Posts

Showing posts from August, 2022

வேலூர் மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு போலீசாருக்கு பாதுகாப்பு பணி இடங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி

Image
வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா புதன்கிழமை கொண்டாடப்படுகிறது இதையொட்டி மாவட்டம் முழுவதும் 1.500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துப்பட உள்ளனர் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் உள்ள போலீசார் ஆயுதப்படை போலீசார் அதிவிரைவு படை மற்றும் கம்போண்டோ படை போலீசார் ஊர்காவல் படையினருக்கு  வேலூர் நேதாஜி மைதானத்தில் பணி இடங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி ஆகஸ்ட் 29ஆம் தேதி நடந்தது இதில் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் கலந்து கொண்டு போலீசாருக்கு அறிவுரை வழங்கினார் அப்போது அவர் கூறுகையில் விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாள் அனைவரும் பணியில் இருக்க வேண்டும்  தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சிலைக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் அந்தந்த பகுதியில் உள்ள சூழ்நிலை குறித்து அந்தந்த காவல் நிலையத்திற்கு அவ்வப்போது தகவல் தெரிவிக்க வேண்டும் ஒரு போலீசாருக்கு 2. அல்லது 3. விநாயகர் சிலை பாதுகாப்பு பணி வழங்கப்படலாம்  எனவே அடிக்கடி அந்த சிலைகளை பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும் ஊர்வலம் நடைபெறும் போது சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்றார் இது குறித்து நிருபர்களுக்கு எஸ் பி ராஜேஷ் கண்ணன் அளித்த பேட்டியில் ...

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு.!

Image
நீலகிரி,நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று(ஆக.30) மிக கனமழை பெய்யக்கூடும் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

ராமேஸ்வரத்தில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக போதை பொருள் விழிப்புணர்வு பேரணி

Image
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை  மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக ராமேஸ்வரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இணைந்து போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டது இதை ராமேஸ்வரம் ரோட்டரி சங்க தலைவர் ஸ்ரீதர் செயலாளர் தனபாண்டியன்  கொடி அசைத்து பேரணியை துவங்கி வைத்தார்  இதில் நாட்டு நலப்பணித்திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் ஜெயகாந்தன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஸ்ரீ ரஞ்சனி நாட்டு நலப்பணி திட்ட பெண்கள் மேல்நிலைப்பள்ளி அலுவலர் சுகன்யா தேவி தேசிய மாணவர் படை அலுவலர் பழனிச்சாமி ஜூனியர் ரெட் கிராஸ் அலுவலர் தினகரன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

சத்தியமங்கலத் தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வல பாதையில் போலீஸ் கொடி அணிவகுப்பு.!

Image
சத்தி - ஆக.29 விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு.  29-08-22 அன்று சத்தியமங்கலம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட விநாயகர் சிலை ஊர்வலம் பாதையில் சத்தியமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர்  சந்திரசேகரன்  தலைமையில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.  கொடி அணிவகுப்பில் சத்தியமங்கலம், பங்களாபுதூர், பவானிசாகர், சத்தி போக்குவரத்து காவல், சத்தி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் உட்பட 50 காவலர்கள் கலந்து கொண்டனர்.

கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணை தாக்கி செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது- 7பவுன் தங்க நகை மற்றும் வாகனம் பறிமுதல்.!

Image
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் துவரந்தை பகுதியை சேர்ந்த கருப்பசாமி மற்றும் அவரது மனைவி கிருஷ்ணவேணி (24) மற்றும் 3 குழந்தைகளுடன் கடந்த 26.06.2022 அன்று இரவு இருசக்கர வாகனத்தில் புதியம்புத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வரும் போது,  குளத்தூர் வழ வேம்பார் கடற்கரை சாலை சுப்பிரமணியபுரம் விலக்கு பகுதியில் வந்து கொண்டிருந்த போது, அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மேற்படி கிருஷ்ணவேணி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகைகளை பறித்து சென்றுள்ளனர்.  இதுகுறித்து கிருஷ்ணவேணி அன்று அளித்த புகாரின் பேரில் குளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, எப்போதும்வென்றான் பேருந்து நிலையம் அருகில் சந்ததேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில்,  அவர்கள் எப்போதும்வென்றான் காட்டுநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர்களான திருமலை மகன் கலைச்செல்வன் (25) மற்றும் மன்மதராஜ் மகன் கார்த்தி (27) ஆகியோர் என்பதும், அவர்கள் கி...

