Posts

Showing posts from January, 2024

*ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் அஞ்சானூர் பூசாரிபாளையத்தில் வெள்ளிகிழமை நடைபெறும் ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருகோயில் கும்பாபி சேஷகத்திற்க்கு தீர்தகுடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலத்தை தொடங்கிவைத்து சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்*

Image
ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் அஞ்சானூர் பூசாரிபாளையத்தில் வெள்ளிகிழமை நடைபெறும் ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருகோயில் கும்பாபி சேஷகத்திற்க்கு தீர்தகுடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலத்தை தொடங்கிவைத்து சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் இந்நிகழ்வில் நம்பியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம் .கோபி ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன்.கலிங்கியம் அருள் ராமச்சந்திரன் நம்பியூர் பேரூர் கழக செயலாளர் கருப்பண கவுண்டர் எலத்தூர் பேரூர் கழக செயலாளர் சேரன் சரவணன்   பொலவபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்ட மூர்த்தி கூடக்கரை ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் நம்பியூர் பேரூராட்சி 12 வது வார்டு உறுப்பினர் ஆண்டி காட்டு சரவணன் மற்றும் கழக நிர்வாகிகள் எம் எம் எம் செல்வம்,டெலிபோன் செல்வம்,ஜேசிபி மூர்த்தி ராமசாமி வக்கீல் கங்காதரன் தங்கராசு சீனிவாசன்யோகா பழனிச்சாமி கூடக்கரை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆனந்தன்.சக்திவேல்.நலச் சக்கரவர்த்தி.பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்

சத்தி அருகே, சிலிண்டர் வெடித்து வீடு தீக்கரை. 6 ஆடுகள் மற்றும் பொருட்கள் சேதம். ஒன்றியக்குழு பெருந்தலைவர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல்.

Image
 சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொமராபாளையம் ஊராட்சி,அம்பே த்கர் நகர் ஏ.டி. காலணியில், சிலிண் டர் வெடித்து, வீடு தீப்பற்றி எரிந்து, முற்றிலும் தீக்கரையானது. வீடு தீ பற்றி எரிந்ததால், நான்கு ஆடுகள், இரண்டு குட்டி ஆடுகள் என மொத்தம் 6 ஆடுகளும், 2 இலட்சம் மதிப்பிலான பொருட்களும் தீயில் எரிந்து தீக்கரை யானது.வீடுதீபிடித்துஎரிந்த சம்பவம் அறிந்த, திமுக சத்தி தெற்கு ஒன்றிய செயலாளரும் ,சத்தி ஒன்றிய குழு பெருந் தலைவருமான கே.சி.பி இள ங்கோ சம்பவ இடம் விரைந்து, தீப் பிடித்த வீட்டை பார்வையிட்டும், பாதி க்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.உடன் திமுக சத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் ஐ.ஏ. தேவராஜ் மற்றும்திமுக வடக்கு ஒன்றிய துணை ச் செயலாளர் சுப்பிரமணி,மற்றும் மாவட்ட பிரதிநிதி ரமேஷ்,ஆறுசசாமி  உள்ளிட்ட திமுகவினர் உடன் சென்ற னர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், அருகே, வீடு தீப்பற்றி எரிந்ததில், 6 ஆடுகள் பலி- 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி சேதம்..

Image
 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், அடுத்த கொமாரபாளையம் ஊராட்சி, பகுதி, அம்பேத்கர் நகரில், தகர செட் அமைத்து குடியிருந்து வருபவர் ஆறு முகம்.இவரதுமனைவிதுளசியம்மாள் இவர்கள் இருவரும் ஆடு மாடுகளை வளர்த்தும், விவசாய கூலி வேலை பார்த்து வருகின்றனர்.  இந்த நிலையில் இன்று காலை ஆறு முகம் விவசாய பணிக்கு சென்று விட் டார்.வீட்டில் இருந்த, துளசியம்மாள் வீட்டின் அருகே பசு மாடுகளுக்கு தீவ னம் வைத்து கொண்டு இருந்த போது, மதியம் 12.30 மணியளவில், வீட்டிற் குள் திடீரென வெடிக்கும் சத்தம் கேட்டது. அப்போது ஆறுமுகம் வீடு தீப்பற்றி எரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த,அக்கம்பக்கத்தினர் தீய ணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தும், தீயணைப்பு துறையினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்கும்முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் வீடுமுற்றிலும்எரிந்து, தரை மட்ட மானது. வீட்டில் இருந்த 20 ஆயி ரம் ரூபாய் ரொக்க பணம் உட்பட சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து கருகியது. ஆட்டு பட்டியில் கட்டி வைக்கப்  பட்டி ருந்த 2 குட்டி ஆடுகள் உட்பட 6 ஆடு கள் தீயில் கருகி, உயிரிழந்தது, மேலு ம் பசு மாடு ஒன்று தீயில்,க...

கோவை சூலூர் ஆர்.வி.எஸ். கலை அறிவியல் கல்லூரியில் இந்தி தேசிய கருத்தரங்கம்

Image
ஆர்.வி.எஸ். கலை அறிவியல் கல்லூரியில் இந்தி  தேசிய கருத்தரங்கம் சூலூர் ஆர்.வி.எஸ். கலை அறிவியல் கல்லூரியில்  "ஜாக்ருதி" இந்தி இலக்கிய அமைப்பு சார்பாக "தென்னிந்திய நாட்டுப்புற இலக்கியங்கள்" என்னும் தலைப்பில்  ஒரு நாள் தேசிய கருத்தரங்கம்  சிறப்பாக நடைபெற்றது.  நிகழ்ச்சியை கல்லூரி செயலர் பேராசிரியர் சாரம்மா சாமுவேல் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில்  உத்திர பிரதேச மாநில ஆச்சார்யா மகாவீர் பிரசாத் திவேதி நினைவு அறக்கட்டளையின் நிறுவனரும், பத்திரிகையாளருமான திரு கெளரவ் அவாஸ்தி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக  மத்திய அரசின் ஹைதராபாத் இந்தி நிறுவன மண்டல இயக்குனர் டாக்டர் கங்காதர் வாண்டே அவர்கள் கலந்துக் கொண்டார்.  நிகழ்ச்சியை தமிழ் மற்றும் பிறமொழிகள் துறைத் தலைவரும், இந்தி பேராசிரியையுமான திருமதி ந. லலிதா  அவர்கள் ஒருங்கிணைத்தார்.

