Posts

Showing posts from August, 2019

ரிசர்வ் வங்கியின் பங்கு தொகையை தான் காங்கிரஸ் வாங்கியது- தமிழிசைக்கு கே.எஸ்.அழகிரி பதில்

Image
ரிசர்வ் வங்கியின் பங்கு தொகையை தான் காங்கிரஸ் வாங்கியது முதன்முறையாக உபரி நிதியை பா.ஜ.க. தான் வாங்கி உள்ளது தமிழிசைக்கு கே.எஸ்.அழகிரி பதில்   சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-  சிதம்பரம் வழக்கில் சி.பி.ஐ. வக்கீல் சிதம்பரம் அதிபுத்திசாலி. அவரை விசாரிக்க காலம் தேவை. அதிகமான கோப்புகளை பார்க்க வேண்டி உள்ளது என்று கூறியுள்ளார். இதை கேட்கும் போது சிறப்பாக இருந்தது. சிதம்பரத்தை அதிபுத்திசாலி என்று கூறும் இவர்கள் தங்களை அதிபுத்திசாலியாக்கி கொண்டு கைது செய்திருந்தால் நன்றாக இருக்கும். ஒரு தலைவரை அதிபுத்திசாலி என்று கிண்டல் செய்வது நியாயமா. புத்திசாலித்தனமாக இல்லாமல் ஏன் அவரை கைது செய்தீர்கள். புத்திசாலித்தனத்தை தயாரித்து அல்லவா கைது செய்திருக்க வேண்டும். இதற்கு சி.பி.ஐ. பதில் சொல்ல வேண்டும். பணவீக்கத்திற்கு காங்கிரஸ் தான் காரணம் என்று நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார். பொருளாதாரத்தில் பணவீக்கம் ஒரு அசைவு. இந்தியாவின் வளர்ச்சியை 9 சதவீதம் கொண்டு சென்றது காங்கிரஸ். ஆசியாவில் சீனாவை அடுத்த இந்தியா வளர்ந்துள்ளதற்கு காரணம் காங்கிர...

திருப்பூரில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

Image
திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் ஆய்வுக்கூட்டம் தலைவர் மேட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.செம்மலை அவர்கள்  தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பொது நிறுவனங்கள் குழுவின் ஆய்வுக்கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எஸ்.பழனிசாமி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொது நிறுவனங்கள் குழுவின் தலைவர் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.செம்மலை அவர்களுடன், உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் மகேஷ் பொய்யா மொழி (திருவெரும்பூர்), எஸ்.ஈஸ்வரன் (பவானி சாகர்), முனைவர் கோவி.செழியன் (திருவிடைமருதூர்), அ.சண்முகம் (கிணத்துக்கடவு), கே.ஏ.பாண்டியன் (சிதம்பரம்) அவர்களும், சட்டமன்றப் பேரவைச் செயலாளர் கி.சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், பொது நிறுவனங்கள் குழுத்தலைவர் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.செம்மலை பேசுகையில்,   இந்திய ஜனநாயகத்தின் ஒரு அங்கமாக சட்டமன்றம் திகழ்கிறது. சட்டமன்றப் பேரவை சட்டமன்றப் பேரவை தலைவர் அவர்கள்...

புதிய கல்விக் கொள்கையின் குறைகளை கலைய மத்திய அரசை வலியுறுத்தி திருப்பூரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Image
புதிய கல்விக் கொள்கையின் குறைகளை கலைய மத்திய அரசை வலியுறுத்தி திருப்பூரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். புதிய கல்விக் கொள்கையில் கிராமப்புறம் மற்றும் ஏழை மாணவர்கள் பாதிக்க படுவார்கள். பத்து இருபது பள்ளிகளை இணைத்து ஒருங்கிணைந்த பள்ளியாக செயல்படும் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் , 3 5 8ம் வகுப்புகளுக்கு தகுதி தேர்வு நடத்துவதை தவிர்க்கவும்,  பன்னிரண்டாம் வகுப்பு முடிந்தாலும் தேசிய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற முறையையும் குலக்கல்வி திட்டம் கொண்டு வருவதை கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக திருப்பூர் குமரன் சிலை முன்னதாகவும் திருப்பூர் தொடக்க கல்வி அலுவலகம் முன்பாகவும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த ஆசிரியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கல்விக் கொள்கையில் உள்ள சீர்கேடுகளை கலைந்து அனைத்து மாணவர்களுக்கும் நல்ல கல்வியை வழங்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர...

திருப்பூரில் தமிழாற்றுப்படை நூல் அறிமுக விழா

Image
திருப்பூரில் தமிழாற்றுப்படை நூல் அறிமுக விழா யுனிவரசல் தியேட்டர் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைமை உரை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் நிகழ்த்தினார். அறிமுக உரை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், நன்றியுரை அரிமா எம்.ஜீவானந்தம் பேசினார். ஏற்புரையை வைரமுத்து நிகழ்த்தினார். நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். நிகழ்வில் தமிழாற்றுப்படை புத்தகம் வாங்கிய அனைவருக்கும் வைரமுத்து கையெழுத்திட்டு வழங்கினார்.

சவண்டப்பூர் ஊராட்சியில் மாண்புமிகு முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

Image
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதி குட்பட்ட , கோபிஊராட்சி ஒன்றியம், சவண்டப்பூர் ஊராட்சியில் மாண்புமிகு முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. சவண்டப்பூர் ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அரசு அலுவலர்களிடம் கொடுத்தனர் ,நூற்றுக்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது, பட்டாமாறுதல், முதியோர் உதவித்தொகை, வாரிசுசான்றிதழ். சாக்கடை வசதி ,உழவர் அட்டை , தெருவிளக்கு வசதி போன்ற மனுக்கள் பெறப்பட்டது.முகாமிற்கு கோபிசெட்டிபாளையம் துணை வட்டாட்சியர் [தேர்தல்] என். செல்வக்குமார் முன்னிலைவகித்தார்.  ஊராட்சி செயலர் குமாரசாமி கிராம நிர்வாக அலுவலர் எம்.ஸ்ரீதர்.கிராம உதவியாளர் ஜி.எஸ்.சேதுராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.      

