Posts

Showing posts from July, 2020

97 பேர் மரணம்...5,864 பேருக்கு கொரோனா தொற்று

Image
தமிழ்நாட்டில் 5,864 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்று மட்டும் மரணம் அடைந்தோர் 97 பேர் ஆவர். இதன் மூலம் இதுவரை மொத்தமாக 2,39,978 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் 3,838 பேர் செத்துப்போய் உள்ளனர்.  இதில் 57,962 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையில் மட்டும் 1,175 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 354 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. திருவள்ளூரில் 325 பேருக்கும், கோவையில் 303 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.  சென்னையில் மட்டும் 18 பேர் இறந்து உள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக திருநெல்வேலியில் 8 பேர் செத்துள்ளனர்.  இன்று மட்டும் 5,295 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு சென்று உள்ளனர். இதுவரை மொத்தமாக 1,78,178 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு சென்று விட்டனர்.  இன்று தான் அதிகபட்சமாக  97 பேர் கொரோனாவால் இறந்து போய் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.   

இ-பாஸ் கட்டாயம், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, பொது போக்குவரத்து கிடையாது... ஆகஸ்டிலும் தற்போதைய நிலையே தொடரும்

தமிழகத்தில் ஊரடங்கு தற்போதைய நிலையே தொடரும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பில், ‘ தமிழகத்தில் ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை தொடரும். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம். ஞாயிற்றுக்கிழமை தோறும் தளர்வில்லா முழு ஊரடங்கு தொடரும்.  பொது,  தனியார் போக்குவரத்துக்கு தடை தொடரும்.  உடற்பயிற்சிக் கூடங்கள் செயல்பட அனுமதி இல்லை. சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து சுதந்திர தினம் கொண்டாடலாம். என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.  ஜூலை மாதத்தில் இருந்த தளர்வுகளும், கட்டுப்பாடுகளும் அப்படியே தொடருகிறது.   இதுகுறித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முழு அறிக்கை இதோ: இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. நான் பல்வேறு தினங்களில் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட 12 ஒருங்கிணைப்புக் குழுக்களின...

88 பேர் பலி... 6,972 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் 7 ஆயிரம் பாதிப்பு என்ற எண்ணிக்கைக்கு ஒரு சில எண்கள் மட்டுமே குறைவாக உள்ளது.  இன்று மட்டும் 6,972 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்ப்பட்டு உள்ளது. இதன்மூலம் இதுவரையிலான மொத்த தொற்று பாதிப்பு ஏற்ப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,27,688 ஆக உள்ளது.  இதில் 54,896 ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 1,66,956 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்று உள்ளனர்.  இன்று மட்டும் 88 பேர் நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவரை மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை  3,659 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1107 பேருக்கு பாதிப்பு ஏற்ப்பட்டு உள்ளது. 

திருப்பூர் தேவணம்பாயைத்தில் சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் இலவச முதலுதவி மையம் துவக்கம் 

Image
பல்லடம் வட்டம், பொங்கலூர் அருகே உள்ள தேவணம்பாயைத்தில் சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்ற அலுவகத்தில் சுவாமி விவேகானந்தா முதலுதவி மையம் தொடங்கப்பட்டது. இதைப்பற்றி  மன்ற செயலாளர் சிவக்குமார் தெரிவிக்கையில் தற்போதைய நோய் தொற்று காலத்தில் சிறு சிறு விசயங்களுக்கு மருத்துவமனை செல்கின்றனர். அங்கு அதிக கூட்டத்தின் காரணமாக மேலும் தொற்றுக்களால் பாதிப்புக்குள்ளாகின்றனர் . அதனை  குறைக்கும் விதத்தில் சி று சிறு பிரச்சனைகளுக்கு இலவசமாக பரிசோதனை செய்ய எங்கள் மன்றத்தின் சார்பில் ஏற்பாடு செய்துள்ளோம். இதற்காக  இரத்த அழுத்த சோதணை கருவி, சர்க்கரை அளவு கருவி, உடல் எடை, உயரம் உள்ளடக்கிய பி.எம்.ஐ சோதணை, உடல் வெப்பநிலை கருவி, பல்ஸ் ஆக்சிமீட்டர், நெபுலைசர்  போன்ற சுமார் 20000 ரூபாய்  மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை கொண்டு  இலவச முதலுதவி மையம் தொடங்கியுள்ளோம். இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் பயனடைவார்கள். இந்த இலவச பரிசோதனை தொடர்ந்து வாரவாரம் நடைபெறும் என்று கூறினார். இந்நிகழ்வில் மன்ற செயலாளர் சிவக்குமார், துணை தலைவர் சந்தோஸ்குமார், துணை பொருளாளர் தமிழரசன், துணை செயலாளர...

உதவி கேட்ட குடும்பத்திற்கு வாழ்க்கை கொடுத்த பெண்மணி...

Image
தேனி மாவட்டம் கோம்பை பகுதியில் வசிப்பவர் மாணிக்கவாசகர். இவர் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் படுத்தப்படுக்கையாக உள்ளார். இவரின் சூழிநிலையை அறிந்த  தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பத்திரகாளிபுரத்தை ராஜேஷ்வரி என்பவர் நண்பர்களின் உதவியுடன் அவருக்கு தனித்துவமான படுக்கையும், அவர்களின் கும்பத்துக்கு நிரந்தர வருமானம் கிடைக்க தையல் மிசினும் வழங்கியுள்ளார். இதைப்பற்றி அவர் பேசுகையில் :- முழு ஊரடங்கு சமயத்தில் நான் உதவி தேவைப்படும் நலிந்த குடும்பங்களுக்கு தேடி சென்று உதவிகள் செய்துவந்தேன். அந்த சமயத்தில் கோம்பை பகுதியில் இருந்து மாணிக்கவாசகர் என்பவர் என்னிடம் உதவி கேட்டிருந்தார். அவருக்கு தேவையான அரிசி மளிகை பொருட்டாகள் கொடுத்தேன். அப்போது என்னால் எழுந்து நடக்க முடியாது படுத்தப்படுக்கையாகவே இருக்க சிரமமாக உள்ளது. மெத்தை வாங்கி கொடுங்கள் என்று என்னிடம் கேட்டார். சாதாரண மெத்தை போல் இல்லாமல் இவருக்கு வசதியாக ஆர்டர் கொடுத்து செய்ய வேண்டும். விசாரித்தபோது சுமார் 12,000 வரும் என்று சொன்னார்கள். நண்பர்களின் உதவியுடன் அதை செய்து கொடுத்தேன். அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.  பள்ளியில் ...