கோவை கீரணத்தம் பகுதியில் உள்ள சமஷ்டி சர்வதேச பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் வண்ண உடைகளுடன் குழந்தைகள் நடனமாடி அசத்தல்

Image
கோவை கீரணத்தம் பகுதியில் உள்ள  சமஷ்டி சர்வதேச பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் வண்ண உடைகளுடன் குழந்தைகள் நடனமாடி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர்.  கோவை மாவட்டம் கீரணத்தம் பகுதியில் சமஷ்டி சர்வதேச பள்ளி உள்ளது.இப்பள்ளியில் குழந்தைகளின் கலை குறித்த திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக ஆண்டு விழா நடைபெற்றது. முன்னதாக விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக சமஷ்டி பள்ளி நிர்வாக இயக்குனர் சுவேதா மந்தேனா,என்சிசி லிமிடேட் நிறுவனத்தின் சுகுணா அல்லூரி, மாணவர் பிரத்தியூஷ் ,பெற்றோர்  கிருஷ்ணமூர்த்தி,  திவ்யா, ஆசிரியர் சோபனா ஆகியோர் குத்துவிளக்கை ஏற்றி வைத்து ஆண்டு விழாவை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து சமஷ்டியின் சிறந்த பரிமாற்ற வளர்ச்சி குறித்து  மிளிரும் லேசர் கருவி மூலம் காண்பிக்கப்பட்டது.பின்னர், வாழ்க்கை  பல வண்ணங்களை கடந்து செல்கிறது என்றும், ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு குணத்தைக் கொண்டுள்ளது என்றும் கருப்பு நிறத்தில் அச்சத்துடன் தொடங்கும் வாழ்க்கை வெள்ளை நிறத்தில் தூய்மையாக முடியும்  பள்ளி வாழ்க்கை பயணம் குறித்து வண்ணங்களின் அடிப்படையில் மாணவர்கள் நடனங்களை அரங்கேற்றினர். ஒவ்வ...

குஜராத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கோவை மை கராத்தே இன்டர்நேஷனல் கராத்தே பள்ளியைச் சேர்ந்த 25 மாணவ மாணவிகள் பதக்கங்களை வென்று அசத்தல்

Image
குஜராத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கோவை மை கராத்தே இன்டர்நேஷனல் கராத்தே பள்ளியைச் சேர்ந்த 25 மாணவ மாணவிகள் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். அண்மையில் நிகான் சோட்டாகான் கராத்தே அசோசியேசன் சார்பில் 13 வது தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி குஜராத் மாநிலத்தில் நடைபெற்றது.மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த போட்டிகளில் தமிழ்நாடு,கேரளா, மகாராஷ்டிரா,மேற்கு வங்காளம்,கோவா,குஜராத் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட மாநிலங்களில் இருந்து கலந்து கொண்டனர்.கட்டா,குமித்தே என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற கராத்தே போட்டியில் சப் ஜூனியர், ஜூனியர்,கேடட்,சீனியர்  அடிப்படையில் நடைபெற்றது.  இதில் தமிழ்நாடு அணி சார்பாக நிகான் சோட்டாகான் கராத்தே அசோசியேஷனின் தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசத்தின் செயலாளர் தியாகு நாகராஜ் தலைமையில் கோவை மை கராத்தே இன்டர்நேஷனல்  கராத்தே பள்ளியை சேர்ந்த 25 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மூன்று தங்கம், 5 வெள்ளி,17 வெண்கல பதக்கம்  வென்று அசத்தினர்.வெற்றி பெற்று கோவை திரும்பிய மாணவர்களுக்கு ரயில் நிலையத்தில் பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் உற்சாக வரவேற்பு அளித...

இட ஒதுக்கீட்டில் பயனடையாத குடும்பத்திற்கு முன்னுரிமை அளிக்க வழிவகை செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்க அரசியல் கட்சிகளுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை

Image
*இட ஒதுக்கீட்டில் பயனடையாத குடும்பத்திற்கு முன்னுரிமை அளிக்க வழிவகை செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்க அரசியல் கட்சிகளுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!*                  நமது நாட்டில்  அழுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பதவிகள் என பல்வேறு துறைகளில், இடங்களை அவர்களின் பாதிப்பு நிலை அல்லது மக்கள் தொகைக்கேற்ப ஒதுக்கி அவர்களுக்குரிய பிரதிநிதித்துவத்தை பெறச் செய்து, காலப்போக்கில் சமுதாய சமத்துவத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டதே இடஒதுக்கீட்டு என்னும்  திட்டமாகும். அப்படி அழுத்தப்பட்ட மக்கள் இனம், சாதி, சமூகநிலை, மொழி, பாலினம், வாழிடம், பொருளாதாரச் சூழல், மாற்றுத்திறன் போன்றவற்றில், எந்தக் காரணியால் பாதிக்கப்பட்டார்களோ அதே காரணியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பல்வேறு சமூக மக்களுக்கு இட ஒதுக்கீடு சலுகைகள் வழங்கப்பட்டு அதன் மூலம் கல்வி வேலைவாய்ப்பு பொருளாதார வாய்ப்புகள் உறுதி செய்யப்படுகின்றன.     தமிழ்நாட்டில் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் பொ...

மேட்டுப்பாளையம் வட்டத்தில் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" கள ஆய்வு கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்

Image
தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்த மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் என்ற அடிப்படையில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தின் படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்யும் வகையில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற திட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வட்ட அளவில் நடத்தப்பட வேண்டும். இதனை முன்னிட்டு 02.02.2024 அன்று காலை 9 மணி முதல் 03.02.2024 காலை 9 மணி வரை மேட்டுப்பாளையம் வட்டத்திலேயே மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதல் நிலை அலுவலர்கள் தங்கியிருந்து அனைத்து பகுதிகளிலும் கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்தும் ஆய்வின் போது சந்திக்கும் மக்களின் குறைகளை கேட்டறிந்தும், அரசின் நலத்திட்டங்களும் சேவைகளும் தங்குதடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு ஆய்வு மேற்கொள...

உங்களைத் தேடி, உங்கள் ஊரில் கோபி வட்டத்தில் நடைபெறுகிறது.

Image
  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தினை அறிவித்துள்ளார்கள். "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள். இதன்படி, ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் 31.01.2024 அன்று காலை 9.00 மணி முதல் மறுநாள் (01.02.2024) காலை 9.00 மணி வரை தங்கி, பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் (சேவைகள்) ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வார்கள். கள ஆய்வின் போது பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மேம்பட்ட சேவைகள் வழங்குதல் / த...

மத்திய, மாநில அரசுகள்பிசிஆர் சட்டத்தை திரும்ப பெற வேண்டும். பிப்.5ல், திட்டமிட்டபடி கண்டன ஆர்ப்பாட்டம்.. விவசாய சங்கங்கள் மற்றும் பிற்படுத்தபட்டோர் சமூக அமைப்புகள் திட்டவட்டம்.