பெருமுளை ஊராட்சியில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் முகாம்

Image
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள பெருமுளை ஊராட்சியில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது.  முகாமிற்கு உதவி தோட்டக்கலை அலுவலர் கோவிந்தராசு தலைமை தாங்கினார். முகாமில் பெருமுளை கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆறு. சந்தோஷ் அமைப்புசாரா தொ.வி.மு இணைச் செயலாளர் விசிக தலைமையில் மனு அளித்தனர்.  மனுவில் கூறப்பட்டது பெருமுளை கிராமத்தில் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக 2002ஆம் ஆண்டு கட்டப்பட்ட குடிநீர் தொட்டி 17 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படாமல் உள்ளது சரி செய்து தர வேண்டும் கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல் கிராம தெருக்களில் சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும் மயான பாதையை சரி செய்து தர வேண்டும் ஊராட்சியில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாமல் உள்ள நூலகத்தை உடனே திறக்க வேண்டும் சமுதாய நலக்கூடம் அமைத்து தரவேண்டும் அரசு வழங்கும் சலுகைகள் இதுவரையில் எங்கள் கிராம மக்களுக்கு வழங்கவில்லை அதனை கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் 100 நாள் வேலை திட்டம் முறையாக கிடைக்க உறுதிப்படுத்த வேண்டும் பொது கழிப்பறை அமைத்துத் தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை...

சீர்காழி விஜய் சுபம் பெனிபிட் பண்ட் லிட் நிர்வாக இயக்குனருக்கு பாராட்டு விழா

Image
சீர்காழி விஜய் சுபம் பெனிபிட் பண்ட் லிட் நிர்வாக இயக்குனருக்கு பாராட்டு விழா நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி தேர் வடக்கு வீதியில் உள்ள விஜய் சுபம் பெனிபிட் பண்ட் லிட்டின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா விஜய் சுபம் பெனிபிட் பண்ட் லிட்டின் நிர்வாக இயக்குனர் மற்றும் லயன்ஸ் சங்க முன்னாள் மாவட்ட கவர்னர் பி.கியான்சந்த் ஜெயின் அவர்களின் பிறந்த நாள் விழா சீர்காழி சுபம் வித்யா மந்திர் ஜெயின் சங்கம் பாரதிய ஜெயின் சங்கடன்னா (பி.ஜெ.எஸ்) மற்றும் சீர்காழி லயன்ஸ் கிளப் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நாகை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க உதவியுடன் நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் ஆகிய முப்பெரும் விழா சீர்காழி ஸ்ரீசுபம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்திய சீர்காழி விஜய் சுபம் பெனிபிட் பண்ட் லிட்டின் நிர்வாக இயக்குனர் மற்றும் லயன்ஸ் சங்க முன்னாள் மாவட்ட கவர்னர் பி.கியான்சந்த் ஜெயினுக்கு அனைத்து இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் பி.ஆர்.ஓ மற்றும் மாவட்ட லயன்ஸ் சங்க தலைவர்ரூபவ் சீர்காழி சக்தி மெட்ரிக் பள்ளி நிர்வாகி எஸ்.சக்தி வீரன் ம...

கடலூர் மாவட்ட ஆட்சியர் வேப்பூர் பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வைத்து குளம் ஏரி பாசன வாய்க்கால் மராமத்து பணிகளை பார்வையிட்டார்

Image
வேப்பூர் பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வைத்து கடலூர் கலெக்டர் அன்புச்செல்வன் குளம் ஏரி வாய்க்கால் குடிமராமத்து செய்யும் பணிகளை பார்வையிட்டார். கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் தரிசு கிராமத்தில் அவ்வூரை  சேர்ந்தவர் செந்தில் குமார் ஐஏஎஸ் இவர் விசாகப்பட்டினத்தில் மத்திய அரசின் டிபன்ஸ் துறையில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த கிராமத்திற்கு நல்லது செய்ய வேண்டி தனது சொந்த செலவில் சுமார் 1500 வளர்ந்த மரக்கன்றுகளை வாங்கி கடலூர் மாவட்ட ஆட்சியர் மூலம் தருசு, மற்றும்  மேமாத்தூர், தொரவலூர் வரை செல்லும் அணைக்கட்டு சாலையில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் மரக்கன்றுகளை நட்டு வைத்து கடலூர் மாவட்ட ஆட்சியர் பேசும்போது பொதுமக்கள், தங்களது வீடுகளில் மழைநீர் சேகரிக்கும் கட்டமைப்பை அவசியம் அமைக்க வேண்டும்.  தமிழக அரசு நமது மாவட்டத்தில் எட்டு கோடி மதிப்பில் மழைநீர் சேகரிப்பு செயல்படுத்தபடுகிறது. அதற்காக மாவட்டத்தில் 83 கண்வாய்கள் 1363 ஏரி, குளம் ஆகியவற்றை தேர்வு செய்து தற்போது குடிமராமத்து பணி நடை பெற்று வருகிறது. மழைநீர் சேகரிப்பிலும்,  மரம் வளர்ப்பதில் ஒவ்வொரு குடிமகனும் ...

நாட்டின் நலனை கருத்தில் கொண்டு ராகுல் காந்தி விமர்சனங்களை முன் வைக்க வேண்டும்- அமைச்சர் சதானந்த கௌடா பேட்டி

Image
நாட்டின் நலனை கருத்தில் கொண்டு ராகுல் காந்தி விமர்சனங்களை முன் வைக்க வேண்டும். அவரின் வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைத்ததே இல்லை- சதானந்த கௌடா மத்திய இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கௌடா பேட்டி: சிபெட்டில் மாணவர் விடுதியை திறந்து வைக்க வந்துள்ளேன். இது 91 அறைகள் கொண்ட மிகப்பெரிய விடுதி, 950 மாணவர்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ளது.  வேலைவாய்ப்பின்மை குறித்து நான் இப்போது அதிகம் பேசி வருகிறோம். சிப்பெட் இளைஞர்களுக்கு நல்ல முறையில் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பை பெற்று தந்துள்ளது. இதுவரை 3.5 லட்சம் இளைஞர்கள் இதில் பயிற்சி பெற்றுள்ளனர். மேலும் 5 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களை ஒழிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். பிரதமரின் எண்ணமும் இது தான். அக்டோபர் 2 ஆம் தேதி நாட்டில் உள்ள அனைத்து சிபெட் நிறுவனமும் ஒவ்வொரு கிராமத்தை தத்தெடுத்து அங்கு ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதனை அழிக்கவும் முயற்சிகளை மேற்கொள்ள உள்ளது.  ரிசர்வ்...