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான முயற்சி நடப்பதாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. - பி.ஆர் பாண்டியன்.

Image
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழக அனைத்து விவசாய சங்கம் சார்பில் விவசாயிகளின் பிரச்சனை குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு  குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் பேசுகையில் இலவசம் என்ற பெயரில் விவசாயிகளுக்கான இலவசங்களை நிறுத்துவது என்பது மிகப்பெரிய துரோக செயல். விவசாயம் என்பது சேவையே தவிர தொழில் இல்லை. இதனை இலவசம் என குறிப்பிடுவது பிற்போக்குதனமான செயல். தென்மேற்கு பருவமழை பெய்தும் நெல்லை, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி மாவட்ட நீர் நிலைகள்,  நிரம்பவில்லை. எனவே இந்த மூன்று மாவட்டங்களுக்கு அரசு சிறப்பு கவனம் செலுத்தி, நீர் நிலைகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய விளை பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றம் செய்து,  வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தூத்துக்குடியில் ஏற்றுமதி முனையத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தின் நதிநீர் பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். விவசாயத்துக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்ததை வரவேற்கிறோம். இதனை வெறும் எழுத்து பூர்வமாக காகிதத்தில் தாக்க...

டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை - மருத்துவர்களுக்கு சுகாதாரத் துறை புதிய உத்தரவு.!

Image
டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை தமிழக சுகாதாரத்துறை வகுத்துள்ளதுடன், டெங்குவை உறுதி செய்ய ரேபிட் கார்டு பரிசோதனைகளை பயன்படுத்த வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது.

கர்ப்பம் ஆகாத பெண்ணுக்கு, கர்ப்பம் ஆனதாக கூறி மருத்துவம் - போலி மருத்துவ பரிசோதனை கூடம் மீது நடவடிக்கை கோரி தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு.!

Image
காயல்பட்டினத்தில் – DOORMED DIAGNOSTICS என்ற பெயரில், ஒரு தனியார் மருத்துவ பரிசோதனை கூடம் இயங்கிவருகிறது. இதற்கு - உடன்குடியில் ஒரு கிளை உள்ளது. இந்த மருத்துவக்கூடத்தில், கர்ப்பம் ஆக மருத்துவம் எடுத்துவந்த ஒரு பெண்மணி, தான்  கர்ப்பம் ஆகியுள்ளதை உறுதி செய்ய, தொடர்ந்து ஏழு வாரங்கள் பரிசோதனை செய்துள்ளார்.  ஏழு வாரங்களும், கர்ப்பம் ஆகியுள்ளதாக உறுதி செய்யும் முடிவுகளை இந்த மருத்துவ பரிசோதனைக்கூடம் - போலியாக வழங்கியுள்ளது.  அதன் அடிப்படையில் -  ஏறத்தாழ இரண்டு மாதங்களாக, அந்த பெண்மணியும், மாத்திரையும், ஊசியும் எடுத்து வந்துள்ளார்.  ஆனால் அந்த பெண்மணி உண்மையில்  கர்ப்பம் ஆகவில்லை. அந்த மருத்துவக்கூடம் வழங்கிய முடிவுகள் போலியானது என மற்றொரு மருத்துவக்கூடத்தில் செய்த சோதனை உறுதி செய்யவே, அந்த பெண்மணியின் குடும்பத்தினர் - அந்த பரிசோதனை கூடம் நடத்தும் கோகுல் என்பவரை தொடர்புக்கொண்டு போது, தவறு நடந்துள்ளதை ஒப்புக்கொண்ட அவர், மாதிரிகளை - தூத்துக்குடியில்  உள்ள ஒரு தனியார் கூடத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்ததாக கூறினார். அந்த தனியார் கூடம் விபரங்களை வழங்கவில்லை. நகரில...

கயத்தாறு தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து ஒருவர் பலி 6 பேர் படுகாயம்.!