Image
 பிப்ரவரி 5ஆம் தேதி, சத்தியமங்கலம் பேருந்து நிலையம் முன்பு,மாநில அள வில், பி சி ஆர் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, ஒரு லட்சம் பேரை திரட்டி போராட்டம் நடத்த, தமிழக விவசாயி கள் பாதுகாப்பு சங்கம் மற்றும் பிற்படு த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட் டோர் சமூகத்தினர் கூட்டமைப்பு அறி விப்பு.  ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த,  கரு  தொட்டம்பாளையம் கிராமத்தில் கிருஷ்ணப்பகவுடர் என் பவரின் விவசாய தோட்டத்தில் மலம் கழித்த நபர்கள் மீது, நடவடிக்கை எடு க்க கோரி புகார் அளித்த கிருஷ்ணப் ப கவுடர் மீது பிசிஆர் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது.இதனை கண்டித்தும் மத்திய மாநில அரசுகள் பிசிஆர் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற் றும் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற் படுத்தப்பட்டோர் சமூகத்தினர் சார்பில் பிப்ரவரி 5ஆம் தேதி சத்தியமங்கலம் பேருந்து நிலையம் முன்பு போராட்டம் நடத்த சத்தியமங்கலம் காவல்துறை யிடம் அனுமதி கோரி மனு அளித்த னர்.அதனை தொடர்ந்து இன்று சத் தியமங்கலம்  துணை காவல் கண் காணிப்பாளர் எம்.எஸ்.சரவணன் தலைமையில், ...

*ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள சோலை மெடிக்கல் சென்டரில் காதுவலியின் காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஈரோடு திண்டல் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி செல்வம் என்பவரின் மனைவி வளர்மதிக்கு கடந்த23-ந்தேதி காய்ச்சல் இருந்ததால் உள்நோயாளியாக சோலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.27ந்தேதி இரவு சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார் . மேலும் தவறான சிகிச்சை அளித்ததாக கூறி வளர்மதியின் உறவினர்கள் சோலை மெடிக்கல் சென்டர் மருத்துவமனைபை முற்றுகையிட்டனர். அங்கு சென்ற காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது . இந்நிலையில் தவறான சிகிச்சை வழங்கி ஏழைப்பெண் வளர்மதியின் இறப்புக்கு காரணமான சோலை மருத்துவமனை மூடக்கோரி 28-ந்தேதி மதியம் வளர்மதியின் உறவினர்கள், தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் பொன் விஸ்வநாதன் நாடார் தலைமையில் போரட்டம் *

Image
 ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள சோலை மெடிக்கல் சென்டரில் காதுவலியின் காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஈரோடு திண்டல் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி செல்வம் என்பவரின் மனைவி வளர்மதிக்கு கடந்த23-ந்தேதி காய்ச்சல் இருந்ததால் உள்நோயாளியாக சோலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.27ந்தேதி இரவு சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார் . மேலும் தவறான சிகிச்சை அளித்ததாக கூறி வளர்மதியின் உறவினர்கள் சோலை மெடிக்கல் சென்டர் மருத்துவமனைபை முற்றுகையிட்டனர். அங்கு சென்ற காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது . இந்நிலையில் தவறான சிகிச்சை வழங்கி ஏழைப்பெண் வளர்மதியின் இறப்புக்கு காரணமான சோலை மருத்துவமனை மூடக்கோரி 28-ந்தேதி மதியம் வளர்மதியின் உறவினர்கள்,  தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் பொன் விஸ்வநாதன் நாடார் தலைமையில் போரட்டம் நடைபெற்றது, போராட்டத்தில் காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பு தலைவர் பூமிநாதன் நாடார், சான்றோர் மக்கள் கழகத்தின் தலைவர் சதா நாடார் கலந்து கொண்டன...

காந்தியடிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக நடைபெற்ற மத நல்லிணக்க உறுதிமொழி நிகழ்ச்சியில் அனைத்து மத தலைவர்கள் கலந்து கொண்டனர்

Image
காந்தியடிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக  நடைபெற்ற மத நல்லிணக்க உறுதிமொழி நிகழ்ச்சியில் இந்து முஸ்லீம் சீக்கியர் கிருத்துவர் என அனைத்து மத தலைவர்கள் கலந்து கொண்டனர்..  காந்தியடிகள் நினைவு தினத்தை  மத நல்லிணக்க நாளாக கடைபிடிக்க தமிழக முதல்வர் வேண்டு கோள் விடுத்திருந்தார்.அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்,.மத நல்லிணக்க நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.அதன் படி கோவையில் தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக மத நல்லிணக்க உறுதி மொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இதில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் தலைமை வகித்தார்.இந்நிகழ்ச்சியில் பாதிரியார் ஜார்ஜ் தனசேகர்,உமாபதி தம்புரான்,அப்துல் ரஹீம் இம்தாதி,டோனி சிங் என  அனைத்து மத தலைவர்கள் கலந்து கொண்டனர்..முன்னதாக அண்ணல் காந்தியடிகளின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது..இதனை தொடர்ந்து மதவெறியை விலக்கி மத நல்லிணக்கம் பேணுவோம் என்னும் கருப்பொருளில் உறுதிமொழி ஏற்றனர். இதில்,, மனிதநேயம் காப்போம், மத வெறிய...

கோவையை சேர்ந்த ஆக்டகன் ஃபைட் கிளப்பில் பயிற்சி பெறும் மாணவ மாணவிகள் மாநில அளவிலான முய் தாய் பாக்சிங் போட்டியில் 8 தங்கம் 7 வெள்ளி என 15 பதக்கங்கள் வென்று அசத்தல்

Image
கோவையை சேர்ந்த ஆக்டகன் ஃபைட் கிளப்பில் பயிற்சி பெறும் மாணவ,மாணவிகள் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான   முய் தாய்  பாக்சிங் போட்டியில் 8 தங்கம் 7 வெள்ளி என 15 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர்… கோவை கரும்புகடை பகுதியில் செயல்பட்டு வரும் ஆக்டகன் ஃபைட்ஸ் கிளப் சார்பாக அதன் நிறுவனர் ஃபெரோஸ் பாபு தலைமையில்  கிக் பாக்சிங்,முய்தாய் பாக்சிங் என தற்காப்பு கலைகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.இதில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பலர் பயிற்சி பெற்று மாவட்ட,மாநில,தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர்.இந்நிலையில்,   இந்திய மற்றும் தமிழ்நாடு முய் தாய் பாக்சிங் அமெச்சூர் சங்கத்தின் சார்பாக மூன்றாவது மாநில அளவிலான பாக்சிங்  போட்டி  சென்னை ஆவடியில் நடைபெற்றது..சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,கோவை,சேலம்,ஈரோடு என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ,மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.வயது,எடை,ஓபன் என பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில்,கோவை ஆக்டகன் ஃபைட்ஸ் கிளப்பை சேர்ந்த 15 பேர் கலந்து  முறையே எட்டு தங்கம்,ஏழு வெள்ளி என பதினைந்து பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர...

