கு பயன்

Image
கொரோனா தொற்றுப் பரவல் எதைஎதையோ சர்வசாதாரணமாக மாற்றி விட்டு செல்கிறது.. வாழ்க்கையின் அடுத்த நிலைக்கான முதல் படிக்கல் என்று சொல்லப்படும் பத்தாம் வகுப்புத்தேர்வையே ரத்து செய்தாகி விட்டது.எல்லோரும் பாஸ் ஆகி விட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது... ஆனால் தனியார் பள்ளிகள் இன்னமும் ஆன்லைன் வகுப்பெடுப்பதாக தினமும் களேபரம் பண்ணுகிறார்கள்.. ஆன்லைன் வகுப்புகளில் பாடம் நடத்தும் ஆசிரியை ஆங்கிலத்தில் சொல்வதை கேட்டுக் கொண்டு, பெற்றோர்களும் குழந்தைகளை ஸ்மார்ட் போனின் முன்புறமோ.., லேப் டாப் முன்புறமோ கட்டிப்போட்டு விடுகிறார்கள். இதற்கென பல பெற்றோர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களை குழந்தைகள் வசம் தந்து விட்டு போன் இல்லாமல் வெளியே செல்வதையும் பார்க்க முடிகிறது. அந்த போன்களில் Parents Control என எதையும் போட்டுத்தொலைக்காமல் அப்படியே தந்து விட்டுப் போகிறார்கள்.(அது பற்றி பல பெற்றோர்களுக்கே தெரியவில்லை, அவர்கள் என்ன செய்வார்கள்?) ஆன்லைன் வகுப்புகள் முடிந்ததும், Game விளையாடும்போது இடையில் வரும் விளம்பரங்களும், youtube ல் குழந்தைகள் பார்க்கும் போது இடையில் வரும் கண்டகருமங்களும் குழந்தைகள் மனதில் தினமும் நஞ்சை விதைத்துக் ...

எல்லாரும் பாஸ் ஆயாச்சு... பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புக்கு வரவேற்பு

Image
தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியதாவது: பத்தாம் வகுப்பு மற்றும் பதினோறாம் வகுப்பில் விடுபட்ட தேர்வுகளை ஜூன் 15 முதல் நடத்த அரசு அறிவித்து இருந்தது. தற்போது உயர்நீதிமன்றம் தேர்வை தள்ளி வைக்க கேட்டுக் கொண்டுள்ளது. சென்னை உள்பட சில மாவட்டங்களில் நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. எனவே பெற்றோரின் கோரிக்கையை ஏற்று பத்தாம் வகுப்பு தேர்வுகள் மற்றும் பதினோறாம் வகுப்பில் விடுபட்ட தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மதிப்பெண்களை பொறுத்தவரை காலாண்டு, அரையாண்டு தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களில் இருந்து 80 சதவீத மதிப்பெண்களும், வருகைப்பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். 12ம் வகுப்பு தேர்வை பொறுத்தவரை மறு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் என அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.   

திருப்பூர் மாணவிக்கு கொரோனா: கோவை நர்சிங் மாணவியர் விடுதி மூடல்

Image
திருப்பூர் மாவட்டம், மூலனூரை சேர்ந்த 19 வயது நர்சிங் மாணவி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நர்சிங் விடுதியில் தங்கி நர்சிங் பயின்று வந்து உள்ளார். இவர் கடந்த மே.25 ஆம் தேதி முதல் மூலனூரில் தங்கி இருந்து விட்டு, 5 ஆம் தேதி கோவை விடுதிக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது.  இதையடுத்து அந்த மாணவி தங்கியிருந்த விடுதியின் முதல்தளம் மூடப்பட்டது. மாணவியுடன் தங்கி இருந்த 40 நர்சிங் மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.  இதே போல திருவனந்தபுரத்தில் இருந்து கார் மூலம் கோவை வந்த நபருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  நேற்று பிசியோதெரபிஸ்ட் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்த வளாகம் மூடப்பட்ட நிலையில், இன்று திருப்பூர் மாணவிக்கும், திருவனந்தபுரத்தில் இருந்து வந்தவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இவர்களுக்கு கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் கோவை மருத்துவப்பணிகள் துணை இயக்குநர் தரப்பி...

ஒரே நாளில் 18 பேர் பலி: தமிழகத்தில் இன்று ஆயிரத்து 515 பேருக்கு கொரோனா

Image
தமிழ்நாட்டில் இன்று 1515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மொத்தமாக 31,667 ஆனது.  தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் 18 பேர் செத்துப் போய் உள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 269 ஆக உள்ளது.  இன்று மட்டும் 15 ஆயிரத்து 671 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 5 லட்சத்து 66 ஆயிரத்து 314 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று நோய் குணமடைந்து 604 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு சென்றுள்ளனர். இதுவரையில் 16 ஆயிரத்து 999 பேர் நோய் குணமடைந்து வீடுகளுக்குச் சென்று உள்ளனர். இப்போதைய நிலையில் 14396 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டங்களில் பார்த்தால் சென்னையில்தான் அதிக பாதிப்பு தெரிய வந்துள்ளது. சென்னையில் 1155 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக செங்கல்பட்டில் 135 பேரக்கும், திருவள்ளூரில் 55 பேருக்கும் நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.    