Image
திருவனந்தபுரத்தில் இருந்து ஹைதராபாத் சென்ற ஆம்னி பேருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டப சுற்றுச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் 7 பேர் காயம் அடைந்தனர் இதில் தன்ராஜ்(35) என்பவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் மேலும் இருவர் ஆபத்தான நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்  மேலும் 4 பேர் லேசான காயமடைந்துள்ளனர் விபத்து குறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் பேருந்து நிலையத்துக்கு தீரன் சின்னமலை பெயர் சூட்ட வேண்டும்... முக்குலத்தோர் தேசிய கழக மாநில செயற்குழு தீர்மானம்

Image
திருப்பூர் புதிய பேருந்து நிலையத்துக்கு தீரன் சின்னமலை பெயர் சூட்ட வேண்டும் என்று நிறுவனத் தலைவர் எஸ். பி.ராஜா தலைமையில் நடந்த முக்குலத்தோர் தேசிய கழக மாநில செயற்குழு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. முக்குலத்தோர் தேசிய கழக மாநில செயற்குழு கூட்டம் திருப்பூர் ஏ. பீ.டி.ரோட்டில் இன்று காலை நடைபெற்றது. நிறுவன தலைவர் எஸ்.பி.ராஜா தலைமை தங்கினார். மாநில இளைஞர் அணி செயலாளர் கே.டி.சுரேஷ் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம் வருமாறு: மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்ட வேண்டும். தேவர் ஜெயந்தி, மருது பாண்டியர் ஜெயந்தி, வேலுநாச்சியார் விழா, பூலித்தேவன் விழாக்களில் 144 தடை உத்தரவை நீக்க அரசை கேட்டுக் கொள்வது. இந்த விழாக்களுக்கு செல்லும் வாகனங்களை அந்தந்த மாவட்டங்களில் அனுமதி வாங்கிட கேட்டுக் கொள்வது. திருப்பூர் உள்பட 13 மாவட்டங்களில் தேவர் ஜெயந்தி விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திற்கு தீரன் சின்னமலை பெயர் சூட்ட வேண்டும். என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இந்த கூட்டத்தில் மாநில அவைத்தலைவர் கே...

கொரோனா அலையில் இருந்து நம்மை பாதுகாக்க, பொருளாதரம் ஏற்றம் பெற முதல்வர் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார் - அமைச்சர் கீதாஜீவன்.!

Image
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் 1.35 கோடி மதிப்பீட்டில் ஆர்.டி .பி.ஆர் மற்றும் ஸ்கேன் மையத்தினை  முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அரசு தலைமை மருத்துவமனையில் குத்து விளக்கு ஏற்றி மையத்தினை தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் கீதாஜீவன்  செய்தியாளரிடம் கூறுகையில் : கொரோனா அலையில் இருந்து நம்மை பாதுகாக்கவும், பொருளாதரம் ஏற்றம் பெற வேண்டும் எண்ணத்தில் முதல்வர் திட்டங்களை கொண்டு வந்துள்ளார் அத்திட்டங்களில் ஒன்று 1.35 லட்ச ரூபாயில் அமைக்கபட்டு உள்ள ஆர்.டி.பி.ஆர் பரிசோதனை மையம். இந்நேரத்தில் கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதி மக்களுக்கும் முதல்வர் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், நகர மன்ற தலைவர் கருணாநிதி, நகர மன்ற துணைத் தலைவர் ஆர் எஸ் ரமேஷ், ஒன்றிய செயலாளர் முருகேசன், அரசு தலைமை மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் ஊழியர்கள் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஸ்பிரிட்டட் யூத்ஸ் கால்பந்து கழக பொன்விழா, மற்றும் புத்தக வெளியீட்டு விழா - அமைச்சர் மேயர் பங்கேற்பு.!