மத்திய பட்ஜெட்டில் மயிலாடுதுறை மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள்

Image
*மத்திய பட்ஜெட்டில் மயிலாடுதுறை மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து  சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள்!* இந்திய  பிரதமராக நரேந்திரமோடி 2014 ல் பொறுப்பேற்றது முதல் மயிலாடுதுறை மக்களின் கோரிக்கைகள் பலவற்றை எடுத்துரைத்து வருகிறோம். இதுவரை செவிமடுக்காதது வருத்தம் அளிப்பதோடு மயிலாடுதுறை தொடர்ந்து பின்தங்கிய வளர்ச்சியடையாத நிலையில் உள்ளது. இருந்த பொழுதிலும் தொடர்ந்து மயிலாடுதுறை மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை முன் வைத்துக் கொண்டே இருக்கிறோம். அந்த வகையில் கோரிக்கைகள் 1) மயிலாடுதுறை தரங்கம்பாடி காரைக்கால் ரயில்வே பாதையை மீண்டும்  அமைத்து தர வேண்டும். 2) தஞ்சாவூர் முதல் கும்பகோணம் மயிலாடுதுறை வழியாக விழுப்புரம் இரட்டை ரயில் பாதை விரைந்து அமைத்து தர வேண்டும். 3)மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி இன்னும் திட்டத்தின் கீழ் மயிலாடுதுறைக்கு உடனடியாக மருத்துவக் கல்லூரிக்கான அறிவிப்பினை வெளியிட வேண்டும். 4) மயிலாடுதுறையில் மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளியை அமைத்திடல் வேண்டும். 5) மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் கட்டப்பட்டு 75 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் விசாலமான ந...

கோவை ராவ் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் ஆக்ருதி இணைந்து கோவையில் முதல் முறையாக கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி இயக்கம் நடைபெற்றது

Image
கோவை  ராவ் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப்  ஆக்ருதி இணைந்து கோவையில்  முதல் முறையாக  கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி இயக்கம்  நடைபெற்றது...   பெண்களுக்கு பொதுவாக  மார்பகப் புற்றுநோய்,மற்றும்  கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன.  இதில் .செர்விகல் கேன்சர் எனப்படும், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை வருமுன் காப்பது எளிதானது என்பதோடு, தொடக்க நிலையிலேயே கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்திவிட முடியும் என தொடர்ந்து விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்,கோவையில் முதன் முறையாக, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி இயக்கம் நடைபெற்றது..கோவை ஆர்.எஸ்.புரம்  ராவ் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஆக்ருதி, லேடீஸ் சர்க்கிள் கிளப் எண் 11 ஆகியோர் இணைந்து நடத்திய இதில், மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர். ஆஷா ராவ் தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் சர்மிளா கலந்து கொண்டு பேசினார்…அப்போது பேசிய அவர்,கர்ப்பப்பை வாய் புற்று நோய் தடுப்பூசி குறித்து ...

30.01.2024 மற்றும் 31.01.2024 ஆகிய இரண்டு தினங்கள் நியாயவிலை கடைகள் செயல்படும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் பாடி அறிவிப்பு

Image
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 10.01.2024 முதல் 14.01.2024 வரை அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. மேற்படி நாட்களில் இதர பொது விநியோகத்திட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படவில்லை. மேலும், ஜனவரி -2024 மாதத்தில் அதிகமாக அரசு விடுமுறை நாட்கள் இருந்ததாலும், இந்த மாதத்தில் பொது விநியோகத்திட்ட அத்தியாவசியப் பொருட்கள்  இதுவரை வாங்கமல் அதிக அளவில் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு அறிய வந்துள்ளது. எனவே, பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த மாதத்தில் இதுவரை பொது விநியோகத்திட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற ஏதுவாக 30.01.2024 மற்றும் 31.01.2024 ஆகிய இரண்டு தினங்களுக்கு காலை 8.00 மணி முதல் மாலை 7.00 வரை அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொது விநியோகத்திட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என பொது மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது இவ்வாறு தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார் 

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் புதுமை கண்டுபிடிப்பு, வடிவமைப்பு மற்றும் தொழில் முனைவோர் முகாம் துவக்க விழா

Image
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் புதுமை கண்டுபிடிப்பு, வடிவமைப்பு மற்றும் தொழில்முனைவோர் முகாம் துவக்க விழா நடைபெற்றது. புதுமை கண்டுபிடிப்புவடிவமைப்பு மற்றும் தொழில்முனைவோர் முகாம் துவக்க விழா ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.முதல்வர் முனைவர் அலமேலு தலைமை தாங்கிய இந்த விழாவை  கல்லூரியின் துணை முதல்வர் கருப்புசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். ஏ.ஐ.சி.டி.இ.யின் தலைவர் பேராசிரியர்.டி.ஜி. சீத்தாராம் அவர்களால், ஏஐசிடிஇ தலைமையகம், புது தில்லியில் இருந்து மெய்நிகர் முறையில் துவக்கி வைக்கப்பட்டு நிகழ்வுகள் அனைத்தும் சமூக ஊடக தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.கல்வி அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மற்றும் கல்வி அமைச்சகத்தின் புத்தாக்கப் பிரிவு ஆகியவை மிகவும் எதிர்பார்க்கப்படும் "புதுமை கண்டுபிடிப்பு, வடிவமைப்பு மற்றும் தொழில்முனைவோர் பூட்கேம்ப்களை இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளின் பத்து மையங்களில் தொடங்குகின்றன.  தமிழ்நாட்டில் உள்ள ஒரே நோடல் மையமான ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, இந்தியாவில் உள்ள 10 மையங்களில் ஒன்றாகும். இந்த முகாம்...

*ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சிக்குட்பட்ட சொட்டையன்காடு குக்கிராமத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் திரு.K. M. மகுடேஸ்வரன் அவர்கள் முன்னிலையில் பரிசுகள் வழங்கப்பட்டது*

Image
 ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சிக்குட்பட்ட சொட்டையன்காடு குக்கிராமத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் திரு.K. M. மகுடேஸ்வரன் அவர்கள் முன்னிலையில் பரிசுகள் வழங்கப்பட்டது இதில் வார்டு உறுப்பினர் திரு. தங்கமணி(சங்கீதா) திருமதி. தெய்வானை மற்றும் பொதுமக்கள் ஊர் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றகோரி, பிப்.4ல், புளியம்பட்டியில் இந்து முன்னணி தலைமையில் ஆர்ப்பாட்டம். இந்து முன்னணி மாநில தலைவர் பேச்சு..