திருப்பூர் மாநகராட்சி இடத்தில் செயல்பட்ட பிரேமா பள்ளி இடித்து அகற்றம்: அதிகாரிகள் அதிரடி

Image
திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளிக் கட்டிடம் போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டது. வீடியோ இதோ:   திருப்பூர் வாலிபாளையம் சடையப்பன் கோவில் அருகில் 1970 ஆம் ஆண்டு திருப்பூர் நகராட்சி காய்கறி மார்க்கெட் கட்டப்பட்டது. 1975 ஆம் ஆண்டு காய்கறி மார்க்கெட் கட்டிடத்துடன் தனியார் பள்ளி நடத்த பிரேமா ரவி என்பவருக்கு 150 ரூபாய் குத்தகைக்கு விடப்பட்டது. அதில் அவர் பிரேமா நர்சரி பள்ளி என்ற பள்ளியை நடத்தி வந்தார். பின்னர் 1982 ஆம் ஆண்டு நகராட்சி சார்பில் பள்ளிக்கடிடத்தை காலி செய்ய மாநகராட்சி கோரியபோது  பள்ளி நிர்வாகம் காலி செய்ய மறுத்து நீதி மன்றத்தை அணுகியது.   இதைதொடர்ந்து அந்த வழக்கு நடந்து வந்த நிலையில், தற்போது மேல்முறையீட்டு வழக்கில் மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.   அதனடிப்படையில் திருப்பூர் மாநகராட்சி உதவி ஆணையாளர்கள் சுப்பிரமணி, தங்கவேல்ராஜ், மற்றும் உதவி பொறியாளர் கோவிந்த பிரபாகர் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் இன்று காலை பள்ளிக்கட்டிடத்தை காலி செய்து இடித்து அகற்றினர்.    இதன்மூலம் 38 ஆண்டுகளுக்கு பிறக...

தமிழ்நாட்டில் 6,986 பேருக்கு கொரோனா.. 85 பேர் மரணம்

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளது. என்றைக்குத்தான் உச்சமடைந்து எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும் என தமிழக மக்கள் அனைவரும் எதிர்பார்ப்பில் உ ள்ளனர்.  இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு 6,986 ஆக அதிகரித்து உள்ளது. இதன்மூலம் மாநிலத்தின் மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2,13,723 ஆக உள்ளது. இதில் 52,273 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  சென்னையில் மட்டும் 1,155 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. 

தூயபனிமயமாதா பேராலய திருவிழா: பொதுமக்கள் பங்கேற்பின்றி கொடியேற்றம்

Image
தூத்துக்குடி தூயபனிமயமாதா பேராலயத்தின் 438 வது திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் தூயபனிமயமாதா திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடி ஆலயம் எதிரில் உள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டாமெனவும் வீடுகளில் இருந்தே பிரார்த்தனை செய்யும்படியும் மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் கேட்டு கொண்டதன்பேரில் கொடியேற்றம் பொதுமக்கள் பங்கேற்பில்லாமல் நடைபெற்றது. தூத்துக்குடி தூயபனிமயமாதா பேராலய திருவிழா இன்று துவங்கி வரும் ஆகஸ்டு 5 ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. தூத்துக்குடி தூயபனிமயமாதா பேராலயத்தில் உள்ள பனிமயமாதா அன்னைக்கு இன்று பிற்பகல் 12 மணிக்கு பொன்மகுடம் பூட்டப்படுகிறது திருவிழாவில் தினந்தோறும் நடைபெறும் சிறப்பு ஆராதனைகள் திருப்பலிகள் பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல் நடைபெறும் என ஏற்கனவே மறை மாவட்ட ஆயர் தெரிவித்து உள்ளார் .

தமிழ்நாட்டில் 6,472 பேருக்கு கொரோனா... 88 பேர் பலி

தமிழ்நாட்டில் இன்று புதிய உச்சமாக 6472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த எண்ணிக்கை 1,92,964 ஆக உள்ளது. இதில் 52,939 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1,36,793 பேர் குணமடைந்து வீடு சென்று உள்ளனர் இன்று புதிதாக 88 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை 3,232 பேர் தொற்று காரணமாக உயிரிழந்து உள்ளனர். இன்று மட்டும் சென்னையில் 1,336 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் 11 பேர் இறந்துள்ளனர்.  விருதுநகரில் 480, திருவள்ளூர் 416,தூத்துக்குடி 415 என சென்னை அல்லாத மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

அழகு கலைஞர்களுக்கு ரூ.15 ஆயிரம் மாதாந்திர நிவாரணம்: 14 கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமருக்கு இ-மெயில் மனு

Image
கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பல்வேறு தரப்பிலான தொழில்களையும், வாழ்வாதாரத்தையும்  ஒட்டுமொத்தமாய் காலி செய்து விட்ட நிலையில், அழகு கலைஞர்கள், சிகையலங்கார கலைஞர்களின் வாழ்வாதாரமும் முற்றிலும் முடங்கி உள்ளது. எந்த வித வருமானமும் இல்லாமல் தவிக்கும் அழகு கலைஞர்கள், வாடகை, லோன்கள், மின்கட்டணம், மாதாந்திர செலவுகளுக்கு பணம் இல்லாமல் தவிக்கின்றனர்.  அகில இந்திய சிகை அலங்காரம் மற்றும் அழகுத்துறை சங்கத்தின் தலைவர் சங்கீதா சவுகான் தலைமையில், நாடு முழுவதும்  அழகுத்துறை சார் நிபுணர்களின் பிரச்சினைகளை இந்திய அரசு நிர்வாகத்துக்கு எடுத்து சென்று தீர்வு பெறும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில் ஊரடங்கு தொடர்வதாலும், அழகுக்கலை நிலையங்களை மேலும்   திறக்க இயலாமல் போனதால், நாடு முழுவதும் அழகுக் கலை நிபுணர்கள் மற்றும் சிகையலங்கார கலைஞர்கள் சார்பில் பாரதப்பிரதமருக்கு, இ-மெயில் மூலம் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.  நாடு முழுவதும் கில இந்திய சிகை அலங்காரம் மற்றும் அழகுத்துறை சங்கத்தின் தலைவர் சங்கீதா சவுகான் தலைமையில் இந்த மனு அனுப்பும் நிகழ்வுகள் நடைபெற்றது. ஆயிரக்கணக்க...