50 வயது பெண்ணை கற்பழிக்க முயன்ற போது  கொலை செய்த 22 வயது  வாலிபர்

Image
கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மனைவி லட்சுமி (வயது 50). இவர்  திருப்பூர் பாண்டியன் நகர் அருகில் உள்ள அண்ணா நகரில் தனியாக வசித்து வந்ததுடன் அப்பகுதியில் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார்.  நேற்று இரவு இலட்சுமி வீட்டில் தனியாக இருக்கும் போது, பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர் பூபதி (வயது 22)., லட்சுமியின் வீட்டுக்குள் புகுந்து அவரை கற்பழிக்க முயற்சி செய்தார்.  கற்பழிக்க முயற்சி செய்த பூபதி லட்சுமி முத்தமிட சென்றார், அப்போது லட்சுமி பூபதியின் உதட்டை பிடித்து கடித்து வைத்தார். இதில் பூபதிக்கு உதட்டில் இரத்த காயம் ஏற்பட்டது.  வலி தாங்க முடியாமல் ஆத்திரமடைந்த பூபதி பக்கத்திலிருந்த தோசைக்கல்லை எடுத்து லட்சுமியின் மண்டையில் ஒரே அடி யாக அடித்து கொன்று விட்டார்.  இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் பூபதியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பூபதி கைது செய்த திருமுருகன்பூண்டி போலீசார் அவர் மீது கற்பழிக்க முயற்சி,  கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 22 வயது வாலிபர் 50 வயது பெண்ணை கற்பழிக்க முயற்சி செய்து கொலை செய்த...

கையும் கழுவுறதில்ல... மாஸ்க்கும் போடுறதில்ல...இன்று மட்டும் 1,286 பேருக்கு கொரோனா...நூத்துக்கு 11 பேருக்கு பாதிப்பு...கவனக்குறைவால் பரவல் அதிகமாகிறதா?

Image
தமிழ்நாட்டில் இன்று 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்தமாக 25,872 பேருக்கு இதுவரை தொற்று உறுதியாகி  உள்ளது. இதில்இன்று மட்டும் 610 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். மேலும் இதுவரை, 14,316 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு சென்று உள்ளனர். இன்னும் 11,345 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். இன்று மட்டும் 14,101 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் 1,286 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளதை அடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில் நூற்றுக்கு 11 பேருக்கு (10.96%) கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதுவரை மொத்தமாக 5,28,534 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.  இன்று கொரோனாவுக்கு 11 பேர் செத்துப்போய்  விட்டனர். இதுவரை 208 பேர் செத்திருக்கிறார்கள்.  சென்னையில் மட்டும் 1,012 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. கொரோனா பரவலின் வேகம் அதிகம் ஆகி உள்ள நிலையில், பொதுமக்களிடம் விழிப்புணர்வு குறைந்து வருகிறது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி, கைகழுவதல் போன்ற தற்காப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் தவிர்த்து விடுகி...

லாக்டவுன் முடிஞ்சி பஸ் ஸ்டாண்ட காணோம்னு தேடாதீங்க... திருப்பூரில் எந்தெந்த பஸ் எங்க நிக்கும்... போலீஸ் கமிஷனர் தகவல்

Image
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: திருப்பூர் மாநகரில் பழைய பேருந்து நிலையம் கட்டிடவேலை நடைபெறுவதால் பின்வருமாறு மாற்றுவழியில் வாகனங்கள் செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறது. கொடுமணல், குன்னத்தூர்,நம்பியூர், அவினாசி, கருமத்தம்பட்டி, நெருப்பெரிச்சல், வாவிபாளையம், ஊத்துக்குளி, பெருமாநல்லூர், கருவலூர், சேவூர், சோமனூர், அய்யன்கோயில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச்செல்லும் நகரபேருந்துகள் அனைத்தும் வழக்கமான வழியில் பழைய பேருந்துநிலையம் வந்து செல்லும். பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம் மற்றும் கோயம்புத்தூர் செல்லும் பேருந்துகள் அனைத்தும் பழைய பேருந்து நிலையம் வந்து MO Junction, ABT Road, சந்தைபேட்டை வழியாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்புறம் உள்ள தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்படும். முதலிபாளையம், நாச்சிபாளையம், சிட்கோ , கொடுவாய், காசிபாளையம், படியூர், காங்கேயம், சிவன்மலை, அவிநாசிபாளையம், கொடுவாய், கோவில்வழி, அலகுமலை, பெருந்தொழுவு, கண்டியன்கோவில் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் அனைத்தும் பழைய ...

ஆர்.எஸ்.பாரதியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Image
திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் உயர் பணியில் இருக்கின்ற பட்டியல் இன மக்களை தரக்குறைவாக பேசி வரும்  திமுக நிர்வாகிகளையும் மு.க.ஸ்டாலினையும் கண்டிக்கும் வகையில் அப்பகுதி அதிமுக பாசறை செயலாளர் தங்கராஜ் தலைமையில்,  சிறுபூலுவபட்டியில்  பட்டியலின மக்களின் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  உடன் ஆறுமுகம், மனீஸ், மாணிக்கம், குமார், ராம், மாகாளிராஸ், பந்தல், கோவிந்த், மற்றும், ஏராளமானோர் கலந்து கொண்டனர்