புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழக மீனவர் அணி பதவியேற்பும் பாராட்டு விழாவும் நடைபெற்றது
புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழக மீனவர் அணி பதவியேற்பும் பாராட்டு விழாவும் நடைபெற்றது புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மீனவர் அணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் புதிய நிர்வாகிகளுக்கான பதவி ஏற்பு விழாவும் பாராட்டு விழாவும் புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் மு ராமதாஸ் தலைமை தாங்கி புதிய நிர்வாகிகளுக்கு பதவியேற்பு உறுதி மொழியை ஏற்க வைத்து ஆடை போர்த்தி அனைவரையும் பாராட்டிப் பேசினார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் . சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன் வரவேற்றார் பொதுச் செயலாளர் பேராசிரியர் எ மு ராஜன் வாழ்த்திப் பேசினார். புதிய மீனவர் அணிக்குத் தலைவராக முதலியார்பேட்டை தொழிலதிபர் கோ. செ.சந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். துணைத் தலைவர்களாக காலாப்பட்டு ஆ.குமார் மற்றும் நரம்பை ரா ரஞ்சித் ஆகியோர் பொறுப்பு ஏற்றுக் கொண்டனர். மூர்த்திக்குப்பம் சுகுமார், சின்ன வீராம்பட்டினம் தனஞ்செயன் ஆகியோர் செயலாளர்கள் ஆகவும், கனக செட்ட்டிக...