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் முழுவதுமாக கொள்முதல் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

Image
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், சேடர்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் சங்க உறுப்பினர்கள் கொண்டு வரும்  பாலை முழுவதும் கொள்முதல் செய்யாமல்  திருப்பி அனுப்பும் நடவடிக்கையை கண்டித்தும், விவசாயிகள் கொண்டு வரும் பாலை முழுவதுமாக கொள்முதல் செய்ய கோரி   சேடர்பாளையம் பால் கூட்டுறவு  சங்கத்தின் முன்பாக சங்க துணைத் தலைவர் எஸ்.கே.பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இப்போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.குமார், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட அமைப்பாளர் எஸ்.கே.கொளந்தசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். திரளான பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

பவானி காவல் நிலையத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டோர்க்கு அரிசி வழங்கினார்

Image
ஊரடங்கு காலங்களில் உணவின்றி தவித்து வந்த ஊனமுற்றோர் மற்றும் கண் பார்வை இழந்தவர்களுக்கு காவலர் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது     கடந்த 5 மாதங்களாக கொரோனா தொற்றுநோய் காரணமாக பலரும் வேலை இழந்து உணவின்றி தவித்து வந்த நிலையில் இதில் கண்பார்வையற்றோர் ஊனமுற்றோர் ஆகியோருக்கு பவானி  காவல் நிலையத்தில் ஆய்வாளர் தேவேந்திரன் ஏழை எளிய மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக பவானி சுற்றுப்பகுதிகளில் பவானி காவல்துறை உதவி கண்காணிப்பாளர் சேகர் தலைமை தாங்கி வழங்கினார்      பவானி காவல் நிலையத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டோர்க்கு அரிசி வழங்கினார் பின்பு  வெளியே செல்லும் போது முகக் கவசங்கள் அணிந்து செல்லவேண்டும் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வரும்போது கைகால்களை நன்றாக சோப்புப் போட்டுக் கழுவி விட்டு வீட்டுக்குள் வர வேண்டும் என்றும் . சத்தான உணவு பொருட்களை உண்ண வேண்டும் அதுமட்டுமல்லாமல் அரசு அறிவித்துள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடந்துகொண்டால் கொரோனாவைரஸிலிருந்து நம் அனைவரையும் காப்பாற்றிக் கொள்ளு முடியும்  என்று அறிவுரை வழங்கினார் இந்த ...

விரைவில் நாட்டு வைத்தியம் ஆயுர்வேத மருத்துவம் வருகிறது

Image
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம் கூட்டம் மாவட்ட ஆட்ச்சியர் சண்முகசுந்தரம் தலைமை குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கிராமிய நிர்வாகிகள் வி.ஏ.ஓ. கிராமிய அலுவலர் மற்றும் கிராமிய உதவியாளர்கள் கலந்து கொண்டனர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் செய்தியாளர்களிடம் கூறுகையில் கொரோனா வைரஸ் தொற்று நோய் அதிகமாக தமிழ்நாட்டில் பரவி வருகிறது நம் வேலூர் மாவட்டத்தில் அதிகமாக தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் குடியாத்தத்தில் மேலும் அதிகமாக உள்ளது பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணியவேண்டும் குடியாத்தம் பகுதியில் சிலர் சரிவராத முக கவசம் அணியாமல் உள்ளனர் இது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் குடியாத்தத்தில் கொரோனா தோற்று அதிகமாக இருப்பதால் சித்தர் வைத்தியம் கூடவே ஆயுர்வேத மருத்துவம் விரைவில் அறிவிக்கப்படும் நோயாளிகள் விருப்பப்பட்டால் ஆயுர்வேத மருத்துவம் கூடவே சித்தர் வைத்தியம் செய்து கொள்ளலாம் இந்தக் கொடிய நோய் அழிக்க நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் கொரோனா தோற்று  நோயாளிகளுக்கு தங்குவதற்கு ...

மின்கட்டண உயர்வை நீக்க வேண்டும் என வலியுறுத்தி திமுகவினர் ஆர்ப்பாட்டம்

Image
மின்கட்டண உயர்வை நீக்க வேண்டும் என வலியுறுத்தி திமுகவினர் ஆர்ப்பாட்டம்.      கோபி கள்ளிப்பட்டியில் மாநில விவசாய அணி சார்பில் இணைச் செயலாளர் கள்ளிப்பட்டிமணி தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி சமூக இடைவெளிவிட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் லக்கம்பட்டி பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் சுப்பிரமணியம் உட்பட பலர் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கொடுமுடி ஒன்றிய திமுக அலுவலகம் முன்பு மறைமுக மின் கட்டணத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

திமுக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துச்சாமி வழிகாட்டுதலின்படி கொடுமுடி ஒன்றிய திமுக செயலாளர் மு.சின்னசாமி தலைமையில் கொடுமுடி ஒன்றிய திமுக அலுவலகத்தின் முன்பு அதிமுக அரசின் மறைமுக மின் கட்டணத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கழக நிர்வாகிகள் முன்னோடிகள் கழக உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.     

திருப்பூரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

Image
திருப்பூரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதிக்க கோரி மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட  எஸ்.வி காலனி பகுதியில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வந்ததை அடுத்து அந்த பகுதி முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு சென்றார் . மாவட்ட ஆட்சியர் சென்ற நிலையில் அத்தியாவசிய பொருட்களான உணவுப்பொருட்கள் மற்றும் மருந்து வாங்க தங்களை அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் மூலமாக பாதுகாப்பான முறையில் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.மேலும் வெளியாட்கள் யாரும் வெளியே இருந்து உள்ளே வரக்கூடாது என்பதை பொதுமக்கள் உறு...

குடியாத்தம் நகராட்சியில் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு

Image
கொரோனா வைரஸ் நோய்த்தடுப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடியாத்தம் நகராட்சியில் தினமும் கொரோனா பாதிக்கப்படுபர்வகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுவரை 40 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து குடியாத்தம் நகராட்சி பகுதியில் வரும் 24-07-2020 தேதி முதல் 31-07-2020ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த ஊரடங்கில்  சிறு, குறு தொழிலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வழக்கம்போல் இயங்கலாம்.   ஹோட்டல்கள் வழக்கம் போல் இரவு 9 மணி வரை இயங்கலாம். பேக்கரிகள், ஸ்வீட் ஸ்டால், தேநீர் கடைகள் திறக்க அனுமதியில்லை. என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் நடக்கக்கூடிய கல்லூரிகளுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் -நிர்வாகம் அறிவிப்பு

Image
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் நடக்கக்கூடிய கல்லூரிகளுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் நிர்வாகம் அறிவிப்பு.     பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் இந்து அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்பட்டு வரும் நிலையில் திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பாக பழனி நகர மற்றும் புறநகர கிராம பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் உயர் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி மற்றும் மகளிருக்கான பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி, மற்றும் தொழில்நுட்ப மாணவர்கள் பயிலும் விதமாக பழனியாண்டவர் தொழில்நுட்பக் கல்லூரி போன்றவைகள் நிறுவப்பட்டு  தேவஸ்தான நிர்வாகத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.ஆண்கள் கலைக்கல்லூரி மதுரை காமராசர் பல்கலைக் கழகத்துடனும் பெண்கள் கலைக்கல்லூரி அன்னை தெரசா பல்கலைக்கழகதுடனும் தொழில்நுட்ப கல்லூரி அண்ணா பல்கலைக் கழகத்துடனும் இணைக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 2020- 21 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடை...

நீலகிரி மாவட்டம் குன்னூரில் திமுக சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

Image
  நீலகிரி  மாவட்டம் குன்னூரில்  திமுக சார்பில் 18வது வார்டில் மின்சாரக் கட்டண உயர்வை  கண்டித்து திமுக நகர இளைஞர் அணி துணை அமைப்பாளரும், 18வது வார்டு கிளை கழகச் செயலாளருமான ஜெ.சாதிக்பாஷா தலைமையில் தலைமை கழகப்  பேச்சாளர் ஜாகீர் உசேன் முன்னிலையில் கருப்புக்கொடி  ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.    

ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

Image
ஈரோடு காளைமாடு சிலை அருகே ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அருந்ததியர் சமூகத்திற்கு வழங்கியுள்ள 3 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து சட்டப்படி தனி ஒதுக்கீடு 6 சதவீதத்தை அமுல்படுத்திய அரசாணை வெளியிட வேண்டும். அருந்ததியர் உட்பிரிவுகள் ஒன்றிணைத்து ஆதித்தமிழர் என அறிவிக்க வேண்டும் என்பன உட்பட பல கோரிக்கைகள் இதில் உள்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.மேற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இதில் நாகராசன், வீரமணி, கொங்குயுவராஜ், அண்ணா துரை , பஷீர் அஹமத் கான், ஆதி தர்மன், மணி தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மின்கட்டண குழப்பத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தி திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி சமூக இடைவெளிவிட்டு ஆர்ப்பாட்டம்

Image
மின்கட்டண குழப்பத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தி திமுகவினர் ஆர்ப்பாட்டம்.     கோபி அருகே உள்ள நம்பியூரில் ஒன்றிய பொறுப்பாளர் மெடிக்கல் செந்தில்குமார் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி சமூக இடைவெளிவிட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஈரோடு வடக்கு மாவட்ட சிறுபாண்மை துணை அமைப்பாளர் அல்லாபிச்சை, ஒன்றிய துணைச்செயலாளர் மைக் பழனிச்சாமி, பொருளாளர் என்.சி.சண்முகம், நம்பியூர் வழக்குரைஞர் சென்னியப்பன். மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் நா.க. ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட பிரதநிதி மானோகரன்.வேலுச்சாமி. முருகசாமி, தொ.மு.ச ஈ.கே.சரவணன். இளைஞரணி வடிவேல், ராஜ்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

திமுக சார்பாக மின்கட்டண உயர்வை குறித்து தனிமனித இடைவெளி மற்றும் முக கவசம் அணிந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Image
தமிழ்நாடு முழுவதும் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மின்கட்டண உயர்வை குறித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை 35வது கோட்டத்திற்குட்பட்ட நம்பர் 2 பிள்ளையார் கோவில் தெருவில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக மின் கட்டண உயர்வை கண்டித்து சேலம் பொன்னம்மாப்பேட்டை திமுக வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் விஜயன் அவர்களின் தலைமையில் கார்த்தி கண்ணன் கௌதம்  சாமியார்ஜெகநாதன்  பவா நாராயணன்ஆகியோர்  கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்  தனிமனித இடைவெளி மற்றும் முக கவசம் அணிந்து நடைபெற்றது. கொரோனோ வைரஸ் நோய் காரணமாக அந்தந்த பகுதிகளில் உள்ள திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக மிகவும் எளிமையான முறையில் அதிக கூட்டம் சேர்க்காமல் குறைந்த தொண்டர்களுடன் நடைபெற்றது.  

அதிமுக மாவட்ட செயலாளர் முன்னால் அமைச்சர் புத்திசந்திரன் சார்பில் நிவாரண உதவிகள்

Image
நீலகிரி மாவட்டத்தில் நாளுக்க நாள் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் நலத்திட்ட உதவகள் பல்வேறு அமைப்புளாலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும் வழங்கபட்டு வரும் நிலையில் நீலகிரி மாவட்டம் டி ஓரநள்ளி கிராமம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் நீலகிரி மாவட்ட முன்னால் அமைச்சர் அதிமுக மாவட்ட செயலாளருமான புத்திசந்திரன் அவர்கள் அங்கு வசிக்கும் 400 குடும்பங்களுக்க மளிகை தொகுப்பு மற்றும் காய்கறிகளை வழங்கினார். உடன் இன்கோ சேர்மன் சிவக்குமார் உதகை நகராட்சி ஒன்றியத்தின் பெரும் தலைவருமான மாயன், தலைவர் ராம் வாத்தியார் சிவக்குமார் மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் ரஜினி எ சிவக்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்

கோத்தகிரி போக்குவரத்து காவல் துறை சார்பாக விழிப்புணர்வு

Image
கோத்தகிரி போக்குவரத்து காவல் துறை சார்பாக விழிப்புணர்வு நடைபெற்றது. கொரோனா இல்லாத மாவட்டமாக இருந்த நீலகிரியில் இன்று நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில் தற்போது 450 நபர்களுக்கு மேலாக தொற்று ஏற்புட்டுள்ளதை தொடர்ந்து கோத்தகிரி போக்குவரத்து காவல் துறையினர் கிராமம் கிராமமாக சென்று விழிப்புணர்வு கூட்டம் நடத்தி வருகின்றனா. இந்த நிகழ்வுகளில் கை கழுவும் முறை முககவசம் அணிவது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. கோத்தகிரி கிருஷ்ணாபுரம்  பகுதியில் வசிக்கும் மக்களுக்க சானிடைசர் கபசுரகுடிநீர் மற்றும் முககவசம்  சுமார் 100 நபர்களக்க கோத்தகிரி போக்குவரத்து  காவல் துறை ஆய்வாளர் அவர்களால் வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் பழங்குடியின மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது

Image
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பல பகுதிகள் சீல் வைக்கப்பட்டு வருவதால் மற்றும் பேருந்து போக்குவரத்து இல்லாத நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே செல்லமுடியாத சூழ்நிலையில் மேலூர் ஊராட்சிக்குட்பட்ட பல மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு தொடர்ந்து நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் நேற்று கொலக்கம்பை அருகே உள்ள மூப்பர்காடு மற்றும் மானார் ஊஞ்சலார்  கோமபை மற்றும் கோட்டக்கள் அருகே உள்ள வீரக்கொம்பை மற்றும் நீராடிபள்ளம் ஆகிய ஆதிவாசி குடும்பங்கள் சுமார் 150 நபர்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் ஸ்ரீ சற்குரு சத்திய இராஜ யோக ஞான ஆசிரமம் சார்பாக வழங்கப்பட்டது. இதில் மேலூர் ஊராட்சி மன்ற தலைவர் ரேனுகாதேவி மற்றும் சற்குரு ஆசிரம சுவாமி மற்றும் ஊராட்சி மன்ற துணை தலைவர் நாகராஜ் வார்டு உறப்பினர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினார்

நீலகரி மாவட்டம் குன்னூர் ஆருகுச்சி பகுதியில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது

Image
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று தற்போது 485 யை தாண்டும் நிலையில் ஊராட்சி மற்றும் காவல் துறையினர் தொடர்ந்து கிராமம் கிராமமாக சென்று விழிப்புணர்பு கூட்டம் நடத்தி பொதுமக்களுக்கு முககவசம் அணிவது கை கழுவுவது சமூக இடைவெளியை கடைபிடிப்பது குறித்து விளக்கிவரும் நிலையில் ஊராட்ச்சிக்குட்பட்ட ஆருகுச்சி பகுதியில் மேலூர் ஊராட்சி மற்றும் காவல்துறை சார்பாக சமுதாய கூடத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் ஆருகுச்சி மற்றும் மேலூர் கிராமங்களை சேர்ந்த கிராம தலைவர்கள், மேலூர் ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகாதேவி ஊராட்சி மன்ற துணை தலைவர் நாகராஜ் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி சசி,  கொலகொம்பை காவல்துறை உதவி ஆய்வாளர் செந்தில் மற்றும் மேலூர் ஊராட்சி செயலாளர் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு கூட்டத்தை நடத்தினர்.  

