"திறமையை வளா்த்துக்கொண்டால் வாழ்க்கையில் சாதிக்கலாம்"- பள்ளி ஆண்டுவிழாவில் அமைச்சா் கீதாஜீவன் பேச்சு.!
தூத்துக்குடி கீதாமெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 35வது ஆண்டு விழா முத்தையாபுரம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளியின் செயலாளர் ஜீவன் ஜேக்கப், வரவேற்புரையாற்றினாா். தலைமை ஆசிாியா் சித்ரா ஆண்டறிக்கையை வாசித்தாா். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கூடுதல் கலெக்டா் புவனேஸ்ராம் கடந்த ஆண்டு 10 12ம் வகுப்பு தோ்வில் முதலிடம் பெற்ற மாணவா்களுக்கும், 100 சதவீத தோ்ச்சி பெற்ற அனைவருக்கும் பாிசுகளை வழங்கினாா். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆசிாியா்கள் உள்பட பலருக்கு பாிசுகள் வழங்கி பேசுகையில் ஓவ்வொரு ஆண்டும், நடைபெறும் விழாவில் ஓவ்வொரு மாற்றங்களின் மூலம் பல்வேறு வகையில் திறமைகள் நமமுடைய வளா்ச்சிகள் தெரிவதற்கு ஓரு வாய்ப்பாக இந்தவிழா அமைய பெற்றுள்ளது. பள்ளி படிப்பில் முழு கவனம் செலுத்தி அதை பயன்படுத்தி கிடைக்கும் வாய்ப்பை தவர விடக்கூடாது மீண்டும் அந்தவாய்ப்பு அமையாது எல்லா விஷயங்களுக்கு படிப்பு என்பது அவசியமாகிறது. போட்டி நிறைந்த உலகத்தில் பொறியாளர் படிப்பு முடித்த பின்பு சில பணிகளுக்கு செல்லும் போது 10 12ம் வகுப்பு தோ்வில் பெற்ற மதிப்பெண்களை தான்...