Posts

"திறமையை வளா்த்துக்கொண்டால் வாழ்க்கையில் சாதிக்கலாம்"- பள்ளி ஆண்டுவிழாவில் அமைச்சா் கீதாஜீவன் பேச்சு.!

Image
தூத்துக்குடி கீதாமெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 35வது ஆண்டு விழா முத்தையாபுரம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளியின் செயலாளர் ஜீவன் ஜேக்கப், வரவேற்புரையாற்றினாா். தலைமை ஆசிாியா் சித்ரா ஆண்டறிக்கையை வாசித்தாா். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கூடுதல் கலெக்டா் புவனேஸ்ராம் கடந்த ஆண்டு 10 12ம் வகுப்பு தோ்வில் முதலிடம் பெற்ற மாணவா்களுக்கும், 100 சதவீத தோ்ச்சி பெற்ற அனைவருக்கும் பாிசுகளை வழங்கினாா்.  வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆசிாியா்கள் உள்பட பலருக்கு பாிசுகள் வழங்கி பேசுகையில் ஓவ்வொரு ஆண்டும், நடைபெறும் விழாவில் ஓவ்வொரு மாற்றங்களின் மூலம் பல்வேறு வகையில் திறமைகள் நமமுடைய வளா்ச்சிகள் தெரிவதற்கு ஓரு வாய்ப்பாக இந்தவிழா அமைய பெற்றுள்ளது. பள்ளி படிப்பில் முழு கவனம் செலுத்தி அதை பயன்படுத்தி கிடைக்கும் வாய்ப்பை தவர விடக்கூடாது மீண்டும் அந்தவாய்ப்பு அமையாது எல்லா விஷயங்களுக்கு படிப்பு என்பது அவசியமாகிறது. போட்டி நிறைந்த உலகத்தில் பொறியாளர் படிப்பு முடித்த பின்பு சில பணிகளுக்கு செல்லும் போது 10 12ம் வகுப்பு தோ்வில் பெற்ற மதிப்பெண்களை தான்...

தூத்துக்குடி : புகையிலை பொருட்களை கடத்திய வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது.!

Image
  புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சரக்கு வாகனத்தில் கடத்திய வழக்கில் தூத்துக்குடியைச்  சேர்ந்த சுரேஷ்குமார் (42), வடிவேல்முருகன் (44) மற்றும் மகேஷ்வரன் (30) ஆகியோர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (1982) கீழ் நடவடிக்கை எடுக்க புதியம்புத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் சுந்தரமூர்த்தி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்க்கு வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் மேற்படி 3 எதிரிகள் நேற்று (22.01.2026) தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 26ஆம் தேதி முதல் முக்கிய ரயில்களுக்கு புதிய நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Image
  இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: தெற்கு ரயில்வே மூலம் இயக்கப்படும் பல்வேறு ரயில்களுக்கு புதிய ரயில் நிறுத்தங்களை ரயில்வே வாரியம் அனுமதித்து உள்ளது. இந்த புதிய ரயில் நிறுத்தங்களில் வருகிற 26-ந் தேதி முதல் அந்தந்த ரயில்கள் நின்றும் செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களிலும் பல்வேறு ரயில்களுக்கு புதிய நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சென்னை-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் கோவில்பட்டியிலும், தூத்துக்குடி-சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடி மேலூரிலும், மதுரை-புனலூர் எக்ஸ்பிரஸ், புனலூர்-மதுரை எக்ஸ்பிரஸ் கடம்பூரிலும், மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி, தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடி மேலூரிலும், பாலக்காடு-திருச்செந்தூர், திருச்செந்தூர்-பாலக்காடு எக்ஸ்பிரஸ் ஸ்ரீவைகுண்டத்திலும், தூத்துக்குடி-ஓகா, ஓகா-தூத்துக்குடி இடையே விவேக் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடி மேலூரிலும் நின்று செல்லும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

தூத்துக்குடியில் 16வது தேசிய வாக்காளர் தினம் : ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு.