சத்தமில்லாமல் தயார் ஆகும் பிக் பாஸ் - 4... உற்சாகத்தில் ரசிகர்கள்

Image
வருடத்தில் பாதியை கடந்துவிட்டோம். டிவி நிகழ்ச்சிகளில் பலரின் கவனங்களை ஈர்த்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மீதான பார்வையும், எதிர்பார்ப்பும் அதிகரிக்க தொங்கியுள்ளது. ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு நிலவி வருவதால் சின்னத்திரைக்கான படப்பிடிப்புகள் நடத்துவதில் சிரமமான சூழ்நிலையே நிலவுகிறது. பிக்பாஸ் சீசன் 4 க்கான நேரமும் வந்துவிட்டது. இவ்வருடம் நிகழ்ச்சி நடைபெறுமா என்ற சந்தேகமான கேள்வியே ரசிகர்கள் மனதில் இருக்கிறது. தமிழ் பிக்பாஸ் போல தெலுங்கிலும் பிக்பாஸ் சீசன் 4 ஐ இவ்வாண்டு ஒளிப்பரப்பாகும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் கடந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் நாகார்ஜூனா கொரோனா முடியும் வரை படம் அல்லது டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது என கூறிவிட்டாராம். இந்நிலையில் நிகழ்ச்சி உருவாக்கக்குழு போட்டியாளார்களை Zoom ஆப் மூலம் மீட்டிங் நடத்தி, வீடியோ மூலம் ஒப்பந்தத்தில் கையெழுத்து பெற்றுக்கொள்ளவும் முடிவு செய்துள்ளதாம். கொரோனா குறைந்த பின் நிகழ்ச்சியை தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளில் இறங்கியுள்ளனர். மேலும் 6 அல்லது 7 வாரங்களில் நிகழ்ச்சியை முடிக்க திட்டமிட்டுள்ளார்கள். ஆனால் கொரோனா நீடித்தால...

சேலம் தாசநாயக்கன்பட்டி அருகில் அமைந்துள்ள 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ராஜ முனியப்பன் திருக்கோவில்

Image
ஆடி அமாவாசை சிறப்பு  சேலம் மாவட்டம் தாசநாயக்கன்பட்டி அருகே அமைந்துள்ள ஸ்ரீ ராஜ முனியப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இத் இத்திருக்கோவிலில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசமரம் அமைந்துள்ளது. ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு 108 முறை அரச மரத்தை சுற்றிவந்தால் வேண்டிய காரியம் நிறைவேறும் திருமணம் தடை உள்ளவர்களுக்கு விரைவில் திருமணம் குழந்தை பாக்கியம் போன்ற பல்வேறு பலன்களை அளிக்கக் கூடியது. ஆடி அமாவாசை மற்றும் திங்கட்கிழமை சேர்ந்து வருவதால் மிகப்பெரிய நன்மை உண்டாகும். இத்திருக்கோவில் அரசமரத்தடியில் ஸ்ரீ ராஜ முனியப்பன் அமைந்துள்ளார் கோயிலின் உட்புறத்தில் வீரஸ்த்தாள் புத்தம்மன் மற்றும் 15  அடி உயரமுள்ள முண்ணுடையான் சிலை அமைக்கப்பட்டுள்ளது.  மாதா மாதம் வரும் அமாவாசை நாட்களில் அரச மரத்தை 108 முறை வலம் வருவதால் நினைத்த காரியம் நிறைவேறும் அதேசமயம் திங்கட்கிழமை வரும் அமாவாசை சோமவாரம் அமாவாசை மிகவும் சிறப்பு அதேபோல் ஆடி மாத அமாவாசை பித்ருக்களுக்கு தர்ப்பணம் விடுவது போன்றவற்றிற்கு மிகவும் சிறப்பு அளிக்கக்கூடியது. இந்நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் விட்டு வழிபட்டால் மிகவும் நன்மையானது அரச மரத்...

பெங்களூர் இரவுநேர ரயில் முன்மொழிவு... தென்னக ரயில்வே துறைக்கு நன்றி - நடராஜன் எம்.பி

Image
கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான பெங்களூர் இரவு நேர ரயில் மற்றும் தென்மாவட்ட மக்கள் பயன்பெரும் ரயில் சேவைக்கான முன்மொழிவை பரிந்துரைத்த தென்னக ரயில்வே துறைக்கு எம்.பி நடராஜன் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இதர கோரிக்கைகைகளையும் உடனடியாக பரிந்துரை செய்ய வேண்டும். தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் ரயில் சேவை முக்கிய பங்கினை வகித்து வருகிறது. இதன் காரணமாகவே அதிக வருவாய் ஈட்டிக்கொடுக்கிற ரயில்நிலையமாகவும் கோவை இருந்து வருகிறது. தொழில், கல்வி, மருத்துவம் ஆகிய தேவைக்காக  இதர மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் இதர மாவட்டங்களில் உள்ள பல்வேறு தரப்பட்ட மக்கள் கோவை மாவட்டத்திற்கு வந்து செல்கின்றனர். இருப்பினும் போதிய ரயில் சேவை இல்லாதிருப்பது குறித்து பலமுறை மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். மேலும் பொதுமக்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள் என பலரும் ஒருங்கினைக்கப் பட்டு ரயில்வே போராட்டக்குழுவின் மூலம் அரசின் கவனத்தை ஈர்க்க பல கட்ட போராட்டங்களையும் நடத்தியுள்ளோம். இதில் கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக...

கோவையில் மூன்று கோயில்கள் சேதப் படுத்தியதற்கு மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை கடும் கண்டனம்

Image
கோவையில் மூன்று கோயில்கள் சேதப்படுத்தியதற்கு மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திருக்கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள்.     மயிலாடுதுறை ஆன்மிகப்  பேரவையின் நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:     கோயம்புத்தூரில் மூன்று கோயில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை கடும் கண்டனம் தெரிவிக்கிறது.  தொடர்ந்து வழிபாட்டுத் தலங்கள் தமிழகத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி வருவது வேதனை அளிக்கிறது.   ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறைக்கு இணையான காவல்துறை தமிழக காவல்துறை என்ற பெயரெடுத்த தமிழக காவல்துறை தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை.  ஊரடங்கு காலத்தில் பெரிய திருக்கோயில்கள் எல்லாம் நடை சாத்தப்பட்டு இருக்கக்கூடிய வேளையிலே கோவையிலே மூன்று கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது தமிழக அரசின் அலட்சியப் போக்கைக் காட்டுகிறது.   சேதப்படுத்திய உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து அவர்...