எம்.எல்.ஏ.சு.குணசேகரன் கோரிக்கையை ஏற்று திருப்பூருக்கு மருத்துவக் கல்லூரி 

Image
  வீடியோ இணைப்பு : https://www.youtube.com/watch?v=1oT7KCrF0rc&feature=youtu.be திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பாக 2018-2020-ஆம் ஆண்டிற்கான ஒதுக்கப்பட்ட தொகை, நடைபெற்ற திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்டவைகள் தொடர்பாக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், ஆகிய துறைகளில் ஆய்வு மேற்கொண்டது. இந்த குழு திருப்பூர் அரசு தலைமை மருத்துவ மனையில் ஆய்வு மேற்கொண்ட பொழுது தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன் திருப்பூர் மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.  மேலும் மற்ற மாவட்டங்களில் இட  வசதி என்பது பெரும் தடையாக உள்ளது. ஆனால் திருப்பூரில் இடம் தயாராக உள்ளதாக   தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன் தெரிவித்திருந்தார். அதற்க்கு  தமிழ்நாடு சட்டமன...

திருப்பூரில் மாண்புமிகு முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

Image
  மாண்புமிகு முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் திருப்பூர் கே.பி.என் காலனியில் உள்ள ஆயிர வைசிய திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன் தலைமை தாங்கினார்.  இதில் உதவி ஆணையர் முகமது சபியுள்ள, சுகாதார அலுவலர் பிச்சை, கண்காணிப்பாளர் நந்தகுமார், துப்புரவு ஆய்வாளர் கோகுல்நாதன், சடையப்பன் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டார். பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மனு அளித்தனர். 

அடிப்படை வசதிகள் செய்து தரும்படி நகராட்சி ஆணையரிடம் மனு

Image
சென்னை பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட 12வது வார்டு திருவள்ளுவர் நகர் பகுதி பொது மக்களுக்கு, குடிநீர் வசதி, சாலை சீரமைத்தல்,கால்வாய்களை தூர் வாருதல், தெரு விளக்குகள் அமைத்தல் போன்ற அடிப்படை வசதி எதுவும் நகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை என் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தேவ அருள் பிரகாசம் மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் பொற்செழியன், ஆகியோர் அப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரும்படி பல்லாவரம் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர். மனுவை ஏற்றுக் கொண்ட  ஆணையர் இரண்டோரு நாட்களில் பொது மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக வாக்குறுதி அளித்தார். இதில் கட்சியின் நிர்வாகிகள் பந்தல் ரமேஷ்,  12வது வட்ட செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் மணிகண்டன், துணை செயலாளர்கள் புகழேந்தி, மகேந்திரன், விஜய் ராஜ்,மற்றும் அப்பகுதி மகளிர் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்

கோவில்பட்டி நகராட்சியில் சொத்து வரி உயர்வு பிரச்சனை பேச்சுவார்த்தையில் உடன்பாடு - இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம் வாபஸ்

Image
கோவில்பட்டி நகராட்சியில் சொத்து வரி உயர்வு பிரச்சனை பேச்சுவார்த்தையில் உடன்பாடு - இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம் வாபஸ் கோவில்பட்டி நகராட்சியில் சொத்துவரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதை மறு சீராய்வு செய்ய வலியுறுத்தி நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை நகராட்சி பொறியாளர் கோவிந்தராஜ் தலைமையில் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் அழகு முத்துபாண்டியன், நகர செயலாளர் சரோஜா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வீட்டு வரி உயர்வு சம்பந்தமாக அரசு ஆணைப்படி வரி உயர்வு செய்யப்பட்டது தொடர்பாக மாலைக்குள் நகராட்சி அலுவலகம் முன்பு விளம்பர பலகை வைக்கப்படும். இதுதொடர்பாக 3 நாட்களுக்கு ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்யப்படும். திடக்கழிவு மேலாண்மை வழிகாட்டுதலின்படியே கட்டணம் வசூல் செய்வது, இது சம்பந்தமாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால் பின் வரும் காலங்களில் ஈடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். புதிய குடிநீர் திட்டம் நிலுவையில் உள்ள 2 நீர்த்தேக்க தொட்டிகளின் கட்டுமான பணிகள் செப்.15-ம் தேதிக்...

ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை தேவையில்லாமல் பயன்படுத்திய பல்வேறு நாடுகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன - கனிமொழி M.P.

Image
ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை தேவையில்லாமல் பயன்படுத்திய பல்வேறு நாடுகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன என தூத்துக்குடி மக்களவை உறுப்பினரும் திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி கூறினார். தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கடந்த 45 வருடங்களாக இல்லாத அளவுக்கு இந்திய பொருளாதாரத்தில் வீழ்ச்சியை பார்க்கமுடிகிறது. வேலை இல்லா திண்டாட்டம் மக்களை பாதித்துள்ளது. இதனை சரி செய்ய மத்திய அரசு எந்த முயற்சியும் செய்யாமல் உள்ளது. கடந்த முறை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது உலக அளவில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்த போதும் அப்போதைய மத்திய அரசு இந்திய பொருளாதாரத்தை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுத்து, இந்திய பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டது. தற்போது மத்திய அரசு எந்தவித வளர்ச்சி திட்டங்களையும் மேற்கொள்ளாமல், திட்டங்களில் தொலைநோக்கு பார்வையில்லாமல் ஆட்சி செய்து வருகிறது. மத்திய ரிசர்வ் வங்கியின்  உபரி நிதியை மத்திய அரசு பயன்படுத்த நினைப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும், ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை தேவையில்லாமல் பயன்படுத்திய பல்வேறு நாடுகள் வீழ்...

வேப்பூர் தாலுக்காவில் முதலமைச்சர் சிறப்பு குறை தீர்ப்பு முகாம்

Image
  வேப்பூர் அருகே முதலமைச்சர் சிறப்பு  குறை தீர்ப்பு முகாமில் வேப்பூர் தாசில்தார் செந்தில்வேல் மனு வாங்கினார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் உத்தரவின் பேரில் அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடை பெறுகிறது. இந்நிலையில் கடலூர் கலெக்டர் அன்புச்செல்வன், விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரசாந்த் ஆகியோரின்  ஆலோசனையின் பேரில் வேப்பூர் தாலுக்காவில் வேப்பூர் குறு வட்டத்திலுள்ள 32 வருவாய் கிராமங்களிலும் சிறுபாக்கம் குறு வட்டத்தில் 21 கிராமங்களிலும் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் 27ஆம் தேதி முதல் 28, 29,30, 31 ந் தேதி வரை  ஐந்து நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் வேப்பூர் குறு வட்டத்தில் சிறுநெசலூர், காளியா மேடு ஆதியூர், பிஞ்சனூர், ஏ சித்தூர், மாளிகைமேடு, மன்னம்பாடி, சிறுபாக்கம், குறு வட்டத்தில் வடபாதி, கொத்தனூர், காஞ்சரங்குளம், கொள வாய் சிறுப்பாக்கம் ஆகிய கிராமங்களில் நடைபெற்றது. முன்னதாக வேப்பூர் வட்டாட்சியர் செந்தில்வேல் சிறு நெசலூர் ஊராட்சியில் குறை கேட்பு மனு வாங்கி தொடங்கி வைத்தார். தாசில்தாருடன் வருவாய் ஆய்வாளர் பழனி, வெற்றிச்செல்வன், சிறு நெசலூர...