Image
தூத்துக்குடி மாநகரில் ஐம்பது ஆண்டுகள் வெற்றிகரமாக பயணித்து சாதனைகள் பல படைத்துள்ள ஸ்பிரிட்டட் யூத்ஸ் கால்பந்து கழக பொன்விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியானது தூத்துக்குடியில் நேற்று பாஸ்கரா திருமண மஹாலில் வைத்து நடைபெற்றது. பொன்விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழாவிற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு ஐம்பது ஆண்டுகள் வெற்றிகரமாக பயணித்து சாதனைகள் பல படைத்துள்ள ஸ்பிரிட்டட் யூத்ஸ் கால்பந்து கழக பொன்விழா மலர் புத்தகத்தை வெளியிட்டார்.  மேயர் ஜெகன் பெரியசாமி அதை பெற்றுக் கொண்டார். இறுதியில் கால்பந்து வீரர், வீராங்கனைகளுக்கு அமைச்சர் கோப்பை மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி கால் பந்தாட்ட வீரர்களுக்கு கௌரவிக்கப்பட்டது   நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனீட்டா செல்வராஜ், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி அருகே பெண் உள்பட 2 பேர் வெட்டி படுகொலை

Image
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள பூதலாபுரத்தில்  இருவர் வெட்டி படுகொலை பூதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி வயது 50. அதே பகுதியை சேர்ந்தவர் பிச்சையா மனைவி ராஜாமணி வயது 68  நேற்று நள்ளிரவு இருவரும் தங்களது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். அதிகாலை அவ்வழியாகச் சென்ற கிராம மக்கள் இதனை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காடல்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டியில் நடுரோட்டில் சாய்ந்து விழுந்த பழமையான மரம்- அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் இல்லை .!

Image
  கோவில்பட்டி - எட்டயபுரம் ரோட்டில் அரசு நூலகம் அருகே மிகவும் பழமையான வாகை மரம் இருந்தது. நேற்று இந்த மரம் திடீரென்று பயங்கர சத்தத்துடன் சாய்ந்து விழுந்தது. அப்போது அருகில் இருந்த மின்வயர்கள் மீது மரத்தின் கிளைகள் விழுந்ததால் பாரம் தாங்க முடியாமல் மின்கம்பம் ஒடிந்து விழுந்தது. அப்போது அவ்வழியாக வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்லாததால் பெருத்த உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.  பொதுவாக கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடி செல்லும் அனைத்து வாகனங்களும் இவ்வழியாகத் தான் செல்ல வேண்டும். இதனால் இந்த ரோட்டில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். ஆனால் நேற்று மரம் விழுந்த நேரத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் செல்லாததால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.  தகவல் அறிந்து மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மின் இணைப்பை துண்டித்தனர். தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் சுந்தரராஜ் தலைமையில் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி மரத்தை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. அதன்பிறகு மீண்டும் போக்குவரத்...

கோவில்பட்டியில் கும்பகோணம் காபி ஷாப் திறப்பு விழா - கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.!

Image
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பைபாஸ் சாலையில் உள்ள உமா காபி ஷாப் மற்றும் கும்பகோணம் காபி ஷாப் திறப்பு விழா நடைபெற்றது‌. விழாவில் ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன் தலைமையில்  முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மற்றும் கடம்பூர் ராஜூ துணைவியார் இந்திரா காந்தி, கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏத்தி கடையை திறந்து வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகர செயலாளர் விஜய் பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், வண்டானம் கருப்பசாமி,நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பக மூர்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன், எட்டையாபுரம் நகர செயலாளர் ராஜகுமார்,மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சிவபெருமான், வழக்கறிஞர் அணி சங்கர் கணேஷ், முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ்,பாமக ராமச்சந்திரன், மதிமுக நிர்வாகிகள் பொன் ஸ்ரீராம், லியோ செண்பகராஜ், அதிமுக நிர்வாகிகள் மிலிட்டரி சீனிவாசன்,அழகர்சாமி, பழனி குமார், முருகன்...