விருத்தாசலம் வட்டாட்சியர் கொரோனாவுக்கு பலி

Image
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பலியானார்.     கடலூர் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா நோய் பரவல் தடுப்புப்பணியில் ஈடுபட்டு வரும் அரசு அலுவலர்கள் ,ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.    இவர்களில் சிலர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளனர் இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த விருதாச்சலம் தாசில்தார் சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை இரவு பரிதாபமாக இறந்தார்.   இவர் விருத்தாசலம் தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் ஆக பணிபுரிந்து வந்தவர் கவியரசு வயது 48 இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா அறிகுறி ஏற்பட்டது இதையடுத்து அவர் பரி சோதனை மேற்கொண்டதில் கடந்த 9ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது தொடர்ந்து கவியரசு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார் அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவி...

ஶ்ரீபெரும்புதூர், காட்டரம்பாக்கம் ஊராட்சியில் ரூ 1.10 கோடியில் தெருச்சாலைகள் சீரமைப்பதற்கான பூமிபூஜை

Image
ஶ்ரீபெரும்புதூர், காட்டரம்பாக்கம் ஊராட்சியில் ரூ 1.10 கோடியில் தெருச்சாலைகள் சீரமைப்பதற்கான பூமிபூஜை நடைபெற்றது.     காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட காட்டரம் பாக்கம் ஊராட்சியில் உள்ள தெருச்சாலைகள் மிகவும் பழுதடைந்து சேறும் சகதியுமாக இருந்ததை தொடர்ந்து இப்பகுதி பொதுமக்கள் தெருச்சாலைகளை சுரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஶ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பழனியிடம் கோரிக்கை வைத்தனர்.    இதையடுத்து ஊராட்சியில் மிகவும் பழுதடைந்த பிராமனர் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, கெங்காத்தம்மன் கோயில் தெரு உள்ளிட்ட 16 தெருக்களை சீரமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு ஶ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து காட்டரம்பாக்கம் ஊராட்சி பொதுநிதியின் மூலம் ரூ 1.10 கோடியில் தெருச்சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து தெருச்சாலைகளை சீரமைப்பதற்கான பூமிபூஜை காட்டரம்பாக்கம் பகுதியில்  நடைபெறறது.   காட்டரம்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மோகன் தலைமையிலும், முன்னாள் ஒன்றியகுழு தலைவர் சிவகுமார் முன்னிலையி...

வைத்தீஸ்வரன்கோயிலில் கந்த சஷ்டி கவசம்  நுால் வெளியீட்டு விழா

Image
மயிலாடுதுறை  மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் பிரசித்தி பெற்ற வைத்தியநாதரசுவாமி கோயில் உள்ளது. தருமை ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோயிலில் மூலவர் வைத்தியநாதசுவாமி அம்பாள் தையல்நாயகி அம்பாள் அருள்பாலித்து வருகிறாள்.   இக்கோயில் தேவாரபாடல் பெற்ற 274 தலங்களில் 16வது தலமாகும்.5 பிரகாரம் 5 கோபுரம் நேர்க்கோட்டில் உள்ள தன்வந்திரி சித்தர் ஜீவ சமாதியுள்ள கோயிலாகும். இக்கோயில் சிவன்கோயிலாக இருந்தாலும் சிவனுக்கும் அம்பாளுக்கும் நடுவில் உள்ள பகுதியில் சிவனின் குமாரரான முருகன் இங்கு செல்வமுத்துகுமாரசுவாமி என்ற திருப்பெயரில் அருள்பாலித்து வருகிறார்கள்.   தினசரி காலையிலும் அர்த்தஜாம பூஜையிலும் முத்துகுமாரசாமிக்கு தீபாரதனை நடை பெறுகிறது. நவக்கிரகங்களில் அங்காரகன்(செவ்வாய்பகவான்) தனிச்சன்னதியுள்ள கோயிலாகும். இத்திருத்தலத்தில் வழங்கப்படும் அனைத்து பிரசாதங்களும் நோய் தீர்க்கும் அருமருந்தாக உள்ளது.   இத்தகைய சிறப்பு மிக்க கோயிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு செல்வ முத்து குமாரசுவாமி சன்னதியில் மயிலாடுதுறை ஆன்மிகபேரவை சார்பில் பேரவை நிறுவனர் டாக்டர் வக்கீல் ராம.சேயோன் முன்னிலையில் பேரவை சார்பில...

4,526 பேருக்கு கொரோனா...67 பேர் பலி...சென்னையில் குறையுது...மற்ற மாவட்டங்களில் உயருது...

Image
தமிழ்நாட்டில் கொரோனா நோய்ப்பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. தினமும் 2000 பேருக்கு பாதிப்பு என்ற நிலையை தொட்ட சென்னையில் நோய்ப்பரவல் சற்று குறைந்து உள்ளது.  அதற்கு பதிலாக சென்னை அல்லாத மாவட்டங்களில் கொரோனா தொற்றுப்பரவல் தீவிரம் அடைந்துள்ளது.  தமிழ்நாட்டில் இன்று மட்டும் 4,526 பேருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டு உள்ளது. இதில் சென்னையில் மட்டும், 1078 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.  சென்னை அல்லாத மற்ற மாவட்டங்களில் மட்டும் 3,448 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்படுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் 450 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.   இன்று 67 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.  4,743 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். தற்போதைய நிலையில் தமிழகத்தில் மொத்தமாக 1,47,324 பேருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டு உள்ளது. இதில் இன்று 4,743 பேர் குணமடைந்துள்ள நிலையில்,  97,310 பேர் குணமடைந்து உள்ளனர்.  இன்னும் 47,912 பேர் சிகிச்சையில் உள்ளனர்.      

ங்கோத்தா... ங்கொம்மா... கடன் வசூலிக்கும் லட்சனத்தை பாருங்க...

Image
திருப்பூரில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்ற தொகையை திருப்பி செலுத்த போனில் அழைத்து ஆபாசமாக மிரட்டுவதாக புகார். திருப்பூர் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ரகுபதி முத்துமணி தம்பதியர் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு செல்போன் ஒன்றை பஜாஜ் நிறுவனம் மூலம் கடன் பெற்று வாங்கியுள்ளனர். மாதம் 2600 ரூபாய் என நான்கு மாதங்கள் செலுத்தியுள்ளனர். இதனிடையே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வேலை இல்லாத சூழலில் இரு மாதம் தவணைத் தொகை கட்ட முடியாமல் இருந்துள்ளனர். இதனையடுத்து போன் மூலம் அழைத்த நிறுவனத்தினர் இரண்டு மாத தொகையை மொத்தமாக செலுத்தி விடுங்கள் என கூறி 7 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். முதல் கட்டமாக 3000 செலுத்திய நிலையில் மீதி தொகையை செலுத்த முடியாமல் ரகுபதி முத்துமணி தம்பதியர் தவித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு போன் மூலமாக தினமும் அழைத்து பஜாஜ் நிறுவனத்தினர் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்து வருவதாக குற்றம்சாட்டி உள்ளனர். இதுதொடர்பாக அழைத்த ஒருவர் தன்னை வழக்கறிஞர் என அடையாளப்படுத்திக் கொண்டு 47 ஆயிரம் ரூபாய் கொடுத்தே தீரவேண்டும் என மிரட...

