Posts

தூத்துக்குடி திமுக வேட்பாளர் அமைச்சர் கீதாஜீவன் ஊா்வலமாக சென்று வேட்புமனுதாக்கல்- அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு ஆரம்பமே அமா்களம்.!

Image
  தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான கீதாஜீவன் போட்டியிடுகிறாா். இந்நிலையில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், தலைமையில் மேயா் ஜெகன் பொியசாமி, காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் சண்முகம், மாவட்ட தலைவர் சகாயராஜ், தேமுதிக மாவட்ட செயலாளர் தயாளலிங்கம், மக்கள் நீதிமய்யம் மாவட்டச் செயலாளர் ஜவஹர் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் விமல்வங்காளியர், இந்தியகம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் தனலட்சுமி, மாா்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநகர செயலாளர் முத்து, எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் மைதீன்கனி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, சமத்துவமக்கள் கழக மாவட்ட செயலாளர் அற்புதராஜ், முக்குலத்தாோ் புலிப்படை மாவட்ட செயலாளா் மணி, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் யூசுப், மனித நேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளா் முகமது அசன், ஆகியோா் முன்னிலையில் மாா்த்தான்பட்டி சத்திரம் பகுதியில் மாவட்ட பிரதிநிதி சக்திவேல் த...

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி பேர்ணாம்பட்டில் அதிமுக வேட்பாளர் பரிதா புருஷோத்தமன் சூறாவளி தேர்தல் பரப்புரை.

Image
  தமிழக சட்டசபை தேர்தல் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.  ஆங்காங்கே வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் வேலூர் மாவட்டம் ,குடியாத்தம் சட்டமன்ற தொகுதி (தனி) அதிமுக வேட்பாளர் பரிதா புருஷோத்தமன் சூறாவளியாக குடியாத்தம் தொகுதியில் வாக்காளர்களை நேரில் சந்தித்து அவர்களது இல்லத்துக்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பை நடத்தி வருகிறார். அதன்படி 4ம் தேதி சனிக்கிழமை அதிகாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளான கடாம்பூர் ,உமராபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்தே சென்று வீதி வீதியாக வாக்காளர்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் பரிதா. பரிதாவுடன் ஒன்றிய செயலாளர் பொகளூர் பிரபாகரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் திரளாக புடைசூழச் சென்றனர். ஆங்காங்கே இருந்த தொழிலதிபர்களையும் அவர்களது இல்லத்தில் நேரில் சந்தித்து தனக்கு ஆதரவு தெரிவித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அப்பொழுது அதிமுக வேட்பாளர் பரிதா புருஷோத்தமனை ...

"மக்களோடு பணியாற்றிய வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும், தோ்தலுக்காக மட்டும் வருபவா்களை புறக்கணிக்க வேண்டும்"- சாதனைகளை சொல்லி அமைச்சர் கீதாஜீவன் வாக்கு சேகாிப்பு.

Image
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா்உாிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான கீதாஜீவன் ேபாட்டியிடுகிறாா்.  37 மற்றும் 42வது வாா்டு பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். மேயா் ஜெகன்பொியசாமி பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா, மண்டலத்தலைவர் அன்னலட்சுமி, கவுன்சிலா் பாப்பாத்தி, வட்டச்செயலாளா்கள் சுரேஷ்மகாராஜா, மாாிமுனீஸ்வரன், ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் வரும் 23ம் தேதி நடைபெறவுள்ள தோ்தலில் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரான எனக்கு அனைவரும் உதயசூாியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். காரணம் எந்த பிரச்சனையாக இருந்தாலும் குறைபாடுகள் என்றாலும் மக்களோடு மக்களாக எப்போதும் உங்களுடன் இருந்து பணியாற்றி வருகிறேன். அதிமுக பிஜேபி தவெக ஆகிய கட்சிகள் தோ்தலுக்கு முன்று மாதத்திற்கு முன்பு தான் நாங்களும் இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு வருவாா்கள் ஆனால் 5 ஆண்டுகாலம் கொரோனா மழை வௌ்ளம் காலத்தில் என்ன நடந்தது கூட பாா்ப்பத்கு கூட வந்திருக்க ம...

தூத்துக்குடி :நடைபெறவுள்ள 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு புரட்சிகர இளைஞர் முன்னணி ஆதரவு.!

Image
  புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் தூத்துக்குடி மாநகரப் பொறுப்பாளர் சுஜித், புறநகர் பொறுப்பாளர் பெரியார் பித்தன், நெல்லை மாநகர பொறுப்பாளர் பாண்டியன் தென்காசி மாநகரப் பொறுப்பாளர் சீனிவாசன் ஆகியோர் தூத்துக்குடி பிரஸ் கிளப் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். மாநகரப் பொறுப்பாளர் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நடைபெறவுள்ள 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியும் பாஜக-அதிமுக கூட்டணியும் முதன்மையாக போட்டியிடுகின்றன.  இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 'பாஜக - அதிமுக கூட்டணி தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கும் தமிழக உரிமைகளுக்கும் எதிரான கூட்டணி. எனவே அக்கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது. மாறாக திமுக வேட்பாளர்களுக்கும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கும் மட்டுமே வாக்களிக்க வேண்டும்' என தமிழ்நாடு முழுவதும் எங்கள் அமைப்பு சார்பாக பரப்புரை செய்ய உள்ளோம். ஏனென்றால் வர்ணாசிரம அடிப்படையிலான சமஸ்கிருத ஆதிக்க, மதவாத நாடாக இந்தியாவை மாற்றும் கொள்கையைக் கொண்ட ஒரு சனாதன பாசிச அமைப்புதான் ஆர்எஸ்எஸ். இந்த ஆர்எஸ்எஸ்-ன் அரசியல் பிரிவே பாஜக உள்ளது. இந்த பாஜக 12 ஆண்டு கா...