திருப்பூரில் பணியின் போது மின்சாரம் தாக்கியதில் ஒப்பந்த ஊழியர் உடல் கருகி பலி

Image
 திருப்பூர் கே.வி.ஆர்., நகர் 2-வது வீதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 35). இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். பிரகாஷ் கே.வி.ஆர்., நகரில் குடியிருந்து வரும் நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பூரில் மின்வாரிய ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். ஷெரிப் காலனி பகுதியில் பணி செய்து வந்திருக்கிறார், இந்த நிலையில் இன்று மதியம் உஷா தியேட்டர் அருகில் உள்ள டிரான்ஸ்பாரத்தில் பழுதுபார்ப்பதற்காக ஏறி இருக்கிறார். முன்னதாகவே அவர் மின்சாரத்தை நிறுத்தி விட்டுத்தான் ஏறியதாக தெரிவிக்கிறார்கள். இருந்த போதிலும் அவர் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக டிரான்ஸ்பாரத்தில் மேல் பகுதியில் செல்லக்கூடிய உயர் அழுத்த மின்சார கம்பியில் அவர் தலை பட்டதில் மின்சார தாக்குதலுக்கு ஆளானார். இதில் சம்பவ இடத்திலேயே அவரது முகம் மற்றும் தலை கருகி பரிதாபமாக பலியானார். இந்த தகவல் அறிந்து அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் கூடினார்கள். தகவலறிந்து வந்த திருப்பூர் தெற்கு போலீசார் பிரகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இது போல் ஒப...

தூத்துக்குடியில் 35 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் - 6பேர் கைது.!*

Image
தூத்துக்குடி சிப்காட் அருகே கலப்பட டீசல் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் தூத்துக்குடி ரூரல் ஏ.எஸ்.பி.சந்தீஸ் தலைமையில்  சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப் இன்ஸ்பெக்டர் அந்தோனிராஜ், போலீஸ் ஏட்டுகள் மாணிக்கராஜா, சாமுவேல், கணேஷ், செந்தில், முத்துப்பாண்டி, திருமணி டென்சிங் மகாலிங்கம் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார்  சிப்காட்  அருகே உள்ள குடோனில் சென்று பார்க்கையில் அங்கு சந்தேகத்திற்கு இடமான நின்று கொண்டிருந்த லாரியை பிடித்து விசாரித்ததில் அவை பெங்களூரிலிருந்து தூத்துக்குடி 35,000 லிட்டர் கலப்பட டீசல் ஏற்றி வந்து விற்பனைக்காக வைத்து இருந்தது தெரிய வந்துள்ளது. உடனே போலீசார் கலப்பட டீசல் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நாங்குநேரியைச் சேர்ந்த  பூல்பாண்டியன் மகன் ராஜகோபால் (42), குடியாத்தம் வேணுகோபால் மகன் புஷ்பராஜ் (27), தூத்துக்குடி அம்பேத்கர் நகர் ஆல்பர்ட் மகன்  பிரவீன் (27), நெல்லை மேலப்பாளையம் குறிஞ்சி மகன் ராமசாமி (30),  தூத்துக்குடி ராஜகோபால் நகர் தியாகராஜன் மகன் ப...

பாஜக ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் ஆகிறது 15 லட்சம் வங்கியில் செலுத்தபடும் என்ற வாக்குறுதி என்ன ஆனது - கே.எஸ்.அழகிரி பேட்டி.!*

Image
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல்காந்தியின் இந்திய தேசத்தை ஒருங்கிணைப்போம் பாதயாத்திரை குறித்து தென் மண்டல கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார்.  சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான சிரிவெல்ல பிரசாத், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜய் வசந்த், ஜோதிமணி, திருநாவுக்கரசர், மற்றும் முன்னால் மாநில தலைவர் தங்கபாலு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ரூபி மனோகரன் விஜயதாரணி, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் மற்றும் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் முரளிதரன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர், காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறுகையில், வருகிற 7ந் தேதி முதல் 10ம் தேதி வரை ராகுல் காந்தி பிரச்சார நடைபயணம் மேற்கொள்கிறார். கன்னியாகுமரியில் துவங்கி காஷ்மீர் நோக்கி பிரச்சார பயணம் நடைபெற உள்ளது. 7ந் தேதி முதல் 10ம் தேதி வரை மூன்று நாட்களும் ...

சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்- வெளியே சொன்னால் ஊசி போட்டு கொன்று விடுவேன் என கொலை மிரட்டல்.!