திண்டுக்கல்லில் இனி ’பெண்ணாட்சி’... அத்தணை பதவிகளிலும் ஆளுமை காட்டும் பெண் உயரதிகாரிகள்

Image
பூட்டுக்கும், கோட்டைக்கும் பேமசாக இருந்து வரும் திண்டுக்கல், இனி பெண்களின் ஆளுமைக்கும் உதாரணமாக மாறி மேலும் பெயர் பெற தயாராகி உள்ளது.   ஆமாங்க, திண்டுக்கல் மாவட்டத்தில் அரசுத்துறையின் அனைத்து முக்கியப் பதவிகளிலும் பெண்களே நியமிக்கட்டு இருப்பதால், இந்தியாவிலேயே பெண்களால் ஆளப்படும் முதல் மாவட்டமாக விளங்குகிறது திண்டுக்கல்.   திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் எஸ்.பி.,யாக ரவளிபிரியா நியமிக்கப்பட்டார். இதையடுத்து மாவட்டத்தில் உள்ள முதன்மைப் பொறுப்புக்கள் அனைத்திலும் பெண்கள் கோலோச்சுகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தின் கலெக்டர் மு.விஜயலட்சுமி உள்ளார். மாவட்ட முதன்மை நீதிபதியாக ஜமுனா இருக்கிறார். மாவட்ட வன அலுவலராக வித்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக கவிதா ஆகியோர் பணியில் உள்ளனர்.   திண்டுக்கல் ஆர்.டி.ஓ., வாக உஷா உள்ளிட்ட பலர் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணிபுரிந்து வருகின்றனர்.   தற்போது திண்டுக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி யாக முதல்முறையாக பெண் போலீஸ் உயரதிகாரியான ரவளிபிரியா நியமிக்கப்பட்டு உள்ளார்.    சென்னை மாதவரம் துணை ஆணையரா...

திருப்பூரில் இன்று 24 பேருக்கு கொரோனா...97 கட்டுப்பாட்டு பகுதிகளில் கண்காணிப்பு

Image
திருப்பூர் மாவட்டத்தில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 97 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கபப்ட்டு உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. 130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் திருப்பூர் மாவட்டத்தில் 97 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் ஏரியா வாரியாக வருமாறு: திருப்பூர் மாநகரில் பிரைம் என்கிளேவ் அபார்ட்மெண்டில் 37 வயதுடைய இரண்டு ஆண்கள், 29 வயதுடைய ஒருவர் என 3 பேருக்கு பாதிப்பு ஏற்ப்பட்டு உள்ளது. திருப்பூர் பாண்டியன் நகர், திருவள்ளுவர் வீதியில் 55 வயது ஆணுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நெருப்பெரிச்சலில் 49 வயது ஆணுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. பெரியார் காலனி சாமிநாதபுரத்தில் 31 வயது ஆணுக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. திருப்பூர் வீரபாண்டியில் 70 வயது ஆணுக்கும், திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள பாப்பண்ணன் நகரில் 41 வயது ஆணுக்கும், 42 வயது ...

24 வயது பெண்ணை காதலிப்பதாக நடித்து பலாத்காரம்... இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட கொடூரன் கைது

Image
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்தவர் மாது (41) . இவர் கடந்த சில வருடங்களாக திருப்பூர் எம்.எஸ்.நகர் பகுதியில் தனது மனைவி மற்றும் 6 வயது பெண்குழந்தையுடம் வசித்து வருகிறார். அங்கு தங்கி இருந்து அதே பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் சூப்பர் வைசராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அங்கு  வேலை செய்து வந்த 24 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்ப்பட்டு உள்ளது.  உடனே அந்த பெண்ணை காதலிப்பதாக நாடகமாடி தனது பழக்கத்தில் நெருக்கத்தை ஏற்ப்படுத்தி உள்ளார்.  மேலும் அந்த பெண் தனியாக இருக்கும் போது அவரை  நிர்வாணமாக வீடியோ மற்றும் போட்டோ எடுத்து உள்ளார். அதை வைத்து மிரட்டி அந்த பெண்ணை  பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதே வேலை தொடர்ச்சியாக அவர் செய்து வந்ததால், அந்த பெண் எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் தவித்து வந்தார்.  இந்த நேரத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் மாது சொந்த ஊரான சென்னிமலைக்கு குடும்பத்துடன் சென்று விட்டார். மாது சென்றுவிட்டதால் அந்த 24 வயது பெண் தொல்லையில்லாமல்  நிம்மதியாக இருந்து உள்ளார். ஆனாலும் மாது அந்த பெண்ணிடம் வீடியோவை காட்டி ...

தமிழ்நாடு ஸ்கூல் கேம்ஸ் அண்டு ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் துவக்க விழா: வக்கீல் கோபிநாத் துவக்கி வைத்தார்

Image
திருப்பூர் லாலீகா மைதானத்தில், தமிழ்நாடு ஸ்கூல் கேம்ஸ் அண்டு ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் துவக்க விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு அந்த அமைப்பின் தலைவர் வக்கீல் கோபிநாத், அசோசியேசன் லோகோவை அறிமுகம் செய்து வைத்தார். மேலும் அந்த அமைப்புக்கான டி-ஷர்ட் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பேசிய வக்கீல் கோபிநாத், ‘ இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் உடலை உறுதியாக வைத்திருந்தால் தான் மனோவலிமையும்   இருக்கும். உடலினை உறுதி செய்ய விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகள் அவசியம்.  இந்த அமைப்பின் மூலம் பயிற்சி பெறும் மாணவர்களில் ஒருவர் தேசிய அளவில் அடுத்த ஆண்டுக்குள் சாதனை படைப்பார்” என்றார். இந்த கூட்டமைப்பில் ஏற்றத்தாழ்வு இன்றி அனைவருக்கும் திறமையான பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.  தமிழக அளவில் நடக்கும் அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்க ஏற்பாடு செய்து கூட்டமைப்பில் உள்ளவர்களை வெற்றியாளர்களாக உருவாக்குவதே லட்சியம் என அந்த அமைப்பினர் தெரிவித்து உள்ளனர். இந்த நிகழ்வில், செயலாளர் சுஜித் குமார், பயிற்சியாளர்கள் சத்தி, ஹரி, எம்.எஸ்.செந்தில்குமார், என்.சுப்பிரமணியம் உள்ப...