நான் பெரிய தொழில் அதிபர் இல்லை சாதாரண விவசாயி தான் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Image
  நான் பெரிய தொழில் அதிபர் இல்லை சாதாரண விவசாயி தான் எனவும், நாட்டின் பொருளாதாரம் மேம்படுத்தி வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பது தான் அரசின் லட்சியம் என்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக சென்னை விமான நிலையத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர். இங்கிலாந்த், அமெரிக்க , துபாய் ஆகிய வெளிநாடுகளுக்கு சென்று தொழிலதிபர்களை சந்தித்து தொழில் துவங்க வருமாறு அழைப்பு விடுக்க செல்கிறேன் என்றும்,  தொழில் முதலீட்டாளர் மாநாட்டை சென்னையில் நடத்தியுள்ளதாகவும், அவர்கள் வெளிநாட்டிற்கு வரவேண்டும் என்று அழைத்தார்கள் அந்த அடிப்படையில் பயணம் மேற்கொள்கிறேன் என்றும் கூறினார். மேலும் அதிகளவில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தான் வெளிநாட்டு பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர்,  எவ்வளவு முதலீடு வரும் என்ற செய்தியை சென்று வந்தபின் தெரிவிப்பதாகவும் கூறினார். எதிர்கட்சிகள் விமர்சனம் தொடர்பான கேள்விக்கு..எதிர்கட்சிகள் ஒவ்வொரு முறையும் விமர்சனம் செய்கிறார்கள் என்றும் ஆனால் ஸ்டாலின் அட...

அபிராமி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை பொறுப்பாளர்கள் தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுகவினருக்கு அதிகாரி சான்றிதழ்களை வழங்கினார்

Image
  திண்டுக்கல் மாவட்ட அபிராமி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை பொறுப்பாளர்கள் தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுகவினருக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி சான்றிதழ்களை வழங்கினார். திண்டுக்கல் திருச்சி சாலையில் DD - 487 திண்டுக்கல் மாவட்ட அபிராமி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை  உள்ளது. இந்த சங்கத்திற்கான தலைவர் துணைத் தலைவர் மற்றும் இயக்குனர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சீட்டுகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மொத்தம் 15 இயக்குனர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தலைவராக அதிமுக முன்னாள் நகர கழக செயலாளர்  பாரதிமுருகனும் துணைத்தலைவராக ராஜனும் பொறுப்பேற்க உள்ளனர். வெற்றி பெற்ற அனைவருக்கும் அதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வழங்கினர் இதையடுத்து மண்டபத்திற்கு வெளியே அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.    

கல்லூரி மாணவி இறப்பில் மர்மம் : பெற்றோர் குற்றச்சாட்டு

Image
  திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் காம்பர்பட்டியைச் சேர்ந்த பாண்டிச்செல்வி என்ற மாணவி ECE இறுதியாண்டு படித்து வருகிறார். கடந்த 21 8 2019 அன்று மாலை 8 மணிக்கு கல்லூரி நிர்வாகம் சுற்றுலா அழைத்ததன் பேரில் 40 மேற்பட்ட மாணவ மாணவிகள் பெங்களூர் மற்றும் மைசூர் சென்றிருந்தனர். இன்நிலையில் 23 8 2019 அன்று இரவு பாண்டிச்செல்வி மர்மமான முறையில் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. அதனை கேள்விப்பட்ட மனைவியின் பெற்றோர்கள் அதிர்ச்சியுற்றனர். தன் மகளின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும் கல்லூரி நிர்வாகம் அதை மூடி மறைப்பதாகவும் பாண்டிச்செல்வியின் பெற்றோர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். தன் மகளின் கல்வியின் மூலமாக தங்களின் குடும்பத்தின் வறுமை போகும் என்று நினைத்து இருந்த நிலையில் உயிரிழந்துவிட்டார் கல்லூரி நிர்வாகம் மகளின் இறப்பில் உள்ள மர்மத்தை மூடி மறைப்பதாக வேதனையில் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் தன் மகளின் இறப்பில் உள்ள மர்மத்தை வெளி கொண்டு வர வேண்டும் என்று பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மதுரை துவரிமான் அருகே விபத்து 

Image
  மதுரை மாவட்டம் மேலக்கால் மெயின் ரோடு துவரிமான் அருகே நேற்று இரவு 8 மணி அளவில் விபத்து. ஆண்டிப்பட்டி பங்களாவை சேர்ந்த குருசாமி வயது 27 என்கின்ற இளைஞரும் அவரும் நண்பரும் வேலையை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். எதிர்பாராத விதமாக மேலக்கால் மெயின் ரோடு துவரிமான் அருகே சென்று கொண்டிருந்த பொழுது சாலை விரிவாக்க பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பள்ளத்தில் விழுந்தனர்.  அங்கு கான்கிரீட் வேலைகள் நடைபெற்று வருகிறது. காங்கிரட் கம்பி கழுத்தில் குத்தியதால் வழியால் துடித்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். விரைவாக வந்த அச்சம்பத்து மற்றும் காளவாசல் 108 வாகனம் காயமடைந்தவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்      