Image
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் இருந்து வேம்பார் செல்லும் சாலையில் தனியார் மருத்துவமனை நடத்தி வருவோர் பத்மநாதன் மகன் ராபின்சன் (43)  இவர் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.  மேலும் இதனை வெளியில் தெரிவித்தால் விஷ ஊசி போட்டு கொன்று விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதனை எடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் நேற்று புகார் தெரிவிக்கவே விளாத்திகுளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மருத்துவர் ராபின்சனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ராபின்சன் மீது 2015ல் இதேபோல் ஒரு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருப்பூர் தெற்கு குறுமைய கேரம் போட்டிகள் வெற்றி பெற்றோர் விபரம்

 திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான மாணவ, மாணவியர்களுக்கான கேரம் போட்டிகள் இக்கல்வியாண்டிற்கான திருப்பூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான விளையாட்டுப்போட்டிகளை அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளி நடத்துகிறது.  மாணவ, மாணவியர்கள் அனைத்து பிரிவினர்களுக்கான  கேரம் போட்டிகள் பல்லடம் சாலையிலுள்ள, காந்தி வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது. உடற்கல்வி ஆசிரியர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். காந்தி வித்யாலயா பள்ளியின் முதல்வர் முத்துகண்மணி தலைமை வகித்தார். ரோட்டரி சங்கங்களின் ஆளுநர் இளங்குமரன் வாழ்த்துரை வழங்கி போட்டிகளை துவக்கி வைத்தனர். உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தன் நன்றி கூறினார். மாணவர்கள் போட்டி முடிவுகள் 14 வயதுக்குட்பட்டோர் ஒற்றையர் பிரிவில் 29 அணிகள் பங்கேற்றன. பெருந்தொழுவு அரசு பள்ளி முதலிடமும், கே.எஸ்.சி அரசு பள்ளி இரண்டாமிடமும் பெற்றன. 14 வயதுக்குட்பட்டோர் இரட்டையர் பிரிவில் 28 அணிகள் பங்கேற்றன. கே.எஸ்.சி அரசு பள்ளி முதலிடமும், பெருந்தொழுவு அரசு பள்ளி இரண்டாமிடமும் பெற்றன. 17 வயதுக்குட்பட்டோர் ஒற்றையர் பிரிவில் 24 அணிகள் பங்கேற்றன. காந்தி வித்யாலயா பள்ளி...

திருப்பூர் தெற்கு குறுமைய கூடைப்பந்து, ஹாக்கி வெற்றி பெற்றோர் விபரம்

திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான மாணவியர்கள் கூடைப்பந்து & ஹாக்கி போட்டிகள் இக்கல்வியாண்டிற்கான திருப்பூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான விளையாட்டுப்போட்டிகளை அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளி நடத்துகிறது.  14, 17 & 19 வயதிற்குட்பட்டோர்களுக்கான  மாணவியர்கள் கூடைப்பந்து போட்டிகள் மற்றும் ஹாக்கி போட்டிகள் ராக்கியாபாளையம், செஞ்சுரி பவுண்டேசன் பள்ளியில் நடைபெற்றது.  செஞ்சுரி பள்ளியின் முதல்வர் ஹெப்சிபா பால், துணை முதல்வர் ஆக்சிலியா மைக்கேல் ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர். கூடைப்பந்து போட்டிகள் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 2 அணிகள் பங்கேற்றன. விவேகானந்தா பள்ளி அணி 24 : 06 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் செஞ்சுரி பவுண்டேசன் பள்ளி அணியை வென்றது. 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 6 அணிகள் பங்கேற்றன. செஞ்சுரி பவுண்டேசன் பள்ளி அணி 48 : 12 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் பிளாட்டோஸ் அகாடமி பள்ளி அணியை வென்றது. 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 4 அணிகள் கலந்துகொண்டன. இறுதிப்போட்டியில் பிரண்ட்லைன் அகாடமி பள்ளி அணி 25 : 20 என்ற புள்ளிகள் வித்தியாசத...