Image
புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள நல்லூரில் இந்து முன்னணி சார்பில், இந்துக்கள் பாதுகாப்பு மாநாடு, இந்து முன்னணியின்,மாநிலதலைவர்காடே ஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில்,தென் பாரத அமைப்பாளர்,க.பக்தன்,மாநில பொது செயலாளர் ஜெ.எஸ். கிஷோர் குமார், மாநிலச் செயலாளர் செந்தில் குமார், மாநில பேச்சாளர் சிங்கை பிரபாகரன் மற்றும் மாநில அமைப்பாளர் ச.ராஜே ஸ் ஆகியோர் மாநாட்டு உரை நிகழ்த் தினர். நிறைவாக, மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் மாநாட்டு, நிறைவுரையாற்றினார்.  மாநாட்டில், விநாயகர் சதுர்த்தி விழா வில்பேசிய, இந்துமுன்னணி நிர்வாகி கள் மீது, பொய் வழக்குபோட்ட,தமிழக அரசை இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது எனவும்,நீர்நிலை ஆக் கிரமிப்பு களை தமிழக அரசு உடனடி யாக அகற்ற வேண்டும். இந்துக்கள் ஒன்றுபட்டு, வாக்களிக்க வேண்டும் என்பன உட்பட.பல்வேறு தீர்மானங் கள் நிறை வேற்றப்பட்டன.தொடர்ந்து தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி யம் பேசும் போது,  பல்லடம் பகுதியில் செய்தியாளர் தன க்கு,சமூகவிரோதிகளால்அச்சுறுத்தல் உள்ளது என காவல் அதிகாரிகளிடம் தெரிவித்தும், போலீசார் அவருக்கு பாதுகாப்பு வழங்காமல் மெத்தனமாக இ...

கோவையில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில் பேரிடர் காலங்களில் உயிரை பணயம் வைத்து பணியாற்றும் சி.ஆர்.பி.எப்.வீரர்கள் கவுரவிக்கப்பட்டனர்

Image
கோவையில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில் பேரிடர் காலங்களில் உயிரை பணயம் வைத்து பணியாற்றும் சி.ஆர்.பி.எப் வீரர்கள் கவுரவிக்கப்பட்டனர்.... கோவை கவுண்டர் மில் பகுதியில்  உள்ள,கிரீன் பீல்ட் வளாகத்தில் உள்ள வி சி எஸ் எம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இருபதாம் ஆண்டு விழா நடைபெற்றது.. பள்ளி நிர்வாக தலைவர் செல்வி சுகுணா, தாளாளர் ஹெரால்டு ஷாம், செயலாளர் கில்ஃபோர்ட் ஹெரால்ட் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில்,  சிறப்பு விருந்தினர்களாக, கே ஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் ஜி பக்தவச்சலம்  மற்றும் சி.ஆர்.பி.எப்.டெபுடி கமாண்டர் ராஜேஷ் தோக்ரா ஆகியோர்  கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்..நிகழ்ச்சியில் மாநில,மாவட்ட  அளவில் விளையாட்டு போட்டிகளில்  கலந்து கொண்டு வெற்றி மாணவ,மாணவிகள் கவுரவிக்கப்பட்டனர். மேலும்  அரசு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் ஒவ்வொரு வகுப்பிலும் சிறந்த மாணவர்களுக்கும் சிறப்பு  பரிசுகள் வழங்கப்பட்டது..விழாவில் முக்கிய நிகழ்வாக நாட்டின் பாதுகாப்பிலும்,பேரிடர் காலங்களிலும் முன் கள பணியாளர்களாக பணிய...

கோவையில் குழந்தைகளுக்கான வன்கொடுமை மற்றும் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் தமிழக முன்னாள் காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கொடியசைத்து தொடங்கி வைத்து பங்கேற்றார்

Image
*கோவையில் குழந்தைகளுக்கான வன்கொடுமை மற்றும் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது தமிழக முன்னாள் காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கொடியசைத்து தொடங்கி வைத்து மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றார்* ரோட்டரி கோயம்புத்தூர் சிட்டி மற்றும் சி.எம்.எஸ். வித்யா மந்திர் பள்ளி சார்பில் குழந்தைகளுக்கான வன்கொடுமை மற்றும் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் கோவை,கணபதி அருகே மணிகாரம் பாளையத்தில் நடைபெற்றது. இதில் குழந்தைகள் பெரியவர்கள் மாற்று திறனாளிகள் என 2000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு ஓட்டத்தை தமிழக முன்னாள் டி ஜி பி சைலேந்திர பாபு கொடியசைத்து தொடங்கி வைத்து விழிப்புணர்வு ஓட்டத்தில் பங்கேற்றார். வெற்றி பெற்றவர்களுக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும்  பதக்கங்கள் வழங்கபட்டது.  இரண்டாவது முறையாக நடைபெறும் இந்த மினி மாரத்தான் ஓட்டம்  சி.எம்.எஸ் நிர்வாகத்தின் தலைவர் கே.கே. ராமச்சந்திரன் , பொதுச் செயலாளர் கே. ராஜகோபாலன், சி.எம்.எஸ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் துணைத் தலைவர் டாக்டர் ஸ்ரீக...

சகோதரத்துவம் நல்லிணக்கம் போன்ற சமுதாய ஒற்றுமையை பேணி காப்பது தற்போது அவசியமாக இருப்பதாக பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜெ.முகம்மது ரபீக் கோவையில் தெரிவித்துள்ளார்

Image
சகோதரத்துவத்தவம்,நல்லிணக்கம் போன்ற சமுதாய ஒற்றுமையை பேணி காப்பது தற்போது அவசியமாக இருப்பதாக பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜெ.முகம்மது ரபீக் கோவையில் தெரிவித்துள்ளார்…  கோவையில் நமக்கு நாமே ஐம்பெரும் விழா போத்தனூர் சாலையில் நடைபெற்றது..இதில்,போதை பொருட்களுக்கு எதிராக கையெழுத்து பிரச்சாரம்,அகில இந்திய பாரதியார் தமிழ் சங்கம்,திருவள்ளுவர் மன்றம் துவக்கம் என பல்வேறு நிகழ்ச்சிகளாக நடைபெற்றன.. ,முன்னதாக திருவள்ளுவர், பாரதியார்,மற்றும் அண்மையில் மறைந்த விஜயகாந்த் ஆகியோரின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.இதில் குருஜி  சிவாத்மா,பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் பேசிய முகம்மது ரபீக்,இந்திய நாட்டில் உள்ள அனைவருக்கும் சகோதரத்துவம்,சமத்தும் போன்ற சமதர்ம சமுதாயத்தை உருவாக்க அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர்,நல்லிணக்கம்,ஒற்றுமை அனைவரும் ஒரு தாய் மக்கள் என கூறிய மகாத்மா காந்தி ஆகியோரின் கொள்கைகளை இன்றைய சமுதாயம் பின்பற்ற வேண்டும் என கேட்டு கொண்டார்.சகோதரத்துவம்,மத நல்லிணக்கம் இருந்தால் மட்டுமே ஒரு நாட...