பழனியில் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 

Image
  பழனியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவாயில் முன்பு அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக வேதாரண்யத்தில் சட்ட மாமேதை அம்பேத்கர் சிலை அவமதிப்பு செய்ததை கண்டித்து அருகிலேயே காவல் நிலையம் இருந்தும் காவலர்கள் இருந்தும் மிகவும் அலட்சியமாக செயல்பட்டதாலே இந்த கொடூர செயல் நடைபெற்றுள்ளது.எனவே அலட்சியமாக இருந்த காவல்துறையை கண்டித்தும் தமிழ்நாட்டில் தொடர்ந்து தலைவர்கள் சிலை அவமதிப்பு நடைபெற்று வருகிறது இதற்கு இதுவரை எந்த ஒரு தனிச் சட்டம் இற்றாத தமிழக அரசை கண்டித்தும் இந்த அவமதிப்பு செயலுக்கு பொறுப்பேற்று  நாகை மாவட்ட காவல் கண்கானிப்பாளர்.வேதாராண்யம் காவல் துணை கண்கானிப்பாளர் மற்றும் கால் ஆய்வாளர் ஆகியோர் தற்காலிக இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும்   கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமையாக வழக்கறிஞர் குமாரசாமி ஆர்ப்பாட்டத்தின் முன்னிலையாக வழக்கறிஞர் செல்லதுரை மேலும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வழக்கறிஞர்கள் குணசேகரன்,கலையரசன் ராதாகிருஷ்ணன், வாய்க்கால் சாமி, சுரேந்திரன், ஜீவானந்தம், சத்தியசீலன், ஆசைத்தம்பி, அங்குராஜ், உதயசங்கர், வெங்கடேஷ், செல்வகுமார்,...

பழனியில் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆடிட்டர் குருமூர்த்தியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

Image
  பழனி குளத்து ரவுண்டானா அருகில் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் 30% பெண்கள் மட்டும்தான் பெண்மை தன்மையுடன் வாழ்கிறார்கள் என்று சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்ட துக்ளக் பத்திரிகையின் பொறுப்பாசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமீபகாலமாக ஆடிட்டர் குருமூர்த்தி பெண்களை இழிவுபடுத்தும் பெண்களின் புனிதத்தை கெடுக்கும் வகையிலும் அறிவிப்புகள் வெளியிட்டு வருகிறார் எனவே தமிழ்நாட்டில் புனிதமாக போற்றப்படும் கூடிய பெண்களை இழிவுபடுத்திப் பேசிய குருமூர்த்தி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் மேலும் அவரை சிறையில் அடைக்க வேண்டும் இனி வரும் காலங்களில் பெண்களைப் பற்றி ஏதாவது தவறான வார்த்தைகள் பேசினாலும் அறிவிப்பு வெளியிட்டாலோ அவர்மீது கடுமையான சட்டம் பாய வேண்டும் என்றும் குருமூர்த்திக்கு எதிராக பல்வேறு வன்மையான கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்க பொறுப்பாளர்கள் மற்றும் பெண்கள் கையில் சங்க கொடியுடன் பல்வேறு வன்மையான கோஷங்களை எழுப்பி போராட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். ...

பழனியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பொதுமக்களுக்கான குறைதீர்க்கும் முகாம்

Image
  பழனி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தலைமையில் பழனி, ஒட்டன்சத்திரம்,வேடசந்தூர், குஜிலியம்பாறை, ஆகிய பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கான குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். மேலும் இந்த முகாமில் பல்வேறு பொதுப் பிரச்சினைகளை உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தனர். மேலும் இந்த பகுதிகளில் நடக்கக் கூடிய சட்ட விரோதமான செயல்களை உடனடியாக தடை செய்ய வேண்டும். இந்தப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும். அரசின் சலுகைகளை அதிகாரிகள் முறையாக அறிவிப்புகள் செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு அளித்தனர்.இந்த முகாமில் அரசின் நலத் திட்டங்களான சமையல் எரிவாயு அடுப்புகள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மேற்கண்ட பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் முகாமில் கலந்துகொண்டனர்...

பல்லாவரம் ராணுவ முகாமில் ஹவல்தாரை சுட்டு கொலை

Image
  பல்லாவரம் ராணுவ முகாமில் ஹவல்தாரை சுட்டு கொலை செய்துவிட்டு ஜவானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளைகளை ஏற்படுத்தி உள்ளது. பல்லாவரம் ராணுவ பயிற்சி முகாமில் ஹவல்தாராக பணியாற்றுபவர் உத்தராகாண்டை சேர்ந்த பிரவீன்குமார் ஜோஷி. அதே முகாமில் ஜாவானாக பிரவீன் குமார் ஜோஷியின் கீழ் பணியாற்றுபவர் பஞ்சாபை சேர்ந்த ஜக்ஷீர் சிங். நேற்று ஜக்ஷீர் சிங் சரியாக பணியாற்றதால் ஹவல்தார் பிரவீன் குமார் ஜோஷி, ஜக்ஷீர் சிங்கிற்கு தண்டனை வழங்கி உள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த ஜக்ஷீர் சிங் இன்று அதிகாலை 3.30 மணியளவில் துப்பாக்கியால் பிரவீன் குமார் ஜோஷியை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு அங்கு வந்த ராணுவ வீரர்களின் இரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரின் உடலையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருவரின் உடலும் நந்தம்பாக்கம் ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மேஜர் உல்லா குமார் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பல்லாவரம் காவல் ஆய்வாளர் இளங்க...

குமிளங்காடு ஆதிநாகாத்தம்மன் சக்தி ஆலயத்தில் பால் குட விழா

Image
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே குமிளங்காடு ஆதிநாகாத்தம்மன் சக்தி ஆலய பால் குட விழா நடைபெற்றது. விழாவையொட்டி முதல் நாள் இரவு ஆலய வாசல் முன்புள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு பக்தர்கள் காப்பு கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை நூற்றுக்கணக்கான பக்தர்கள் அங்குள்ள கோட்டையா கோயிலிலிருந்து கரகம்இ பால்குடம் மற்றும் அலகு காவடி எடுத்து மேல வாத்தியம் முழங்க ஊர்வலமாக வந்து ஆலயத்தை அடைந்தனர். பின்னர் பக்தர்கள் எடுத்து வந்து பாலை கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு அம்மன் வீதியுலாக் காட்சி நடைபெற்றது. விழாவில் ஜெய்குருதேவ்தெய்வேந்தஅடிகளார் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்தும் வந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர்ப்பொது மக்கள் மற்றும் ஆதிநாகாத்தம்மன் சக்திபீடம் அறக்கட்டளையின் சார்பில் செய்திருந்தனர்.

அம்பேத்கார் சிலையை உடைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருநாவுக்கரசர்

Image
  அம்பேத்கார் சிலையை உடைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார். சென்னை  விமான நிலையத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-  இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கப்பட்டவர். ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுக்காக உழைத்தவர். அவரது சிலை உடைத்தது மிகவும் கண்டிக்கத்தக்கது. காட்டு மிராண்டித் தானமது. யார் என்று கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.    