Image
  தூத்துக்குடியில் 16வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்திய தேர்தல் ஆணையம், இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையால் உருவாக்கப்பட்ட ஜனவரி 25ம் தேதி 1950 ஆண்டினை நினைவு கோரும் வகையில் ஜனவரி 25, 2011 ஆம் ஆண்டு முதல் தேசிய வாக்காளர் தினமாக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இதன்படிதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தலைமையில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், உதவி ஆட்சியர் (பயிற்சி) தி.புவனேஷ்ராம், மற்றும் அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

தூத்துக்குடியில் ஐஏஎஸ் பயிற்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

Image
  தூத்துக்குடி மாவட்டம் மேல அலங்காரத்தட்டு, கிராமத்தில், சந்திரகாந்தன் நினைவு முற்றத்தில், தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளரும், தேவேந்திரகுல வேளாளர் சமூக இளைஞர்களை கல்வி வேலை வாய்ப்புகளில் முன்னேற்றம் காண சென்னை திரிசூலத்தில் கல்வி மேம்பாட்டு இயக்கம் அமைத்து, மருதம் அறக்கட்டளை மூலம் போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி அளித்து பல்வேறு இளைஞர்களை அரசுப் பணிகளில் அமரக்காரணமாக இருந்தவரும் வழக்கறிஞருமாகிய சந்திரகாந்தனுடைய முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு மள்ளர் பேராயத்தின் தலைவர் சுபாசினி மள்ளத்தி தலைமை தாங்கினார். தமிழர் களம் தலைவர் அரிமா வளவன் நினைவுச் சுடரேற்றி உரையாற்றினார். வழக்கறிஞர் சிவசாமி தமிழன் எழுதிய நானே சாட்சி என்ற புத்தகம்  வெளியிடப்பட்டது. சந்திரகாந்தன் நினைவு முற்றத்தில் களம் போட்டித் தேர்வு ஐஏஎஸ் பயிற்சி மையம், மற்றும் நூலகத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. தூத்துக்குடி சமூகச் செயற்பட்டாளர் மோகன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.  நிகழ்ச்சியில் குயிலி நாச்சியார், எரிமலை இராமச்சந்திரன், சமர்ப்பா குமரன், ராஜ்குமார், இரணியன், தமி...

தூத்துக்குடியில் பேராசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்.!

Image
  தூத்துக்குடி தூய மரியன்னைக் கல்லூரியில் மூட்டா மற்றும் ஏயூடி பேராசிரியர்கள் மாலை நேர காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் நடைபெற்ற காத்திருப்பு போராட்டம் மூட்டா கிளை செயலாளர் பேராசிரியர் தலைமையில் நடைபெற்றது. அதில் ஒரே பணியை மேற்கொள்ளும் இரண்டு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அரசு பணியில் உள்ள கல்லூரி ஆசிரியர்கள் இடையே பாரபட்சம் காட்டுவது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 14 க்கு எதிரானது எனவும் அரசு கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு ஊதியத்தை வழங்கிவிட்டு அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு அதே பணி மேம்பாட்டு ஊதியத்தை வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது என அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களின் கண்ணியத்தை பெரிதும் பாதிக்கிறது எனக்கோரி   தூத்துக்குடி  தூய மரியன்னைக் கல்லூரி வளாகத்தில் பேராசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி கல்லூாி மாணவி மாநில அளவிலான பேச்சுப்போட்டிக்கு தோ்ச்சி.!

Image
  தூத்துக்குடி ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற அனைத்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டியில் பஞ்சசீல நாயகன் என்று கொடுக்கப்பட்ட தலைப்பில் சிறப்பாக சொற்பொழிவாற்றிய தூய மரியன்னை கல்லூரி மாணவி சாண்ட்ரா மாக்ஸ்லின் முதல் பரிசான 5000 ரூபாய்க்கான காசோலையையும் பரிசு சான்றிதழையும் பெற்று மாநில அளவிலான பேச்சுப்போட்டிக்கு தேர்வாகி உள்ளார்.  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தூத்துக்குடி கலெக்டா் அலுவலகத்தில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் வளர்ச்சித்துனை இயக்குநர் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.