பட்டையை கிளப்பும் சில்5 அப்ளிகேஷன்... டிக் டாக் பதிலாக புது செயலி... திருப்பூர்காரரின் புதிய சாதனை

Image
டிக் டாக் மாற்று செயலியை அறிமுகப்படுத்தி அசத்திய திருப்பூரைச் சேர்ந்த பட்டதாரி நண்பர்கள். இந்தியா சீனா எல்லை பதற்றம் காரணமாக சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது அதே நேரத்தில் சீன நிறுவனங்கள் வெளியிட்டுள்ள மொபைல்போன் செயலிகள் தகவல்களைத் திருடுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது இதன் காரணமாக இத்தகைய புதிய செயலிகளை யாரும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. டிக் டாக் செயலி இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்களால் பயன்படுத்தக்கூடிய ஒரு செயலியாக இருந்து வருகிறது. இதற்கு மாற்றாக பல செயலிகள் இருக்கும் பொழுதும் அவை அளவிற்கு சோபிக்கவில்லை. தற்பொழுது டிக் டாக் இருக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பல செயலிகளும் அந்த இடத்தை பிடிக்க முனைப்பு காட்டி வரும் நிலையில் திருப்பூரைச் சேர்ந்த பட்டதாரி நண்பர்கள் இணைந்து டிக் டாக் இருக்கு மாற்றான சில்5 chill5 என்ற  செயலியை அறிமுகம் செய்துள்ளனர். திருப்பூரை சேர்ந்த ஹரிஷ்குமார்(26), சௌந்தரகுமார் (28), சந்தீப் (25), கோகுல் (25), வெங்கடேஷ் (...

திருப்பூரில் இன்று 6 பேருக்கு கொரோனா...ஏரியா விவரம் இதோ

Image
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து உள்ளது. நேற்று வரை 258 பேருக்கு பாதிப்பு ஏற்ப்பட்டு இருந்தது. இன்று 7 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ள நிலையில் மொத்த பாதிப்பு 265 ஆக உயர்ந்து உள்ளது.  பாதிக்கப்பட்டவர்கள் விவரம் ஏரியா வாரியாக:  திருப்பூர் போயம்பாளையம் பிரிவு நஞ்சப்பா நகரை சேர்ந்த 22 வயது ஆணுக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. திருப்பூர் யுனிவர்சல் ரோட்டில் 35 வயது ஆணுக்கு தொற்று உறுதியாகி உள்ளது. திருப்பூர் டி.எஸ்.ஆர்., லே அவுட்டை சேர்ந்த 57 வயது ஆண், காங்கயம் சாலை கான்வெண்ட் கார்டன் பகுதியை சேர்ந்த 80 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. பல்லடம், இச்சிப்பட்டி, தேவராயம்பாளையம் அம்மன் நகரை சேர்ந்த 50 வயது பெண்ணுக்கும், வெள்ளகோவில், மயில்ரங்கம், பாப்பாவலசு பகுதியை சேர்ந்த 21 வயது பெண்ணுக்கும் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதில் போயம்பாளையம் நஞ்சப்பா நகரை சேர்ந்த 22 வயது ஆண், வெளி மாவட்ட கணக்கில் சேர்க்கப்பட்டதால், திருப்பூர் தொற்று எண்ணிக்கை இன்று 6 மட்டும் என தெரிவிக்கபப்ட்டு உள்ளது.  திருப்பூரை சேர்...

கொரோனா காலம்: வருமான இழப்பை சமாளிக்கும் வித்தைகள்

Image
கொரோனா வைரஸ் பரவி வருகிறது சீனாவை முற்றிலுமாக முடக்கிவிடும். சீனா பொருளாதாரத்தில் சரிந்துவிடும் என பல தரப்பிலும் பேச்சு விழுந்தது சாதாரண சாலையோர மக்கள் கூட இதுகுறித்த விவாதங்களில் ஈடுபட்டிருந்தனர். அப்போது யாருக்கும் தெரியவில்லை இந்த நிலை இந்தியாவிற்கும் வரும் கடைக்கோடியில் உள்ள நாமும் இதில் பாதிக்கப்படுவோம் என ஒருவரும் நினைத்துக்கூட பார்க்காத சமயம் அது.  அடுத்தகட்டமாக இத்தாலி பிரான்ஸ் அமெரிக்கா என ஒவ்வொரு நாடுகளாக கொரோனா தன் கொடிய கரங்களை கொண்டு வாரி அணைத்துக் கொண்டது. அந்த சமயத்தில் இந்தியாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒருவன் தன் கால் தடத்தை பதித்து இருந்தது.  அப்பொழுது இந்தியாவில் ஊரடங்கு என்ற ஒரு வார்த்தையும் பிரபலமாகியது . இதனைக் கருத்தில் கொண்ட இந்திய அரசும் உடனடியாக ஊரடங்கு அமல்படுத்தியது. ஆரம்பத்தில் இதனால் ஏழைகள் பலரும் பாதிக்கப்பட்டனர். அதாவது தங்களின் அண்டை மாநிலங்கள் மற்றும் தொழில் வாய்ப்பும் மிகுந்த பகுதிகளில் இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் இருந்து மக்கள் தொழிலுக்காக புலம்பெயர்ந்து இருந்தனர்.  இவர்கள் ஊரடங்கு காலத்தில் போதிய வேலைவாய்ப்பு இல்லாததாலும் தங்களது உ...

திருப்பூரில் 6 வயது குழந்தை உள்பட 26 பேருக்கு கொரோனா... ஏரியா வாரியாக பாதிப்பு விவரம்

Image
திருப்பூரில் இன்று மட்டும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 262 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இப்போது வரை 112 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் விவரம் வருமாறு: திருப்பூர்  உடுமலை, கண்ணமநாயக்கனூரை சேர்ந்த 55 வயது ஆணுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. திருப்பூர் நந்தவனம்பாளையத்தை சேர்ந்த 60 வயது ஆணுக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. திருப்பூர் மாநகரில், லட்சுமி நகரில் 31 வயது ஆண், 81 வயது ஆணுக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. ஆண்டிபாளையம் வீனஸ் கார்டனில் 26 வயது ஆண், 40 வயது ஆண், லட்சுமி நகர் 50 அடி ரோட்டில் 85 வயது ஆண், காலேஜ் ரோடு எல்.ஐ.சி., காலனியில் 52 வயது ஆண், 15 வேலம்பாளையத்தில் 55 வயது ஆண், 29 வயது ஆண், 26 வயது பெண் ஆகியோருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மாரப்ப கவுண்டர் வீதியில் 31 வயது ஆணுக்கு தொற்று உறுதி, 15 வேலம்பாளையம் மகாலட்சுமி நகரில் 27 வயது பெண், 55 வயது பெண் ஆகியோருக்கு தொற்று ஏற்ப்பட்டு உள்ளது. அனுப்பர்பாளையத்தில் 46 வயது ஆண், காங்கயம் ரோடு, விஜயாபுரம், சுப்புலட்சும...