திருப்பூரில் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு பால்குட ஊர்வலம்

Image
  திருப்பூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு மத்திய பகுதி கழகத்தின் சார்பில் தாராபுரம் ரோடு கோட்டை மாரியம்மன் கோவிலிருந்து அரண்மனைபுதூார் மகாளியம்மன் கோவில் வரை பால்குட ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஊர்வலத்தை மாவட்ட கழக செயளாலர் முத்துவெங்கடேஸ்வரன் துவக்கி வைத்தார். பகுதி செயளாலர் பார்த்திபன் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் மாவட்ட துனை செயளாலர்கள் சரவணக்குமார், இராமகிருஷ்னன், தொ ழிற்சங்க செயளாலர் திவ்யா பாலு, மாவட்ட இளைஞர் அணி செயளாலர் மணி, துனை செயளாலர் சாஸ்தா செந்தில் வட்ட செயளாலர் பாலா, பகுதி கேப்டன் மன்ற செயளாலர் கணேசன், துனை செயளாலர் அழகேசன், பகுதி இளைஞர் அணி பிரபு, மகளிர் அணி சசிகலா, பரமேஸ்வரி, சண்முகசுந்தரி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.        

திருப்பூரில் அரிசி மண்டியில் 3 லட்சம் திருட்டு, சிசிடிவி காமிரா, கம்பியுட்டரும் திருட்டு

வீடியோ இணைப்பு : https://www.youtube.com/watch?v=K7jLFk8Mkq0&feature=youtu.be திருப்புர் பெருமாநல்லூர் சாலை பிச்சம்பாளையம் பகுதியில் அரிசி மண்டி வைத்திருப்பவர் சண்முகம் இவர் தரைத்தளத்தில் அரிசி மண்டியையும் முதல் மாடியில் தனது குடும்பத்துடனும் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று கடையில் விற்பனையான தொகை 3 லட்சத்தை கல்லா பெட்டியில் வைத்து விட்டு இரவு கடையை அடைத்து விட்டு முதல் மாடியில் தனது குடும்பத்துடன் இருந்துள்ளார். காலை எழுந்து பார்த்த போது வீட்டின் இரும்பு கதவு வெளிப்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சண்முகம் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வெளியே வந்து பார்த்த போது கடையின் கதவுகள் உள்பக்கமாக திறக்கப்பட்டு  கல்லாவில் வைக்கப்பட்டிருந்த 3 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டதுடன் சிசிடிவி காமிராக்கள் துண்டிக்கப்பட்டும் கம்ப்யூட்டர் சிபியு வும் திருடப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து சண்முகம் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலிசார் விசாரணையில் கடையின் பின்புறம் உள்ள கழிவறையின் உள்பக்க கதவை முன்னதாக  திறந்து வைத்து  கல்லா சாவி வைக்குமிட...

பெரம்பலூரில் பகுதி நேர ரேஷன் கடையை எம்.எல்.ஏ இரா.தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார்

Image
  பெரம்பலூர் மாவட்டம்வேப்பந்தட்டை தாலுகா வல்லாபுரம் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடையை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட மாணவரணி செயலாளருமான இரா.தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார். வல்லாபுரம் பொதுமக்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வனிடம் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று நேற்று ரேஷன் கடையை திறந்து வைத்தார், நிகழ்ச்சியில் பெரம்பலூர் நில வள வங்கி தலைவரும், வேப்பந்தட்டை அ.தி.மு.க. ஒன்றிய செயலாளருமான சிவப்பிரகாசம், மாவட்ட பதிவாளர் (கூட்டுறவு)பாண்டித்துரை, தலைமை பொதுக்குழு உறுப்பினர் செல்ல .கிருஷ்ணமூர்த்திமற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.    

நத்தம் அருகே கோபால்பட்டியில் பன்றிகளுக்கு விஷம் வைத்துக் கொன்ற மர்ம நபர்கள்

Image
  திண்டுக்கல் மாவட்டம், நத்தம்  அருகேயுள்ள கோபால்பட்டி காந்திநகர் பகுதியில் 20க்கும் மேற்பட்டோர் பன்றி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர் பன்றி வளர்ப்பில் அதிக அளவில் பணம் மற்றும் பொருள் செலவு இல்லை மற்றும் நல்ல லாபம் கிடைப்பதால் பலர் இதில் ஈடுபட்டுள்ளனர். தொழில் போட்டி காரணமாக பன்றி வளர்ப்பு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. காந்தி நகரை சேர்ந்த  குமார்(வயது35). இவர் நூற்றுக்கும் மேற்பட்ட பன்றி வளர்த்து வருகிறார். இவற்றில் சில பாறைப்பட்டி சாலையிலுள்ள பெரியகுளத்தில் மேய்ந்து விட்டு காலை வீட்டுக்கு வருவது வழக்கமாகும். இதன்படி நேற்று பன்றிகள் மேயச்சென்றுள்ளன. பன்றிகளை பட்டியில் அடைக்க ஏற்பாடு நடந்தபோது 15 பன்றிகளை காணாததைக் கண்டு  தேடி சென்றுள்ளனர்.  அப்பொழுது கோபால்பட்டி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள  குளத்தில் வாயில் நுரை தள்ளியபடி கீழே விழுந்து துடிதுடித்துள்ளன. இறந்து கிடந்தது. அதனைதொடர்ந்து 15க்கும் மேற்பட்ட பன்றிகள் இறந்து கிடப்பதை பார்த்து  குமார் மற்றும் அவரது குடும்பத்தினரும் பதறிப்போனார்கள். அவற்றை சோதனை செய்து பார்த்தபோது பன்றிகளுக்கு விஷ...

நத்தத்தில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

Image
  திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பணி நிரந்தரம், தினக்கூலி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் நத்தத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது . நத்தம் மின்சார வாரியத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த தொழிலாளிகள் பணியாற்றி வருகின்றனர். நத்தம் மின்சார வாரிய அலுவலகம் முன்பு  தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்க திண்டுக்கல் மாவட்ட தெற்கு கோட்ட செயலாளர் செல்வம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் ரூபாய் 350 தின ஊழியம் ஆக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை ஈடுபட்டனர்.