திருமணத்தடை நீக்கும் பத்ரிநாத்!.. இமயமலையில் அற்புத பயணம்!

Image
 இமயமலை உச்சில 10 ஆயிரம் அடி ஒசரத்துல இருக்குற புண்ணியஸ்தலம்... பெருமாளும், மகாலட்சுமியும் கல்யாணம் பண்ணிக்கிட்ட அற்புதமான இடம்...  ஆதிகுருவா நாராயணனே வந்து தவக்கோலம் பூண்ட பத்ரிவனம்...திருமங்கை ஆழ்வாரால மங்களாசாசனம் பாடப்பட்ட அற்புத கோவில்.. இப்படியே சொல்லிக்கிட்டே போனோம்னா, இன்னும் நாலு நாளைக்கு சொல்லலாம்... அவ்வளவு ஸ்பெஷாலிட்டி இருக்குற ஒரு முக்கியமான கோவில் தாங்க இமயமலைல இருக்குற பத்ரிநாத் கோவில்... என்னடா வயசாயிடுச்சு உனக்கு... இப்பவே பத்ரிநாத் போகணுமா? அதெல்லாம் வயசான காலத்துல போற கோவில் அப்படி., இப்படின்னு சொல்லுவாங்க, அதையெல்லாம் கேட்காதீங்க.. ஏன்னா, நம்ம நாராயணமூர்த்திய மங்களாசாசனம் பண்ணுன திருமங்கை ஆழ்வார் என்ன சொல்லிருக்காங்க தெரியுமா? வயசு இருக்கும்போதே பத்ரிநாத் வந்து சாமிகும்பிடுங்கப்பான்னு.. அந்த காலத்துலயே பாடி வச்சுருக்காங்க...  “வதரி வணங்குதுமே, வதரி வணங்குதுமே” ன்ன்னு ஒரு அருமையான பாட்டுல பத்ரிநாராயணப்பெருமாள திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் பண்ணிருக்காங்க... ஏன்னா பத்ரிநாத் கோவில் இருக்குற இமயமலைப்பகுதி 10,248 அடி உயரம் இருக்குங்க...உறை பனியா கொட்டுற இந்...

சஹ்யாத்திரி மலையில் ஜோதிர்லிங்க தரிசனம்... எளியோருக்கு எளியோனாய் அருள் தரும் பீமாசங்கரம்!!

Image
 மஹாராஷ்டிர மலைக்காடுகளில் ஒரு மறக்க முடியாத பயணம்...   பீமராத்தி நதியில குளிக்குறதுக்கு ஒரு அருமையான வாய்ப்பு... சஹ்யாத்திரி மலையில் ஜோதிர்லிங்க தரிசனம்... எளியோருக்கு எளியோனாய் அருள் தரும் பீமாசங்கரம்!! மலையெல்லாம் குடிகொண்டு இருக்குற அபிஷேகப்பிரியன் அய்யன் சிவபெருமான தரிசனம் பண்ணுறதே நமக்கு வாழ்க்கைல கிடைச்ச மிகப்பெரிய வரம்... அதுலயும் ஜோதிர்லிங்கமாய் எழுந்தருளி எளியோருக்கு எளியவனாய் காட்சி தர்ற அவர பார்க்குறதுக்கு 1500 கி.மீ., தூரம் கடந்து போய் வர்ற வாய்ப்பு நமக்கு கிடைச்சா வரப்பிரசாதம் தானே.. நிச்சயமா அதுதாங்க உண்மை... 12 ஜோதிர்லிங்கமா காட்சிதர்ற நம்ம சிவபெருமான், ஆறாவது ஜோதிர்லிங்கமா அருள்பாலிக்குற இடம் தாங்க மஹாராஷ்ட்ரா மாநிலத்துல புனே பக்கத்துல இருக்குற பீமாசங்கரம்.. இத அந்த ஊர்க்காரங்க பீமாசங்கர் மலைன்னு சொல்றாங்க..மலைக்காட்டுல ஒரு பயணம், அமைதியான தரிசனம்னு பீமாசங்கரம் போயி, தரிசனம் பண்ணிட்டு வர்றது மனசுக்கு ரொம்ப இதமான விஷயம்..  சரி பீமாசங்கரம் அப்படிங்கற இந்த கோவிலோட வரலாறு அப்டின்னு பார்த்தோம்னா, முன்னதொரு காலத்துல, கும்பகருணனின் பல மனைவிகளில் ஒருத்தியான ...

50 ஆயிரம் பேர் உயிர்த்தியாகம் செய்த அற்புத சிவஸ்தலம்.. குஜராத் சோமநாதர் கோவில்!

Image
 ஆறுமுறை இடிக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் மீண்டெழுந்த ஜோதிர்லிங்க கோவில்..  50 ஆயிரம் பேர் உயிர்த்தியாகம் செய்த அற்புத சிவஸ்தலம்.... சந்திரனுக்கே சாபவிமோசனம் தந்த சிவன்கோவில்... இப்படி பல பெருமைகளை வச்சுட்டிருக்கிற ஒரு அருமையான ஜோதிர்லிங்க கோவில் தாங்க, குஜராத் மாநிலத்துல இருக்குற சோம்நாத் ஜோதிர்லிங்க கோவில்... சோம்நாத் ஜோதிர்லிங்க கோவில் அப்படின்னு சொன்னாலே பாவங்கள் தீர்க்கும் ஜோதிர்லிங்க கோவில் அப்படிங்கற விஷயமும், இந்த கோவில இடிச்சு துவம்சம் பண்ணின கஜினி முகமதுவும் தன் நியாபகத்துக்கு வருவாங்க... இந்த கோவில் சந்திரனால் கும்பிடப்பட்ட கோவில் அப்படின்னு சொல்லும்போதே இந்த கோவில் பத்தின முக்கியத்துவம் நமக்கு தெரிய வருது. முந்தைய யுகத்துல 27 நட்சத்திரங்களும் சந்திரனுக்கு மனைவியரா இருந்திருக்காங்க.. இதுல கடைசி மனைவியா இருக்குற ரோகினி மேல மட்டும் சந்திரன் பாசமா இருந்தாராம்.. இதனால மற்ற 26 மகள்களும் அவங்களோட அப்பாவான தட்சன் கிட்ட போய் இது பத்தி சொல்லிருக்காங்க.. உடனே கோபமான தட்சன், சந்திரனுக்கு ஒரு பெரிய சாபத்தை கொடுத்திடுறாரு.. அந்த சாபத்தினால தொழுநோயால பாதிக்கப்பட்ட சந்திரனோட அழ...