குறுமைய த்ரோபால் போட்டி... கிட்ஸ் கிளப் இண்டர்நேஷனல் பள்ளி வெற்றி

இக்கல்வியாண்டிற்கான திருப்பூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான விளையாட்டுப்போட்டிகளை அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளி நடத்துகிறது. மாணவியர்கள் 14, 17 & 19 வயதிற்குட்பட்டோர்களுக்கான எறிபந்து போட்டிகள் (த்ரோபால்) செரீப் காலனி, கிட்ஸ் கிளப் இண்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது.  கிட்ஸ் கிளப் பள்ளி குழுமங்களின் இயக்குநர் ரமேஷ்,  பள்ளி செயலாளர் நிவேதிகாஸ்ரீராம்,  ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர். 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 11 அணிகள் பங்கேற்றன. கிட்ஸ் கிளப் இண்டர்நேஷனல் பள்ளி அணி 2 : 0 என்ற செட் கணக்கில் (15 : 13 / 15 : 12) கிட்ஸ் கிளப் மெட்ரிக் பள்ளி அணியை வென்றது. 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 11 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் கிட்ஸ் கிளப் மெட்ரிக் பள்ளி அணி 2 : 0 என்ற செட் கணக்கில் (15 : 07 / 15 : 06) வித்ய விகாஸ் பள்ளி அணியை வென்றது. 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 12 அணிகள் பங்கேற்றன. லிட்டில் பிளவர் பள்ளி அணி 2 : 0 என்ற செட் கணக்கில் (15 : 03 / 15 : 06)  வேலவன் பள்ளி அணியை வென்றது. குறுமைய இணைச்செயலர்கள் செந்தில்குமார், கண்க...

நஞ்சராயன் சரணாலயத்துக்கு கூடுதல் நிலம் கையகப்படுத்த வேண்டும்... திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., க.செல்வராஜ் முதல்வருக்கு கடிதம்

Image
 திருப்பூர் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான செல்வராஜ், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப் பியுள்ள கடிதத்தில் கூறியி ருப்பதாவது: திருப்பூரை அடுத்த சர்க்கார் பெரியபாளை யம் அருகே சுமார் 440 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குளத்திற்கு ஆண்டுதோறும் பல்லா யிரக்கணக்கான பறவை கள் வெளிநாடுகளிலிருந்து வந்து செல்கின்றன. குறிப் பாக ஐரோப்பிய நாடுக ளிலிருந்து 116 வகையான பறவை இனங்கள் இனப் பெருக்கத்திற்காக வந்து செல்கின்றன. இதன் காரணமாக, திருப்பூர் மாவட்டத்திற்கு ஒரு சுற்றுலாத்தளமாக இதனை அமைக்க வேண் டும் என்பதாலும், தன்னார் வலர்கள், வன உயிரின காப்பாளர்கள், பறவை ஆராய்ச்சியாளர்கள் என பலரின் கோரிக்கைகளை யும், சட்டப்பேரவையில் எனது கோரிக்கையையும் ஏற்று, நஞ்சராயன்குளம் பறவைகள் சரணாலய மாக அமைக்கப்படும் என்று கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது ஏப்ரல் 25ம் தேதி தாங்கள் சட்டப்பேரவையில் அறி வித்ததற்கு மிகுந்த மகிழ்ச்சி யும், தொகுதி மக்கள் சார் பாக எனது நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். சரணாலயத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது துவங்கும் தரு வாயில் உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரி வித்துக் ...

திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்

Image
திருப்பூர் ஜெய்வாபாய் மாதிரி நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் பள்ளி வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரத்னா முன்னிலை வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லா அமலோற்ப மேரி வரவேற்றார் . கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு செயல்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு :                  பள்ளியில் இருந்து குறைந்தது 10 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவிகளை கண்டறிந்து, வராமல் இருக்கும் காரணத்தை கண்டறிந்து அதன் தன்மைக்கு ஏற்ப ஆலோசனை செய்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு கொண்டு வர ஏற்பாடு செய்வது. பள்ளிக்கு அருகே பின்புறமுள்ள  கேட் வழியாக அரசு டவுன் பஸ்கள் நின்று செல்ல தக்க நடவடிக்கை எடுப்பது. நஞ்சப்பா பள்ளி சாலையில் உள்ள ரோடுகளுக்கு முன்பு உள்ள வாகனங்களை அகற்ற காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பது.                ...