கோபி நகராட்சி 12வது வார்டில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

Image
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி குட்பட்ட , கோபி நகராட்சி 12வது வார்டில் மாண்புமிகு முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆலோசனை படி கோபி நகராட்சி 12வது வார்டில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அரசு அலுவலர்களிடம் கொடுத்தனர் ,நூற்றுக்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது, பட்டாமாறுதல், முதியோர் உதவித்தொகை, வாரிசுசான்றிதழ். சாக்கடை வசதி ,தெருவிளக்கு வசதி போன்ற மனுக்கள் பெறப்பட்டது.முகாமிற்கு முன்னாள் நகர்மன்ற உறுப்பினரும், 12வது வார்டு செயலாளர் கே.செல்வராஜ், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கவிதா செல்வராஜ், முன்னிலையில் நடைபெற்றது. நகராட்சி உதவி பொறியாளர் எஸ். கோமதி, உதவியாளர் டி.உதயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.    

கோபிச்செட்டிபாளையம் கோசணம் ஊராட்சியில் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

Image
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி குட்பட்ட நம்பியூர் ஊராட்சி ஒன்றியம், கோசணம் ஊராட்சியில் மாண்புமிகு முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கோசணம் ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அரசு அலுவலர்களிடம் கொடுத்தனர் ,நூற்றுக்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது, பட்டாமாறுதல், முதியோர் உதவித்தொகை, வாரிசுசான்றிதழ். சாக்கடை வசதி ,உழவர் அட்டை ,தெருவிளக்கு வசதி போன்ற மனுக்கள் பெறப்பட்டது.முகாமிற்கு நம்பியூர் ஒன்றியகழக செயலாளர் தம்பி [எ]சுப்பிரமணியம் தலைமை வகித்தார். பேருராட்சி செயல் அலுவலர் எஸ்.சசிக்கலா, செல்வம்,ஊராட்சி செயலர் தனபதி, நில வருவாய் அலுவலர் அருணகிரி,கிராம நிர்வாக அலுவலர் கே.குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.    

பெண்ணாடம் பேருந்து நிலையத்தில் விசிக வினர் ஆர்ப்பாட்டம்

Image
  திட்டக்குடி அடுத்துள்ள பெண்ணாடம் பேருந்து நிலையத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில்  அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து விசிக வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு பெண்ணாடம் நகர செயலாளர் ஆற்றலரசு தலைமை தாங்கினார். திட்டக்குடி சட்டமன்ற துணைச் செயலாளர் வேந்தன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்த குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும் இனி வரும் காலங்களில் இது போன்ற குற்றச் சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் நல்லூர் ஒன்றிய செயலாளர் ஆனந்தன் மாநில செயற்குழு உறுப்பினர் வேல்முருகன் மாவட்ட துணை அமைப்பாளர் செம்மல் மாவட்ட துணை அமைப்பாளர் வேலுமணி நகர துணை செயலாளர் பன்னீர்செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.      

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பை கண்டித்து வேப்பூரில் விசிக வினர் திடீர் சாலை மறியல்

Image
வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து வேப்பூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது அதில் ஒரு தரப்பினர் அங்கிருந்த அம்பேத்கர் சிலையை உடைத்தனர். மேலும் ஜிப் தீ வைத்து கொளுத்தப்பட்டது. போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் அம்பேத்கர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போட உத்தரவிடப்பட்டது. இதன்படி கடலூர் மாவட்டத்தில் 103 இடங்களில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து வேப்பூர் கூட்டு ரோட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் சிறு நெசலூர் அம்பேத்கர் நற்பணி மன்றத்தினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இதற்கு நல்லூர் ஒன்றிய செயலாளர் சந்தோஷ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் திராவிடமணி, சாண்டில்யன் ,அர்ஜுனன், சக்திவேல், சிறு நெசலூர் ரமேஷ் மாநில, மாவட்ட ,ஒன்றிய ,கிளை நிர்வாகிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அம்பேத்கர் ந...

ஒரு லட்சத்து எட்டு விநாயகர் சிலை : அகில பாரத இந்து மகா சபா கட்சி அறிவிப்பு

Image
  விநாயகர் சதுர்த்தி விழாவில் ஒரு லட்சத்து எட்டு விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்போவநாக அகில பாரத இந்து மகா சபா கட்சி அறிவிப்பு. கோபியில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் டாக்டர்.ஏ.சுபாஸ் சுவாமிநாதன் தலைமையில் மாவட்ட தலைவர் கோடீஸ்வரன் முன்னிலையில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மாநிலத் தலைவர் சுபாஸ் சுவாமிநாதன் செய்தியாளர்களிடம் பேசியதாவது . ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அகில பாரத இந்து மகா சபா கட்சி சார்பில் வீடுதோறும் விநாயகர் என்ற அடிப்படையில் ஒரு அடி உயரமுள்ள ஒரு லட்சத்து எட்டு விநாயகர் சிலைகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட காவல்துறை கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்காமல் போதிய பாதுகாப்பு அளிக்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதை வரவேற்பதாகவும் தமிழகத்தில் குறிப்பாக கோவை மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக வந்த தகவல...

பா.வெள்ளாள பாளையம் ஊராட்சியில் சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாம்

Image
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக் குட்பட்ட பா.வெள்ளாள பாளையம் ஊராட்சியில் மாண்புமிகு  முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாம் நடைபெற்றது. ஊராட்சி பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அரசு அலுவலர்களிடம் கொடுத்தனர் , இதில் தோட்டக்கலை துறை அலுவலர் திவ்யா, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் வி.ஆர் வேலுமணி, வி.வி. ஜெயமூர்த்தி, ஊராட்சி செயலர் வி.நாகமணி  கிராம நிர்வாக அலுவலர் மோகனப்பிரியா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வேப்பூர் அருகே ஈச்சர் லாரியில் சுமை ஏற்றி வந்த ஓட்டுநருக்கு திடீர் என ஏற்பட்ட வலிப்பு

Image
  கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் சென்னையில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு ஈச்சர் லாரியை திருச்சி நோக்கி ஓட்டி வந்து கொண்டிருந்தார். வேப்பூர் அடுத்த  பில்லூர் கைகாட்டி அருகே லாரி ஓட்டிக் கொண்டு வரும் போது நாராயணன் தனக்கு வலிப்பு வரப் போவதை உணர்ந்து உடனடியாக சாலையோரம் லாரியை நிறுத்தி ஓட்டுநர் இருக்கையில் படுத்துக் கொண்டார்.     அப்போது அவ்வழியே சென்ற பொதுமக்கள் லாரி ஓட்டுநர் வாயில் நுரை தள்ளியவாறு வலிப்பு வந்து அவதிப்பட்டு கொண்டிருப்பதை பார்த்ததும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மயங்கிய நிலையில் இருந்த நாராயணனை சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். லாரி ஓட்டுநர் நாராயணன் தனக்கு வலிப்பு வரப்போவதை உணர்ந்து சாலையோரம் லாரியை நிறுத்தியதால் அங்கு ஏற்பட இருந்த விபத்து தவிர்க்கப்பட்டது.      