ஸ்ரீராமர் பிண்டம் கொடுத்த தலம்.. த்ரியகம்பேஸ்வரர் ஜோதிர்லிங்க கோவில்..!

Image
 மேற்கு கடற்கரை காத்துல தட.. தடக்குற ரயில் பயணம்... காட்டு வழிப்பாதைல வர்ற மலைச்சுரங்கங்கள்ன்னு...  1500 கி.மீ., தூர பயணத்தை தாண்டினா வர்றது தான் த்ரியகம்பேஸ்வரர் ஜோதிர்லிங்க கோவில்...பிரம்மகிரி மலை அடிவாரத்துல நிக்குற தலம்... பிரம்மா, விஷ்ணுவோட, சிவபெருமானும் சேர்ந்து மும்மூர்த்திகளா அருள்பாலிக்குற அருமையான ஜோதிர்லிங்கத்தலம் தாங்க   த்ரியகம்பேஸ்வரர் ஜோதிர்லிங்க கோவில்.. 12 ஜோதிர்லிங்க கோவில்கள்ல பிரம்மா, விஷ்ணு, சிவன் மூணு பேரும் ஒரே லிங்க வடிவமா அருள்பாலிக்குற அருமையான தலம் தாங்க  த்ரியகம்பேஸ்வரர். இந்த கோவில் மஹாராஷ்ட்ராவுல இருக்குற மேற்கு தொடர்ச்சி மலைல பிரம்மகிரி, நீலகிரி, அப்புறம் காலகிரின்னு சொல்ற மூணு மலைகளுக்கு நடுவுல இருக்குங்க... இந்த கோவில் போறது எப்படின்னு இதோட ஸ்பெஷாலிட்டி என்னன்னு தெரிஞ்சுக்குவோம். சிவபெருமான் ஆருத்ரா தரிசன நாள்ல ஜோதி வடிவமா 12 இடங்கள்ல அருள்பாலிச்சாரு.. அதை ஜோதிர்லிங்கம்னு சொல்றாங்க.. இந்த  த்ரியகம்பேஸ்வரர் ஜோதிர்லிங்கம் மத்த ஜோதிர்லிங்கம் மாதிரி இல்லாம பிரம்மா, விஷ்ணு, சிவன் மூணு பேரும் லிங்க வடிவமா அருள் தர்ற கோவிலா இருக்க...

வன்கொடுமை சட்டத்தை (பிசிஆர்) அரசு திரும்ப பெற வேண்டும். சத்தியமங்கலத்தில் பிப்-5ல் மாபெரும் ஆர்ப்பாட்டம்.

Image
சத்தியமங்கலம், பவானிசாகர் அருகே விவசாய தோட்டத்தில் மலம் கழித்த நபர்களை கைது செய்ய வேண்டும், வன்கொடுமை சட்டத்தை (பிசிஆர்) அரசு திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை முன்வைத்து பிப்ரவரி 5 ம் தேதி சத்திய மங்கலத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என (தமி ழக விவசாயிகள் பாதுகாப்பு  சங்கம், அனைத்து விவசாயிகள் சங்க கூட்ட மைப்பு மற்றும் பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூகத் தினர் சார்பில்) தமிழ்மாநில விவசாயி கள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் ஈசன் முருகேஷன் செய்தியாளர் சந்திப்பின் போது பேட்டியளித்தார். ஈரோடுமாவட்டம்,பவானிசாகர் அருகே கரு தொட்டம்பாளையத்தை சேர்ந்த விவசாயி கிருஷ்ணப்ப கவுடர் என்ப வரின் விவசாய தோட்டத்திற்குள், தொடர்ந்து மலம் கழித்த நபர்களை கண்டித்த, கிருஷ்ணப்பகவுடர் மீது சத்தியமங்கலம் போலீசார் வன் கொ டுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய் துள்ளனர். மேலும். சத்தியமங்கலம் தாலுகாவில் இது போன்ற வழக்குகள் எந்த முழு விசாரணையும் இல்லாமல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து, பவானிசாகர் அருகே உள்ள, நால்ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில்,...

கோவை சரவணம்பட்டி பி.பி.ஜி கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது

Image
கோவை சரவணம்பட்டி பி.பி.ஜி கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது… கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பி.பி.ஜி கல்வியியல் கல்லூரியில் பட்டம் ஏற்பு விழா கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது.. கல்லுாரியின் தலைவர் .டாக்டர்.தங்கவேலு தலைமையில் நடைபெற்ற விழாவில், கல்லூரியின் செயலாளர் .சாந்தி தங்கவேலு, மற்றும் கல்லுாரியின் துணைத் தலைவர் .அக்ஷய் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..முன்னதாக, கல்லூரியின் முதல்வர் முனைவர். சித்ரா அனைவரையும் வரவேற்று,கல்லூரியின் செயல்பாடுகளை பற்றி அறிக்கை சமர்பித்தார். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பாரதியார் பல்கலைக்கழகத்தின், பதிவாளர் (பொறுப்பு), முனைவர்..கே.முருகவேல், கலந்து கொண்டு சிறப்புரை வழங்கி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.அப்போது பேசிய அவர்,வருங்கால சந்ததியினரை உருவாக்கக் கூடிய பொறுப்பு ஆசிரியர் கையில் உள்ளது என்றும் இங்கு பட்டம் வாங்குபவர்களில் பெரும்பாண்மையோர் பெண்கள் என்றும் பெண்களுக்கு சமுதாயத்தில் அதிகமான பொறுப்புகள் உண்டு என்றும் கூறினார்..நிகழ்ச்சியில் கவுரவ விருந்தினராக,கலந்து கொண்ட தினமணி பத்திரிக்கை ஆசிரியர் க...