வெள்ளிங்கிரி மலை ஏற்றத்தில் மாணவர் உயிரிழப்பு

 பூண்டி வெள்ளிங்கிரி மலை ஏற்றத்தில் மாணவர் உயிரிழப்பு கோவை அருகே உள்ள பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோவில் ஐந்தாவது மலையில் ஏறிக்கொண்டிருந்த போது இளம் மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ் குமார் (23) என்பவர், பேரூர் தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள சேரன் கல்லூரியில் Pharm-D ஐந்தாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி அருகே வாடகை வீட்டில் தங்கி கல்வி பயின்று வந்துள்ளார். நேற்று இரவு சுமார் 10 மணியளவில், நண்பர்கள் அபி, மகேந்திரன் உள்ளிட்ட 8 பேருடன் வெள்ளிங்கிரி மலையை ஏறத் தொடங்கியுள்ளார். இன்று அதிகாலை 2 மணியளவில் ஐந்தாவது மலையை அடைந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் மயங்கி விழுந்துள்ளார். அங்கு இருந்தவர்களின் உதவியுடன் மீட்க முயன்றும், அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, டோலி தூக்கும் நபர்களின் உதவியுடன் அவரது உடல் மலையிலிருந்து கீழே இறக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

8 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திருப்பூரில் சீமான் பிரசாரம்

Image
 இலைக்கு ஓட்டு போட்டீர்கள் மொட்டையாகி போச்சு.  சூரியனுக்கு வாக்களித்தீர்கள் அவர்கள் வீட்டில் விடிந்தது. தமிழகம் இருண்டது. விசில் தியேட்டரில் ஊதி கிடந்தார்கள் இப்போது தெருவில் ஊதுகிறார்கள். விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள் என சீமான் திருப்பூரில் பரப்புரை. திருப்பூர் யூனியன் மில் சாலையில் நாம் தமிழர் கட்சியின் பரப்புரை கூட்டம் மாலை 7.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில்  ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்த பரப்புரை காரணமாக 2 மணி நேரம் தாமதமாக திருப்பூர் பரப்புரைக் கூட்டத்திற்கு 9.20 மணிக்கு சீமான் வந்தடைந்தார். இதனைத் தொடர்ந்து பேச துவங்கிய சீமான் தன்னுடைய ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் என வீடியோ காட்சிகள் மூலம் விளக்கி உரையாற்றினார். அதில் தொழிற்சாலைகள் மூலமாக தமிழகம் மாசு நிறைந்து உள்ளதாகவும் அதிலிருந்து விவசாயம் சார்ந்த தொழில்கள் உருவாக்கப்பட்டு பொதுமக்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் எனவும் தரமான கல்வி மருத்துவம் குடிநீர் உள்ளிட்டவை கட்டணம் இன்றி வழங்கப்படும் ஆனால் நல்ல சாலைகள், தரமான சேவைகள் இடை நிறுத்தா மின்சாரம் என வழங்கப்படும் அனைத...

மகளிர் உரிமைத்தொகையில் திமுக ஒரு கோடி குடும்பங்களை ஏமாற்றி விட்டது... திருப்பூர் வடக்கு தொகுதி வேட்பாளர், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேச்சு

Image
திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுகக்கூட்டம், திருப்பூர் ஒன்றிய கழகத்துக்குட்பட்ட தட்டான்குட்டையில் உள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் நடந்தது. முன்னாள் அமைச்சரும், திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளருமான எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் மற்றும் அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர்.  இந்தக்கூட்டத்துக்கு ஒன்றிய கழக செயலாளரும், திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ.,வுமான கே.என்.விஜயகுமார் தலைமை தாங்கினார். கழக அவைத்தலைவர் பழனிசாமி, பாஜக நிர்வாகி சின்னசாமி, கொங்குநாடு விவசாயிகள் கட்சி நிர்வாகி கொங்கு ராஜாமணி, உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் திருப்பூர் வடக்கு தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசும்போது கூறியதாவது:அவிநாசி அத்திக்கடவு திட்டம் நிறைவேற்ற இயலாத போது, மத்திய நிதி வர தாமதமானது. அதற்காக மாநில அரசின் நிதியிலேயே இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவித்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். இதற்கு ஆய்வு செய்து 1600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி திட்டத்தை நிறைவேற்ற வழிவகை செய்தவர் எடப்பாடியார்.  இந்த திட்டத்தை நிறைவேற...