வாணிபுத்தூர் பேரூராட்சியில் தமிழக முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம்

Image
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாணிபுத்தூர் பேரூராட்சியில் தமிழக முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது .இதில் டி .என்.பாளையம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்செல்வி தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். முகாமில் முதியோர் ஓய்வூதியம், இலவச வீட்டுமனை,அடுக்குமாடி குடியிருப்பு, உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. நிகழ்ச்சியில் வாணிப்புத்தூர் பேரூர் கழக செயலாளர் ரங்கநாதன், வாணிப்புத்தூர் முன்னாள் கவுன்சிலர் மினியப்பன்,  வாணிப்புத்தூர் பேரூராட்சி இளநிலை உதவியாளர் சரவணகுமார் சுகாதார மேற்பார்வையாளர் சேகர், கிராம நிர்வாக அலுவலர்கள் மகுடேஸ்வரன், சவேரியார், உட்பட பலர் கலந்து கொண்டனர்

விஜயகாந்த்தின் 68-வது பிறந்தநாளை பண்ணாரி அம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து கொண்டாடினர் 

Image
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவர் விஜயகாந்த்தின் 68-வது பிறந்தநாளை சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்புப் பூஜைகள் நடத்தி கொண்டாடினர். தே.மு.தி.கா. தலைவர் விஜயகாந்த் அவர்களின் 68-வது பிறந்தநாளை 'வறுமை ஒழிப்பு தினமாக” ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று கேப்டன் பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் பல்லாண்டு வாழவேண்டும் என சத்தியமங்கலம் அருகே உள்ள அருள்மிகு பண்ணாரி அம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்தும், சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் சுப்பிரமனியும் மற்றும் ஒன்றியச் செயலாளர் சசிக்குமார் நகரச் செயலாளர் தரனிமுருகன் தொன்டர் அணி ராஜேந்திரன் என 100-க்ம் மேற்பட்ட தொன்டர்களும் மகளிர் அணியும், இளைஞர் அணி மற்றும் நம்பியூர் ஒன்றியம், பவானி ஒன்றியம், கோபி நகர ஒன்றியம் என அனைவரும் கலந்துகொண்டனர்.      

திருப்பூரில் அ.ம.மு.க சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்

Image
திருப்பூர் மாநகர் மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் குமார் நகரில் உள்ள கருப்பராயன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.  முன்னதாக பார்க் ரோட்டில் உள்ள  எம்ஜிஆர் சிலைக்கு புறநகர் மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்ட பொறுப்பாளரும் ஆன உடுமலை சி சண்முகவேலு  தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது - கழக அமைப்பு செயலாளரும், கோவை மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் சேலஞ்சர் துரை, ஈரோடு  புறநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.செல்வம், கோவை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர்  அலாவுதீன், கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளர்  சுகுமார் , நீலகிரி மாவட்ட கழக செயலாளர் எஸ்.கலைச்செல்வன், மாநில மகளிர் அணி துணை செயலாளர் அ.விசாலாட்சி, கழக அமைப்பு செயலாளர்கள் என்.ஆர்.அப்பாதுரை, தேனாடு லட்சுமணன், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் தம்பி இஸ்மாயில், மாநில மருத்துவர் அணி இணை செயலாளர் டாக்டர் .செந்தில் குமார், அம்மா பேரவை மாவட்ட செயலாளர்  சிட்டிசன் ஈஸ்வரன், மாவட்ட பொருளாளர் பார்த்திபன் ,மாவட்ட  வர்த்தக அணி இணைசெயலாளர் கணேசமூர்த்தி, மாவட்ட அண...

சென்னையில் இருந்து  உதய்ப்பூருக்கு செல்லும் இண்டிகோ விமானம்  நடுவானில் எந்திர கோளாறு

சென்னையில் இருந்து  உதய்ப்பூருக்கு செல்லும் இண்டிகோ விமானம்  நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது எந்திர கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. சென்னையில் இருந்து விமான பணிப்பெண்கள் உட்பட 183  பயணிகளுடன் இண்டிகோ விமானம்  உதய்ப்பூருக்கு கிளம்பியது. விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டது. நடுவானில் கோளாறு ஏற்பட்டதால் விமானம் மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கே திரும்பி வந்து அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டதை அறிந்து பயணிகள் அச்சம் அடைந்தனர். ஆனால் பத்திரமாக தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பின்பு பயணிகள் அனைவரையும் மாற்று விமானம் மூலம் உதய்ப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இந்த சம்பவம் பற்றி டில்லியில் உள்ள டைரக்டா் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேஷன் (DGCA)விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சேலம் விநாயகா மிஷன்ஸ் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி ஆண்டு விழா

Image
சேலம் விநாயகா மிஷன்ஸ் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி ஆண்டு விழா வின்குலோரி  2019 வினாயக மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் மருத்துவ கல்லூரி வளாக அன்னபூர்ணா கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் மருத்துவ கண்காணிப்பாளர் ஆசிரியர் ரத்தினசபாபதி வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் பேராசிரியர் நாகராஜன். ஆண்டு அறிக்கை வாசிக்க பல்கலைக்கழக இயக்குனர் ராமசாமி அவர்கள் தலைமையில் விநாயகா மிஷன்ஸ்  நிகர்நிலை பல்கலைக் கழக நிறுவனர்  அன்னபூரணி சண்முகசுந்தரம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து உரிய ஆண்டு மலரை வெளியிட முதல் பிரதியை கழக பதிவாளர் அஞ்சலகம் படம் பேராசிரியர் ஜெயகர் அவர்கள் பெற்றுக்கொண்டார். பல்கலைக்கழகத் தேர்வில் முதல் இடம் பிடித்த மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு விருந்தினர் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார். இவ்விழாவில் பல்கலைக்கழக முதுநிலை மேலாளர் பாலசுப்பிரமணியம் விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் மருத்துவ கல்லூரி பேராசிரியர் பிரகாசம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவில் சேர்மன் தங்கப்பதக்கம் பெற்ற முதல்நிலை மாணவர் மருத்துவர்  ஸ்டீ...