சூலூர் காவல்துறையினர் அதிரடி 50 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா மீட்பு ஒருவர் கைது

Image
சூலூர் காவல் துறையினர் கோவை அவினாசி ரோடு நீலாம்பூர் மேம்பாலத்திற்கு கீழே கஞ்சா சம்பந்தமான குற்றங்களை கண்காணித்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது  சந்தேகத்திற்குரிய (TN 63 AD 4308 Tata Ace) வாகனத்தை நிறுத்தி விசாரித்த போது அந்த வாகனத்தில் டிரைவர் சீட்டுக்கு அருகே வெள்ளை நிற பையில் சட்டத்திற்கு புறம்பாக 5 கிலோ கிராம் கஞ்சாவை விற்பனை செய்யும் நோக்கத்துடன் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்து விசாரனை செய்த போது  அவர் பெயர் நாகராஜ் (45) மதுரையை சேர்ந்தவர் தற்போது இருகூரில் வசித்து வருகிறார் இவர் மீது ஏற்கனவே சூலூர் காவல் நிலைய குற்ற எண்- 845/2023 u/s. 8(c),20(b)(ii)(C),25,26 NDPS Act என்ற வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவானவர் என தெரிய வந்ததது மேலும் அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர் இதன் மதிப்பு 50 ஆயிரம் ஆகும் ஒட்டி வந்த வாகனத்தையும் கைப்பற்றி  காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

*ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிசெவியூர் ஊராட்சியில் மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு. K.A. செங்கோட்டையன் அவர்களின் ஆணைக்கிணங்க நம்பியூர் ஒன்றிய கழகச் செயலாளர் திரு. தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் உத்தரவின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர் திரு. K.M. மகுடேஸ்வரன் அவர்கள் சொக்குமாரிபாளையம் அண்ணமார் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழாவிற்கு 10000 மதிப்புள்ள புதிய மின் இணைப்பு வழங்கப்பட்டு 10000 நன்கொடை வழங்கப்பட்டது *

Image
 ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிசெவியூர் ஊராட்சியில் மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு. K.A. செங்கோட்டையன் அவர்களின் ஆணைக்கிணங்க நம்பியூர் ஒன்றிய கழகச் செயலாளர் திரு. தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் உத்தரவின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர் திரு. K.M. மகுடேஸ்வரன் அவர்கள் சொக்குமாரிபாளையம் அண்ணமார் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழாவிற்கு 10000 மதிப்புள்ள புதிய மின் இணைப்பு வழங்கப்பட்டு 10000 நன்கொடை வழங்கப்பட்டது இதில் வார்டு உறுப்பினர் திருமதி.மரகதாள் மற்றும் கோயில் பூசாரிகள் கோயில் நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தார்கள்.

கோவையில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற 16-வது பட்டமளிப்பு விழாவில் இளங்கலை முதுகலை என 1494 மாணவ மாணவிகள் பட்டம் பெற்றனர்

Image
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற  16-வது பட்டமளிப்பு விழாவில் இளங்கலை,முதுகலை என  1494 மாணவ மாணவிகள்  பட்டம் பெற்றனர்.. கோவை கவுண்டர் மில் பகுதியில் உள்ள, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் 16-வது பட்டமளிப்பு விழா  நடைபெற்றது.கல்லூரியின் செயலாளர் மற்றும் இயக்குனர் டாக்டர் சி.ஏ.வாசுகி தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக கொல்கத்தாவில் உள்ள இந்திய விலங்கியல் ஆய்வு  மையத்தின் இயக்குனர்  டாக்டர் பீரீத்தி பானர்ஜி கலந்து கொண்டு 1494 மாணவ மாணவிகளுக்கு பட்டம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார்.இதில் மாணவ,மாணவிகளிடையே  பேசிய அவர்,மாணவ,மாணவிகள் தங்களது எதிர்கால கனவுகளை மிக பெரிதாக காண வேண்டும் என்றும், ,எதிர்கால இந்தியா வல்லரசாக மாற இளம் தலைமுறை மாணவர்களின் பங்கு மிக அவசியம் என தெரிவித்தார்..கல்வி மற்றும் திறன் ஆற்றலோடு இலட்சியத்தை நோக்கி பயணிக்கும் போது உடல் ஆரோக்கியத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்..குறிப்பாக நாம் நம்மை குறைத்து மதிப்பிட கூடாது எனவும்,உயர்ந்த நிலை எண்ணங்களை வளர்த்தி கொள்ள வேண்டு...

நுகர்வோர் அமைப்புகளுடன் காலாண்டு கூட்டம் கோவை மண்டல மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது

Image
நுகர்வோர் அமைப்புகளுடன் காலாண்டு கூட்டம் கோவை மண்டல மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில்  23-01-2024 அன்று காலை 11-30 மணியளவில் நடைபெற்றது .  இக்கூட்டத்தில் கோவை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் செயல் தலைவர்   அய்யாசாமி, துணை தலைவர் அரிமா தே.தேவபாலன் ஆகியோர்  கலந்து கொண்டனர்.  விவாதப் பொருளில் மின்நுகர்வோர் சார்பில் மன்றக் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது யாதெனில் மின்பலகை இடமாற்றம் செய்யும் பொழுது ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்யும் மின்நுகர்வோர்களை ரூபாய் 80/-Stamp paper- ல் undertaking அடித்து பதிவேற்றம் செய்ய வற்புறுத்துகிறார்கள் இதை தவிர்க்க இம்மாமன்றம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. 

காவல் துறை சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா. காவல்துறை ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி - டி.எஸ்.பி.சரவணன் துவக்கி வைத்தார்.

Image
சத்திய மங்கலத்தில், சத்தி காவல் உட் கோட்ட காவல்துறை சார்பாக, தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை யொட்டி,ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற் றது.இதில்,சத்தியமங்கலம், புளியம் பட்டி, பவானிசாகர், தாளவாடி பகுதி காவலர்கள் மற்றும் அனைத்து மக ளிர் காவல் நிலைய காவலர்கள் உள் ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காவலர் கள் பேரணியில் பங்கேற்றனர். விழிப் புணர்வு பேரணியை ,சத்தியமங்கலம் உட் கோட்ட துணை காவல்கண்காணி ப்பாளர் சரவணன் தலைமையேற்று துவக்கி வைத்தார். காவல் ஆய்வாளர் முருகேசன் மற்றும் சத்தி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  பேரணி, சத்தியமங்கலம் எஸ். ஆர். டி. கார்னரில் இருந்து புறப்பட்டு, மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக, பேரு ந்து நிலையம்,சத்தியமங்கலம் ஆற்று பாலம் வழியாக,மணிக்கூண்டு,கோட்   டு வீராம்பாளையம்,வடக்குப்பேட்டை சென்று அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்,நிறைவு பெற்றது.