அமமுக சார்பில் திருப்பூரில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்..... துணை பொது செயலாளர் சி.சண்முகவேலு அழைப்பு

Image
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் திருப்பூர் மாநரில் வருகிற செப்டம்பர் 15ம் தேதி நடைபெறும் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வருகிறார்.  இதுகுறித்தான திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 13 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற கொங்கு மண்டல நிர்வாகிகள்  ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் வெள்ளியங்காட்டில் உள்ள சிவளா மண்டபத்தில் நடைபெற்றது. கழக தேர்தல் பிரிவு துணை செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி தாங்கிப் பேசினார்.   இந்த கூட்டத்தில்அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுசெயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.சண்முகவேலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  கழக அமைப்புச்செயலாளரும், கோவை மேற்கு மாவட்ட செயலாளருமான சேலஞ்சர் துரை, கோவை தெற்கு மாவட்ட செயலாளர் சுகுமார், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர், முன்னாள் எம்.பி.,சுகுமார், கழக அமைப்பு செயலாளர் தேனாறு லட்சுமணன், கழக அமைப்பு செயலாளர் துளசிமணி, வெளிநாடு வாழ் தமிழர் அமைப்பு செயலாளர் செந்தில், மாநில நெசவாளர் அணி செயலாளர் தரணி சண்முகம், அமைப்...

தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் விநாயகர் சிலைகள்.... இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி

Image
அதிமுக , திமுக இரண்டு அரசாங்கமும் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை தடை செய்ய நினைத்தார்கள். அதனை தாண்டி தான் ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடி வந்தோம். இந்த ஆண்டு நடைபெறும் விழாவிற்கு அரசு ஒத்துழைக்க வேண்டும் என இந்து முன்னனி  மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.. இந்து முன்னனி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்  திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ,  திராவிட அரசாங்கம் பெரியாரை பற்றி கட்டுரை போட்டி நடத்த வேண்டும் என பள்ளிகல்வி துறை அதிகாரிகள் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். தமிழை காட்டுமிராண்டி மொழி என்றும் , சுதந்திரம் வேண்டாம் என்றும் சொன்னவர் பெரியார். அவர் வரலாறை பாடத்திட்டத்தில் கொண்டு வர சதி திட்டம் உள்ளது. இதற்கு இந்து முன்னனி கண்டனங்களை தெரிவித்து கொள்கிறது என்று கூறினார். மேலும் , தமிழம் முழுவதும் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க உள்ளோம். திருப்பூரில் 1200 இடங்களில் வைத்து வழிபட உள்ளோம். " பிரிவினைவாதத்தை முறியடிப்போம் தேசிய சிந்தனையை வளர்ப்போம் " என்ற தலைப்போடு இந்த ஆண்டு விநாய...

ஆணைய அறிக்கையை ஏற்றுள்ள அரசு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- சப்ளையர் அசோசியேசன் & ஒப்பந்ததாரர்கள் சங்கம் வலியுறுத்தல்

Image
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டிற்கு ஸ்டெர்லைட் நிறுவனம் காரணமில்லை என ஒரு நபர் ஆணையம் கூறியுள்ளதால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை உடனடியாக திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதை சார்ந்து தொழில் செய்த வணிகர்கள், ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடியில் இன்று சப்ளையர் அசோசியேசன் சார்ந்த ஜவகர், ரமேஷ்,ஒப்பந்ததாரர்கள் சங்க துணை தலைவர் பரமசிவன், துணைச் செயலாளர் சோமசுந்தரம்,ஒப்பந்ததாரர்கள் சங்க பாலசுப்பிரமணியன்,சுரேஷ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். சப்ளையர் அசோசியேசன் சார்ந்த ஜவகர் பேசுகையில்... நீதிபதி அருணா ஜெகதீசன் -அறிக்கையில் துப்பாக்கி சூட்டிற்கு ஸ்டெர்லைட் ஆலைக்கு நடந்து முடிந்த நிகழ்ச்சிக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று தெளிவாக குறிப்பிட்டு உள்ளார்கள் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.  ஸ்டெர்லைட் ஆலை இயங்கும் போது வாழ்வாதாரத்தை நல்லபடியாக உயர்த்தியது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு இருப்பதால் எங்களை போன்றவர்கள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு  உள்ளோம். தொழில்முறை மிக மோசமான வாழ்வாத...

சாரண, சாரணியர் இயக்க தலைவராக, போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.!

Image
கடந்த முறை பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில், இம்முறை அமைச்சர் அன்பில் மகேஸ் போட்டியின்றி தேர்வு

ஜம்முவில் மேலும் 5 தலைவர்கள் காங்கிரஸிலிருந்து ராஜினாமா

Image